திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பாலியல் குற்றம்் 4 இராணுவத்தினர் மீது30 குற்றச் சாட்டுக்களை

கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு  பிரதேசத்தைச்  சேர்ந்த  இரண்டு குடும்பப் பெண்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எதிரிகளுக்கு எதிராக பொலிசார் 30 குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்பற்ற வீட்டினுள் அத்துமீறி பிரவேசித்து பலாத்காரம் புரிந்தது சம்பந்தப்பட்ட பெண்கள் மீது குற்றம் புரிந்தது உட்பட 30 தனித்தனியான குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டு  இவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக விசாரணைகள்  நடத்தப்பட வேண்டும் என பொலிசார் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.
இதனையடுத்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி விசாரணைகள் நடத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் சார்பிலான சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
இந்த வழக்கில் சந்தேகநபர்களாகக் கைது செய்யப்பட்டிருந்த எதிரிகளான ஆறு இராணுவ வீரர்களில் 4 பேர் அடையாள அணிவகுப்பின்போது ஏற்கனவே சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பதும்  அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: