திங்கள், 5 நவம்பர், 2012

பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால்? நீதித்துறை

சென்னை: நக்கீரன் வாரமிருமுறை இதழை திமுக தலைவர் கருணாநிதி மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு மற்றும் பழனிமாணிக்கத்துக்கும் இடையேயான முட்டல் மோதல்களைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் அண்மையில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் முதல் முறையாக கருணாநிதி மகள் கனிமொழிதான் பழனிமாணிக்கத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக  அறிக்கை விவரம்: 


கேள்வி: நக்கீரன் வார இதழிலேயே யாருக்கு யார் எதிரி என்ற தலைப்பில் தங்கள் துணைவியாரைப் பற்றியும், மகளைப் பற்றியும், மகன்களைப் பற்றியும் பரபரப்பு காட்சிகள் என்றெல்லாம் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்களே?
கருணாநிதி: தம்பிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம் இருவருக்கும் இடையேஉருவான பிரச்சினையில் நான் உடனடியாக எழுதிய "உடன்பிறப்பு" கடிதத்திற்குப் பிறகு இருவருமே அமைதியாகி விட்டார்கள். பிரச்சினையும் முடிந்துவிட்டது. ஆனால் நக்கீரன் போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர்களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர்வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது? இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும். ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; அதனால் எதையும் எழுதலாம் என்ற நெஞ்சுரமும் மனப்பான்மையும் நக்கீரன் போன்ற ஏடுகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே! என்று கருணாநிதி கூறியுள்ளார். http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: