யோகேஸ்வரியின் வழக்குக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது புலிகள் அந்தப் பெண்ணின் தாய் தகப்பனைப் பார்க்கக் போவதாகத் தந்திரமாகச் சொல்லிக் யோகேஸ்வரியைக் கூட்டிக் கொண்டு போய் யோகேஸ்வரியின் பிறப்பிடமான முள்ளியாவளைக்குப் போகும் வழியில் யோகேஸ்வரியை முடித்து விட்டார்கள' என்று சொல்லப்பட்டது.
பழம் பெருமை பேசும் நாங்கள் எப்படி ஒரு ஏழை வேலைக்காரியை நடத்தினோம் என்பதற்கு யோகேஸ்வரி என்ற ஏழைப்பெண்ணுக்கு நடந்த கதியை இன்னொரு தரம் ஞாபகப் படுத்திச் சொன்னாற்தான் புரியும்.03.10.2005ல் யாழ் நீதிபதியின் முன்னிலையில் யாழ் பல்கலைக்கழக் விரிவுரையாளர்' பொங்கு தமிழ் ரி.கணேசலிங்கம் என்பவா'; 13 வயதான அவரின் வீட்டு வேலைக்காhயை 40 தடவைகள் பாலியல் வன்முறை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டார் அன்று அந்த அபலைப் பெண்ணுக்கு நீதி கோட்டு யாழ் நகரிலுpருந்து பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் முற்போக்கு உணர்வு கொண்ட மாணவர்களும் வழக்கு நடந்த நிலையத்துக்க முன் போராட்டம் செய்தார்கள். அப்போது யாழ் நீதிபதியாகவிரந்த திருமதி ஸ்ரீநிதி அவர்கள் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் ரி. கணேசலிங்கத்திற்குப் பிணை கொடுக்க முடியாது என்று சொன்னார். குற்றவாளியாக் குற்றம் சாட்டப்பட்ட விரிவுளையாளர் யாழ் பல்கலை;கழகப் பதவியைத் தொடரமுடியவில்லை. அப்போது லண்டனுக்கு வந்த தகவல்களின்படி யாழ் பல்கலைக் கழகத்தில் பெண்களுடன் ' பாலியலச் சேட்டை; விடும் பல விரிவுரையாளர்களின் பெயர்ப் பட்டியல்களை வெளியிடுவதாகச் சொன்னார்கள். புல்கலைக்கழக விரிவுரையாளால் கொடுமைக்குள்ளானவர் என்று சொல்லப்பட்ட யோகேஸ்வரி யாழ் பெண்கள் பாதுகாப்புக் காப்பகத்தில் யாழ் மனித உரிமை அமைப்பின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப் பட்டார்.
போர் தொடந்து நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தப் பெண்ணின் வழக்கு எப்படிப்போகிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வருடம் தைமாதம் யாழ் சென்றிருந்தபோது பாலியல் குற்றவாழியாகக் கோர்ட்டுக்கு அழைக்கப் பட்ட விரிவுரையாளர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப்பணியாற்றிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் கொழும்பில் இருந்து பத்திரிகை நடத்தும் ஒரு பெண்ணியவாதியின் பத்திரிகையிலும் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் பட்டது.
யோகேஸ்வரியின் வழக்குக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது புலிகள் அந்தப் பெண்ணின் தாய் தகப்பனைப் பார்க்கக் போவதாகத் தந்திரமாகச் சொல்லிக் யோகேஸ்வரியைக் கூட்டிக் கொண்டு போய் யோகேஸ்வரியின் பிறப்பிடமான முள்ளியாவளைக்குப் போகும் வழியில் யோகேஸ்வரியை 'முடித்து' விட்டார்கள' என்று சொல்லப் பட்டது.
எத்தனையோ மைல்களுக்கப்பால் இருக்கும் ரஷினாவின் உயிரைக் காப்பாற்றப் போராடிய நான் இன்று யோகேஸவரியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று தவித்தேன். கோர்ட்டுக்குப் போன, உலக மயப்படுத்தப்பட்ட வழக்கில் முக்கியமான சாட்சியான யோகேஸ்வரி இறந்து விட்டார் என்பதை நம்ப மறுத்தேன்.
யோகேஸ்வரி உயிருடன் இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் இந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இலங்கையிலுள்ள ஊடக வாதிகளின் கூற்றுப்படி இந்தப் பெண் ' நலமாக இருக்கிறாராம்!
அப்படியென்றால் பாலியல் கொடுமை செய்த குற்றம் சாட்டப்பட்ட வழக்கு ஏன் தொடரவில்லை? அல்லது தன்னை யாரும் பாலியல் வன்முறை செய்யவில்லை என்று யோகேஸவரி எழுதிக் கையெழுத்து வைத்தாரா?
யோகேஸவரி 'உயிருடன் இருப்பதானால் சட்டப்படி அவருக்கெதிரான வழக்குத் தொடரப்படவேண்டும். பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகக் குற்றவாளிக்குத் தண்டனை கொடுபட்டிருக்கவேண்டும.; அல்லது, யோகேஸ்வரிக்கு நஷ்ட ஈடு கொடுபட்டிருக்க வேண்டும். இந்தத்தேடல்களுக்குப் பதில் எங்கே?
தமிழ்ப்பெண்களைத் தங்கள் ஆணவத்தால் எப்படியும் பாவித்து அழிக்கலாம் என்ற மேற்குடித் தமிழ்த் தலிபான்கள் தமிழக்கலாச்சாரம் என்ற பெயரிற் தமிழ்ப் பகுதிகளிற் தலையெடுப்பதை முற்போக்குத் தமிழ்மக்கள் எதிர்க்கவேண்டும். இன்று யோகேஸ்வரிக்கு நடக்கும் கதை நாளைக்கு யாரோ ஒரு ஏழைப்பெண்ணுக்கு நடப்பதைத் தடுப்பது மனித நேயத்தில் அக்கறை கொண்ட மக்களின் கடமையாகும்
மனித நேயத்தில் உண்மையாவே பற்றுள்ள நல்ல தமிழ் மனிதர்கள் யோகேஸ்வரிக்கு என்ன நடந்தது என்று விசாரிப்பார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக