இலங்கையில் இருந்து அகதிகளாக கனடா சென்றவர்கள் தொடர்பில், சீ நியூஸ் என்ற இணையத்தளம் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. |
இலங்கை அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாளையோ, அடுத்த வாரமோ அன்றி, தற்போதே மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ளவர்கள் நிச்சயமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களாகவோ, அல்லது ஏமாற்றுக்காரர்களாகவோதான் இருக்க வேண்டும். இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தற்போதே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் கனேடிய அரசாங்கத்தை அந்த இணையத்தளம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து கனடாவில் குடியுரிமை பெற்றவர்களில், 71 சதவீதமானவர்கள் சாதாரணமாக மீண்டும் இலங்கைக்கு சென்று வருகின்றனர். எனினும் அகதி அந்தஸ்து கோரும் போது அவர்கள் இலங்கையில் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியே அரசியல் அந்தஸ்து கோருகின்றனர். பின்னர் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்கள் இலங்கைக்கு சென்று தமது உறவினர்கள் வீடுகளுக்கும், நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று சுதந்தரமாக காலம் கடத்துகின்றனர். பின்னர் கனடாவுக்கு திரும்பிவிடுகின்றனர். ஆகவே அகதி அந்தஸ்து பெறுவதற்கு முதல் இருந்த அச்சுறுத்தல், அதன் பின்னர் எங்கே போகிறது என அந்த இணையத்தளம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் இந்த இணையத்தளம், இலங்கை அதிகளை, ஏமாற்றுக்காரர்கள் எனவும், போலியானவர்கள், பின்கதவால் வந்தவர்கள் எனவும் பல அடைமொழிகளால் குறிப்பிட்டுள்ளது |
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
கனேடிய இலங்கை தமிழர்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக