நாங்கள் கூட்டணியை தேடி போகவில்லை. அவர்கள்தான் தேடி வந்தார்கள் தேமுதிகவை
அய்யய்யோ என விஜயகாந்த் காலில் விழுந்தவர்தான் அதிமுக அமைச்சர்! போட்டு உடைக்கிறார் தேமுதிக எம்எல்ஏ! 04.11.2012 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விருகம்பாக்கம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி பேட்டி அளித்தார்.
அய்யய்யோ என விஜயகாந்த் காலில் விழுந்தவர்தான் அதிமுக அமைச்சர்! போட்டு உடைக்கிறார் தேமுதிக எம்எல்ஏ! 04.11.2012 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விருகம்பாக்கம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த
20 வருடமாக சட்டமன்றத்தில் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் எதிர்க்கட்சித்
தலைவராக இருந்திருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்றத்திற்கு வந்தது கிடையாது.
கடந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதா கொடநாட்டிலே இருந்துகொண்டு அறிக்கை
விடுவார். அவரது கட்சிக்காரர்கள்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டமன்றத்திற்கு
விஜயகாந்த் வந்தால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற மரியாதை கொடுக்க
தெரிய வேண்டும். அப்படிப்பட்ட மரியாதை கொடுக்க தெரியாதவர்கள்தான் அதிமுக
உறுப்பினர்கள். விஜயகாந்த்தோ, தேமுதிக உறுப்பினர்களோ சட்டமன்றத்தில்
பேசினால், அந்தத்துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் பேச வேண்டும். ஆனால் அதற்கு
பதில் சொல்ல அவர்களுக்கு தெரியவில்லை. பதில் சொல்ல தெரியவில்லை என்பதை
காட்டிக்கொள்ளாமல் விஜயகாந்த் மீது குறை சொல்லுகிறார்கள்.
சட்டசபையில்
முனுசாமி வயதில் மூத்தவர். அவர் நிதானத்தோடு இருக்கிறாரோ இல்லையோ
தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் பற்றி பேசுகிறார். வளர்மதியும் தவறாக
பேசுகின்றார். அவர்கள் மட்டும்தான் பேச வாய்ப்பு இருக்கிறது என்று
நினைக்கக் கூடாது. எங்களுக்கும் வரலாறு தெரியும். சட்டமன்றத்தில் பேச
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வீதி வீதியாக பேச முடியும்.
சட்டமன்றத்தில்
இப்படி பேசக்கூடியவர்கள் 2011 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜயகாந்த்
பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது அவரது காலில் யார் யார் விழுந்தார்கள்,
டெம்போ வேனில் இருந்த நாற்காலியை தொட்டு கும்பிட்டவர்கள் யார் யார் என்று
தெரியாதா. தற்போது மாதாவரம் எம்எல்ஏவும், அமைச்சராகவும் இருக்கும்
மூர்த்தி, தீவிர பிரச்சாரத்தில் இருந்த விஜயகாந்த் காலில் விழுந்து,
அய்யய்யோ நீங்கள் கூட்டணி இல்லையென்று சொன்னவுடன் நான் பிரச்சாரத்தையே
ரத்து செய்துவிட்டேன் என்று சொன்னவர். ஆனால் அவர் இன்றைக்கு சட்டமன்றத்திலே
எங்களால்தான் தேமுதிகவுக்கு 29 இடங்கள் கிடைத்தது என்று பேசுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக