மாற்றானை கலங்க வைத்த பீட்ஸா சின்னத்திரையில் நாளைய இயக்குநர் பட்டம் வென்ற கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படம்தான் பீட்ஸா
சமீபத்தில் வெளியான திகில் திரைப்படம் பீட்ஸா வெளியான இரண்டு வாரத்தில் 1.85 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சாதாரணமாக ரிலீஸ் ஆகி சாதனை படைத்துள்ள பீட்ஸா பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்.அக்டோபர் மாதம் 19ம் தேதி பீட்ஸா ரிலீஸ் ஆனது. சாதாரணமாக போய் பார்த்த ரசிகர்கள் நல்லா இருக்குப்பா. காசு கொடுத்து சாப்பிடலாம் என்று சொல்லி சொல்லியே ஓட வைத்து விட்டனர்
அக்டோபர் மாதத்தில் மட்டும் 13 படங்கள் ரிலீஸ் ஆனது. அதில் இரண்டு வாரத்தில் மட்டும் பீட்ஸாவின் வசூல் 1.85 கோடி ரூபாய்.
படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி ஏற்கனவே தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் ஹீரோவாகவும், சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும் பீட்ஸா சூப்பர் விசிட்டிங் கார்டாக அமைந்திருக்கிறது
சின்னத்திரையில் நாளைய இயக்குநர் பட்டம் வென்ற கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படம்தான் பீட்ஸா. ஆனால் இது இவரது முதல் படம் என்பதை யாரும் நம்ப மறுக்கின்றன
காதல் ஜோடி, திருமண தம்பதி பற்றி மட்டுமே பேசிய தமிழ் சினிமாவில் இன்றைய காலத்திற்கு ஏற்ற லிவ் இன் வாழ்க்கையைப் பற்றி கூறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
படத்தின் கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என எல்லாமே சூப்பர் என்பது ரசிகர்களின் கருத்தாக இருப்பதால் பெரும்பாலோனோர் பீட்ஸாவை பார்க்க ஆவலாக இருக்கின்றனர்
புதுமுக இயக்குநர் படம், அறிமுகமில்லாத ஹீரோ என்றாலே மல்ட்டி ப்ளெக்ஸ் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது சிரமம்தான். பீட்ஸாவுக்கு நல்ல பேச்சு கிடைத்திருப்பதால் இப்போது மல்ட்டி ப்ளெக்ஸ் தியேட்டர்கள் பீட்ஸாவுக்கு ஆர்வம் காட்டு கின்றன
அக்டோபரில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியான படம் மாற்றான். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை ஏமாற்றிவிட்டது. அவர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளதாம் பீட்ஸா
பீட்ஸா ஓடும் ஓட்டத்தைப் பார்த்து சுரேஷ் கொண்டேடி இதனை தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறாம்.
கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டப்பட்டு வந்தன. முதன் முதலாக ‘பீட்ஸா' என்று பெயர் சூட்டப்பட்டு வெளியாகியிருக்கிறது.
சினிமாவில் தலைப்புகளுக்கு ஒரு போட்டியே நிலவுகிறது. பீட்ஸாவின் வெற்றியினால் இனி திரைப்படங்களுக்கு இட்லி, தோசை, போண்டா, வட கறி, கொத்துக் குறி, முட்டை பரோட்டா, மூளை வறுவல் என்று சாப்பிடும் ஐட்டங்களை வைத்தாலும் ஆச்சரியமில்லை. (ஏதோ நம்மால முடிஞ்ச ஐடியா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக