புதன், 16 அக்டோபர், 2019

மாமல்லபுரத்தில் சீன அதிபரும் மோடியும் பார்வையிட்ட கோயில் மண்டபம் இடிந்தது!

NNகலைமோகன் நக்கீரன்:  கடந்த 11 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடியும் சீன அதிபரும் பார்வையிட்ட ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தின் ஒரு பகுதி தற்போது தொடர் மழையால் இடிந்து விழுந்துள்ளது. நூற்றாண்டுகளை கடந்த கோயிலின் இந்த மண்டபம் மோடி ஜின்பிங் சந்திப்பின் போது காவல் கட்டுப்பாட்டு அறையாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் கொலையை பயன்படுத்தி பார்ப்பன ஆட்சியை நிறுவிய பார்ப்பனர்கள் .. திமுகவை அழிக்க ...


வளன்பிச்சைவளன் : பதிவு - 146
ஈழப்போரும் தமிழக ஈழத்தமிழர்களின் பொறுப்பும் கடமையும்
திமுக மீது திட்டமிட்டு தாக்குதல்
ராஜீவ் கொலைக்கு திமுகவே காரணம் அதிமுக காங்கிரஸ்
காவல் துறை பாதுகாப்போடு முரசொலிக்கு தீவைப்பு
ராஜீவை கொன்றது கருணாநிதி வாழப்பாடி அக்கிரம பிரச்சாரம் தமிழகமெங்கும் திமுகவினர் மீது
வன்முறை தாக்குதல்
இந்திய பார்பணீயத்தின் சதி திமுகவை அழிக்க முயற்சி
ராஜீவ் கொலையை பயன்படுத்தி, ராஜாஜி க்கு பிறகு ஒரு பார்பன தலைமையை உருவாக்க இந்திய பார்பணீயம் முயன்றது. தி.மு.க மீது வீண்பழி சுமத்தி, விடுதலைப் புலிகளை ஆதரித்தது திமுக அதன் விளைவே இன்று தமிழகத்தில் ராஜீவ் படுகொலை என தமிழகம் எங்கும் அதிமுக வின் ஜெயலலிதாவும் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு அதிமுகவினரையும், காங்கிரஸ்காரர்களையும் தூண்டி விட்டு தமிழகம் எங்கும் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். தி.மு.க அங்கம்வகிக்கும் தேசிய முன்னணி அலுவலகங்கள் மாநிலம்
முழுவதும் தீக்கிரையாக்க பட்டது. தி.மு.க ஜனதாதள, இடது சாரி கொட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. தி.மு.க தேசிய முன்னணி, இடது சாரி வேட்பாளர்களை வீடு புகுந்து தாக்கினர் சொத்துகளை சூறையாடினர், திமுக வினரை தேடி தேடி தாக்கினர் பல்லாயிரம் திமுக வினர் இடம் பெயர்ந்து தலைமறைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். 

பிரச்சார வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன வாழப்பாடி ராமமூர்த்தி கூசாமல் திமுக தலைவர் கருணாநிதி தான் கொலைசெய்தார் என உச்சகட்ட புளுகு மூட்டைகளை அவிழ்த்து தேர்தல் வெற்றிக்காக இழிவான பிரச்சார யுக்திகளை பயன் படுத்தினார். இதன் மூலம் ராஜீவ் கொலையில் உணர்ச்சி பிளம்பாய் இருந்த தமிழர்களிடம் ராஜீவ் இறந்து கிடக்கும் சுவரொட்டி களை ஒட்டி அனுதாபஅலையை பெற கேவலமான முயற்சிகளில் இறங்கி இந்திய பார்பணீயத்தின் கனவான தமிழகத்தில் பார்பன முதல்வர் என்பதை நனவாக்கி ஜெயலலிதா வின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது இந்த ராஜீவ் படுகொலையே.

குர்து மக்கள் யார்? ஏன் சிரியாவில் தாக்கப்படுகிறார்கள் ?


Explained: Who are the Kurds, and why is Turkey attacking them in Syriatamil.indianexpress.com : அமெரிக்காவால் ஏற்பட்ட வெற்றிடத்தால் குர்திஷ், துருக்கி, பஷர் அல்-அசாத் ஆகியோருக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கான முக்கிய சக்தியாக ரஷ்யா விளங்கப்போகிறது. கடந்த ஞாயிறுக்கிழமை அமெரிக்காவின் நட்புறவோடு இருந்த குர்து படைகள், பஷர் அல்-அசாத்தின் சிரியாவோடு உடன்படுக்கை மேற்கொண்டுள்ளனர் . சில நாட்களுக்கு முன்புவரை குர்து  படைகள் சிரியாவின் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராகவும், ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு எதிராகவும் சண்டை போட்டது. சிரியாவில் இருந்து தனது ராணுவப் படைகளை முழுவதுமாக அமெரிக்கா  நீக்கியாதால், துருக்கியின் தலைவர் எர்டோகன்  சிரியாவிற்குள் நுழைந்து, குர்து மக்களின் ஆக்கிரமைப்பில் இருக்கும் பகுதியை கைப்பற்ற முன்னேறியதால் குர்து படைகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது .

காங்கிரஸ் எம்பி பஜகாவில் சேர்ந்தார் .. கர்நாடகா காங்கிரஸ் கே சி ராமமூர்த்தி ...


.hindutamil.in : புதுடெல்லி . கர்நாடகாவின் கே.சி.ராமமூர்த்தி ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மேலும் ஓர் இடத்தை இழந்துள்ளது. பெங்களூருவில் ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு ராமமூர்த்தி காங்கிரஸில் சேர்ந்தார். இவர் கர்நாடகாவில் பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார், தற்போது வழக்கில் சிக்கியுள்ள டி.கே.சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது. டிகே சிவக்குமார் தற்போது நிதிமுறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நெருக்கமான ராமமூர்த்தி தன் எம்.பி. பதவியைத் துறந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 2022 வரை உள்ளது.
 இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 45 எம்.பி.க்களே உள்ளனர். அடுத்த ஜூனில் எம்.பி.க்கள் ராஜிவ் கவுடா, ஹரிபிரசாத் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

லலிதா ஜுவல்லேர்ஸ் 25 கிலோ நகைகள் மீட்பு

 திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்:  25 கிலோ நகைகள் மீட்பு - காவல் ஆணையர் அமல்ராஜ்  பேட்டி தினத்தந்தி :  திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: 25 கிலோ நகைகள் மீட்பு - காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி திருச்சியில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
 திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திருச்சியில் பிரபல  நகைக் கடையில் நடைபெற்ற 28 கிலோ நகைகள் திருட்டு சம்பவத்தில் இதுவரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனை விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடை கொள்ளையில் நேரடியாக 3 பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர். 
இந்த வழக்கில் விசாரணை நடத்த பெங்களூரு காவல்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். முருகனை விசாரித்த பிறகே நகைகள் முழுவதும் மீட்கப்படும். திருச்சி நகைக்கடை  கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய நகைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ... மலேசியாவில் கைது செய்ப்பட்ட புலிகள் ....


வீரகேசரி : இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளிற்கும் இடையில் 2009 இல்
யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் தேர்தல்களிற்கு முன்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல் கட்சிகள் புலிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது வழக்காமாக காணப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் இந்த முறையும் அவ்வாறான போக்கு காணப்படுகின்றது.
தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிப்பது போன்று- பாதுகாப்பு என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்ககூடிய இரண்டு கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் முன்னாள் போராளியொருவரின் கைதும் மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளுமே அவை.
புலிகளிற்கு எதிரான போhரில் இலங்கை 2009 இல் வெற்றிபெற்றவேளை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டார். கோத்தாபய ராஜபக்சவின் சகோதாரர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டு வெற்றிபெறாத கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்த விடயத்திற்கே அவர் முக்கியத்துவம் வழங்க முற்பட்டார்.

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை!

மாலைமலர் : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய
மந்திரி ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 
 புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இந்த அனுமதியை வழங்கியது. இந்த அனுமதி வழங்கப்பட்ட போது, மத்திய நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் கமிஷன் பணம் பெற்றுக்கொண்டு, அந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட உதவியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது பற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் தலைவர் இந்திராணி சி.பி.ஐ.யிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் புகார்கள் தெரிவித்து வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் முதலில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பிஎம்சி வங்கி ரூ.90 லட்சம் வைப்பு பணம் எடுக்க முடியாததால் மாரடைப்பால் மரணம் ..ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியர்


பிஎம்சி வங்கியில் ரூ.90 லட்சம் வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் முன்னாள் ஊழியர் மாரடைப்பால் மரணம்தினத்தந்தி :   மும்பை  பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் ரூ. 90 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் வைத்துள்ள  51 வயது ஜெட் ஏர்வேஸ் முன்னாள்  ஊழியர் மாரடைப்பால் மரணமடைந்து உள்ளார். மோசடி புகார் தொடர்பாக பிஎம்சி வங்கி  கடந்த மாதம் முதல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரபட்டது. இதனால்  வைப்புத்தொகையாளர்களின் வைப்பு தொகை திரும்பப் பெறுதல் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் 11 ஆயிரம் கோடிக்கு  மேல் டெபாசிட் வைத்திருக்கும் வங்கியின்  வைப்புத்தொகை வாடிக்கையாளர்கள்  நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். திங்களன்று பணம் எடுக்கும் வரம்பு ரிசர்வ் வங்கியால் ரூ. 40,000 ஆக உயர்த்தப்பட்து. இதனால்  77% வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புகளை முழுமையாக திரும்பப் பெற முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நகை கொள்ளையன் முருகன்... அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட கர்நாடக போலீஸ்!


nakkheeran.in - ஜெ.டி.ஆர் : திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவற்றைத் துளையிட்டு பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புடையை நகைகளை கொள்ளையடித்து நாட்டையே அதிர வைத்தனர். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகனை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், கடந்த 11- ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் அவன் சரணடைந்தான். இதையறிந்த திருச்சி போலீசார், பெங்களூரு சென்று கொள்ளையன் முருகனை காவலில் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், பெங்களூரு போலீசார் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்குகளில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி அன்றைக்கே திருவாரூர் முருகனை 6 நாட்கள் காவலில் எடுத்தனர்.

விக்கிரவாண்டி: தரவுகள் சொல்லும் உண்மை!

மின்னம்பலம் : தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உருவாகி எட்டு வருடங்களே ஆகின்றன.
இரண்டு சட்டமன்றத் தேர்தல்களையும், ஒரு நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துள்ள விக்கிரவாண்டி தொகுதி, நான்காவது தேர்தலாக இந்த இடைத் தேர்தலைச் சந்திக்கிறது.
2008ஆம் ஆண்டு, தொகுதி மறுசீரமைப்பின்படி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 12 தொகுதிகளில் சில தொகுதிகளின் பெயர்கள் மாறின. ஒரு தொகுதி நீக்கப்பட்டது. கண்டமங்கலம் தொகுதி பெயர் மாற்றப்பட்டு கண்டமங்கலம் ஒன்றியமும், விக்கிரவாண்டி ஒன்றியமும் இணைக்கப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி ஆக்கப்பட்டது. இதில் முகையூர் தொகுதியிலிருந்த கானை ஒன்றியமும் சேர்க்கப்பட்டது. கானை போக முகையூர் தொகுதியில் மீதமிருந்த பகுதிகள் திருக்கோவிலூர் தொகுதியோடு சேர்க்கப்பட்டன. இதுவே புதிதாக உருவான விக்கிரவாண்டி தொகுதி.

தமிழகத்தில் இருந்து மாதம் 3.000.கோடி.... வருடத்திற்கு 36.000.கோடி ரூபா வெளி மாநிலங்களுக்கு ஓடுகிறது

கி.பிரியாராம் கிபிரியாராம் : மாதம் மாதம் 10.000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னான் அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்
வந்தப்பின்தான் யோசித்தேன் இந்த ஒருவன் மாதம் 10.000.அனுப்புகிறான்
இப்படி 10.பேர் அனுப்பினால் ஒருலட்சம்
நூறுபேர் அனுப்பினால் ஒருகோடி
ஆயிரம் பேர் அனுப்பினால் பத்துகோடி
ஒரு லட்சம் பேர் அனுப்பினால் ஆயிரம்கோடி
மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது முதலில் இவனின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன் தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு திருப்பூரில் மூணுலட்சம் பேரும் கோவையில்_ஏழுலட்சம் பேரும் சென்னையில்_20.பது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்துபோன நான்
சென்னை கோவை திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து கணக்கு பார்த்தேன் மொத்தம் முப்பது லட்சம்பேர் ஒருவன் மாதம் மாதம் 10.த்தாயிரம் என்றால் 30.லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்க்லேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது
மாதம் மாதம் 3.000.கோடி என்றால் வருடத்திற்கு 36.000.கோடி இது அனைத்தும் #தமிழ்நாட்டில் புளக்கத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய #இந்தப்பணம் #வடமாநிலங்களில் புலங்கிக் கொண்டுருக்கிறது அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டுருக்கிறது

சீன அதிபர் பூரண கும்ப மரியாதையை புறக்கணித்தன் பின்னணி!

Ks Raja : தமிழக அரசின் சார்பில் சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை
அளித்து, அங்கவஸ்திரம் அணிவிக்க மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் அர்ச்சகர்கள் 5 பேர் வரவழைக்கப் பட்டு இருந்தனர். அவர்கள் கபாலீ சுவரர் கோவில் பிரசாதம், மாவிலை வைத்த சொம்பு பாத்திரம், மற்றும் தேங்காய் தட்டு, மாலை சகிதம் நின்று கொண்டு இருந்தனர். ஒரு அர்ச்சகர் கையில் சந்தனம் மற்றும் குங்குமத் தட்டுக்களுடன் காத்திருந்தார். அர்ச் சகர் ஒருவர் சீன அதிபருக்கு அங்க வஸ்திரம் அணிவிக்க மற்றொருவர் அவருக்கு மஞ்சள் தெளித்து கும்ப மரியாதை செய்த பிறகு ஒரு அர்ச்சகர் அதிபரின் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்து பிறகு அவர் காரில் ஏறுவார் என்று இருந்தது. இவை அனைத்துக்கும் தமிழகத்தில் உள்ள சீன அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று அவர்களும் சரி என்று அனுமதி கொடுத்த பிறகுதான் விமான நிலையத்தில் அர்ச்சகர்கள் விமா னத்தின் அருகில் நின்றனர்.
இந்த நிலையில் சீன அதிபர் விமானத்தை விட்டு இறங்கியதும் பறையாட்டம், மயிலாட்டம், ஒயி லாட்டம், பொய்க்கால் குதிரையாட் டம் எனத் தமிழக பாரம்பரிய இசை மற்றும் ஆட்டங்கள் துவங்கின. அதிபரும் அதை நின்று நிதானமாக ரசித்துக்கொண்டு இருந்தார்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

விடுதலை புலிகளின் அழிவு பற்றி ஓர் அலசல்:

Stanley Rajan   : கலைஞரின் அரசியலை விமர்சியுங்கள், அவர் மதுகொள்கை இன்னபிற
கொள்கைகளை விமர்சியுங்கள், ஆனால் இலங்கை போரை ஏன்
நிறுத்தவில்லை என விமர்சிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்கலாம் ஆனால் செய்யமாட்டார்கள்
1983 கலவரத்தையொட்டி இந்தியா களமிறங்கியதும், போராளிகளை ஆதரித்ததும் இன்னும் பிற உதவிகளும் உலகறிந்தவை விட்டுவிடலாம்.
1986ல் வடமராட்சியில் பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டதும் ராஜிவ் தலையிட்டு, இனி உங்களால் மக்கள்தான் சாவர்கள், போதும் விளையாட்டு, இனி அமைதியாக வாழுங்கள் என ஒப்பந்தம் செய்ததும்,
அந்த அமைதிகாக்கும் படையினை புலிகள் சீண்டியதும், மக்கள் அழிவினை தாண்டி போராடமுடியாத இந்தியபடை கைகட்டி அடிவாங்கியதும் அதனை சிங்களனோடு சேர்ந்து புலிகள் “இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை?” என சொன்னதையும் விட்டுவிடலாம்.
கலைஞர் அக்கால தமிழீழ‌தேசிய தலைவர் அமிர்தலிங்கத்தை ஆதரித்ததும் அவருக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் பெற்றுகொடுத்ததிலும் கலைஞருக்கு பங்கு உண்டு.
அகில இந்திய அளவில் டெசோ எனும் வலுவான அமைப்பினை தொடங்கி, மதுரையில் மநாடும் நடத்தி இனி ஈழதமிழர் மீது கை வைத்தால் இந்தியா பொங்கும் என ஒரு நிலையினை உண்டாக்கியது அவர்தான்.
டெலோ சபாரத்தினத்தினை கலைஞர் ஆதரித்ததும், பத்மநாபா மீது அன்பு கொண்டிருந்ததும் மறக்க கூடியவை அல்ல.
மற்ற இயக்கங்களை புலிகள் அழிக்க தொடங்கியவேளை, “முதலில் பழம் விழட்டும், சுளைகளை பின் பங்கு வைக்கலாம்” என புலிகளிடம் மன்றாடியவரும் அவர்தான்.

புலிகளை பயன்படுத்தி திமுகவை அழிக்க பார்ப்பன தொடர் முயற்சிகள் .. flashback

வளன்பிச்சைவளன் தமிழீழமே தீர்வு என முழக்கம் வைத்தது திமுக! பிழைக்க போனவன் நாடு கேட்கலாமா? என்ற பிரச்சாரத்தை முறியடித்தது திமுக!
 எம்ஜிஆர ஆட்சி காலத்தில் சூளை மேடு படுகொலை எம் ஜி ஆர் அரசுக்கு எதிரானதாக பார்த்த பிரபாகரன், பாலசிங்கம் எம் ஜி ஆரை நேரில் சந்தித்து இக் கொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டனர். 
இவர்களே கலைஞர்  கருணாநிதி ஆட்சி காலத்தில் பத்மநாபாவை படுகொலை செய்து தி.மு.க ஆட்சி க்கு நெருக்கடி ஏற்படுத்தினர். 
அதோடு நில்லாமல் 1991 ல் அதிமுக வுடன் நெருக்கம் காட்டி அவர்கள் மூலம் ராஜீவை சந்திக்க நேரம் கேட்டு காசிஆனந்தன் சந்தித்தார். 
தேர்தலில் திமுக வெல்ல வாய்ப்பு இருந்த சூழலில் தமிழகத்தில் ராஜீவ் படுகொலை நிகழ்த்தினார்கள்! 
ராஜீவை கொன்றது திமுக என காங்கிரஸ், ஜெயலலிதா பிரச்சாரம் செய்தனர். வாழப்பாடி கருணாநிதி தான் கொலை செய்தார் என பித்தலாட்ட பிரச்சாரம் செய்தார். 
அத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அந்த  படுகொலை உதவியது! 
இப்படி  தமிழீழ விடுதலைக்கு உழைத்த திமுக தோற்கடிக்க, அதிமுக வெல்ல உதவியது யார்? 
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நான் இனி ஈழ அரசியல் பேசுவதில்லை என வெளிப்படையாக அறிவித்தார். 
ராஜீவ் கொலையை பயன் படுத்தி தமிழ்நாடு முழுவதும் திமுக அலுவலகங்கள், திமுகவினர் வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டனர், ஐந்து திமுக வினர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணம் யார்?

ஜாதி .. தொல்காப்பிய / சங்க இலக்கியத்தில் இல்லாத 'ஜாதி'

Kalai Selvi : எவ்வளவுதான் படித்திருந்தாலும், தனக்குச் சாதி கடந்த மனநிலை என்று வாயால் சொல்லிக் கொண்டாலும்... அது, அடுத்த சாதிகளை, நான் தாழ்த்த மாட்டேன் என்பதோடு தான் நிற்கிறதே தவிர, ' சுயசாதி விமர்சனம்' என்று வரும்போது, படித்த பலராலேயே தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
'சாதி' என்ற சொல், தமிழகத்தில் கூச்சச்சொல் ஆகிவிட்டதால், 'சமூகம்' என்று மாற்றுப் பெயர் கொடுத்துக் கொள்கிறார்கள்.
ஆதி தமிழில், சாதி உண்டா!
ஆதி தமிழில் மதமும் இல்லை, சாதியும் இல்லை.
ஜா = ஜனித்தல் ( பிறத்தல் ); ஜனனம் என்ற சொல்லில் வருவது ஜாதி!
பத்ம + ஜா = பத்மத்தில் (தாமரையில்) பிறந்தவள்.
ஷைல + ஜா = சைலத்தில் (மலையில்) பிறந்தவள்
பூர்வ + ஜா = முன்பு பிறந்தவள்/ன்
சுப்ர + ஜா = நன்கு பிறந்தவள்/ன்
ஜாதி / जाति = சமஸ்கிருதச் சொல்! அச்சொல்லை, பகவத் கீதை ' அத்தியாயம்' 1:42 சுலோகத்திலேயே நாம் காணலாம்.
'உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத'
ஜா என்ற வடசொல், ஜனித்ததால் வருவதையே குறிக்கும்! தமிழில் கிரந்தம் நீக்கி எழுதுவதால், ஜா = சா ஆகி, சாதி என்று எழுதுகிறோம்.
ஆனால், நம் தமிழில் கூட ஒரு 'சாதி' உண்டு! ஆனால் அது ஜாதி அல்லாத சாதி; சாதிமல்லி, சாதிக்காய், சாதிமுத்து, சாதிப்பொன் - இவையெல்லாம் என்ன சாதி?

குடும்பத்தை கெஞ்ச வைத்த போலீஸ்: அதிரடி டிரான்ஸ்ஃபர்!

குடும்பத்தை கெஞ்ச வைத்த போலீஸ்: அதிரடி டிரான்ஸ்ஃபர்! மின்னம்பலம் : கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி, சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி அருகே சிதம்பரம் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவலர் சார்லஸ் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புவனகிரி பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரிக்க ஆரம்பித்தனர். ‘இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர்தான் வரணும். நீங்கள் ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்’ என்று காவலர்கள் கேட்டதற்கு ‘என்ன சார் அநியாயமா இருக்கு. எங்க குழந்தைகளை நாங்கள் எங்க விட்டுட்டு வர முடியும்’ என்று பதிலுக்குக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் ‘அது உங்க பிரச்னை. இரண்டு பேருக்கு மேல் வரக் கூடாது. அதுதான் சட்டம்’ என்று கூறி அதன் பின்னர் தான் ஹெல்மெட் எங்கே? லைசென்ஸ் எடு, ஆர்.சி புக் கொடு என்று கேட்க ஆரம்பித்தனர்.

: துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை


மாலைமலர் :சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் வாஷிங்டன்: சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர். துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என 4 தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்

நோபல் பரிசு பெற்ற அபிஜித் : இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது


மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கிறது?
பொருளாதார நோபல் பரிசு பெற்றவர் சொல்வது என்ன?
அரசுக்கு பயப்படாமல் உண்மையைச் சொல்வோர் பட்டியிலில் நேற்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியும் சேர்ந்துள்ளார்.
அவரின் கருத்துகள் :
1.இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. மீட்சி ஏற்பட நீண்ட காலம் பிடிக்கும்.
2. கடந்த சில வருடங்களில் நாம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மந்த நிலையின் தாக்கத்தை குறைத்திருக்கலாம்.
3.பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால், ஏழை தொழிலாளிகள்தான் பாதிக்கப்படுவர் என்றார். (இவருடன் நோபல் பரிசு பெற்ற இவரின் துணைவியார் டஃப்ளோவும் அதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
4.பானர்ஜி மற்றம் டஃப்ளோ இருவரும் இதர 106 அறிஞர்களோடு இணைந்து புள்ளிவிவரங்களில் அரசு தலையீடு குறித்து கவலை தெரிவித்த கடிதத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
இதனை உதாசீனப்படுத்திய அன்றைய நிதி மந்திரி, இவர்களை "பொருளாதாரவாதிகள் போன்ற சிலர்(purported Economists)” என்றும், ”எதற்கெடுத்தாலும் முரண்படுபவர்கள் (compulsive contrarians)” கிண்டலடித்தார்.
தேர்தல்கள் சிறுபான்மை வெறுப்பை விதைத்து வெற்றி பெரும் கலையில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். கைதேர்ந்து விட்ட நிலையில், காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிப்பதே தேர்தல் என்ற நிலையில் மகராஷ்ட்ராவில் பாஜக பெரும் வெற்றி பெறுமாம்!

காஷ்மீரில் ஆப்பிள் விற்பனை சரிவு .. குதிரைகளுக்கு உணவாக ... .பொருளாதார தடை? வீடியோ


தீக்கதிர் : ஸ்ரீநகர்: சட்டப்பிரிவு 370 நீக்கம், ஊரடங்கு தடை உத்தரவுகள் ்டமும் கொண்டுவரப்பட்டது.ஆனால், இந்த திட்டங்களால் காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சந்தைத் தலையீடு திட்டத்தின் கீழ் ஆப்பிள்களை வாங்குவதற்கு அதிகளவில் யாரும் முன்வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போன்றவற்றால், காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.காஷ்மீர் ஆப்பிள்களை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என்று மோடி அரசு கூறியது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கும், காஷ்மீர் விவசாயிகளிடமிருந்து ஆப்பிள் கொள்முதலை படோடோபமாக துவக்கி வைத்தார். ஆப்பிள் விவசாயிகளைக் பாதுகாக்கும் திட்டம் என்ற பெயரில் சந்தை தலையீடு திட்டம்
இதனால், மரங்களிலிருந்து பழுத்து கீழே விழும் ஆப்பிள்களைத் துண்டு துண்டாக நறுக்கி, அவற்றை வெயிலில் உலர்த்தும் வேலையில், காஷ்மீர் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலியல் வழக்கு: விசிக பிரமுகர் அரசியல் புள்ளிக்கு பெண்கள் சப்ளை! திடுக்கிடும் தகவல்கள்!!

SALEM WOMEN INCIDENT VIDEO MOHAN RAJ ARRESTED POLICE INVESTIGATION .nakkheeran.in - இளையராஜா : சேலம் அருகே, பெண்ணை பாலியல் மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்ட வழக்கில் கைதாகியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகி, முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கும் அடிக்கடி பெண்களை அனுப்பி வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ ஓட்டுநர். அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ தொழிற்சங்க செயலாளராக இருந்து வந்தார்.& இந்நிலையில், அவர் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்தக் காட்சியில் இருந்த பெண் அளித்த புகாரின்பேரில் மோகன்ராஜை கொண்டலாம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். 
மோகன்ராஜின் அத்துமீறல் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகும் முன்பே, அவர் மீது வந்த வேறு சில புகார்களின்பேரில் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

BBC :வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது`

ரவிசங்கர் பிரசாத் - நிர்மலா சீதாராமன்
மோடி
உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், 2019ஆம்
ஆண்டு தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவிதமாக குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. முதலீடுகள் மற்றும் தனி நபர்கள் நுகர்வு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியை 2020ஆம் ஆண்டு 6.3 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் உயர்த்தும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் குறைந்துள்ளது.
வங்கதேசத்தை பொருத்த வரை இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும். அதற்கடுத்து 7.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வலுவான பேரினப் பொருளாதார கட்டமைப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான பொது முதலீடுகளால் பொருளாதாரத்தில் 7 சதவீத அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு பரந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.0ஆக குறைந்துள்ளது.
அதன்பின் 2020/21 நிதியாண்டில் மெல்ல மெல்ல முன்னெற்றம் அடைந்து 6.9ஆக உயரும் அதன்பின் 7.2ஆக வளர்ச்சியடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின்

தந்தி டிவி :உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் சென்னை மேயருக்கான திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 11 எம்எல்ஏக்களை திமுக வைத்திருப்பதால் மேயர் பதவியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே உதயநிதி தவிர திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் பேரன் வெற்றி அழகன், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கிரிராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என தகவல்கள் தெரிவிக்கின்றனர்

சீமான் மீது மேலுமொரு புகார்...

another case filed against seemannakkheeran.in - ராஜ்ப்ரியன் : விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாகவும், அதனை விடுதலை புலிகள் இயக்கம் தான் செய்ததாகவும், அதற்காக நாங்கள் பெருமைப்படுவதாகவும் பேசினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸார் சீமானுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர்  தலைமையில் காங்கிரஸார், உமராபாத்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

திங்கள், 14 அக்டோபர், 2019

தலித் இளைஞரை திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை - சித்தூர் ,,, பெற்றோர் கைது

மாலைமலர் :சித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர்
ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை: ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17).
அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒட்டுமரி பகுதியை சேர்ந்த சீனிவாசலு, பத்மம்மா தம்பதியினரின் மகன் பிரபு (19), கட்டிட மேஸ்திரி. சந்தனாவும், பிரபுவும் பள்ளியில் படிக்கும் போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் சந்தனா வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரபுவையும் கண்டித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த 10-ந் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் 11-ந் தேதி கோவிலில் திருமணம் செய்தனர். மகள் காதலனுடன் சென்றதை அறிந்த பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து அவர்களை தேடி வந்தனர்.

சாரு நிவேதிதா : மந்திரங்களின் அர்த்தத்தை கேட்டால் நீங்கள் பயந்து ஓடிவிடுவீர்கள் . அவ்வளவு அசிங்கம் ..

(சாரு நிவேதிதா 2006- இல் எழுதிய கட்டுரை.)
பெரியார் மீது எனக்கு நிறைய மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பது தான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம்.
உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று.
வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம்.
இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன்.
அப்போது தான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை.
வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான்.
மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம்.