திங்கள், 5 நவம்பர், 2012

ஜெயலலிதாவுக்கு தேமுதிக எம்எல்ஏ கேள்வி! கொலை என்பது சாதாரணமாகிவிட்டதா

04.11.2012 அன்று கேப்டன் தொலைக்காட்சிக்கு விருகம்பாக்கம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி பேட்டி அளித்தார். ;அதில் அவர் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசனை போலீசார் கைது செய்தனர்.அவர் ஒன்றும் கொலை குற்றவாளி அல்ல. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் உங்கள் மீது வழக்கு உள்ளது. கைது செய்ய வேண்டும் என்று சொன்னால் அவரே நேரிடையாக வந்திருப்பார்.தமிழகத்தில் எத்தனை கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. உதாரணத்திற்கு  சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்த எஸ்.ஐ. ஆல்வின்சுதன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டீர்களா? முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் திருச்சில் படுகொலை செய்யப்பட்டாரே அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டீர்களா?
கடந்த 10 நாள் முன்பு வேலூரில் பாஜக பிரமுகர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டாரே அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தீர்களா? தென்மாவட்டங்களில் வெடிகுண்டு வீசி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைதான் நடந்துகொண்டிருக்கிறது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை சரி செய்ய அவர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.சட்டமன்றத்திலே என்ன பேசுகிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கிறது. இதையெல்லாம் பெரிதுப்படுத்தி பேசவேண்டாம் என்கிறார்கள். கொலை என்பது சாதாரணமாகிவிட்டதா முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு. ஒரு உயிரை உயிராக பார்க்கக் கூடாதா. தமிழகம் முழுவதும் நடந்த நகைக்கொள்ளைகளில், பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேருக்கு தீர்வு ஏற்படுத்தி தந்தீர்கள். இவ்வாறு பேசினார்

கருத்துகள் இல்லை: