ஞாயிறு, 27 டிசம்பர், 2020

கார்களில் பம்பர்களை அகற்ற தீவிரம் காட்டும் போலீஸ்.. திடீரென.. என்ன காரணம்!

Velmurugan P -  tamil.oneindia.com :  சென்னை: திடீரென கார்களில் பம்பர்களை அகற்ற போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இவ்வளவு நாளாக பெரிய விவகாரமாக மாறாமல் இருந்த பம்பர் இப்படி மாறும் அளவுக்கு என்ன நடந்து என்று கார் உரிமையாளர்கள் புழுங்கி கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட பொதுநல வழக்கு. இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உண்மையில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை இருப்பது பலருக்கு தெரியுமா? தெரியாதா என்றே கேள்வி எழுகிறது. ஏனெனில் சமூக வலைதளங்களில் பலர் பம்பர் அகற்றப்படுவதற்கும், அபராதம் விதிப்பதற்கு எதிராக கொதிக்கிறார்கள். எனினும் இங்கு சிலவிவரங்களை தெரிவிப்போம். நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு கடந்த மாதம் விசாரித்தது,

Pak- Ex பிரதமர் பேனசீர் பூட்டோ தன்னை கொல்லும் திட்டம் தெரிந்தும் சாவைத் தழுவினாரா?

  • பிபிசி செய்தியாளர்  -
  • BBC : பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்கு முன்பு, அவர் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஆஸ்பேனுக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடன் விமானத்தில் அமெரிக்க தூதர் ஜால்மே கலீல்ஜாத் மற்றும் அவரது மனைவி இருந்தனர். அவனிலிருந்து அப்போது தான் எடுத்த பிஸ்கட்டுகளை பேனசீருக்கு வழங்க விமானப் பணிப்பெண் முன்வந்த போது, மிகவும் பணிவுடன் தான் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். ஆனால் அடுத்த நொடியே அவர் பணிப்பெண்ணை மீண்டும் அழைத்து, "சரி கொண்டு வாருங்கள். எப்படியும் சில மாதங்களில் நான் சாகப் போகிறேன். என்ன பெரிய விஷயம்" என்று கூறியுள்ளார் ரெஹான் ஃபைசல்பெனாசிர்

    2007 டிசம்பர் 26 ஆம் தேதி இரவு, பெஷாவரில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள தனது ஜர்தாரி மாளிகையை அடைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோ, மிகவும் சோர்வாக இருந்தார், ஆனால் ஐ.எஸ்.ஐ தலைவர் மேஜர் ஜெனரல் நதீம் தாஜ், முக்கியமான விஷயமாகத் தன்னைச் சந்திக்க விரும்புவதாக அவருக்குத் தகவல் வந்தது.

    பேனசீர் பூட்டோ இரண்டு மணி நேரம் உறங்கிவிட்டு பின்னர் அவரை சந்திக்க முடிவு செய்தார். இந்தச் சந்திப்பு ஒன்றரை மணிக்கு நடந்தது. இதில், அவரது பாதுகாப்பு ஆலோசகர் ரெஹ்மான் மாலிக்கும் கலந்து கொண்டார்.  அன்று அவரைக் கொல்ல முயற்சி நடக்கவிருப்பதாக நதீம் தாஜ் கூறினார். அவர் தனது தகவலின் ஆதாரத்தை உறுதியாக நம்பியதால், அவரே இஸ்லாமாபாத்தில் உள்ள பேனசீர் இல்லத்திற்கு அன்று இரவே சென்றார்.

    WHO புதிய கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது-உலக சுகாதார நிறுவனம் தகவல்

    maalaimalar : லண்டன்: இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு விமானம், ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகளும் துண்டித்து உள்ளன. இந்த வைரசின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. அதன் தன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேபிரியேசஸ் கூறும்போது, வைரஸ் கிருமி உருமாற்றம் அடைவது என்பது இயற்கையானது. இதுபோன்ற மாற்றங்கள் வரும் என்பது எதிர் பார்த்ததுதான். ஆனால் இதுபற்றி சரியான தகவல்கள் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாதங்களை செய்கிறார்கள்.

    இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அறிக்கையில் இந்த வைரசின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது என்றே கூறியுள்ளனர். ஆனால் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் தென்படவில்லை.

    சென்னை வந்தார் நடிகர் ரஜினிகாந்த் - ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

    thanthitv.:அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி கடந்த 13-ம் தேதி ஹைதராபாத் சென்றார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், படபிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ரஜினி உள்ளிட்டோர் தனிமைப்படுத்திக் கொண்டனர். ரஜினிக்கு சோதனையில் கொரோனா இல்லை என்றாலும், அவர், ரத்த மாறுபாடு காரணமாக அங்குள்ள அப்பலோ மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நலம் தேறியதால், அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், ஒருவாரத்திற்கு ரஜினி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    தினகரன் -அழகிரி-ரஜினி- கிருஷ்ணசாமி: தமிழகத்தில் ஒரு மகா கூட்டணி?

    தினகரன் -அழகிரி-ரஜினி- கிருஷ்ணசாமி:   தமிழகத்தில் ஒரு மகாகத்பந்தன்? minnambalam :ஜனவரி 3 ஆம் தேதி மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள துவாரகா திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களை ஆலோசனைக் கூட்டத்துக்காக அழைத்துள்ளார்                      திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரான மு.க. அழகிரி.   கடந்த தீபாவளி பண்டிகை அன்றே, தனது ஆதரவாளர்கள் பலருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்ட அழகிரி, கட்சி ஆரம்பிக்க தேவையான ஆயத்தங்களை செய்யுமாறும், நிர்வாகிகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பேசியதாக மின்னம்பலத்தில் முதன் முதலாக செய்தி வெளியிட்டோம்.                 டிசம்பர் முதல் வாரத்தில் திட்டமிடப்பட்ட தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த இருக்கிறார் அழகிரி. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திரளான எண்ணிக்கையில் ஆதரவாளர்களை அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் இருந்து 500 பேரைத் திரட்ட வேண்டும் என்று இலக்கு வைத்து ஆள் சேர்த்ததில் அதற்கும் மேலே ஆட்கள் பெயர் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் நிர்வாகிகள்.

    ரஜினியின் விளம்பர மோகம்! சோவின் தர்ம சங்கடம்! flashback news

    Image may contain: 2 people, text that says 'துக்ளக் து எ க் kkky.m'

    சாவித்திரி கண்ணன் : · ரஜினியின் விளம்பர மோகம்! சோவின் தர்ம சங்கடம்! ‘’இந்தாங்க..ரஜினிகாந்த் வந்தப்ப கொடுத்துட்டு போனாரு’’ ன்னு கையில ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்தார் துக்ளக் தலைமை துணை ஆசிரியர் மதலை! அதை வாங்கி பார்த்தப்ப சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த ’பாபா’படப் பாடல்களின் ஆடியோ கேசட் என புரிய வந்தது! ‘’ரஜினிகாந்த் குடுத்தாரா..?’’ என்றேன் புருவத்தை உயர்த்தியபடி! ‘’ஆமா,அவர் தான் நம்ம சாரை பார்க்க வந்த போது இங்கே நம்ம இடத்திற்கும் வந்து ஒவ்வொருவராக தேடி வந்து இதை கொடுத்துட்டு, இன்னும் யாராவது விடுபட்டு இருக்காங்களான்னு கேட்டு, உங்களுக்கும் சேர்த்து கொடுத்துட்டு போனாரு..’’ வாங்கி வைத்துக் கொண்டேன்! மாலை நேரம் சோ சார் எடிட்டோரியல் ரூமிற்கு வந்தார். ’’இதென்ன இவர் ஏதோ தமாஷா சொல்றாரான்னு தான் நான் நெனைச்சேன். மனுஷன் நிஜமாவே..கேட்குறார்னு இப்ப தான் தெரியுதுன்னார்..’’
    ‘’என்ன சார் சொல்றீங்க…?’’ன்னு மதலை கேட்டார்.

    இந்திய இளம்பெண்களுக்கு கொரியன்தான் ஃபேவரிட்டா? வெப்சிரீஸ் 2020 - ஒரு பார்வை

    web series

    nakkeeran :  ஹிந்தி பாடல்கள், மணிரத்னம் படங்கள், கொரியன் சிரீஸ்கள், வீடியோ கேம்கள் என இளம்வயதினரின் எண்டர்டைன்மெண்ட் விருப்பம் காலம்தோறும் மாறிவருகிறது. அந்த வரிசையில் சமீபத்திய விருப்பமாக இருப்பது வெப் சிரீஸ்கள். சில ஆண்டுகளாகவே வெப் சிரீஸ்கள் மீதான மோகம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்தாலும் கரோனா காரணமான லாக்டவுனில் வெப் சிரீஸ்களின் ரீச் வேற லெவலில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ரசிகர்களிடையே அதிகம் பார்க்கப்பட்ட, பேசப்பட்ட வெப் சிரீஸ்கள் சில...       

     ஸ்காம் 1992   its okay

    ஹே ஹே... என பலரை முனுமுனுக்க செய்து வருகிறது வெப் சிரீஸ் ‘ஸ்காம் 1992’. சமீபத்தில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போடும் இந்த சிரீஸின் வெற்றிக்கதை, உண்மையிலேயே 90களில் மும்பை ஸ்டாக் மார்க்கெட்டில் ஹர்சத் மேத்தா என்பவர் நடத்திய ஊழலால் உருவானது.

    இரட்டை இலையை முடக்க சதி செய்வது யார்? . ஓ.பி.எஸ். சைதான் சி.வி. சண்முகம் டார்கெட் செய்கிறார் ?

    minnambalam : அதிமுகவுக்குள் மீண்டும் ஒரு எரிமலை உருவாகிக்
    இரட்டை இலையை முடக்க சதி செய்வது யார்?

    கொண்டிருக்கிறது என்பதை சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தின் டிசம்பர் 26 ஆம் தேதி அன்றைய பேச்சு வெளிகாட்டியிருக்கிறது. கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மண்டல பொறுப்பாளரும், அமைப்புச் செயலாளருமான சிவி சண்முகம்... ”எம்ஜிஆரின் வாரிசு என்று யார் யாரோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆரின் வாரிசு என்பது இலை சின்னம் மட்டும்தான். அந்த இரட்டை இலை சின்னத்துக்கு இப்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. இரட்டை இலையை முடக்க சதி செய்கிறார்கள். இந்த தேர்தல் நமக்கு வாழ்வா சாவா தேர்தல். கட்சிக்கு சில தலைவர்கள் துரோகம் செய்திருக்கலாம். ஆனால் எந்த தொண்டனும் அதிமுகவுக்கு துரோகம் செய்யமாட்டான். வரும் தேர்தலில் இரட்டை இலை வென்றாக வேண்டும்" என்று உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார் சிவி சண்முகம்.

    ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது ... Rajinikanth Health Condition Stable

    dailythanthi : ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    ஐதராபாத், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் (வயது 70) தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது. தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அடுத்த மாதத்துக்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருந்தார்.             அதன்படி படப்பிடிப்பு பணிகளும் வேகவேகமாக நடந்தன. அவரும் இரவு, பகலாக மும்முரமாக நடித்து கொண்டிருந்தார். இந்தநிலையில் படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று தெரியவந்தது. எனினும் பாதுகாப்பு கருதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    சனி, 26 டிசம்பர், 2020

    BJP ஸ்மிரிதி இரானி மீது லஞ்ச குற்றச்சாட்டு பதிவு . ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் . துப்பாக்கி வீராங்கனை வர்த்திகா சிங்

    nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானி. இவர் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துவருகிறார்.             இந்தநிலையில், சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராவதற்குப் பணம் கோரியதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் மேலும் இருவர் மீது குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.                                     மத்திய அமைச்சரின் இரண்டு உதவியாளர்களான விஜய் குப்தா மற்றும் ரஜ்னிஷ் சிங் ஆகியோர், தன்னை மத்திய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக்குவதற்கு முதலில் 1 கோடி ரூபாய் கேட்டதாகவும், பின்னர் அதனைக் குறைத்து, 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அவர்களில் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சட்டியுள்ள வர்திகா சிங், தன்னை அந்த ஆணையத்தின் உறுப்பினராக நியமித்துப் பொய்யான கடிதம் ஒன்றையும் அவர்கள் அளித்ததாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

    இரட்டை இலையை முடக்க சதி: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்!

    minnambalam :அதிமுகவின் உச்சமாக கருதப்பட்ட பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அக்கட்சி முதல் முறையாக சட்டமன்றப் பொதுத் தேர்தலை 2021 ஆம் ஆண்டு சந்திக்க இருக்கும் நிலையில்... இன்னமும் கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய கூட்டணி கட்சிகள் இந்த நடவடிக்கையை முழுமையாக வரவேற்கவில்லை. குறிப்பாக அதிமுக வின் முக்கிய கூட்டணி கட்சியான பாஜக பல்வேறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறது.

    எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தில் தற்போதைய துணை முதல்வரான பன்னீர்செல்வத்துக்கு முழுமையான ஒப்புதல் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகளின் நெருக்கடி காரணமாகவே அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார் என்றும் அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

    நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு- மருத்துவமனை தகவல்

    malaimalar : நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளதாகவும், டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு செய்யப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: டிஸ்சார்ஜ் குறித்து நாளை முடிவு- மருத்துவமனை தகவல் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

    துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

    latest tamil news

    dinamni: புதுடில்லி : துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன். கொரோனா காலத்தில் இப்படி ஓர் அதிர்ஷ்ட வரவு. புதையல் கிடைத்ததை அடுத்து, பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. கடந்த, 2018ல் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 77 ஆயிரம் கோடி டாலராகும்.

    உதயநிதி திருவல்லிக்கேணியில் போட்டி?

    latest tamil news
    dinamalar.com : சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அத்தொகுதியில் போட்டியிட, மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும் விரும்புவதால், சொந்த கட்சியிலேயே உதயநிதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை நகரில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து, ஜெ.அன்பழகன் இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பின், தற்போது, அத்தொகுதி காலியாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், அத்தொகுதியில், உதயநிதி போட்டியிட வேண்டும் என, இளைஞரணியினர் விரும்புகின்றனர்.
    பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, வாக்காளர்கள் பட்டியலில், இறந்தவர்களின் ஓட்டுக்கள் நீக்குவது, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை, உதயநிதி தரப்பினர் முடுக்கி விட்டுள்ளனர். மதன் தலைமையில், சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள், உதயநிதியை வெற்றி பெற வைக்க வேண்டும் என, களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆதரவாளர்களை மதுரைக்கு அழைக்கும் மு.க.அழகிரி

    ஆதரவாளர்களை மதுரைக்கு அழைக்கும் மு.க.அழகிரி

    மின்னம்பலம்  தமிழகம் முழுவதுமுள்ள ஆதரவாளர்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி மதுரை வர அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.    திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கலைஞர் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி மீண்டும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். திமுகவிலிருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும், அப்படி வந்தாலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்றும் அறிவித்தார் அழகிரி.      அத்துடன், ஆதரவாளர்களை அழைத்துப் பேசி அரசியலின் அடுத்த நகர்வை அறிவிக்க உள்ளதாகக் கூறினார். அழகிரி உள்பட யார் கட்சி ஆரம்பித்தாலும் அது திமுகவுக்கோ, திமுகவின் வாக்கு வங்கிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என திமுக தரப்பிலிருந்து கனிமொழி பதிலளித்தார்.

    இந்த நிலையில் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனை கூட்டம் ஜனவரி 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும் என்று அறிவித்தார். 

    103 கிலோ தங்கம் திருட்டு சி பி ஐ மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி.. சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம்???

    Jeyalakshmi C - tamil.oneindia.com : சென்னை: சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    சிபிஐக்கு பெரிய களங்கமாக கருதப்படும் தங்க கட்டிகள் காணாமல் போன விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் சென்னையில் தனியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.                                    இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.                 அந்த லாக்கரின் சாவிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது

    ரஜினி படங்களின் ஆயிரம் ரூபா டிக்கெட்டும் மூடப்படும் திரை அரங்குகளும்


    Image may contain: outdoor

    கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக திரை அரங்குகள் மூடப்பட்டு வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை . அதற்கான காரணிகளாக கூறப்படுவது வீடியோக்கள் சிடிக்கள் வருகையும் தற்போதைய இணையதள வசதியும்தான் என்பதுவும் கூட ஓரளவு உண்மைதான்.
    ஆனால் இவை எல்லாம் மேலெழுந்தமான உண்மைகள்.
    திரை அரங்குகளின் மூடுவிழாக்களில் பெரும் பங்கை ஆற்றியது மிகப்பெரிய மாசாலா படங்கள்தான் . அதிலும் குறிப்பாக ரஜினியின் சிவாஜி படம்தான் திரை அரங்குகளுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்தது என்று கூறப்படுகிறது . குறிப்பாக இது பற்றி திரு மதிமாறன் ஒரு காணொளியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
    அரங்குக்கு சென்று திரைப்படங்கள் பார்ப்பது ஒரு சுகானுபவம். வெறுமனே அந்த படங்களை மட்டும் பார்ப்பதல்ல ரசிக்கத்தன்மை என்பது.
    அந்த திரை அரங்கம் அங்கு கூடும் மக்களின் உணர்ச்சி கலவைகள் . அந்த மனிதர்களின் வேர்வையும் வேறு பல வாசனை திரவியங்களும் . கூடவே சில நேரம் சிகரெட் வாசனைகளும் கூட ஒரு வினோத உணர்வுகளை தந்து மீண்டும் அதை அனுபவிக்க தூண்டுவதுண்டு.
    மக்கள் மகிழ்வாக கூடும் வாய்ப்பு என்பது மனிதவாழ்வின் உன்னத தருணங்களாகும்.

    பாலத்தின் கீழே The Free School Under the Bridge’ என்கிற இந்தப் பள்ளி

    Image may contain: 1 person, sittingபாண்டியன் சுந்தரம் : குடும்ப வருமானம் மளிகைக் கடை ஒன்று மட்டுமே என்ற நிலையிலும் பாலத்தின் கீழே பள்ளி அமைத்து பாடம் எடுக்கிறார் ராஜேஷ் குமார் சர்மா! இந்தியாவில் இன்னமும், இன்றும் பல குழந்தைகளுக்குக் கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. குழந்தைகள் பள்ளியில் சேர ஊக்குவிக்கும் வகையில் பல்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் கல்வி கற்க இயலாத நிலையே காணப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ராஜேஷ் குமார் சர்மா. அவர்கள் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான அடிப்படைக் கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்கிறார். ராஜேஷ் கடந்த 13 ஆண்டுகளாக வகுப்பெடுக்கிறார். நலிந்த பிரிவினைச் சேர்ந்த சுமார் 300 குழந்தைகளுக்கு டெல்லியின் யமுனா நதிக்கரைக்கு அருகே இருக்கும் மெட்ரோ பாலத்தின் கீழ்தான் வகுப்பெடுத்து வருகிறார். Image may contain: 1 person
    ‘The Free School Under the Bridge’ என்கிற இந்தப் பள்ளி இரண்டு கால அட்டவணையில் இயங்குகிறது. காலை 9 முதல் 11 மணி வரை 120 மாணவர்கள் படிக்கின்றனர். மதியம் 2 முதல் 4.30 மணி வரை 180 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தன்னார்வலர்களாக இணைந்துகொண்டு நான்கு முதல் பதினான்கு வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.

    தமிழ்நாட்டின் கல்வி விவசாயம் மருத்துவம் நீர்மேலாண்மை மொழி மாநில உரிமை சாலை வசதிகள்

    மு.ரா.விவேக் : சுதந்திர இந்தியாவில் ஒரு பிராந்திய கட்சி மாநிலத்தை கைப்பற்றியது என்று சொன்னால் அது தமிழ்நாட்டின் தி.மு.கழகம் தான், அண்ணாவிற்கு பிறகு, கலைஞர் 1969 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழகத்தின் முதல்வரானார் அதாவது இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்து 22 ஆவது ஆண்டில்-அப்பொழுது தான் இந்திய ஒன்றியத்தை சீரமைக்க அகில இந்திய காங்கிரஸ் முதல் ஐந்தாண்டு திட்டம் ,இரெண்டாவது ஐந்தாண்டு திட்டம் என்று அறிவித்து இந்திய நாடே உட்கட்டமைப்பை செய்து கொண்டிருந்தநேரம்!
    மீண்டும் சொல்கிறேன் 1969 Feb 10 கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்கிறார்-திரும்பிய பக்கமெல்லாம் சவால்கள்!
    கல்வி
    விவசாயம்
    மருத்துவம்
    நீர்மேலாண்மை
    மொழி
    மாநில உரிமை
    சாலை வசதிகள்
    உட்கட்டமைப்புகள்
    பகுத்தறிவு பிரச்சாரம்
    சமூகநீதி கொள்கைகள்
    இடஒதுக்கீடு உரிமைகள்
    கலை   இலக்கியம்     சுயாட்சி முழக்கம்

    தினமும் 200 கேஸ் போடணும்...?" -ஹெல்மட் இருந்தால் மாஸ்க் போடவில்லை .. மாஸ்க் இருந்தால் ஹெல்மட் போடவில்லை என்று கேஸ்

    ஹெல்மட் இருந்தால் மாஸ்க் போடவில்லை என்று ஒரு கேஸ், மாஸ்க் இருந்தால் ஹெல்மட் போடவில்லை என்று ஒரு கேஸ் எனப் பதிவு செய்கின்றனர். எங்களில் பலருடைய ஒரு நாள் வருமானமே...nakkheeran.in - மகேஷ் : police case

     கரோனாவிலிருந்து தற்போதுதான் மக்கள் தங்களுடைய இயல்புநிலைக்கு மாறி வருகின்றனர். கரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்த நேரத்தில், பலர் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர். இதனால், மக்களின் வாழ்வாதாரமே பெரிய கேள்விக் குறியாகி இருந்தது. கடந்த மார்ச்சிலிருந்து அக்டோபா் வரை முழுமையான பாதிப்பைச் சந்தித்த மக்கள், அடுத்த இரண்டு மாதங்களில் சில தளர்வுகளைப் பெற்றுள்ளனர். ஆனால், மீண்டும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தற்பொழுது வரும் தகவல் பலருக்கும் பதற்றத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகக் காவல்துறை கடந்த சில மாதங்களாக எந்தவிதப் பெட்டி கேஸும் போடாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை வளைத்து வளைத்துப் பிடித்து பெட்டி கேஸ் போட்டு வருகின்றனர். இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கை எதற்காக என்று விசாரித்தோம் அதில், "தமிழகக் கூடுதல் காவல்துறை தலைவராக உள்ள ராஜேஷ் தாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்தபோது, அவருக்காகச் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நெல்லை வந்தார். 

    வெள்ளி, 25 டிசம்பர், 2020

    கலைப்புலி தாணுவும் வைகோவும் .. இதுவும் ஒரு பழைய அரசியல் டைரி குறிப்புத்தான்

    Raja Rajendran :
    · தாணு தொடர்கிறார். வைகோவின் அன்பும், சாதுர்யங்களுமே தன்னைக் கலைஞரிடமிருந்து பிரிய வைத்துவிட்டது என வருந்தி எழுதுகிறார் ! வைகோ இன்று திமுகவுடன் நெருக்கமாக இருப்பதால் அவரால் மனம் திறந்து பேச முடியவில்லை என்பது ஒவ்வொரு பத்தியிலும் தெரிகிறது ! 1993 -ல் பத்து லட்சம் கடனை வைகோ சொல்லி தாணு கொடுத்து, அது வராது என்கிற நிலையில், தானே தந்துவிடுவதாக வைகோ உறுதி கூறி, இன்றுவரை அது வரவில்லை என்கிறார் ! எம் ஆர் சி நகரில் தான் வாங்கிய புதுவீட்டை இரண்டு மாதங்கள் பயன்படுத்திவிட்டு திரும்பத் தருகிறேன் என்றுவிட்டு, ஐந்து வருடங்கள் ஓசியில் (ஓசி என்பது என் செருகல் ;)) வசித்தார் என்கிறார் !
    இப்படியெல்லாம் எதையெதையோ கொட்ட நினைப்பவருக்கு என்னமோ தடுக்கிறது. தொடரும் போடுவதற்கு மேலே வைகோ தனக்கு செய்த உதவிகளை வரும் வாரம் சொல்கிறேன் என்று முடிக்கிறார். இன்னும் கொஞ்ச வருடங்கள் கழித்து எழுதியிருக்கலாம் தாணு சார் 😉
    போனவாரம் அழகிரி பற்றி ஏதோ சொல்லவிருந்தாரே என்று அதற்காகத்தான் உள்ளே போனேன். வைகோவுடன் தாணு இருந்த நெருக்கத்தை அழகிரி சந்தேகித்திருக்கிறார். அவ்வளவுதான். அதைத்தான் போன வாரமே பாத்துட்டமே ? எட்டப்பர் வகையறா பேர் போட்டு போஸ்டர் ஒட்டினா சந்தேகம் வரத்தானே செய்யும் ?

    சுதாகரன் விடுதலையைத் தடுக்கும் சசிகலா .. சுதாகரனுக்கும் சசிக்கும் என்னதான் பிரச்சனை? பழைய கொடுக்கல் வாங்கல் ?

    minnambalam : ெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சுதாகரன் விடுதலையை சசிகலா தடுத்துவருவதாக தகவல்கள் வந்துள்ளன.

    சுதாகரன் விடுதலையைத் தடுக்கிறாரா சசிகலா:  சிறைக்குள் நடப்பது என்ன?

    சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். வழக்கு நடந்த காலங்களில் சுதாகரன், ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்த நாட்களை கழித்தால் அவர் இந்நேரம் விடுதலையாகி இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு நீதிமன்றம் விதித்துள்ள பத்துகோடி ரூபாய் அபராதத் தொகையை இதுவரையில் செலுத்தாமல் சசிகலா தரப்பு காலதாமதம் செய்துவருவதாகச் சொல்கிறார்கள் சிறைத்துறை வட்டாரங்களில்.

    கொரோனா தடுப்பூசி ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ... 4 மாநிலங்களில் ஒத்திகை!

    minnambalam : இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன. அமெரிக்காவின் பிஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசிக்கு இந்தியாவின் ஒப்புதலுக்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து புனேவின் சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, பரிசோதனை மேற்கொண்டு வரும் கோவிஷீல்டு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்காக கொண்டுவர இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கேட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம் மேயராக 21 வயது மாணவி தெரிவு .. நாட்டிலேயே வயதில் குறைந்த மேயர் Kerala

    நக்கீரன் : நாட்டிலேயே முதல் முறையாக 21 வயது இளம்பெண் ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகன் பகுதியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ஆர்யா ராஜேந்திரன் என்ற 21வயது இளம்பெண், கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

    >அவர் வசித்து வந்த பகுதியின் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றதோடு தற்பொழுது திருவனந்தபுரத்திற்கு மேயராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக, மிகவும் இளம்பெண் ஒருவர், மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மேயர் பதவியைப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனை Rajinikanth Health LIVE Updates

    மாலைமலர்  :  ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்
    கோப்பு படம்
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

    இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   
    அவருக்கு, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லை.
    ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.