சனி, 10 செப்டம்பர், 2022

கர்ப்பிணி பெண் வலியால் துடிக்க.. ஆட்டோவிடம் 1,500 லஞ்சம் கேட்ட சென்னை போலீஸ் - அடாவடியில் காவல்துறை.!

A fine of Rs1500 was collected from the auto driver who brought the pregnant woman in the middle of the night

tamil.asianetnews.com - Raghupati R  :  காவல்துறையின் பேச்சை, காவலர்களே மதிப்பதில்லை என்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், ரவுடிகளை போல, அடாவடி செய்து பணம் பறித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கினால் 6 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று காவல்துறை சில மாதங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது  link   கர்ப்பிணி பெண்ணுடன் வந்த ஆட்டோ! 1500 லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸ்!

இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

tamil .samayam.com :  தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவர் இயக்குநர் பாரதிராஜா. அவரது நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாகி அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தில் நடிகர் தனுஷின் தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா. இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.

நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last

 நல்லூர் கோயிற் பரிபாலனைத்தை பற்றிய தீர்ப்பு - முழுவிபரம்
 யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயிற் பரிபாலன முறையை பற்றி 2 ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தனர்.
இத்தீர்ப்பில் கோயிலதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 1928 - part 4

 ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம்
மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம்
கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும்
அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம்
நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம்
எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக
கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன்.

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு part 3


 இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர் . பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார்.
அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா ? இல்லை
 அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும்
அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம்
அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று  , நாங்கள் இருபத்தொன்று . தம்பையா குருக்களுக்கு உரியதொன்று  மேற்கில் உள்ளதொன்று.

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு -- part 2

 நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம்
நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை
கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று  முந்தி சொன்னீரா?  இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -- இந்து சாதனம் பத்திரிகை

 நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday
மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம்  6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது.
1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்)
ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா?  இல்லை
டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார்  முயற்சி செய்யவில்லையா? அப்படிஇல்லை

கலைஞரின் முரசொலி 4041 கடிதங்கள் 54 தொகுதிகள் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்

மாலைமலர் :  சென்னை:  விருதுநகரில் வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலைஞர் கடிதங்கள் தொகுப்பு நூல்களாக வெளியிடப்படுகின்றன.
இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொள்கிறார்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
1968 தொடங்கி 2018 வரையில் கலைஞர், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை பதிப்பகத்தில் உரிமையாளர் கவுரா ராஜசேகரன் புதுப்பித்து உள்ளார்.
21 ஆயிரத்து 510 பக்கங்களில் கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 54 தொகுதிகளாக அவை வெளிவந்துள்ளன.

பாகிஸ்தான் Vs இலங்கை அதிரடி வெற்றி ...சூப்பர் 4 சுற்றில் கடைசி போட்டியில்

tamil.samayam.com :  PAK vs SL: 'யாரா இருந்தாலும், எவனா இருந்தாலும் அடிப்போம்': இலங்கை ஹாட்ரிக் வெற்றி..பாக்கிஸ்தான் படுதோல்வி!
ஆசியக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் கடைசி போட்டியில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் வெற்றி, தோல்வியை பெற்றால் எந்த பயனும் கிடையாது என்பதால், இப்போட்டியில் இரு தரப்பும் பதற்றம் இல்லாமல் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இலங்கையின் விக்டோரியா அணைக்கட்டு . எலிசபெத் மகாராணியின் அன்பளிப்பு

kuruvi.lk  :  இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கமும், 2 ஆம் எலிசபெத் மகாராணியும்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் நிலையம் – அதேபோல உயரமான அணை அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்க வளவில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் இன்று பறக்கவிடப்பட்டது. அத்துடன், வெள்ளைக்கொடியும் பறக்கவிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்துடன், இரண்டாம் எலிசபெத் மகாராணியை தொடர்புபடுத்தி பார்க்கையில், இந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தை மறந்துவிடமுடியாது. மகாராணி கருணை காட்டியதால்தான் , மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் உயிர் நாடியான – இலங்கைக்கு எல்லா விதத்திலும் முக்கியத்துவம் மிக்க அந்த வளம் இலங்கைக்கு கைகூடியது எனலாம்.

கவிஞர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை என்ன காரணம்? என்ன நடந்தது? - முதற்கட்ட தகவல் என்ன?

tamil.oneindia.com  - Vignesh Selvaraj  :  சென்னை : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தூரிகை தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூரிகை தற்கொலைக்கான காரணம் குறித்து முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாடலாசிரியர் கபிலனின் மகளும், ஆடை வடிவமைப்பாளருமான தூரிகை சற்று முன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

பரந்தூர் விமான நிலையம்: கிராம மக்களை அச்சுறுத்துவது அரசுக்கு அவப் பெயரையே ஏற்படுத்தும்- மார்க்சிஸ்ட் எச்சரிக்கை

மாலை மலர் :  மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதிய விமான நிலையங்கள், சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, மக்களை வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயரச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னால் அத்தகைய திட்டங்கள் அத்தியாவசியமானதுதானா? என அரசு ஒருமுறைக்கு பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுகள் அடிப்படையில் திட்டங்கள் அவசியம் என முடிவு செய்தால், முழுமையான வெளிப்படைத் தன்மையோடு, திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவைகளை சட்ட ரீதியில் பெற்று அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்களிடம் கலந்துரையாடல் நடத்தி முழுமையான ஒப்புதலை பெற்ற பின்பே திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

டாடா - ஆப்பிள் ஒப்பந்தமா.. தமிழ்நாட்டில் உற்பத்திக்கு வாய்ப்பு..!!

சென்னையில் உற்பத்தியா?

tamil.goodreturns.in - Pugazharasi S :  டெல்லி: டாடா நிறுவனம் சார்பில் ஆப்பிள் செல்போனுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, இந்தியாவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் 14 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், டாடாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் போனின் பெரும்பாலான உற்பத்தியானது சீனாவில் செய்யப்பட்டு வந்த நிலையில், சீனாவில் இருந்து தனது உற்பத்தியினை செய்யத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் உற்பத்தி

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி... யார் காரணம்..? - அன்புமணி கோரிக்கை

நக்கீரன் : இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 " மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.
குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது.
மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீட்டில் வெல்லும் அளவுக்கு கூட அரசு பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும்.

வியாழன், 8 செப்டம்பர், 2022

யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் என்னவாயின..?

 தேசம். நெட் அருண்மொழி:     யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் என்னவாயின..? இனச்சுத்திகரிப்பை புலிகளே செய்தனர்.”- முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், \
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத் மகாராணி காலமானார்

tamil.abplive.com - சுகுமாறன் : இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசெபத் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் உயிரிழந்தார். அவரது மறைவால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Queen Elizabeth dies at age 96: UK Royal Family, Official Queen Elizabeth Dies: இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானார்..! உலகத் தலைவர்கள் இரங்கல்...!

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இந்த அறிகுறிகள் தோன்றும்

zeenews.india.com  -  Vijaya Lakshmi  :  சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள்: சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது.
ஆரோக்கியமற்ற சிறுநீரகத்தின் பல எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன,
அவை நுட்பமானவையாகவோ அல்லது கடுமையானதாகவோ இருந்தாலும் புறக்கணிக்கப்படக்கூடாது. சிறுநீரக நோயின் அறிகுறிகளை அடையாளம் காண நம்மால் முடியும்.
சிறிய அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,
இதனால் எந்த வகையான நோயும் முன்னேற வாய்ப்பில்லை. சிறுநீரகங்கள் உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன,

திருப்பத்தூர் தலைமை ஆசிரியை கொலை உடல் முழுவதும் வெட்டு காயங்கள் 20 பவுன் நகை கொள்ளை

மாலை மலர்  :  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தலைமை ஆசிரியையைக் கொன்று, 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் கான்பாநகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். காலை 9 மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தனர்.
அங்கு, ரஞ்சிதம் வலதுகை நரம்பு, குதிகால் நரம்புகள் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவு... கடந்த ஆண்டை விட குறைவு

நக்கீரன் : நாடு முழுவதும் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள் 2022 ஆண்டிற்கான நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்விற்கான முடிவு வெளியிடும் தேதிகள் மாற்றப்பட்ட நிலையில் இறுதியாக தேசிய தேர்வு முகமை செப்டம்பர் 7ம் தேதி (நேற்று) இணையத்தின் வாயிலாக இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில்  அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான முடிவின்படி, ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு எழுதிய 17.64 லட்சம் பேரில் ஒட்டுமொத்தமாக 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில் 2,82,184 பேரும், ஓபிசி பிரிவில் 4,47,753 பேரும், எஸ்சி பிரிவில் 1,31,767 பேரும், எஸ்டி பிரிவில் 47,295 பெரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இ.டபிள்யூ.எஸ் பிரிவில் 84,070 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,717 பேரும் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2024 இல் தேர்தலில் 63% ஓட்டுக்களை காங்கிரஸ் திமுக கூட்டணிபெறும்! ஸ்டாலின்-ராகுல் அதிரடி திட்டம்! ஆர்எஸ் பாரதியின் பேட்டி

tamil.oneindia.com  Nantha Kumar R  :   சென்னை: ராகுல்காந்தியின் யாத்திரை என்பது பாஜகவுக்கு ரொம்ப அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உள்ள 63 சதவீத ஓட்டை ஒன்றாக திரட்ட தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் இணைந்துள்ளனர்'' என கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து திமுகவின் ஆர்எஸ் பாரதி புள்ளிவிபரங்களோடு எடுத்து கூறியுள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறவும் அக்கட்சி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

புதன், 7 செப்டம்பர், 2022

கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கலைஞர் செய்திகள்   : தமிழ்நாடு 150 நாட்கள்- 3500 கி.மீ தூரம்.. தேசியக் கொடியை கையில் கொடுத்து ராகுல் பயணத்தைத் தொடங்கி வைத்த முதல்வர்!
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி. இந்த நடை பயணத்திற்காக ராகுல் காந்தி நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் இன்று ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரு வெள்ளம் - கோடீஸ்வரர்களின் வீடுகளையும் பதம் பார்த்த வெள்ளம்.. படகில் மீட்கப்பட்ட தொழிலதிபர்கள்!

tamil.goodreturns.in  -  Tamilarasu J  :  கடந்த வாரம் பெங்களூர் நகரில் வரலாறு காணாத மழை பெய்தது என்பதும் 75 ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டி தீர்த்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
பெங்களூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெங்களூர் நகரமே கிட்டத்தட்ட மூழ்கியது என்பதும் இதனால் பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பெங்களூரு நகரில் வாழும் கோடீஸ்வரர்களும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வரர்களின் பங்களாக்களும் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்ததை அடுத்து அவர்கள் படகுகளில் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிளகாய் ! ஹார்ட் அட்டாக் வாராமல் இருக்கவும் , வந்தால் நிவர்த்திக்கும் இதுதான் கைகண்ட மருந்து

padmahari.wordpress.com :   Billions of dollars are made by Pharmaceuticals selling products-- ostensibly sold to reduce
cholesterol and by extension heart disease. Cayenne could eliminate all these illnesses and that's why the medical establishment and big Pharma doesn't want people to know about it. In fact the 'medical fraternity will demonise this wonderful natural healing fruit' in their efforts to dissuade you from using it.
மிளகாய்க்கு காரத்தைக் கொடுக்கும் கேப்சைசின் (capsaicin) என்னும் ஒரு வேதியல் பொருளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என்பது முந்தைய சில ஆய்வுகள்மூலம் தெரிந்த செய்தியே! ஆனால், கேப்செய்சின் குறித்த இதுவரையிலான ஆய்வுகளில், மிகவும் அதிக அளவிலான, குறுகிய கால கேப்செய்சின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த, ஆனால் சர்ச்சைக்குறிய முடிவுகளே எட்டப்பட்டது என்றும், சமீபத்திய இந்த ஆய்வின்மூலம், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவில் இருக்கும் கேப்செய்சின் அளவுகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது

144 தொகுதிகளில் பா.ஜனதா பலவீனமாக உள்ளது! அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆலோசனை

தினத்தந்தி  :  144 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பலவீனமாக உள்ள 144 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து அவற்றின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தொடர்ந்து 2-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் தொகுதி நிலவரத்தை அலசியபோது 144 தொகுதிகளில் பா.ஜனதா பலவீனமாகவும், வெற்றி பெறுவது கடினமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

ராகுல் காந்தி நடைபயணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - இன்று குமரியில்

hindutamil.in  :  ராகுல் காந்தி நடைபயணம் குமரியில் இன்று தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நாகர்கோவில்: குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.