ஞாயிறு, 24 ஜனவரி, 2021

Tandav என்ற சீரியலை ஏன் அனைவரும் பார்க்க வேண்டும் என்றால்.....

 

சுமதி விஜயகுமார் : · நான் தீவிர ஷாருகான் ரசிகையாய் இருந்த சமயமே, ஷாருக்குடன் நடித்த ஒரு நடிகர் என்னை ஈர்தார் என்றால் அது Saif Ali Khan. Kal Ho Na Ho திரைப்படத்தில் shahrukh தியாகியாக ஸ்கோர் செய்ய முயற்சிக்கையில், saif ஒரு துருதுரு அப்பாவியாய் மனதை கவர்ந்திழுப்பார். அதன்பிறகு நான் பார்த்த படம் Hum Tum. ஒருவிதமான, எதார்த்தமான காதல் கதை. அவரின் படங்களை தேடி தேடி பார்த்ததில்லை என்ற பொழுதிலும், அவரை பிடிக்கும். இப்போது Tandav என்ற Amazon Prime ல் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 9 பாகங்களை கொண்ட முதல் சீசன் மட்டுமே வெளியாகி இருக்கிறது. முதல் 3 எப்டிசொட்களில் மிரள வைத்திருக்கிறார். சர்வாதிகாரியான வில்லன் கதாபாத்திரம். கனகட்சிதமாய், மிக பொருத்தமாய் பொருந்தி போயிருக்கிறார்.Image may contain: 5 people, text that says 'f Ûg NAN BACK W HEN BJP ASKS FOR Ban? WHAT SHOULD WE Do? me AMAZON ORIGINAL TANDAV atch it & SPREAD THE WORD'

ஆசீவகம் ! சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் வேதத்திற்கும் முன்பிருந்த சிந்தனை மரபு

ஆசீவகம்  வேதங்கள் தொகுக்கப்படுவதற்க்கு முன்பே உருவான மரபு ஆகும். இது பெளத்தம் சமணம் தமிழகத்தில் கால் பதிப்பதற்க்கு முன்பே தமிழகத்தில் தோன்றி வட இந்தியா முழுமைக்கும், இலங்கையிலும் பரவி இருந்த ஒரு சிந்தனை மரபு. இதற்கான சான்றுகள் தமிழகத்தில் அதிகம் கிடைகின்றன. இம்மரபுக்கு பின்னரே பெளத்தமும் சமணமும் தோன்றின. புத்தர் தனக்கு முன்பிருந்த ஒரு மதத்தினை சீர் செய்யவே விரும்பியதாக கூறியுள்ளார். புத்தருக்கு முன்பிருந்த மதங்கள் ஆசீவகமும், ஜைனமுமே. அன்று வேதமதம் வளர்ச்சியின் தொடக்கதில் இருந்தது. ஆசீவக மதத்தை பற்றி ஆய்வு செய்தோரெல்லாம் வட இந்தியாவை அடிப்படையாக கொண்டே ஆய்வு செய்தனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாசியம் ஒருவரே தமிழக இலக்கியங்களையும் சேர்த்து ஆய்வு செய்தார்.

ayyanar123 ஆசீவகம் ஒரு பார்வை ! முன்னுரை . ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அங்கு வாழ்ந்த மக்கள் அறிவு பூர்வ நாகரீக மக்களாக இருந்தனர். 

ஈரானியனிய மக்கள் தான் சிந்து சமவெளி மக்களுக்கு நாகரீகத்தையும் விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்ற கருத்து வட நாட்டவர்களாலும், வெளிநாட்டவர்களாலும், திட்டமிட்டு பரபப்பட்டு வருகின்றது. ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த போது அவர்களுக்கென தனி மதம் இல்லை. அவர்கள் காக்கேசிய நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்த நாடோடி சமூகத்தினர். அவர்களுக்கென தனிமதமும் இல்லை எழுத்து மொழியும் இல்லை. அவர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கினர். பின்னர்... இன்றைய இந்திய நிலத்திலிருந்த வழிபாடுகளை தாங்களும் பின்பற்ற தொடங்கினர். ஆரியர்களின் மதம் வேத மதம். இயற்கையின் முதல்வனான இந்திரனையே அவர்கள் முதல் தெய்வமாக வணங்கினர் சிவனை அல்ல. நான்கு வேதங்கள், மனு தர்மம் இவற்றைக்கொண்டு வேள்வியிடல், ஆடு, மாடுகளை உயிரினங்களைப் பலியிடல், சாதியத்தை பேணுதல் போன்ற செயல்கள் நடத்தப்பெற்றன. உபநிடதங்கள் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாய் கொண்டது.

வடுக வந்தேறி என்று கூறும் இனவாதிகள் பாரதி தாசனை துணைக்கு அழைப்பது கயமை

Image may contain: 3 people, people standing and people on stage
தமிழ் மறவன் : · தோழர்களே! இனவாதம் பேசுகிற இனவாதிகள் "வந்தேறி" வடுகர் எனும் சொல்லாடல்களை பயன்படுத்துவதோடல்லாமல் "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!" எனும் பாவேந்தரின் பாடல் வரிகளில் வரும் இந்த நான்கு வரிகளை மட்டுமே எடுத்தியம்புவர். இது பாவேந்தரையே இழிவுபடுத்துகிற, தங்களின் இனவாத இழிவான செயலுக்கு புரட்சிக்கவியை துணைக்கு அழைத்துக் கொள்கிற மோசமான செயலாகும். ஏனெனில் அதே பாடலில்..
"நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
நம்முளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும்
நாமெல்லாம் ஒரேவகுப்பார் என்ற எண்ணம்
நன்றாக நம்முணர்வில் ஏற வேண்டும்
தீமையுற நமைஎல்லாம் சமையம், சாதி
சிதறடிக்க இடங்கொடுத்தல் நமது குற்றம்.
ஆமைஉயிர் காக்குந்தன் முதுகின் ஓட்டை
அகற்றென்றால் அவ்வாமை கேட்க லாமா?" என இனவாதிகளை செருப்பாலடித்ததைப் போன்ற வரிகளை மிக வசதியாக மறைத்து விடுகின்றனர்.

சனி, 23 ஜனவரி, 2021

பாலுமகேந்திரா ஏன் மகேந்திரனை விட முக்கியமான கலைஞர்?

Image may contain: 3 people, people sitting and outdoor
Arun Mo : · பாலுமகேந்திரா ஏன் மகேந்திரனை விட முக்கியமான கலைஞர் என்பதையும் பாலுமகேந்திராவை கொண்டாடும் தமிழ் ஸ்டுடியோ ஏன் மகேந்திரனை கொண்டாடுவது இல்லை என்பதையும் நான் அடிக்கடி எழுதி வருகிறேன்.
இன்றைய இளம் இயக்குநர்கள் அல்லது திரைத்துறைக்கு வரவிருக்கும் நண்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பாலுமகேந்திரா ஒரு இயக்கம் போல தொடர்ந்து செயல்பட்டார். அவர் சினிமாவை தவிர்த்து வேறொன்றையும் சிந்திக்காத முழுக்க சினிமாவிற்கே தன்னை அர்ப்பணித்த மனிதராக இருந்தார்.
எல்லாவற்றையும் விட எல்லாரும் அவரை எளிதில் அனுகலாம். தமிழ்நாட்டில் எந்த மூலைமுக்கில் நீங்கள் சினிமா சார்ந்து இயங்கும் மனிதராக இருந்தாலும் நீஙகள் பாலுமகேந்திராவை அனுகலாம். நீங்கள் இன்னாராக உங்களை நிரூபித்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தார். யார் தொடர்ந்து தன்னை புதுப்பிக்க முடியும் என்றால் அவர் எப்போதும் களத்தில் இயங்கும் இளைஞர்களோடு, அமைப்புகளோடு நல்ல உறவில் தொடர்பில் இருக்க வேண்டும். கலைஞன் என்பவன் கிட்டத்தட்ட மக்கள்பணி செய்யும் களப்பனியாளன் போலவும் தன்னை உருமாற்றிக்கொள்ள வேண்டும். பாகுபாடில்லாமல் எல்லாரையும் அரவணைக்கும் பக்குவம் வேண்டும். அது பாலுமகேந்திராவிடம் இருந்தது.

ஜோ பைடன் பாஜக - RSS சோனல் ஷா . அமித் ஜானி ஆகியோரை விலக்கி வைத்தார் ! joe biden exclude sonal shah amit jani

Indian-Americans With RSS Links Don't Make It to Biden's First Cut
Image may contain: text that says 'oneindia tamil 2.8M பின்பற்றுவோர் பாலோயிங் பாஜக-ஆர்எஸ்எஸ் பாஜக- தொடர்பு... பைடன் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு இந்தியர்கள் 22 Jan 21 1:58 PM'
Tamiloneindia :பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுட னான தொடர்பு காரணமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றிலேயே பெண் ஒருவர் துணை அதிபராவது இதுவே முதல்முறையாகும்.
ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேரை பரிந்துரைத்திருந்தார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
விலக்கி வைக்கப்பட்ட இருவர்
பைடன் நிர்வாகத்தில் பணிபுரிய இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 20 பேர் நியமிக்கப்பட்டுள் ளனர். இருப்பினும், முன்பு பரிந்துரைத் திருந்த பட்டியலுடன் பார்க்கும்போது சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்கள் இதில் விடுபட் டுள்ளது. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புக ளுடனான தொடர்பு காரணமாக இவர்க ளை பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார் பிரதமர் மோடி” - கோவையில் ராகுல் காந்தி பேச்சு!

Image may contain: 1 person, text that says 'NEWS FAML BREAKING கோவையில் ராகுல் காந்தி பேச்சு! "தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல, தமிழ்நாடே இந்தியா என்ற நிலை உருவாகும்!" 23 JAN 2021 010 191 071 059 1548'
kalaignarseithigal.com :காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., 3 நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ராகுல் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.

இன்று முதல் 25-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று காளப்பட்டி சாலை சுகுணா ஆடிட்டோரியத்தில் தொழில் முனைவோரிடம் கலந்துரையாடினார் ராகுல் காந்தி.    அப்போது பேசிய ராகுல், “ஜி.எஸ்.டியால் தொழில்துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஆளும் பா.ஜ.க அரசு புரிந்துகொள்ளவில்லை.   பேங்கிங் சிஸ்டம் பெரும் முதலாளிகளுக்கே சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளாதார கொள்கை சிறு-குறு தொழில்துறையினரை பாதித்துள்ளது. சிறு-குறு தொழில் முனைவோருடைய தொழில் வரிகளால் அவர்களது கைகள் கட்டப்பட்டுள்ளன. அதை அவிழ்த்துவிட்டால், சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி விடலாம்.

இலங்கைக் கடற்படையால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு கனிமொழி நேரில் ஆறுதல்!

 Vikatan -. ( உ.பாண்டி )  ": இலங்கைக் கடற்படையிர் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் மெசியாஸ் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியதுடன், அவரது குடும்பத்திற்கு நிதியுதவியை கனிமொழி வழங்கினார். `ஆட்சி மாற்றத்துக்குப் பின் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என கனிமொழி எம்.பி தெரிவித்தார். இலங்கைக் கடற்படையினரால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், நிதியுதவியும் வழங்கினார்.

உயிரிழந்த மீனவர்கள் படத்திற்கு கனிமொழி அஞ்சலி.
உயிரிழந்த மீனவர்கள் படத்திற்கு கனிமொழி அஞ்சலி.
உ.பாண்டி
தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி கடந்த 2 நாள்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் சாயல்குடி தொடங்கி சத்திரக்குடி வரை பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று காலை தனுஷ்கோடியில் தனது பிரசாரத்தைத் தொடங்கினர். அங்கு நாட்டுப் படகு மீனவர்களைச் சந்தித்து அவர்களதுகுறைகளைக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்துக்குச் சென்று கலாமின் சகோதரர் முத்து முகமது மீரான் மரைக்காயரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

தேனீ இணையத்தள ஆசிரியர் ஜெமினி கங்காதரன் காலமானார் .கருத்து சுதந்திரத்திற்காக வீரத்துடன் போராடியவர்

Image may contain: 1 person, standing
Thambirajah Jeyabalan : · ஜெமினி - தேனீ - கருத்துச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன் சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. - ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.
Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.
இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் 'தேனீ' இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் - கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே.  இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.
ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

Fefsi விஜயன்.. மலையாள கதாநாயகன் ஜெயனின் விபத்தோடு கலங்கிய விஜயனின் கதை

Image may contain: 1 person

Selvan Anbu :  · ஒரு புகழ் வாய்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஒரு மாநில திரைப்படத்தில் டைட்டிலில் பெயர் வந்து 40 வருஷமாச்சு... 40 வருஷத்துக்கு முன்னே அவர் பெயர் டைட்டிலில் வந்ததோடு சரி. அதன் பின் யாருமே அவரை கூப்பிடலை. ஏன்?யார் அவர்? இன்று மிகப்பெரிய ஸ்டண்ட் டைரக்டர். அன்று அவர் பெயர் விஜய். விஜய் தந்தை சுப்ரமண்யன் பெரிய ஸ்டண்ட் டைரக்டர். அதுவும் எம்.ஜி.ஆரோட ஸ்டண்ட் மாஸ்டர். அவர் புகழ் பெற்றது அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர் புலியோடு சண்டை போட்ட போது. அதை செய்தது விஜய்யோட அப்பா.
விஜய் 17 வயதிலேயே ஸ்டண்ட் நடிகராயிட்டார். படிப்படிப்படியாக வளர்ந்து ஸ்டண்ட் மாஸ்டராக 80 களில் வளர்ந்தார். 1980ல் அவருக்கு மலையாளத்தில் ஒரு படத்துக்கு அழைப்பு வந்தது. பொதுவாக அன்று மலையாளப்படங்களுக்கு தியாகராஜன் என்பவர் தான் மாஸ்டராக இருப்பார்.

ஜோ பைடனின் வரவும் பேர்னி சாண்டர்ஸின் புரட்சிகர சிந்தனையையும் எதை காட்டுகிறது

Image may contain: 1 person, sitting, shoes and outdoor

Rajasangeethan. ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் எதைக் காட்டிலும் அதிக புகழை ஈட்டியிருப்பது பெர்னி சாண்டர்ஸ்ஸின் இந்த புகைப்படம்தான்.
பைடன் மற்றும் அவரின் குடும்பம், ஒபாமா மற்றும் அவரின் மனைவி என அனைவரும் அமெரிக்கா இழந்ததாக(!) நினைக்கும் படாடோப வாழ்க்கையை பிரதிபலிக்கும் படடோப உடைகளை போட்டு விழாவுக்கு வந்திருந்தனர். அந்த விழாவில் கலந்துகொண்ட பெர்னி சாண்டர்ஸ்தான் இப்படி அமர்ந்திருக்கிறார்.
தீவிர கம்யூனிசம் இல்லையெனினும் அமெரிக்காவை கொஞ்சமேனும் அசைத்து பார்க்கும் சோசலிசத்தை பேசுபவர் பெர்னி சாண்டர்ஸ். தற்போது ஜெயித்திருக்கும் பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் பெர்னி. வேட்பாளர்களுக்கான போட்டி கட்சிக்குள் நடந்தபோது பெர்னி போட்டியிட்டார். பெரும் ஆதரவு கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து ட்ரம்ப் மட்டுமல்ல, அதன் பொருளாதார முறையும் வெளியேற வேண்டும் என்றே மக்கள் பெர்னியை ஆதரித்தனர்.

அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்கள்

Image may contain: 1 person, text that says 'TAMILNADU தீக்கதிர் CHIER அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்களை அபகரிப்பதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்துப் போராடும்.... நமது நிருபர் ஜனவரி'
  Chinniah Kasi :  · அதானி துறைமுகத்துக்காக 700 ஏக்கர் அரசு நிலம், 3300 ஏக்கர் விளை நிலங்களை அபகரிப்பதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்துப் போராடும்.... ஜனவரி 23, 2021 மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்கள் ஆண்டுக்கு 274.9 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு 122.3 மில்லியன் டன் மட்டுமே மேற்படி துறைமுகங்களால் கையாளப்பட்டுள்ளது. இது இத்துறைமுகங்களின் திறனில் 44 சதவீதம் மட்டுமே ஆகும். இந்நிலையில் காட்டுப்பள்ளி அருகில் 330 ஏக்கர் எல்&டிக்கு சொந்தமான சிறிய துறைமுகத்தை அதானி நிறுவனம் வாங்கி 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசு அனுமதியளித்தால் சுமார் 3,300 ஏக்கர் விளை நிலங்களும், 2,000 ஏக்கர் கடல் பகுதிகளிலும், சுமார் 700 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களும் அபகரிக்கப்படும் ஆபத்துள்ளது.

பா.ஜ.க.வின் அஜெண்டா... ரகசிய பேரம்? ராகுல் அதிர்ச்சி!

nakkeeran :சட்டமன்ற தேர்தலில் ‘மிஷன் 200' என்கிற இலக்கை அடைவதற்கான திட்டத்தில் செயலாற்றி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 200 தொகுதிகளில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இதனைப் பக்குவமாக கூட்டணி கட்சிகளிடமும் தெரிவித்து வருகிறது அறிவாலயம்.      இதில் காங்கிரசுக்கு மட்டும் இரட்டை இலக்க அளவில் சீட் என்றாலும், தி.மு.க. சொல்லும் எண்ணிக்கையை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்வையிட மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, சீட் பற்றி தி.மு.க. தலைமையிடம் பேசி முடிக்கலாம் என்கிற ப்ளானும் நிறைவேறாததால் அவர் அப்செட் என்கிறார்கள்.  

ராகுல் காந்திக்கு நெருக்கமான தமிழக எம்.பி. ஒருவர், “தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க அதி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டுள்ளதாகவும், அதை முறியடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக 190-200 இடங்களில் போட்டியிட தி.மு.க. தீர்மானித்திருப்பதால் காங்கிரசுக்கு 15 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் தி.மு.க. தரப்பிலிருந்து ராகுல் காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.

எங்க அம்மா ஸ்ரீலங்கன் அப்பா Indian Brahmin, father is from Maharashtra and my mother is a brahmin...

Image may contain: people sitting, text that says 'பிறருக்கு தீங்கின்றி நன்மை செய்யும் எவருக்கும் கடவுளோ, ,மதமோ, வழிகாட்டியோ தேவையில்லை. -பெரியார்'
சுமதி விஜயகுமார் : · நாம் எதுவாக நம்மை முன்னிறுத்தி கொள்கிறோமோ, அதை சார்ந்தே நம் மேலான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. கடந்த 4 வருடங்களாக மட்டுமே நான் ஒரு பகுத்தறிவுவாதியாக இருக்கிறேன். அதுவும் முழுதாக கூட இல்லை. ஒரு சில பழக்க வழக்கங்களை, பிறந்ததில் இருந்து கடைபிடித்து வருவதால், அது மூட நம்பிக்கை என்றாலும் அதில் இருந்து வெளிவருவத்தில் சிரமம் இருக்கிறது. அதிலும் ஒரு குடும்ப அமைப்பில் முதல் தலைமுறை பகுத்தறிவுவாதியாக இருக்கும் ஆண்களுக்கே கூட தன் வீட்டில் உள்ளவர்களிடம் பகுத்தறிவை பின்பற்றவைப்பது கடினம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நான் நம்பிக்கையுடன் சாமி கும்பிட்டு வருடங்கள் ஆயிற்று. ஒரு விசேஷம் வந்தால் 'இதை செய்யவில்லையா அதை செய்யவில்லையா ' என்று கேட்டு என்னை எந்த நீர்பந்ததுக்கும் என் கணவர் ஆளாக்குவதில்லை. மிஞ்சி போனால் சாமி படங்களையும் விளக்கையும் சுத்தம் செய்வதோடு சரி. நான் பெரியாரியவாதி ( ஆரம்ப நிலை ) என்பதலே என்னிடம் மிக சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ' நீ தான் பெரியாரிஸ்ட் ஆச்சே அப்புறம் என்ன உங்க வீட்ல சாமி படம் வச்சுருக்க' ' ஏன் கோவிலுக்கு போற' என்பன அனேகமாக அனைத்து பகுத்தறிவுவாதிகளும் சந்திக்கும் கேள்விகள்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

நாதஸ்வரத்திற்கு புது வடிவம் கொடுத்த மேதை நரசிங்கம்பேட்டை பிரம்மஸ்ரீ ரங்கநாத ஆசாரி

Image may contain: 1 person, text that says 'Narasingampettai Brahmasri Ranganath Achari'
கம்மாளர் களஞ்சியம் ;· நரசிங்கம்பேட்டை பிரம்மஸ்ரீ ரங்கநாத ஆசாரி நாதஸ்வரம்  என்றதும் மனத்தில் தோன்றும் பெயர் மேதை ராஜரத்தினம் பிள்ளையினுடையதுதான். அவரின் நீங்காப் புகழுக்கு அவருடைய அதீத கற்பனையும், அதை வெளிக்காட்டக் கூடிய அற்புதத் திறனும் காரணங்கள் என்றாலும் இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது அவர் வாசித்த வாத்யம். ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அளவில் சிறிய, ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒலித்த திமிரி நாயனம் என்கிற வகை நாதஸ்வரமே உபயோகத்திலிருந்தது. திமிரி நாயனத்தில் அனைத்து ஸ்வரங்களையும் துல்லியமாக வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக சுத்த மத்தியம ஸ்வரத்தை வாசிக்க கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
1945-ல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டையில் இருந்த ரங்கநாத ஆசாரி என்பவர். இரண்டு கட்டை ஸ்ருதியில் வாசிக்கக் கூடிய, அளவில் சற்று பெரிய நாகஸரத்தை வடிவமைத்தார். அடுத்த ஊரான திருவாவடுதுறையில் இருந்த ராஜரத்தினம் பிள்ளையைச் சந்தித்து தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். வாசித்துப் பார்த்த ராஜரத்தினம் அனைத்து ஸ்வரங்களும் துல்லியமாய் சேருவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.. சுத்த மத்யமத்தை இடைஞ்சலின்றி வாசிக்க முடிந்ததால் அதுவரை கடக்க முடியாத எல்லைகளை எல்லாம் அவரது வாசிப்பு கடக்கத் தொடங்கியது. தன்னுடனே இருந்து தனக்கு மட்டுமே இந்த வாத்தியத்தை அளிக்குமாறு ரங்கநாத ஆசாரியைக் கேட்டுக் கொண்டார் ராஜரத்தினம்.

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது! இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக் கடற்படையால் நடுக்கடலில் 4 மீனவர்கள் உயிரிழப்பு! கொதிக்கும்  தமிழ்நாடு ராமேஸ்வர மீனவர்கள் - Tamilwin
Douglas Devananda : · ஊடக அறிக்கை - 22.01.2021 எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான இழப்புக்கள் பலவற்றை கடந்து வந்த அனுபவத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்றேன். அவர்களை சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து அவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே என்டைய எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதில் இருந்து, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்ததப்பட்டு இலங்கை கடற்றொழிலாளர்களும், எமது உறவுகளான இந்தியக் கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுத்தி வந்தேன்.

ஓசூர் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

maalaimalar : ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 
தனியார் நிதி நிறுவனத்தில் போலீசார் விசாரணை
ஓசூர்: ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உள்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதாக மேலாளர் புகார் அளித்துள்ளார். இன்று காலையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஸ்டாலினுக்கு போனை போட்ட ராகுல்.. "நான் பார்த்துக்கறேன்".. "கதர்"கள் ஷாக்.. என்னாச்சு?

Stalin proposes Rahul as PM candidate in 2019 elections | Deccan Herald

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: கூட்டணியில் சிக்கல், இழுபறி என்று சொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸும் திமுகவும் இணைந்தே தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் என்று தெரிய வந்துள்ளது.. அப்படியானால் கடந்த 4 நாட்களாக திமுகவில் நடந்ததுதான் என்ன? இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் யூகத்தின் அடிப்படையில் நமக்கு தந்த சில தகவல்களை இங்கே சுருக்கி தந்துள்ளோம். "இந்த முறை திமுகவுக்கு வெற்றி வெற்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. இதையும் தவறவிட்டுவிட்டால், 15 வருஷம் ஆட்சியில் இல்லாத நிலை ஏற்படும்.. அத்துடன் கட்சியை நடத்துவதிலும் நிறைய சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான் பல வியூகங்களை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று கூட்டணி கட்சிகள்.. இந்த கூட்டணி கட்சிகளில் முக்கியமானது காங்கிரஸ் கட்சி.. ஆனால், இந்த தேசிய கட்சியின் பலம் இப்போது குறைந்துள்ளது.. குறிப்பாக தமிழகத்தைவிட புதுச்சேரியில் மிக மோசமான நிலைமையில் காங். உள்ளது.. நாராயணசாமி மீது 5 வருஷமாக அதிருப்தி உள்ளது.. சொந்த கட்சிக்காரர்களே அவர் மீது புகார் சொல்கிறார்கள்.. கிரண்பேடிக்கு டஃப் தர அவரால் முடியவில்லை. 

அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சியோ 40 சீட்டுக்களுக்கு மிஞ்சாமல் வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறது... எப்போதுமே கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்ததும் இல்லை. அதேசமயம், காங்கிரஸை கூடவே இழுத்து கொண்டு செல்வதற்கும், பெருவாரியான தொகுதிகளை தருவதற்கும் திமுக தயாராகவும் இல்லை.. எனவேதான் புதுச்சேரியை கையில் எடுத்ததாக தெரிகிறது

10 முதல் 17 அமைச்சர்கள் சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க ரெடியாக இருக்காங்க..

Mathivanan Maran - /tamil.oneindia.com : சென்னை: சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதை முன்வைத்து அதிமுக, அமமுக வட்டாரங்களில் சுவாரசியமான கிசுகிசுக்கள்தான் ரெக்கை கட்டி பறக்கின்றன. 

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிலைப்பாடு. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக, அமமுகவில் நொடிக்கு நொடி என்கிற வகையில் நெருங்கிய வட்டாரங்களிலும் சரி.. சமூக வலைதளங்களிலும் சரி.. ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தனை கிசுகிசுக்களையும் பட்டியலிட்டால் தலை கிறுகிறுத்துவிடும். 

 10 முதல் 17 அமைச்சர்களாம்... சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க இப்பவே 10 அமைச்சர்கள் ரெடியாக இருக்காங்க.. அந்த 10 பேரும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வெயிட் பண்றாங்க.. இந்த 10 என்பது 17 ஆகவும் மாறும் என்பது அமமுகவின் உச்சகட்ட கிசுகிசு. 

 எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க என்பது இன்னொரு கொசுறு உலா. 10 முதல் 17 அமைச்சர்களாம் சசிகலாவை ஓசூர் எல்லையில் வரவேற்க இப்பவே 10 அமைச்சர்கள் ரெடியாக இருக்காங்க.. அந்த 10 பேரும் அப்பாயின்ட்மென்ட் கேட்டு வெயிட் பண்றாங்க.. இந்த 10 என்பது 17 ஆகவும் மாறும் என்பது அமமுகவின் உச்சகட்ட கிசுகிசு. அதேபோல் ஓபிஎஸ் தரப்பு ஓகே சொல்லியாச்சு.. எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க என்பது இன்னொரு கொசுறு உலா.

பாஜகவில் இணைந்த பெண் தாதா எழிலரசி: புதுவையில் தேடப்பட்டு வந்த குற்றவாளிக்கு கட்சியில் இடம்

புதுவையில் தேடப்பட்டு வந்த பெண் தாதா பாஜகவில் இணைந்தார்
பெண் தாதா எழிலரசி
BBC : புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த பிரபல பெண் தாதாவை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த எழிலரசி(வயது 40) மீது கொலை வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல், வெடிமருந்து பயன்படுத்தி மிரட்டுதல், மோசடி வழக்கு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் காரைக்கால் பகுதி காவல்துறையினர் எழிலரசியை தேடிவரும் நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் >காரைக்கால் பிராந்தியம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய தொழிலதிபர் ராமு (எ) ராதாகிருஷ்ணனின் இரண்டாவது மனைவி எழிலரசி, கணவர் ராமுவை தொழில் முன்விரோதம் காரணமாக 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ராமுவின் முதல் மனைவி வினோதா மற்றும் புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் காரணமாக இருக்கலாம் என எழிலரசி தரப்பினர் கருதியதாக கூறப்படுகிறது.

கூட்டணியில் யார், யார்? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! மாசெக்கள் அதிர்ச்சி!

 டிஜிட்டல் திண்ணை: கூட்டணியில் யார், யார்? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! மாசெக்கள் அதிர்ச்சி!

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. "திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்தது. அண்மையில் திமுக கூட்டணிக்குள் யாருக்கு எத்தனை சீட்கள் என்ற விவாதம் திமுகவிலும் கூட்டணி கட்சிகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள திடீர் பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டிலும் அது எதிரொலிக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்... ஜனவரி 21ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி பற்றி ஸ்டாலின் சில முக்கியமான தெளிவுகளை ஏற்படுத்தி உள்ளார். மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசிய அவர்... 'நம்முடைய கூட்டணி இப்படியே தொடர வேண்டும் என்பதில் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள். நானும் இதையே விரும்புகிறேன்....கடந்த ஐந்து வருடமாக நம்முடைய ஒவ்வொரு போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கூட்டணிக் கட்சிகளும் நம்மோடு சேர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். போராடி வருகிறார்கள். இப்படி நம்மோடு நிற்கும் கூட்டணிக் கட்சிகளை நாம் விட முடியாது... விடக்கூடாது.... அதே நரம் திமுக கூட்டணியில் சேர்வதற்கு இன்னும் சில கட்சிகள் என்னிடம் கேட்டு வருகிறார்கள். நான்தான் அவர்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்.

ஐயோ வேண்டாம் தடுப்பூசி’’ – அலறும் மருத்துவர்களும்,அரசியல்வாதிகளும்! சாவித்திரி கண்ணன்

  aramonline.inசாவித்திரி கண்ணன் :இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அதிசயமாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் மருத்துவர்களிடமும்,அரசியல்வாதிகளிடமும்,முக்கியஸ்தர்களிடமும் ஒரு பெரும் தயக்கம் நிலவுவது கண்கூடாகத் தெரிகிறது! இது,”தங்களை சோதனை எலிகளாக்கிக் கொள்ள அரசியல்வாதிகளும், வி.வி.ஐபிக்களும்,மருத்துவர்களும் தயாராக இல்லை’ என்பதையே காட்டுகிறது!  உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நோய்க்கு எதிராக ஒரு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு,அதனால் நன்மை ஏற்படுமென்றால், அதை ஏற்பதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை! ஆனால், நூற்றுக்கணக்கான நாடுகளும், தனியார் அமைப்புகளும் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நிலையில் – மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு போவதற்கு முன்பாகவே – அவசர அவசரமாக நம் நாட்டில் தடுப்பூசி திட்டம் முதல் கட்டமாக மூன்று கோடிப் பேருக்கு போடப்படுகிறது என்பது இந்தியாவின் முன்னணி மருத்துவர்களையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது! ஏனெனில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தால் தான் ஒரு தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திற்னை அறிய முடியும் என்பது மருத்துவ உலகமே கடைபிடித்து வந்த நடைமுறையாகும்! இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகையில் ஒரு மூன்று கோடி பெரிய விஷயமில்லை என பாஜக அரசு நினைத்ததா தெரியவில்லை!

அரசியல் மாபியாக்கள் பலனடையவே கள்ளுக்கு தடை!- பனை வளத்தை படுகுழிக்கு தள்ளியவர் எம்.ஜி.ஆர் தான்!செ.நல்லசாமி ..

  aramonline.in-மாயோன் : January 21, 2021 உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானத்திற்கு அனுமதி! ஆனால், உடலுக்கு நன்மை செய்யும் பாரம்பரிய பானமான கள்ளுக்குத் தடையா…? விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரும் கள்ளை தடை செய்துவிட்டு, அரசியலில் உள்ள மாபியாக்கள் கல்லா கட்டுவதற்காக டாஸ்மாக் மதுபானத்தை தமிழகத்தில் ஆறாக ஓடவிட்டுள்ளனர் ஆட்சியாளர்கள்…! என்று பொங்கி வெடித்தனர் விவசாயிகள்! சென்னையில் இன்று (21.01.21) தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் பார்த்தவர்களின் இதயத்தை உலுக்கியது.

இப்போராட்டம் ஏன் ? என்பது குறித்து செ.நல்லசாமி பேசியதாவது:  உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் கள் இறக்கவும் பருகவும் தடை இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் இந்தத் தடை 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இது நியாயமற்றது.

சுக்ராக்களினதும், நூராக்களினதும் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் ..

Image may contain: 1 person, text

  Manazir Zarook : சிரச லட்சாதிபதி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சகோதரி சுக்ரா விடயத்தில் சிலர் தற்போது சமூக அவலங்கள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள். இதில் சில ஆண்டிமாரின் அலப்பறைகள் வேறு. சமூகப் பிரச்சினைகளை பட்டியலிட்டு அதனை ஒழிக்க உழைக்க வேண்டும் என்றும், அதனை விடுத்து இவ்வாறான வெற்றிகளை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை எனவும், பலவாறாக இப்பாடம் தொடர்கிறது. சமூகத்தின் பிரச்சினைகளை, அவலங்களை (குறிப்பாக்கிச் சொல்வதென்றால், வறுமையை) ஒழிக்க உழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தினை யாரும் கொண்டிருக்க மாட்டார்கள். அதற்கு தன்னாலான உதவிகளையும், முயற்சிகளையும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இங்கு இவ்வாறான உணர்ச்சிசார்ந்து முன்வைக்கப்படும் ஆதங்கங்களின் வெளிப்பாட்டின் பின்னனியில் இரு முக்கிய சிக்கல்கள் உண்டு. சுருக்கமாகப் பார்ப்போம்.

வியாழன், 21 ஜனவரி, 2021

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை

Arsath Kan - tamil.oneindia.com : பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உடனடியாக கொரோனா வார்டுக்கு சசிகலா மாற்றப்படவுள்ளார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் தொடர உள்ள

இன்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று மட்டும் இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி என்ற அறிவிப்பு சோதனை முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 
63 வயதாகும் சசிகலாவுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருக்கின்றன. இதற்காக அவர் வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை உட்கொண்டு வந்த நேரத்தில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெங்களூர் பெளரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் போதிய வசதிகள் இல்லாததால் இன்று பிற்பகல் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா. அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

துரைமுருகனுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்குமா?

துரைமுருகனுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்குமா?
minniambalam : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னையில் இருந்தாலும், தனது சொந்த ஊரான காட்பாடியில் இருந்தாலும் தினம் தினம் அவரை பலரும் வந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், நண்பர்களின் மகன்கள், மாற்றுக் கட்சியினர் என்று அவரை தினம் தினம் பலரும் வந்து சந்தித்து அரசியல் பேசுகிறார்கள்,கோரிக்கைகள் வைக்கிறார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் துரைமுருகனை பொதுச் செயலாளர் என்ற முறையில் சந்தித்து தேர்தலில் சீட் வாங்கும் முயற்சியிலும் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். தன்னிடம் சட்டமன்றத் தேர்தல் வாய்ப்பு கேட்பவர்களிடமெல்லாம், தான் தேர்தலில் நின்ற வரலாறையெல்லாம் சொல்லி, ‘நானெல்லாம் 25 ஆயிரம் ரூபாய்க்குள்ள தேர்தலை முடிச்சிருக்கேன். இப்ப என்னடான்னா கோடிகோடியா கொட்டிக்கிட்டிருக்காங்க. சரி பாத்துக்கலாம்யா’என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.