ஞாயிறு, 4 நவம்பர், 2012
தே.மு.தி.க விலிருந்து 15 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர தீவிரம்
நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களை ஆளும் கட்சி வளைத்த பின்னணி
இந்த உடைப்பு அசைன் மெண்ட்டில் தீவிரமாக
உள்ள அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் டீமிடம் பேசிய ஜெ.,
புதிய திட்டம் ஒன்றையும் வகுத்துக் கொடுத்துள்ளாராம். தே.மு.
தி.க.விலிருந்து குறைந்தது 15 எம்.எல்.ஏ.க்களையாவது வெளியே கொண்டு
வரவேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து "நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க.'
என்று சொல்லி விஜயகாந்த்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அத்துடன்,
"முரசு சின்னம் எங்களுக்குத்தான்' என்று அவர்கள் உரிமை கோர வேண்டும்.
விஜயகாந்த்தும் அதே உரிமையைக் கேட் பார். வழக்கு நீதிமன்றத்திற்குப்
போகும். இருதரப்பும் முரசு சின்னத்தை கேட்கும்போது நீதிமன்றம் அதற்குத் தடை
விதிக்கும். எம்.பி. தேர்தலில் விஜயகாந்த் கட்சி, முரசு சின்னம் இல்லாமல்
தவிக்கும் என்பதுதான் அ.தி.மு.க. தலைமையின் திட்டமாம்.ஜெயலலிதாவா? விஜயகாந்த்தா? என்ற ஃபைட்டில்
தமிழக அரசியல் களம் விறுவிறுப் படைந்துள்ளது. தனது கட்சியை உடைக்கும்
ஜெ.வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஓரணியாகத் திரட்ட
நினைக்கும் விஜயகாந்த், இது தொடர்பாக கலைஞர் உள்பட எதிர்க் கட்சித்
தலைவர்கள் அனைவரையும் சந்திக்க ரெடியாகி வருகிறாராம்நல்லதை மறைத்த நால்வர் அணி!
நான்கு பேரும் திசை மாறுவதற்குக் காரணமே கட்சிக்குள் இருந்த நால்வர்
அணிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''தலைமை நிலையச் செயலாளர்
பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கொறடா சந்திரகுமார், மாநில துணைச் செயலாளர்
இளங்கோவன், விஜயகாந்த்தின் பி.ஏ.பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரை மீறி,
கட்சியில் எதுவுமே நடக்காது. அவர்கள் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக