சனி, 31 ஜூலை, 2021
கலைஞரை காணவந்த 85 வயது பாட்டியின்..... புகைப்படம்
கலைஞரை பார்க்க வந்த 85 வயது திருவாரூர் பாட்டி,, கண்களில் கண்ணீர் நடையில் பதட்டம்
இந்த 85 வயது மூதாட்டி எங்கோ தொலை தூரத்தில் இருந்து வருகிறார். பேருந்தில் தட்டு தடுமாறி ஏறி வந்து சென்னை மாநகரின் பெருந்தெருக்களில் தன்னந்தனியாக எதையோ அல்லது யாரையோ தேடி பதட்டத்தோடு ஓட்டமும் நடையுமாக ,,,
அப்படி என்ன இந்த மூதாட்டியின் தேடல்?
ஆம் கலைஞர் உடல் நலம் குன்றிய செய்தி இவரை கண் துஞ்ச விடாமல் துரத்துகிறது.
அவரென்ன மூதாட்டியின் நெருங்கிய உறவா?
இந்த மூதாட்டியின் சின்னஞ்சிறு உலகத்தில் தமிழகத்தின் வரலாறு தன்னை இனம் காட்டி கொள்ளாமல் மறைத்து கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது !
அந்த நெருப்பின் சுவாலைதான் அவர் கண்களில் நீராக முட்டி வழிகிறது.
தன் வாழ்நாளில் தமிழகத்தின் அன்றைய தாழ்ந்த நிலையெல்லாம் அவள் மனக்கண்களில் திரைப்படமாக ஓடிகொண்டிருப்பது தெரிகிறது!
ஒரு ஆண் ஆசிரியரை கூட நியமிக்கக்கூடாது: கல்வி அலுவலர்களுக்கு கரூர் ஆட்சியர் உத்தரவு
தமிழக பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டியை அமைக்கவும், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ''8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியைகளை நியம்மிக்க வேண்டும் என்றும் கரூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுன் வரக்கூடும்! அரசு ஆலோசனை .. கொரோனாவின் மூன்றாவது அலை?
Hemavandhana - Oneindia Tamil : சென்னை: தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுன் போட்டுவிடப்படுமோ என்ற கலக்கம் சூழ்ந்து வரும் நிலையில், அரசு தரப்பிலும் அப்படி ஒரு டாக் ஓடியிருக்கிறதாம்..
பிறகுதான் முதல்வர் அந்த முடிவை கைவிட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.. ஒரே நாளில் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
அதிலும் 19 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது..
இதில் சென்னைதான் பிரதானமாக உள்ளது.. இப்படி தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது...
ஆனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. இந்த 10 மாநிலங்களுக்கு மிக மிக கவனம் தேவை.. தளர்வுகள் கொடுக்க கூடாது..
முதல்வர் முதல்வர் சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் முதல்வரின் உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி நிறுத்தப்பட்டது...
![]() |
மின்னம்பலம் : கொரோனா இரண்டாம் நிலையின் காரணமாக ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்பட்டது. அதாவது ஜூலை 31ஆம் தேதி வரை இந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுத் தாக்கல் செய்தது.
130 அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து.. விஜயகாந்த் விஜயதரணி இ வி கே எஸ் இளங்கோவன் ஜி ராமகிருஷ்ணன் ...
Rayar A - Oneindia Tamil News : சென்னை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் E.V.K.S. இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், G. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள் பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன்,
ஆப்கானிஸ்தான் ஐ.நா செயலகம் மீது தாலிபான்கள் தாக்குதல்
மாலைமலர் : ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க அரசு படைகளை விலக்கிக் கொள்ள முடிவெடுத்து செயல்பட்டு வரும் நிலையில், அங்கு தலிபான்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.
காபுல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது.
இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது. எனினும், திட்டமிட்டபடி கடந்த 1-ம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளிப்போனது. இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
வெள்ளி, 30 ஜூலை, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்
![]() |
BBC :இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய இந்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயதான சிறுமி வேலை செய்து வந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த சிறுமி கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கை கோர்க்க தே.மு.தி.க. முடிவு
மாலைமலர் :கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் பல நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க., டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆனால் தே.மு.தி.க.வால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பிறகு ஒரு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்தது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. அப்போது அந்த கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பிடித்தது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
OBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்!
கலைஞர் செய்திகள் : முழுமையான சமூகநீதியை அடையும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓ.பி.சி-க்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒன்றிய அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆன பிறகும் முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு ஆறுதல் தருவதாக உள்ளது. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வாக உள்ளது.
அரும்பாக்கம் RK nagar குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிப்பு .. பொதுமக்கள் தெருவில் அவதி
IsaiarasuAmbedkar IsaiarasuAmbedkar : *குடிசை மாற்று வாரியத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம்!*
நன்பர்களே, வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை&எளிய மக்கள் நகரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நகரத்தில் ஏற்கெனவே பெருகியுள்ள வேலையின்மையாலும்,
அப்படியே வேலையிலிருந்தாலும் வேலைக்கேற்ற கூலியின்றி வசிக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாததாலும்,
மற்றும்பல காரணங்களாலும் சென்னை நகரத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிசைகளை அமைத்து வசித்துவந்தனர்.
இதனால் நகரங்களில் குடிசைப் பகுதிகள் அதிகரித்துவந்தன.
ஆனால் அந்தப் பகுதிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுபோன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை முறைப்படுத்தவும் முறைப்படுத்தமுடியாத பகுதிகளிலுள்ள மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரவும் எழுந்த நிர்பந்தத்தின் காரணமாக 1971ல் குடிசை மாற்றுவாரியம் உருவாக்கப்பட்டது.
இசை - இளையராஜா; பின்னணி இசை - தேவா... 90களில் வெடித்த ஆடியோ ரைட்ஸ் சர்ச்சை!
![]() |
கலைஞர் இலவச TV கள் 10 ஆண்டுகளாக குடோனில் முடக்கம் .. மக்கள் வரிப்பணம் வீண் .. ஜெயாவின் மற்றுமொரு அடாவடி
![]() |
BBC நடராஜன் சுந்தர் - பிபிசி தமிழுக்காக : கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் அதிகமான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் சமுதாய நலக்கூத்தில் முடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக அதிமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த தொலைக்காட்சிகளை என்ன செய்ய உத்தேசித்துள்ளது?
தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது, திமுக ஆட்சி வந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அதன் கலைஞர் அறிவித்தார்.
அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. கலைஞர் டிவி என்ற பெயருடன் அந்த தொலைக்காட்சிகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருந்தது எனலாம்.
வியாழன், 29 ஜூலை, 2021
தாது வருடப் பஞ்சம் ! தமிழர்கள் சாபிட்டாச்சா சாப்பிட்டாச்சான்னு ஏன் கேட்கிறார்கள்? வரலாற்று பின்னணி
![]() |
![]() |
பாண்டியன் சுந்தரம் : மிகப்பெரிய தாது வருடப் பஞ்சம்: நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது ‘சாப்பிட்டாச்சா’ எனக் கேட்டுக் கொள்ளும் வழக்கம் ஆரம்பித்தது பஞ்ச காலத்தில் இருந்துதான்!
வற்றிய உடலும் ஒட்டிய வயிறுமாக, தோல் போர்த்தப்பட்ட எலும்புக் கூடுகள் என நினைக்குமளவிற்குப் பெரியவர்கள், குழந்தைகள் என ஒருசேர காட்சி தருகிற இந்தப் புகைப்படங்கள் தாது வருடப் பஞ்சத்தின் சாட்சி.
தன் தாயின் வற்றிபோன மார்பகங்களில் தனக்கான உணவைத் தேடிக் கொண்டு இருக்கும் குழந்தை, மரப்பொந்தில் எறும்புப் புற்றை தேடி ஏமாந்து போய் நடக்கமுடியாமல் அமர்ந்திருக்கும் சிறார்,
பசியோடு செய்வதறியாது அமர்ந்து இருக்கும் குடும்பம்...
துயரத்தின் வலியை உணர்த்தும் படங்கள்...
நூறாண்டுகள் கடந்தும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தப் புகைப்படங்கள் ஆப்ரிக்காவிலோ, சோமாலியாவிலோ எடுக்கப்பட்டதல்ல. 1876 முதல் 1878 வரை நம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய தாது வருடக் கொடும் பஞ்சத்தின் போது வில்லோபை வாலஸ் ஹூப்பர் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது.
தலித் கர்ப்பிணி பெண் மீது எச்சிலை துப்பி செருப்பு காலால் எட்டி உதைத்த கொடூரம்
![]() |
Vincent Raj : தலித் பெண் மீது தாக்குதல் – எச்சிலை துப்பி செருப்பு காலால் எட்டி உதைத்த கொடூரம்
கலெக்டரும் எஸ்பியும் இணைந்து அபிராமிக்கு ஆறுதல் கூற வேண்டும்
வலியும் அவமானமும் இயலாமையும் கலந்த உணர்வுடன் அபிராமி முன்பு நின்று கொண்டிருந்தேன். நிறைமாத கர்ப்பிணி பெண். இன்னும் சில நாட்களில் ஒரு மகனையோ ஒரு மகளையோ பெற்றெடுக்கும் நிலையில் இருப்பவர்.
என் வீட்டுக்காரு முகத்துல எச்சில துப்பினாங்க சார். டேய் பறப் பயலே உனக்கு இவ்வளவு திமிரா?
என்று கூறிக் கொண்டே செருப்பு காலால் எட்டி உதைச்சாங்க. நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன்.
என் முகத்துலயும் எச்சில். என் இரண்டு குழந்தைகளும் தரையில் கிடந்தாங்க.
இவ்வளவு அநியாயம் செய்த ஆட்கள போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை என்று கூறி கலங்கினார். கவலைப்படாதே அபிராமி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஆறுதல் படுத்தினேன். விசாரணையில் ஈடுபட்டோம்.
சோனியா – மம்தா சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரள அழைப்பு
/tamil.indianexpress.com : Mamata Banerjee rallies parties against BJP Tamil News: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார். Mamata Banerjee news in tamil: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர் காட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 5 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார

மதுரையில் சமணர் படுக்கைகள் கண்டுபிடிப்பு!
![]() |

இந்த குகைத்தளம் இயற்கையான அமைப்பாகும். இதன் காலம் 1500 முதல் 1800 வருடங்கள். உள்ளே சமணர் படுக்கைகள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மட்டும் நடந்துள்ளது.
தாலிபான்கள் பயங்கரவாதிகள் இல்லை.. அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது..' இம்ரான் கான் திட்டவட்டம்
Vigneshkumar - Oneindia Tamil : இஸ்லாமாபாத்: ஆப்கனில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாலிபான்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் இல்லை எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, மறுபுறம் தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டன.
இதனால் பல்வேறு இடங்களிலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தாலிபான்கள் இதுவரை சுமார் 80% ஆப்கன் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் தற்போதுள்ள ஆப்கன் அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் தாலிபான்களுக்குப் பின்னால் இருந்து பாகிஸ்தான் உதவுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவு: ஒன்றிய அரசு.. மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டி...
![]() |
மின்னம்பலம் :மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இந்த மருத்துவ இடங்களை ஒதுக்குகின்றன.இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக திராவிடர் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
பத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாலைமலர் : திமுக தேர்தல் அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
திமுக தேர்தல் அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: ஆபாசப் படம் , கோடிகளில் வாழ்க்கை, சர்வதேச தொடர்புகள்
![]() |
கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை தயாரித்ததாக காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருக்கிறது. அதன் பேரில் அவரை முதலில் 23ஆம் தேதிவரையும் பின்னர் 27ஆம் தேதிவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த மும்பை நீதிமன்றம், பின்னர் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காலில் வைக்க உத்தரவிட்டது. மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளங்களில் வெளியாவதற்காக தயாரிக்கப்பட்ட ஏராளமான ஆபாச காட்சிகள் நிறைந்த ஹார்டு டிஸ்குகளை மும்பை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
குறு, சிறு, தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கக் குழு!
மின்னம்பலம் : குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தொழிற் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிறு, குறு தொழில்களையும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தற்போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தக் குழு அமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன.
இந்நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான சூழலைச் சந்தித்து வருகின்றன.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சீர்குலைக்க போகும் சக்திகளை பற்றி ராஜீவ் காந்தியின் தீர்க்க தரிசனம் அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை
![]() |
செல்லபுரம் வள்ளியம்மை : சரியாக முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில்,
1987 ஜூலை 29இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!
இந்த ஒப்பந்தம் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களாலும் அன்று வரவேற்று கொண்டாடப்பட்டது.
மக்களின் மகிழ்ச்சியை கண்டு மனம் குமுறும் மனநோயாளிகள் தமிழர்களிடையே உண்டு
நெடுமாறன் வைகோ போன்றவர்களும் அவர்களின் சீடர்களும் இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது உடைத்து எறியவேண்டும் என்று இமை மூடாது சதித்திட்டங்கள் தீட்டினார்கள்
இது பற்றி அமரர் ராஜீவ் காந்தியே அன்று தீர்க்க தரிசனமாக கூறியிருந்தார் :
அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை :
"இந்த ஒப்பந்தத்தை சீர் குலைக்க பல சக்திகள் முயலக் கூடும். எந்தெந்த சக்திகளின் நடமாட்டங்கள் இந்த ஒப்பந்தத்தால் அகற்றப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க முயலக்கூடும். வன்முறை மூலமும் கொடுஞ்செயல்கள் மூலமும் பயன் பெற நினைப்போர் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை விரும்ப மாட்டார்கள்"
வணக்கம் இலங்கையில் அமைதிச் சூழ்நிலை ஒன்று ஏற் பட்டிருப்பதற்காக நாம் இன்று கூடியுள்ளோம்...... ராஜீவ் - ஜே ஆர். ஒப்பந்தம் link
புதன், 28 ஜூலை, 2021
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: படையெடுக்கும் கழகங்கள்!
![]() |
minnambalam :தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிறது.
2011 ஆம் ஆண்டு தமிழகம் முழுதும் உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 ஆம் ஆண்டோடு முடிந்தது. அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அதிமுகவில் நிகழ்ந்த அதிகார யுத்தத்தால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போனது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மாலைமலர் :சென்னை: தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது.
இந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. குற்றம் சுமத்தி உள்ளது.
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோமநாதபுரம் கோயிலும் கஜினி முகமதுவும் .. உண்மையில் நடந்தது என்ன?
![]() |
![]() |
Prem Raja : கஜினி முகமது... சோமநாதபுரம் கோயிலை இவர் கொள்ளை அடித்தார் என வரலாற்றுப் பாடத்தில் வருகிறது!
அரசர்கள் ஒரு பகுதியின் மீது படையெடுத்தால் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை. கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை.
தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள் தங்களின் வீர, தீர பராக்கிரமங்களை சிறப்பாக எழுதி விடுவார்கள்.
அவனைப் புகழந்து பாடி வாங்கித் தின்னும் புலவர்களும் புறப்பட்டு விடுவார்கள். அது பிறகு வரலாறு ஆகிவிடுகிறது!
"இன்றைய குஜராத் அந்தக் காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி. இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.
ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்தது. சொல்லமுடியாத அளவு செல்வம் பக்தர்களால் குவிந்தது.














