வியாழன், 8 நவம்பர், 2012

மத்திய அரசின் கைப்பாவை சி.பி.ஐ.,: வினோத் ராய்


குர்கான்: சி.பி.ஐ., மற்றும் ஊழல் கண்காணிப்பு கமிஷன் (சி.வி.சி.,) அமைப்புகளுக்கு, அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும். அந்த அமைப்புகள், மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படுகின்றன,'' என, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி.,யின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.உலக பொருளாதார அமைப்பு சார்பில், டில்லி அருகே உள்ள, குர்கானில் நேற்று நடந்த கருத்தரங்கில், சி.ஏ.ஜி., தலைமை அதிகாரி வினோத் ராய் கூறியதாவது:தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு, அரசியல் அமைப்பு சட்டத்தின் படி உருவாக்கப்பட்டது. அதனால் தான், அந்த அமைப்பால், சுதந்திரமாக செயல்பட முடிகிறது. ஆனால், சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., சுதந்திரமான அமைப்புகள் அல்ல; அதனால் தான், அந்த அமைப்புகள், அரசின் கைப்பாவைகளாக செயல்படுகின்றன என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.  http://www.dinamalar.com/
Vijay - chennai,இந்தியா
Vijay மத்திய அரசின் கைப்பாவை சி.பி.ஐ: இது ஊரறிந்த உலகறிந்த தெரிந்த விஷயம் தானே...... கைபாவையின் அடிமைகள் மாயாவதி,முலாயம்சிங், லாலு பிரசாத் யாதவ், கருணாநிதி கனிமொழி....... மத்திய காங்கிரஸ் அரசு, சி பி ஐ யை எனும் கைப்பாவை வைத்து, மேற் சொன்ன அடிமைகளை ஆடவைத்து ஆட்டிவைத்து தனக்கு வேண்டிய காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்ளும்.... அடிமைகளும் நீ அடிப்பது போல் அடி, நான் அழுவது போல் நடிக்கிறேன் என ஊரை ஏமாற்றுவார்கள்......
சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., போன்றவை சிறப்பாக செயல்பட வேண்டும்; அவற்றை ஏற்படுத்தியதற்கான உண்மையான குறிக்கோள்கள் எட்டப்பட வேண்டும் என நினைத்தால், அந்த அமைப்புகளுக்கு, அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும்.ஏற்படுத்தப்பட உள்ள லோக்பால் அமைப்பு, சுதந்திரமாக, தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றால், அதற்கும் அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும்.
இவ்வாறு, சி.ஏ.ஜி., தலைமை அதிகாரி, வினோத் ராய் கூறினார்.

கருத்துகள் இல்லை: