சனி, 10 நவம்பர், 2012

மதிமுக நாங்களே-உரிமை கோருகிறார் நாஞ்சில் சம்பத்

ஒரிஜனல் மதிமுக நாங்களே- உரிமை கோருகிறார் நாஞ்சில் சம்பத்- போட்டி மதிமுக உருவாகிறது! சம்பத்  கட்சியை கைப்பற்றும் திட்டம் இதோ லேசாக புகைகிறது!
சென்னை: தமிழக அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் இருக்கக் கூடும் என்றே தெரிகிறது. சீக்கிரம் போட்டி கட்சி தொடங்குங்களேன் தீபாவளிக்கு பட்டாசு வாங்க காசில்லைங்க 

மதிமுக பொதுசெயலர் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் இடையேயான கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. வைகோவோ, நாஞ்சில் சம்பத்தே கட்சியைவிட்டு விலகட்டும் என்று எண்ணுகிறார். ஆனால் நாஞ்சில் சம்பத்தே. வைகோவை விட கட்சிக்காக அனைத்து வகைகளில் அதிகம் உழைத்த நான் ஏன் என் கட்சியைவிட்டு விலகுவேன்... அது நடக்காது.. வேண்டுமானால் நீக்கிப்பாருங்கள்..நடப்பது என்னவென்று தெரியும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இன்று சன் நியூஸ தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டியில் அவரது "போட்டி மதிமுக" மனநிலை வெளிப்படையாகவே வெளிப்பட்டது. அந்தப் பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தாவது:
கடந்த 43 நாட்களாக என்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வருவது என்பது தானாக வெளியிடப்படுவதல்ல.. யாரோ பற்ற வைத்துவிட வெளிவரும் செய்திகள்தான். என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களே இப்படி செய்தியை கசியவிட்டிருக்கின்றனர். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை இப்படி பேசவைக்கிறவனாக மாற்றியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கருத்து வேறுபாடுகளுக்கு கதவு திறந்து வைக்கிற பழக்கம் என்னிடத்தில் இருந்தது இல்லை. எந்த ஒரு அத்துமீறலையும் நான் செய்ததும் இல்லை. எந்த ஒரு சிபாரிசுக்கும் சென்றது இல்லை. எம்.எல்.ஏ. பதவிக்கோ எம்.பி. பதவிக்கோ கோரிக்கை வைத்ததும் கிடையாது. எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செவ்வனே செய்து வந்திருக்கிறேன்.
என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வைகோ நீண்டகாலமாகவே திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒத்திகைதான் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 43 நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த பிறகும் என் மகளின் மீது சத்தியமிட்டு என்னால் எந்தப் பிரச்சனையும் வராது என்று சொன்ன பிறகும் சம்பத்துக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று வைகோ சொல்லாமல் சங்கொலி இதழில் என்னை இழித்தும் பழித்தும் எழுதுகிற வைகோவை ‘சாரைப் பாம்பு' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் உட்கட்சி பிரச்சனையில் வெளியேற்றறப்பட்டிருக்கிறார். சிலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என் உருவப்பொம்மையை என் சொந்த ஊரிலேயே கொளுத்தியிருக்கின்றனர். நான் கொளுத்தியவன் மீது குற்றம்சாட்டவில்லை. என் உருவபொம்மையைக் கொளுத்தச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு என் சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதற்காகவே வைகோ திட்டமிட்டு நடத்திய நாடகம்தான் இது!
வைகோவுக்கு அதிமுக கூட்டணியைவிட்டால் வேறு கதி இல்லை. அதனால்தான் அதிமுக அரசு குறித்து விமர்சிப்பது இல்லை. அவர் அங்குதான் போய்சேருவார். அதற்காகத்தான் நாஞ்சில் சம்பத்துக்கு எம்.பி. பதவி கேட்டார் என்றெல்லாம் பரப்பிவிடுகின்றனர். செப்டம்பர் 7-ந் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட நடைபெற்றது. அப்பொழுது யாரும் இதுபற்றி பேசவில்லையே!
என்னை மதிப்பவர்களை மட்டுமே நான் மதிப்பேன்.. என்னை மதிக்காதவர்களை மதிக்க மனசு வராது. ஒவ்வொரு ஊரிலும் யார் யார் கட்சிக்காக உழைக்கிறவர்கள் என்று வைகோவால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியாது. என்னால் முடியும். வைகோ பரப்பிவிடுவது போல் மதிமுக மாவட்ட செயலாளர்களை ஓரணியில் திரட்டவெல்லாம் முயற்சிக்கவும் இல்லை.. முயற்சிக்கவும் மாட்டேன். என்னிடத்தில் நாள்தோறும் என் தம்பிமார்கள் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்களை எனக்கு ஆதரவாக இருக்கச் சொல்லி கேட்பதும் இல்லை.
மதிமுகவுக்காக வைகோவைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறேன். அவரைக் காட்டிலும் தொண்டர்களின் அன்பைப் பெறுகிறேன். கட்சி எல்லைகளைக் கடந்து இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்கிறேன். கடல் கடந்து நாடுகளிலெல்லாம் பேசிவருகிறேன். என் இமேஜ் ஏறி வருகிறது. அதை அவரால் பொறுத்துக் கொள்ளவில்லை.
தரம்கெட்ட, அடுத்தவர்களின் இருப்பை ஒத்துக் கொள்ளாத வியாதியின் விளைவுதான் இது. நான் ஒருபோதும் அவருக்கு போட்டியாக என்னைக் கருதியது இல்லை. நான் பிகராக இருப்பதுதான் இப்பொழுது பிரச்சனை.
என்னைப் பொறுத்தவரை என்னை ஆட்கொண்ட தலைவனின் பெருமையைத்தான் பேசுவேனே தவிர அவர்களின் சிறுமையை ஒருபோதும் கோடிட்டுக் காட்டியது கிடையாது. நான் நாகரிகமாக பேசுவேனே தவிர நாலாந்தரமாக பேசமாட்டேன்...
நான் பாலைவிட பரிசுத்தமாவன். நான்குபேர் நகைக்கும்படியாக நடக்கமாட்டேன். நான் அரசியல்வாதியைப் போல் நடந்து கொள்ளமாட்டேன். மனிதனைப் போல் நடந்து கொள்வேன்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நான் வளர்த்த இயக்கம்.. அதில் இருந்து விலகமாட்டேன்.. விலகமாட்டேன்.

நான் வைகோவைக் காட்டிலும் அதிக மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிக வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அதிக அளவு பயணம் செய்திருக்கிறேன். ஒரு ஊருக்குப் போய் கூட்டம் நடத்தினால் 10 இளைஞர்களை கட்சிக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். மேடைப் பேச்சு பேசிக் கொண்டு தின்றுவிட்டு உறங்குகிறவன் அல்ல இந்த நாஞ்சில் சம்பத்! நஞ்சு அருந்தச் சொன்னால் முதல் ஆளாக நிற்பவன் நாஞ்சில் சம்பத்!
என்னால் மதிமுகவுக்கு எப்போதும் பிரச்சனை வந்தது. தள்ளாடிய நிலையில் தலைமை எடுத்த முடிவு. அதனால் தத்தளித்தவர் நாங்கள்.
நெஞ்சிலே வக்கிரமத்தை வைத்துக் கொண்டு கருப்பை தேக்கி வைத்துக் கொண்டு என் கொடும்பாவியை கொளுத்தச் சொன்ன மனசாட்சியற்றவர் என்பதை தெரிந்து கொண்டதால்தான் வைகோவை என் மகள் திருமணத்துக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன்.
என்னை கட்சியைவிட்டு வைகோ நீக்கிப் பார்க்கட்டும். அப்போது என் தம்பிமார்கள் அனைவருடனும் சேர்ந்து முடிவெடுப்போம். காலம்தான் அதை தீர்மானிக்கும் என்றார்.
தாம் உருவாக்கிய வளர்த்த மதிமுகவை விட்டு தாம் ஒருபோதும் விலகமாட்டேன் என்றும் தமக்குப் பின்னால் தம்பிமார்கள் இருக்கிறார்கள் என்று மதிமுக தொண்டர்களைக் குறிப்பிட்டு நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதும் வைகோவைவிட மதிமுகவுக்காக பாடுபட்டவன் நானே என்று பிரகடனம் செய்திருப்பதும் நாஞ்சில் சம்பத் ஒரு தெளிவான முடிவாக அதாவது போட்டி மதிமுகவை உருவாக்கத்தான் போகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இதனை உணர்த்தும்விதமாகத்தான் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், நான் எடுக்கப் போகும் முடிவால் எதிரிகள் அச்சப்படுவர் என்று கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர் http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: