jaffnamuslim.com :2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை கூட்டுப் பொறிமுறை குறித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சனி, 15 அக்டோபர், 2022
2022 இல் உலக உணவு தட்டுப்பாடு! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மக்களுக்கு எச்சரிக்கை
சத்யாவுக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கிவிட்டேன்" - முதல்வர் ஸ்டாலின்
minnambalam.com - christopher : சென்னையில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டதை அறிந்து நொறுங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த13ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்ற வாலிபரால் ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து துரைப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த சதீஷை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொலையாளி சதீஷ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சத்யா கொலை. -ஆணாதிக்கமா ஹீரோயிசம்? தமிழ் திரையுலகம் மாறுமா? காதலை மறுக்க பெண்ணுக்கு உரிமையில்லையா?
பெண்ணை பின்தொடரும் ஸ்டாக்கிங் (Stalking) சினிமாவில் ஹீரோயிசமாக காட்டப்படுவதுதான் இதுபோன்ற "மனநிலை பிறழ்வுக்கு" பெரும் காரணம் என்ற நீண்டகால குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்ற படுகொலை.
20 வயது இளம்பெண் சத்யா, பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் வேகமாக வந்த ரயில் முன்பாக வெறி கொண்ட ஒரு வாலிபரால் தள்ளி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
”ரிசைன் பண்ணிடுவேன்”- அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!
மின்னம்பலம -Aara : வைஃபை ஆன் செய்ததும் ஃபேஸ்புக் மெசஞ்சரில், ‘ஸ்டாலின் பொதுக்குழு பேச்சு ஆளுங்கட்சியான திமுகவுக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும், ஏன் திரைத்துறையிலும் கூட பேசப்பட்டு வருகிறதே…” என்ற தகவல் வந்து விழ, அதற்கு பதிலாக ஒரு எமோஜியை அனுப்பிவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசிய பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் பேசுபொருளாகிவிட்டது.
மின்னம்பலம் சார்பில் மக்களிடையே கருத்து கேட்கப்பட்டபோது கூட அமைச்சர்களின் தான் தோன்றித் தனமான கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியது கட்சிகள் தாண்டி மக்கள் மத்தியிலும் விவாதமாகியிருக்கிறது.
அமைச்சர் துரைமுருகனும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியிலுள்ள பொன்னை கிராம ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆய்வு செய்யச் சென்றனர்.
அப்போது துரைமுருகன் அங்கிருந்த சீனியர் டாக்டர்களிடம் எரிந்து விழுந்தார். மருத்துவ கட்டடங்கள் பழுதாகியிருப்பதற்கு மருத்துவர்களே காரணம் என்றும், பாம்புக்கடி மருந்து இல்லாமையை காரணம் காட்டியும் டாக்டர்களை கன்னியாகுமரிக்கு தூக்கியடியுங்கள் என்று சொன்னார்.
அதுவும் அவர் அன்று மருத்துவர்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறை வீடியோ காட்சிகளாக பரவியது.
அதுமட்டுமல்ல… ஆய்வுக்குப் பின் துரைமுருகனும், மாசுவும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர்.
இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் - பிரியங்கா காந்தி அதிரடி பிரசாரம் ஆரம்பம்
இமாச்சல் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று (அக்டோபர் 14) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இமாச்சல் பிரேதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 ஜனவரி 8 ஆம் தேதி நிறைவுபெற உள்ளது.
இதையடுத்து, அந்த மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (அக்டோபர் 14) அறிவித்தார்.
இந்நிலையில் இமாச்சலுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாம்பாட்டி கையில் இந்திய பொருளாதாரம்... ஸ்பானிஷ் கார்ட்டூனை எதிர்க்கும் பாஜக
![]() |
nakkheeran.in : கரோனா பாதிப்பு, எரிபொருள் விலையேற்றம் என உலக அளவிலான பல்வேறு சிக்கல்களுக்கு பிறகும் இந்திய பொருளாதாரம் உயர்வையே எட்டிவருதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என பல்வேறு தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதேநேரம் கரோனா காரணமாக உலகநாடுகள் பல வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வருகிறது எனக் கூறி ஆளும் தரப்பினர் சொல்லி வருகின்றனர்.
வெள்ளி, 14 அக்டோபர், 2022
பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ. 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்- உயர் கல்வித்துறை உத்தரவு
பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. இரண்டாம் ஆண்டில் கிடையாது.
பெலாரஸ் நாட்டை விழுங்கும் ரஷியா படைகள் .. ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட பெலாரஸ் தலைவர் சுவெட்லானா Sviatlana Tsikhanouskaya
ராதா மனோகர் : ரஷியாவின் பெலாரஸ் ஆக்கிரமிப்பு பற்றி பெல்லரசின் எதிர்க்கட்சி தலைவர் சுவெட்டலான ஷிகாணோஷ்கயா ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
பெலாரஸ் நாட்டில் ரஷ்ய படைகளை நிரந்தரமாக நிறுத்தி வைக்கும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ரஷ்யாவும் அதன் அடிவருடி பெலாரஸ் ஆட்சியாளர்களும் ஈடுபடுகிறார்கள்
பெல்லரசின் அடையாளத்தை சிதைத்து பெல்லரசுக்கும் ஐரோப்பியாவுக்கும் இடையே நிலவும் தொடர்புகளை துண்டித்து பெல்லரசின் சமூக வாழ்வை நாசமாக்கும் வேலையை ரஷியா செய்கிறது.
பெல்லர்ஸில் ரஷ்ய ராணுவத்தை நிறுத்துவதன் மூலம் உக்கிரேன் போலாந்து லிதுவேனியா மற்றும் முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் இதர நேட்டோ நாடுகளையும் பயமுறுத்துகிறது
ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நாட்டில் உண்மையான ஜனநாயகத்தையும் எங்கள் அடையாளத்தையும் ஐரோப்பியவுடன் உள்ள உறவையும் தொடர உதவவேண்டும்
பெல்லர்ஸில் உள்ள ரஷிய போலி அரசை தூக்கி எறியவேண்டும்
Kerala 2வது நரபலிக்கு பின்.. பேஸ்புக்கில் குற்றவாளி போட்ட அந்த போஸ்ட்.. ஷாக்கான போலீஸ்! B
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்மா மற்றும் ரோஸ்லி. இவர்கள் இருவருமே அங்கு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும்தான் சாபி என்ற இளைஞரால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர்.
பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது. இந்த நரபலி பற்றிய கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் பத்மா கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்மா தமிழ் பெண் ஆவார்.
கேரளாவில் மேலும் 26 பெண்கள் நரபலி? அதிர்ச்சி தகவல்கள்
தினகரன் : திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்,
ள நிலையில், மேலும் பல பெண்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரி, பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மந்திரவாதி முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
”திருநங்கைகளின் கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது” - - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மின்னம்பலம் : என் அம்மாவை திருநங்கைதான் பார்த்துக் கொள்கிறார்: அன்பில் மகேஷ்
”திருநங்கைகளின் கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நிகழ்வு இன்று(அக்டோபர் 13) நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”திருநங்கைகளுக்கு தனி நலவாரியத்தை ஏற்படுத்தியவர் கலைஞர்.
ஆ.ராசா மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மனு!
மின்னம்பலம் - Prakash : இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா “நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும்வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும்வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்.
70களில்தான் முதல் தலைமுறை பட்டியலின மக்கள் படித்து சுயமரியாதையை...
![]() |
Kandasamy Mariyappan : 1. பெரியார் சாதியை ஒழிச்சிட்டாரா..!?
வலதுசாரி கும்பல் மற்றும் ஊதா, பச்சை, மஞ்சள், வெள்ளை சங்கீஸ்.!
பெரியார் எப்படா/டீ சாதியை ஒழித்தேன் என்று கூறினார்.!
இந்த கருமம் பிடித்த சாதி ஒழியனும் என்றுதானே கடைசி வரையில் போராடினார்டா/டீ.!
கடவுள் பெயரால் இந்த சாதிய கட்டமைப்பை உறுதி படுத்துறானுக, எனவே அந்த கடவுளே இல்லேங்கிறேன் என்றார்டா/டீ.!
2. ஒவ்வோரு கிராமத்திலும் காலனி, தனி சுடுகாடுன்னு இருக்கு.,
இப்படி சாதியை ஒழிக்காம நாமெல்லாம் தமிழன், தமிழனாக ஒன்று கூடுவோம் வாங்க, திராவிடர்கள்னு எங்களை ஓட்டுக்காக ஏமாற்றுகிறீர்கள்.!
RSS வளர்க்கும் ஊதா சங்கீஸ்.!
என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.!
நாளையிலேர்ந்து எல்லா கிராமங்களிலும்
ஒரு வேளாளர் வீடு, அடுத்து முக்குலத்தோர் வீடு, அடுத்து உடையார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து கோனார் வீடு, அடுத்து நாடார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து ஒரு அய்யர் வீடு, அடுத்து ஒரு செட்டியார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து ஒரு வலையர் வீடு, அடுத்து ஒரு வன்னியர் வீடு, அடுத்து ஒரு நாயுடு வீடு, அடுத்து ஒரு பறையர்/பள்ளர் வீடு என்று அடுக்கி விடலாமா.!
இதைத்தான் கலைஞர் சமத்துவபுரம் என்று 1996ல் ஆரம்பித்தார்.!
100 கிராமங்களை அமைத்தார்.!
2001 மற்றும் 2011ல் நீங்கள் தேர்ந்தெடுத்த ஜெயலலிதா 15 ஆண்டுகளாக கிட்ப்பில் போட்டார்.!
திருநங்கைகளின் தலைமுடியை வெட்டி இளைஞர்கள் அட்டகாசம்!
![]() |
Grace Banu : தூத்துகுடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த இரண்டு திருநங்கைகள் கடஎத மாதம் 7 தேதி பிச்சையெடுக்க சென்ற பொழுது,
அதே பகுதியை சார்ந்த நோவாயூபன்(28) மற்றும் விஜய்(27) இருவரும் தொடர்ந்து திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வதும் கத்தியல் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் .
கடந்த மாதம் 7 தேதி இரு திருநங்கைகளையும் வழி மறித்து அவர்களை கத்தியால் அடித்த்து அவர்கள் ஆடையை அவிழ்த்து முடியை வெட்டி மிக கொடுரமான தாக்குதலை நடத்தி அதை விடீயோ பதிவு செய்திருக்கின்றனர்.
பாதிக்கபட்ட திருநங்கைகள் காவல்நிலையம் செல்ல கூடாது,
மருத்துமனையில் சேர கூடாது என போகிற இடமெல்லாம் அவர்களை மிரட்டி இருக்கிறார்கள் .
வியாழன், 13 அக்டோபர், 2022
ரெயிலில் இருந்து கீழே தள்ளி மாணவி கொலை
காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார் விசாரணை. தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளி விட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெட்ரோவில் 100 ரூபாயில் ஒரு நாள் பாஸ்
பொதுவாக அலுவலக நேரங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களில் 30 சதவீதம் பேர் செல்போன் உதவியுடன் 'கியூ-ஆர் கோடு' முறையிலும், 70 சதவீதம் பேர் பயண அட்டையும், சிலர் டோக்கன் முறைகளையும் பெற்று பயணம் செய்கின்றனர். இதற்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை
கேரள சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சோ்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகார்கள் மீது போலீசரார் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.
செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது ஷபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த பகவல் சிங் - லைலா தம்பதி, அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.
கணவரை கொன்று மந்திரவாதியுடன் சேர்ந்து வாழ திட்டமிட்ட கேரள நரபலி லைலா...
2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முகமது ஷபியும், லைலாவும் சேர்ந்து லைலாவின் கணவர் பகவல் சிங்கை கொலை செய்ய ரகசிய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் இன்று கூறியதாவது:-
பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதனை பகவல் சிங் முழுமையாக நம்பி, முகமது ஷபி கூறிய அனைத்தையும் செய்ய தயாராகி உள்ளார்.
காஞ்சி மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது.. காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்
ராதா மனோகர்
: காஞ்சி மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!
காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்
இவரின் உண்மை பெயர் சுவாமிநாதன் சர்மா என்பதாகும் (20 May 1894 – 8 January 1994) இதுதான் காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு !.
மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் காலத்தில்தான் உருவானது
கும்பகோணத்தில் இருந்த மடம் கிபி 1839 இல் தான் காஞ்சிபுரத்திற்கு மாறியது..
( sadananda@anvil.nrl.navy.mil (கே. சதானந்தா) என்பவரின் கட்டுரையில் , editor. cs m.uc.e du (டைஜெஸ்ட் எடிட்டர்) ;
காஞ்சிபுரம், ஜூலை 24 (பிடிஐ) 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ( ? ) காஞ்சி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் 60வது நூற்றாண்டு விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் இன்று தொடங்கி வைத்தார்.என்று அறிவித்தார்கள்!
மேலும் சங்கரமடமானது கிமு 482 முதல் 477 வரை முதல் 'பீடபதி' (மடத்தின் தலைவர்) ஆதி சங்கரரால் இங்கு நிறுவப்பட்ட மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆவார்.என்றும் கூறப்பட்டது.
திராவிடர்களின் சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று மடைமாற்றிய வரலாறு

![]() |
ராதா மனோகர் சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று நம்மவர்களே நம்புவதை என்ன சொல்வது?
நாங்கள் திராவிடர்கள் We Dravidians என்ற முக நூல் போராளிகளே பரதநாட்டியம் என்றால் பாவ ராக தாள நாட்டியம் என்று வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதை பார்க்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
1935 (தைத்திங்கள் முதலாம் நாள் ) இல் அருண்டெல் என்ற வெள்ளைக்காரரின் தமிழ் பார்ப்பன மனைவியான ருக்குமணி என்பவர் இந்த சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார் - எனது சின்னஞ்சிறு பராயத்தில் கோயில் திரு விழாக்களில் சதிர் கச்சேரி அல்லது சின்னமேளம் என்ற சொற்களை கேட்டிருக்கிறேன் ..
புத்தூர் செட் .. ஆவரங்கால் செட் . கைதடி செட் என்று பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள் .
புதன், 12 அக்டோபர், 2022
திடீரென குறைந்த FaceBook Followers.. பிரபலங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பின்னணி என்ன ?
கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகமான பேஸ்புக் தளம் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இதை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க் சாமானியராக இருந்து 4 ஆண்டுகளில் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார்.
அதன் பின்னர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் பேஸ்புக் பெரும் லாபத்தை ஈட்டத்தொடங்கியது. அதோடு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை ஒண்றிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
காதலித்து ஏமாற்றிய டீச்சர் - பிளஸ் -2 மாணவர் தற்கொலை
மாலைமலர் : டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார். இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு டீச்சராக இருந்து வரும் ஷர்மிளாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பள்ளியில் பாடம் நடத்திய பிறகு மாலை நேரத்தில் தனது வீட்டில் வைத்தே மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடம் நடத்தி இருக்கிறார்.
இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் டியூசனில் சேர்ந்து படித்து உள்ளனர். கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவரும் ஆசிரியை ஷர்மிளாவிடம் டியூசனுக்கு சென்று படித்து உள்ளார்.
இந்த பிளஸ்-2 மாணவனை ஆசிரியை ஷர்மிளா காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். மாணவனுக்கு பள்ளி பாடத்துடன் சேர்த்து காதல் பாடத்தையும் அவர் கற்றுக்கொடுத்துள்ளார்.
ஜாதி சான்றிதழ் கேட்டு நரிக்குறவர் தீக்குளித்து தற்கொலை... தானாக முன்வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்றம்
தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்ட காவலர்கள், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி வேல்முருகன் உயிரிழந்தார்.
வாடகை தாய் - நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை- நாளை விசாரணை
நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.
சென்னை: நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷ
இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் இந்த சர்ச்சைக்கு வித்திட்டது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன.
தமிழ்நாடு பொது விடுமுறை நாட்கள் 24 - 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல்
மாலை மலர் : சென்னை: தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






