ஞாயிறு, 4 நவம்பர், 2012

கட்காரி மீண்டும் தலைவராவாரா?:

 It Is Bjp Decide On Gadkari Second Term Rss
சென்னை: பாஜக தலைவர் நிதின் கட்காரி மீதான ஊழல் புகார் விவகாரத்தில் ஒதுங்கிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது அவரது தலைவர் பதவி விவகாரத்திலும் விலகி நிற்கிறது.
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் அதன் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவின் தலைவராக நிதின் கட்காரியை 2-வது முறையாக தேர்வு செய்வது என்பது பற்றி அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். கட்காரியின் வணிகம் தொடர்பான புகார்களில் சட்டம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். இதேபோல் 2014-ம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதையும் அந்த கட்சியே தீர்மானிக்கும்.

காவிரி நதிநீர் பிரச்சனையில் நாட்டின் உயரிய அமைப்புகள் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதை பின்பற்றுவது அவசியமானது. கூடங்குளம் அணு உலை அவசியமானது. அதனால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லை என்றார் அவர்.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: