திங்கள், 5 நவம்பர், 2012

சீக்கியருக்கு எதிரான கலவரம் : இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும்

மெல்பர்ன்: இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை, இனப் படுகொலையாக அறிவிக்க கோரி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் திடீரென மனு தாக்கல் செய்தார். கலவரம் நடந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இப்பிரச்னையை கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பிரதமர் இந்திரா காந்தி கடந்த 84ம் ஆண்டு பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அப்போது சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் ஊனமடைந்தனர். இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை, இனப்படுகொலையாக அறிவிக்க கோரி ஆஸ்திரேலிய எம்.பி. வாரன் என்ஸ்டிச் என்பவர் கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் 4,453 பேர் கையெழுத்து போட்டுள்ளனர்.
அப்போது அவர் பேசுகையில், ÔÔகடந்த 84ம் ஆண்டு நடந்த சம்பவத்தை, Ôசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்Õ என்றே கூறி வந்தால் அந்த சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்காது. எனவே, அந்த சம்பவத்தை Ôசீக்கியர்களுக்கு எதிரான இனப் படுகொலைÕ என்று அறிவிக்க வேண்டும்ÕÕ என்றார். மேலும், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர இந்திய அரசை ஆஸ்திரேலிய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்த 28 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி. ஒருவர் இந்த பிரச்னையை கிளப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: