சனி, 10 நவம்பர், 2012

நடிகருக்கு 150 கோடி ரூபாய் கடன் தருவதாக மோசடி: 2 பேர் கைது

 நடிகர் கார்த்திக்ஜெய் கூறும்போது, நல்லமலையிடம் நான் 6 கோடி ரூபாய் மட்டுமே கடன் கேட்டேன். அவர் 150 கோடி கடன் தருவதாக தேவதானபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு சென்றபோது கருப்பு மை தடவிய நோட்டு கட்டுகளை என் கண்முன்னே கொட்டினார். அதில் இருந்து 5 நோட்டுகளை எடுத்து வேதி திரவத்தில் கழுவி காண்பித்தார்.கழுவிய பின் அந்த கருப்புத்தாள்கள் ரூபாய் நோட்டுகளாக மாறின. அவர் மோசடி செய்ததை உணர்ந்ததால் 150 கோடி ரூபாய் கடன் வேண்டாம். 6 கோடி தந்தால் போதும் என்று கூறிவிட்டேன் என்று கூறினார். சினிமா நடிகரிடம் 120 கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி மோசடி செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46). இவர் தனியார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். மிருகம் என்ற சினிமா படத்தை தயாரித்து நடித்துள்ளார். நெல்லு, வெண்மணி படங்களிலும் கார்த்திக்ஜெய் என்ற பெயரில் நடித்துள்ளார்.


இவருக்கு 6 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்டுள்ளது. இந்த கடன் பணத்தை ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குருப்பநாயக்கர் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், அந்தியூரை சேர்ந்த ரவி ஆகியோர் தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த நல்லமலை என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி கார்த்திக்ஜெய்யை நல்லமலையிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு நல்லமலை கார்த்திக்ஜெய்யிடம் கடனுக்கு ஈடாக நடிகர் கையெழுத்திட்ட பாண்டு பேப்பர், 5 செக்குகள், வீட்டு பத்திரத்தின் ஜெராக்ஸ் பத்திர செலவுக்காக 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டார்.

ஆனால் நல்லமலை கடன் தொகையை தராமல் தாமதம் செய்ததோடு நடிகரின் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக ஆவணங்கள் தயாரித்து நடிகர் கார்த்திக் ஜெய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்ஜெய் இந்தமோசடி குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. உமா விசாரணை நடத்தினார். விசாரணையில் நடிகர் கார்த்திக்ஜெய்யை நல்லமலை, சுப்பிரமணியம் ஆகியோர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.இதுதொடர்பாக நடிகர் கார்த்திக்ஜெய் கூறும்போது, நல்லமலையிடம் நான் 6 கோடி ரூபாய் மட்டுமே கடன் கேட்டேன். அவர் 150 கோடி கடன் தருவதாக தேவதானபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு சென்றபோது கருப்பு மை தடவிய நோட்டு கட்டுகளை என் கண்முன்னே கொட்டினார். அதில் இருந்து 5 நோட்டுகளை எடுத்து வேதி திரவத்தில் கழுவி காண்பித்தார்.கழுவிய பின் அந்த கருப்புத்தாள்கள் ரூபாய் நோட்டுகளாக மாறின. அவர் மோசடி செய்ததை உணர்ந்ததால் 150 கோடி ரூபாய் கடன் வேண்டாம். 6 கோடி தந்தால் போதும் என்று கூறிவிட்டேன் என்று கூறினார். சினிமா நடிகரிடம் 120 கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி மோசடி செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: