Viruvirupu
அலுவலக
நேரம் காலை 10.35க்கு குவாத்தமாலாவில் ஏற்பட்ட பூகம்பம் மெக்சிகோ தலைநகர்
மெக்சிகோ சிட்டிவரை உணரப்பட்டதில், தலைநகர் அலுவலகங்களில் பணியில் இருந்த
அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.பள்ளிகள் கல்லூரிகள், மற்றும் அனைத்து வர்த்தக
மையங்களில் இருந்தும் ஆட்கள் வெளியேற்றப்பட்டனர்.வீடுகளில் இருந்து வெளியே வந்து நிற்குமாறு ஊடகங்கள் மூலம் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
குவாத்தமாலாவின் இரு மாகாணங்களில் இதுவரை 48 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. (
அங்கிருந்து கிடைத்துள்ள போட்டோக்கள், இன்னும் சிறிது நேரத்தில் இணைக்கப்படும்)
அமெரிக்க ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, magnitude-7.4 அளவுள்ள சக்திவாய்ந்த பூகம்பம் குவாத்தமாலா நகரம் சம்பேரிக்கோ அருகே ஏற்பட்டது. இந்த நகரம், மெக்சிகோ எல்லை அருகே அமைந்துள்ளதால், மெக்சிகோவிலும் உணரப்பட்டுள்ளது.
மெக்சிகோ சிட்டியில், அவசரகதியில் உயரமான பில்டிங்குகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, கட்டடங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருப்பதை காணலாம். அவசர வெளியேற்றம் காரணமாக நெரிசலில் சிலர் காயமடைந்தனர்.
இந்த தொடரில் உள்ள 10 போட்டோக்களும், குவாத்தமாலாவில் பூகம்பம் ஏற்பட்ட நேரத்தில் மெக்சிகோ சிட்டியில் எடுக்கப்பட்டவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக