டெல்லி:
பாஜகவுக்குள் இருந்து கொண்டே பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி
உயர்த்தியுள்ள ராம்ஜேத்மலானி அடுத்து ராமரைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராமாயணத்தின் நாயகனான ராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண். http://tamil.oneindia.in/
ராமர் இப்படி என்றால், அவரது தம்பி லட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, லட்சுமணனைப் போய் தேடிப் பார் என்று கூறி அனுப்பினார் ராமர். ஆனால் தேடப் போவதற்குப் பதில், சீதைப் பிராட்டி எனது அண்ணியார். அவரது முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. எனவே என்னால் அவரை அடையாளம் காண முடியாதே என்றார் லட்சுமணன். எவ்வளவு காமெடி பாருங்கள் என்றார் ஜேத்மலானி.
ராமர்தான் பாஜகவுக்கு முதன்மைக் கடவுள். இந்தநிலையில் ராமரையும், லட்சுமணனையும் ஜேத்மலானி கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கத்காரிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார் ஜேத்மலானி. தாவூத் இப்ராகிமையும், விவேகானந்தரையும் கத்காரி ஒப்பிட்டுப் பேசி சமீபத்தில்தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தினார் கத்காரி. இந்த நிலையில் அதே பாணியில் ராமரைப் போட்டுத் தாக்கிப் பேசியுள்ளார் ஜேத்மலானி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக