ஞாயிறு, 4 நவம்பர், 2012

யாருக்கு தெரியும் - பின்னணி இசையே திகிலைத் தருகிறது

ஒரு தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்ட 7 பேர், அதுவும் அவர்கள் யார் என்பதும்., ஏன் தொழிற்சாலைக்குள் மாட்டிக்கொண்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் வரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.
இங்கே நாம் மாட்டிக்கொள்ள நம் 7 பேரில் ஒருவர்தான் காரணமாக இருக்குமோ என்று ஒவ்வொருவரையும் சந்தேகப்படுவது சுவராஸ்யம். சேரில் கட்டப்பட்டுக்கிடக்கும் கதாபாத்திரம் மூலம் தான் அவர்கள் ஏன் அவ்வாறு தான் யார் என்று தெரியாமல் அல்லாடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது
 அவரை அவிழ்த்து விட்டு இனிமேல் யார் மீதும் யாரும் சந்தேகப்படக்கூடாது என்கிற முடிவினை எடுக்கிறார்கள். அந்த 7 பேரில் ஒருவரான ரியாஸ் கான் கொல்லப்பட்டுக் கிடக்கத் திகில் இன்னும் அதிகரிக்கிறது. அடுத்தது 3 பேர் கொல்லப்பட இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது மீதமிருக்கும் 6 பேரில் யார் அந்த மூவர் என்கிற பதைபதைப்பு படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது என்றால் மிகையாகாது.

முதல் பாதியில்  ஏகப்பட்ட கேள்விகளின் முடிச்சுகளோடு தொடங்கும் படம் இரண்டாவது பாதியில் ஒவ்வொரு கேள்விக்குமான முடிச்சு அவிழும் விதம் நம்மை ஆர்வத்தில் ஆழ்த்திவிடுகிறது. பாட்டுகளாக போட்டு போரடிக்காமல் அடுத்து அடுத்து என்று நகரும் இதன் பாணி வெகு வித்தியாசம்தான். 

ரியாஸ் கானும் கலாபவன் மணியும் தங்கள் பாத்திரங்களுக்குக் கம்பீரம் சேர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் வழக்கம் போலவே வந்து ஜமாய்க்கிறார்.யாருக்குத் தெரியும்? நிச்சயமாகத் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவம் தான்.

இயக்குனர் கணேசன் காமராஜின் திரைக்கதையினை அதன் திகில் குறையாமல் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்.
 ன்னணி இசையே திகிலைத் தருகிறது. ஒரு இரவில் நடந்து முடிந்து விடும் அட்டகாசமான திரில்லர் யாருக்குத் தெரியும்..? அனுபவித்தால் தான் பு(தெ)ரியும்.
 

கருத்துகள் இல்லை: