திங்கள், 23 ஆகஸ்ட், 2010

Airport கூத்துக்கள் தமிழர்களின் விசுக்கோத்துதனமான வேலைகளை

விமான நிலையத்தில் தமிழர்களின் கூத்துக்கள்
புலம்பெயர் தமிழர்களின் விசுக்கோத்துதனமான வேலைகளை நினைத்தால் சர்தாஜி ஜோக்குகளை மிஞ்சும் வகையில் பெரிய புத்தகமே போடலாம். அவ்வளவுக்கு தமிழர்களின் நடவடிக்கைகள் கேலிக்குரியதாக இருக்கும்.
புலம்பெயர்நாடுகளில் இருக்கும் சட்ட திட்டங்கள் பற்றி அலட்சியம் கொள்பவர்களாக பெரும்பாலானோர் இருக்கிறார்கள். காரைக்கூட சரியான இடத்தில் பார்க் பண்ண மாட்டார்கள். ஒரு யுரொ ஏன் பார்க்கிற்காக போடவேண்டும் என  அலட்சியப்படுத்தி 15யுரோ பைன் கட்டும் வல்லவர்கள்.
இது இப்படியிருக்க அண்மையில் இலங்கைக்கு விடுமுறைக்காக பயணம் செய்த தமிழர்கள் விமான நிலைய கவுண்டர்களில் ஓவர் லக்கேஜ் கொண்டு போய் அவை மறுக்கப்பட்டதால் விமானநிலையத்தில் பலர் நடமாடுகிற இடத்தில் லக்கேஜ் குறைப்பு செய்வதற்காக செய்யும் கூத்தைப் பார்க்கும் போது கொழும்பில் பேமன்ட் பிசினஸ் செய்பவர்கள் போல் ஜட்டிகள் சேர்டுகள் சாரங்களை ஒரு சொப்பிங் பையில் போட்டு பயணம் அனுப்ப வந்தவரிடம் கொடுப்பார்கள். போர்டிங் கார்ட் கவுண்டரில் நின்று பிளிஸ் பிளிஸ் என ஒவர் லக்கேஜூக்காக கெஞ்சுகின்ற சம்பவங்களை பார்க்கும்போது பெரிய கண்றாவியாக இருக்கும்.
இது பரவாயில் கையில் கொண்டு செல்லும் லக்கேஜூக்கு அனுமதிக்கப்பட்ட அளவு பொதுவாக 7கிலோவாகும். இது தெரிந்தும் ஒருவர் 40கிலோ அளவில் கொண்டு போக கவுண்டரில் இருந்த பெண்கள் இது எந்த லோகத்தில் இருந்து வந்த ஆசாமி என்பதுபோல் பார்த்து அவரை கலைத்து விட்டார்கள்.
இதுதான் பெரும்பாலான தமிழர்கள் நடந்துகொள்ளும் முறையாக இருக்கிறது. நீண்ட காலம் புலம்பெயர்நாடுகளில் இருந்தாலும் தமிழர்கள் தமது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதில்லை. காரணம் வேற்று நாட்டவர்களோடு பழகுவதில்லை. சட்ட திட்டங்களை அலட்சியப்படுத்தி தாங்கள் இவர்களுக்கு என்ன பயப்படுவதோ என்கிற மனோ நிலை. பைன் கட்ட வேண்டி வரும்போது கெஞ்சுவது. இப்படித்தான் மறத்தமிழனின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. ஒரு முறை விமானநிலையத்தில் பயணம் செய்ய வந்த ஒருவரை அனுப்ப வந்த கூட்டம் பெரிதாக இருந்தது. அதில் பலர் மதுபோதையில் இருந்தார்கள்.  பயணம் செய்தவரின் லக்கேஜ் அதிக மாக இருந்ததால் அதில் ஒன்றை எடுத்து லைனில் நின்ற ஏனைய தமிழர்களிடம் இதையும் சேர்த்துப்போடுகிறீர்களா என கெஞ்சியபடி நின்றதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
பார்க்க விசுக்கோத்துக்கள் மாதிரி நடந்து கொண்டால் எந்த அதிகாரிகள்தான் மரியாதையாக நடந்து கொள்வார்கள். பலருடைய உடுப்புக்களில் அன்று வீட்டில் என்ன சமையலோ அந்த மணம் வீசும். கோழிக்கறி, மீன்கறி என உடுப்புக்களில் பரவசமாக மணம் வீசும். அதைக்கூட அவர்கள் உணருவதில்லை. மற்றவர்கள் தங்களைப்பற்றி என்ன மதிப்பீடு செய்வார்கள் என்பதைக்கூட சிஞ்சித்தும் நினைத்துப்பார்ப்பதில்லை.
இந்த லட்சணத்தில் தமிழர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. சில வேளை இப்படி எழுதுவதால் மறத்தமிழர்களுக்கு கோபம் வரலாம். ஒரு தடவை விமானநிலையத்தில் தமிழர்கள் அதிகமாக பயணம் செய்யும் விமானகவுண்டர்களுக்கு சென்று பார்த்தீர்களானால் இதை விட அதிகமான கூத்துக்களைப் பார்த்துக்கொள்ளலாம்.
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது

கருத்துகள் இல்லை: