நித்திக்காக கோர்ட் ஏறும் ஆதீனம்! சாமிகள் மலையேறி விட்ட காரணம் இதுதான் ஐயா!
Viruvirupu
நித்தியானந்தாவை
ஒருகாலத்தில் மதுரை மடத்து வாசலில் நின்று வரவேற்று ஆலிங்கனம் செய்த மதுரை
ஆதீனம் அருணகிரிநாதர், “ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா வரக் கூடாது.
அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரி மதுரை கோர்ட்டில் மனு தாக்கல்
செய்துள்ளார்.
நித்தியானந்தாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்? சாமி மடத்துக்குள் ஆசாமி வரக்கூடார் என்பதற்காகவா? அதைவிட பெரிய காரணம், உள்ளது.
இந்த இரு பலே சாமிகளும் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளையை வைத்தே இவர்களை கவிழ்க்க தமிழக அரசு திட்டம் வைத்திருக்கிறது என்ற விஷயம் புரிந்த காரணத்தாலேயே, சின்ன சாமிக்கு எக்ஸிட் காட்டுகிறார் பெரிய சாமி.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவில், “மதுரை ஆதீன அறக்கட்டளையை நான் கலைத்துவிட்டேன். மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த அறக்கட்டளையின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தாவை நான் அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டேன். எனவே அவரோ, அவர் தரப்பில் வேறு நபர்களோ மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையவோ, பொருட்களை அனுமதியின்றி பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
அதாவது, மதுரை ஆதீன அறக்கட்டளை கலைக்கப்பட்டுவிட்டது என்பதை நீதிமன்ற பதிவுகளில் கொண்டுவர முயல்கிறார் அருணகிரிநாதர்.
ஏன் என்று தெரிந்து கொள்ள, மற்றொரு வழக்கு பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை ஆதீனம், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா ஆகியோர் சார்பில் மதுரை ஆதீன அறக்கட்டளை என்ற பெயரில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. மடத்தின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அறநிலையத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை.
ஆதீனத்திற்கு சொந்தமான 2 சொத்துக்கள் இந்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. எனவே அவர், மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். அடுத்த மடாதிபதி நியமிக்கப்படும் வரை மதுரை ஆதீன மடத்தை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டிருந்தது.
இப்போது இரு சாமிகளும் மலையேறி விட்டதால், “அறக்கட்டளை விவகாரத்தையே மறந்து, பழையபடி வாழ விடுங்கள்” என்ற நிலைக்கு வந்துள்ளன. அதுதான் நிஜ விவகாரம். களவாட

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக