செவ்வாய், 6 நவம்பர், 2012

ஏமாறுவோர் இருந்தால் ஏமாற்றுவோரும் இருப்பர்

s.maria alphonse pandian மக்கள் மறந்திருப்பார்கள் என ஜெயா எண்ணுவதில் தவறில்லை...ஜெயாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக அந்த நீதிபதியின் மகனை கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளவில்லையா? அந்த வழக்கு என்ன ஆயிற்று? நாம் மறந்திருப்போமே? ஜெயாமீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்ததர்காக சுப்ரமணியசாமியை விமான நிலையத்தில் மகளிர் அணியை அனுப்பி அசிங்கப்படுத்தியதையும் அவரது வலது கரமாக இருந்த பெண் ஐ.ஏ எஸ் அதிகாரி சந்திரலேகா மீது திராவகம் வீசியதையும் மறந்திருப்போமே?அது போல உயர்த்தப்பட்ட பேரூந்து கட்டணத்தையும் மறந்திருப்போம் என ஜயா எண்ணுவதில் தவறில்லை...

சென்னை: "கடந்த ஆண்டு நவம்பரில், பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பசும்போன் தேவர் விழாவை ஒட்டி, முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை அலட்சியம், இவற்றின் காரணமாக, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.ஏமாறுவோர் இருந்தால், ஏமாற்றுவோர் இருக்கத்தானே செய்வர்.
தமிழகத்தில், மின்வெட்டு நிலைமையை, மூன்றே மாதங்களில் சீர் செய்வேன் என, முதல்வர் வாக்குறுதி கொடுத்ததற்கான ஆதாரங்களை நிரூபித்தால், முதல்வர், அரசியலில் இருந்து விலகத் தயாரா என, ராமதாஸ் கேட்டிருக்கிறார். நான் அவ்வாறு, கடினமாகக் கேட்க விரும்பவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார் http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை: