புதன், 7 நவம்பர், 2012

BJP: கட்காரி தலைவர் பதவியில் தொடர்வார்

"நிதின் கட்காரி மீது, கட்சியும், தலைவர்களும் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே, கட்சி தலைவர் பதவியில் இருந்து, கட்காரியை நீக்கும் திட்டம் இல்லை' என, பா.ஜ., திட்டவட்டமாக அறிவித்தது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, பரபரப்பை ஏற்படுத்தி வந்த பா.ஜ.,வுக்கு, கட்சி தலைவரான நிதின் கட்காரியால், இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலும், விமர்சனங்களிலும், அவர் சிக்கி வருகிறார். இதனால், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்காரி விவகாரத்தால், பா.ஜ.,வில் கோஷ்டி பூசல்களும் வலுவடைந்துள்ளன. கட்காரியின் தலைமையை எதிர்த்து, மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி போர்க்கொடி உயர்த்தினார். நேற்று முன்தினம், அவரது மகன் மகேஷ் ஜெத்மலானி, தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்து விட்டார். http://www.dinamalar.com
A JEYARAJ - madurai at Talahassee ,USA,இந்தியா

A JEYARAJ இங்கே ஒருவர் காங்கிரஸ் வீழ்த்தப்படவேண்டும் , மோடி ,வகையறா அல்லது ஜெயா பிரதமர் ஆக வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறார் ,, ஏன் என்னும் நாட்டில் பாக்கியுள்ள மசூதிகள் இடிக்கபடவேண்டுமா? ,,சவப்பெட்டி , ஆயுத பேர ஊழல்கள் தொடர ஆசையா ? அது சரி கனவு காண்பது அவரவர் விருப்பம் ,, இருந்தாலும் ஜெயா/// பிரதமர் ?? எப்படிப்பா ?? தமிழ்நாட்டில மின்வெட்டு, கொலை கொள்ளை கற்பழிப்பு செயின்பரிப்பு மிடாஸ் கொள்ளை , கமிசன் எல்லாம் சரியாகி நம்பர் ஒன்னு ஆனதுனால ப்ரோமோசனா?
ஜெத்மலானியின், "வெடிகுண்டு!':இந்த சூழ்நிலையில், அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ராம் ஜெத்மலானி, டில்லியில், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ""நிதின் கட்காரியின் தலைமையை, நானோ, என் மகனோ மட்டுமே, எதிர்ப்பதாக கருதி விடக் கூடாது. மூத்த தலைவர்கள், ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா என, பலருமே, கட்காரியின் தலைமை நீடிப்பதை விரும்பவில்லை,'' என்று கூறினார். ராம்ஜெத்மலானியின் இந்த கூற்றை, மூத்த தலைவர்கள் யாருமே மறுக்கவில்லை.

கட்காரி , பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான அருண்ஜெட்லியை அவசரமாகச் சந்தித்தார். சந்திப்பு முடிந்ததும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுஷ்மா சுவராஜையும், சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளில், என்ன பேசப்பட்டது என்ற விவரங்கள் வெளி வரவில்லை. என்றாலும், கட்காரிக்கு ஆதரவு அளிக்க, சுஷ்மா விரும்பவில்லை என, செய்தி பரவியது. இதையடுத்து, "டிவிட்டரி'ல் தானே முன்வந்து, "கட்காரியைத் தான் நான் இன்னும் ஆதரிக்கிறேன்' என, சுஷ்மா சுவராஜ் எழுதினார்.

கட்காரி மன்னிப்பு:கட்சியில் அதிகரித்து வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நிதின் கட்காரி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், விவேகானந்தரையும், தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசியதற்காக, வருத்தம் தெரிவித்து இருந்தார்.

குருமூர்த்தி சமாதானம்:பரபரப்பான காட்சிகள், அடுத்தடுத்து அரங்கேறிக் கொண்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்., சிந்தனையாளரும், மூத்த ஆடிட்டருமான, குருமூர்த்தியும், இதில் இணைந்து கொண்டார். அத்வானி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் பங்கேற்ற குருமூர்த்தி, "கட்காரி மீதும் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், எவ்வித சட்ட மீறலும் நடைபெறவில்லை' என, எடுத்துக் கூறியதாக தெரிகிறது. முன்னதாக ராம்ஜெத்மலானியுடனும், குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார். அவரிடம், கட்காரி தொடர்பான ஆவணங்களை சோதித்து பார்க்க விரும்புவதாக கூறியதாக தெரிகிறது.

பின், மாலையில் பா.ஜ., உயர்மட்டக் குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியிலுள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இருப்பினும், மூத்த தலைவரான அத்வானி பங்கேற்காமல் புறக்கணித்தார். இக்கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், அனந்தகுமார், ஆகியோர் அத்வானியுடன் ஆலோசனை நடத்தினர். இதன்பின், உயர்மட்ட கூட்டத்தில், கட்காரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை, ஆய்வு செய்து குருமூர்த்தி தெரிவித்த கருத்துகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:கட்சி தலைவர் நிதின் கட்காரி மீது, கட்சி, முழு நம்பிக்கை வைத்துள்ளது. தலைவர்களும், கட்காரி மீது எந்த தவறும் இல்லை என அறிந்துள்ளனர். எனவே, அவரை, தலைவர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை. அவர் மீதான, ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றது. சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ அவர் எவ்வித முறை கேடும் செய்யவில்லை கட்காரி, தன் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வமாக சந்திப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை: