புதன், 2 அக்டோபர், 2019

கிளப்புககளுக்கு வெளியிலிருந்து மதுபானத்தை கொண்டுசென்று அருந்தலாம்.. நீதிமன்ற தீர்ப்பு

கிளப்பில் மது: அரசு உத்தரவு நீக்கம்!மின்னம்பலம் : சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அளித்த தீர்ப்பு தமிழ்நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட கிளப்புகளின் உறுப்பினர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மிகப்பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.
காரணம்... தமிழகத்தின் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளில், அதன் உறுப்பினர்கள், உறுப்பினர்களுடன் வரும் விருந்தினர்களும் வெளியிலிருந்து மதுபானங்களை கொண்டு வரக்கூடாது என்று 2010 ஆம் ஆண்டு போடப்பட்ட தடையை கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. அதனால், இனி கிளப்புகளின் உறுப்பினர்கள் வெளியிலிருந்து மதுபானத்தை தாராளமாக கிளப்புகளுக்கு கொண்டுசென்று அருந்தலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னை மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் 23- 3- 2010 அன்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின் படி கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அவர்களோடு விருந்தினராக செல்பவர்கள் வெளியிலிருந்து எவ்வித மது பானங்களையும் கிளப்புக்குள் கொண்டுவந்து அருந்தக்கூடாது என்று தமிழ்நாடு மதுபான உரிமம் சட்டம் 1981 பிரிவு 34 (2) இன் கீழ் தடை விதிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் படுகொலை .. வீட்டில் வீடியோ


vikatan = பிரேம் குமார் எஸ்.கே : . ஹைதரபாத் நகரில் வசித்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.சுரேஷ், இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி இந்தியா வங்கி ஊழியர். சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைதராபாத் நகரில் பணியாற்றி வந்துள்ளார். 2005-ம் ஆண்டு மனைவி இந்திராவுக்கு வந்த பணியிட மாற்றம் காரணமாக, அவர் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மகன் அமெரிக்காவிலும் மகள் டெல்லியிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் நேற்று பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக அவரது அலுவலக நண்பர்கள் சுரேஷை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனாலும், தொடர்புகொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இந்தத் தகவலை சென்னையில் இருக்கும் அவரின் மனைவிக்குத் தெரிவிக்கிறார்கள். மனைவி இந்திராவாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, தனது உறவினர்கள் சிலரின் உதவியுடன் ஹைதராபாத் விரைந்துள்ளார்.

லலிதா ஜுவல்லரியில் ரூ.50 கோடி கொள்ளை .. தங்கம், வைரம்; பொம்மை முகமூடி ... ! - திருச்சி கிளையில் ..

lalitha jewellery theftlalitha jewellery விகடன் : திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவத்தில் கொள்ளையர்களின் உருவப்படம் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் நகைக் கொள்ளையர்கள் இருவர் குழந்தைகள் விளையாடும் பொம்மை முகமூடிகளை அணிந்தவாறு நடந்து வருகிறார்கள். சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் மேல்தளத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் நேற்று அதிகாலை 2.30 மணி முதல் விடியற்காலை 4.30 மணி வரை நகைக் கடைக்குள் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், 16 கிலோ தங்க நகைகள் மட்டுமல்லாமல், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளும் கொள்ளைபோனதால் அதன் மதிப்பு சுமார் 50 கோடிக்கும் மேல் இருக்கும் எனத் தோராயமாகக் கூறப்படுகிறது.

சசிகலா வந்தபின்னர் தான் பொதுக்குழு: ஈபிஎஸ் உறுதியால் அதிர்ச்சியில் ஓபிஎஸ்

வெப்துனியா : அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக டிடிவி தினகரன் இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கும் அவரது கட்சிக்கும் உள்ள மதிப்பு எவ்வளவு என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்துவிட்டது.
இதனை அடுத்து அதிமுகவில் இந்த நிலையில் சசிகலா அடுத்த ஆண்டு மத்தியில் நன்னடத்தைக் காரணமாக முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும், அவர் வெளியே வந்தவுடன் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் பதவி ஏற்பார் என்றும், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் என்றும் இதற்கான ரகசிய பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் டிடிவி தினகரனை தேசிய அரசியலுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது சந்தேகமே என கூறப்படுகிறது. பொதுக்கூட்டம் நடத்தப்படும் தேதி குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஈபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், வேண்டும் என்றே இப்பொதுக்குழு தள்ளிப்போட வேண்டும் என்று ஈபிஎஸ் திட்டமிடுவதை அறிந்து ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பார்ப்பனீய கொடுமைகளை தோலுரித்து காட்டிய வாட்டர் திரைப்படம். வீடியோ


தீபா மேத்தாவின் வாட்டர் படம் பார்பனீயத்தின் கொடூரத்தை தோலுரித்து காட்டும் மிகசிறந்த படம்.
இந்த படத்தின் படப்பிடிப்பை வாரணாசியில்  நடத்தவிடாமல் ஆர் எஸ் எஸ் குண்டர்கள் நடத்திய வெறியாட்டம் சொல்லும் தரமன்று . போட்டது போட்டபடி அந்த படக்குழு ஓடிப்போனது.
ஆனாலும் அவரகள் மனம் தளரவில்லை எப்படியும் அந்த படத்தை எடுத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சியை தொடர்ந்தனர்.
வாரணாசியில் உள்ள கங்கை கரைதான் கதையின் தளம் .
அதை அப்படியே இலங்கையில் உள்ள பேரா லேக் என்ற பெரிய குளத்து கரையில் மிகவும் அற்புதமாக செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
ஆஸ்கர் பரிசுக்கு சிபார்சு செய்யப்பட்டு நூலிழையில் வாய்ப்பை இழந்தது.
ஆனாலும் இன்றுவரை இந்தியாவை பற்றி கொஞ்சம் ஆழமாக பார்க்க விரும்பும் அனைவரும் தவறாமல் பார்க்கும் படமாக இன்றுவரை இது இருக்கிறது.
கணவனை இழந்த பெண்களை காசியில் உள்ள விடுதிகளில் கொண்டுவந்து தள்ளிவிட்டு போய்விடுவார்கள் . அவர்களில் பலர் சிறுமிகள் .
அந்த விடுதியில் அவர்களை கொண்டு விபசாரம் செய்யும் கொடுமை நடக்கிறது.

எஸ் சி சந்திரசேகர் மீது கனடா விநியோகஸ்தர் மோசடி வழக்கு ... ட்ராபிக் ராமிசாமி பட பிரச்சனை

மின்னம்பலம் :
விஜய் தந்தை மீது மோசடி வழக்கு!
நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து, நடித்த திரைப்படம் டிராபிக் ராமசாமி. இந்தத் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாகக் கூறி பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் இருந்து எஸ்.ஏ.சந்திரசேகர் 21 லட்சம் ரூபாய் பணத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் போட்டதாக கனடாவில் வசித்துவரும் பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பில் புகார் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் மணிமாறனின் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு விவகாரம்- மதிப்பெண்களை திருத்தி மோசடி

இர்பான்மாலைமலர் : நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மதிப்பெண்களை திருத்தி மோசடியில் ஈடு பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை: மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் மோசடி நடந்து இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது நீட் தேர்வில் மேலும் பல மாணவர்கள் மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள தகவல்கள் வெளியானது.
இதையடுத்து காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவின், அவரது தந்தை சரவணன், குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல், அவரது தந்தை ஜெகதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.< கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாணியம்பாடியைச் சேர்ந்த டாக்டர் முகமது‌ஷபியின் மகன் இர்பான் நீட் தேர்வில் மோசடி செய்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் முகமது‌ஷபி மூலம் ரஷித் என்ற இடைத்தரகர் அறிமுகம் ஆனதும் தெரிய வந்தது.

அதிமுகவை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் திமுக மனு.. ஜெயலலிதாவின் போலி கையெழுத்து

அதிமுகவை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!
மின்னம்பலம் : இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் இருக்கும் சின்னங்கள் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின்படி அதிமுகவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தை திரும்பப் பெற்று அதிமுகவை தடை செய்யுமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் விரிவான மனு இன்று (அக்டோபர் 1) அளிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ.வான டாக்டர் சரவணன் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான அருண், திமுக தலைவர் ஸ்டாலினின் அனுமதியோடு தலைமை தேர்தல் ஆணையத்திடம் இந்த மனுவை அளித்திருக்கிறார்.

கிஷோர் கே.சாமி கைது : அடுத்தடுத்த வழக்குகளிலும் கைதாகிறார்.. பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக ..

தினகரன் :  சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்காக போராடுபவர்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட டிடிவி ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் மக்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சென்னை அசோக் நகரை சேர்ந்த டிடிவி ஆதரவாளர் கிஷோர் கே.சாமி. இவர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

பேரறிஞர் அண்ணா கண்ட சிவாஜி ... தெரியாத சில விடயங்கள் ..


தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்"
சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும்
உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா?
#பேரறிஞர்_அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். #திமுக_மாநாட்டில் அது நடக்க வேண்டும். #எம்ஜிஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார்.
இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா.
“அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

ராதாபுரம் வாக்குபெட்டியை கொண்டு வரமுடியாது .. தேர்தல் ஆணையமும் விலை போய்விட்டதா?

Venkat Ramanujam : மறுஎண்ணிக்கைக்காக ராதாபுரம் வாக்கு பெட்டியை
கொண்டுவர இயலாது பாதுகாப்பு இல்லை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தீடிர் பல்டி..
போர்ஜரி பண்ணி அதிமுக 49 ஓட்டிலே ஜெயித்த போது திமுக வின் அப்பாவு 2016 இல் நீதிமன்றத்துக்கு சென்று விட்டார் .. நோட்டிஸ் பெற்ற தேர்தல் ஆனையம் தகவல்களை சேமித்து வைத்து இருக்க வேண்டும் என்பதே சட்ட விதி ..
DMK+ 108 ; ADMK+ : 116 என்ற லீடிங் நிலையிலே மோடி PM11AM ஜெயாவுக்கு சொன்ன வாழ்த்து 17 இடங்களில் அதிமுக விளையாட தேர்தல் ஆணையம் விலை போனது நாம் அனைவரும் அறிந்ததே ...
உண்மையாக வாக்கு எண்ணிக்கை நடத்தி இருந்தால் திமுக 121 வந்து அதிமுக 109 வந்து இருக்கும் .. திமுக அதிமுக போட்டியிட்ட இடங்களில் திமுக தான் அதிக வாக்கு சதவிதமே இதற்கு சான்று ..
ஒழுங்கா தேர்தல் 2016ல் நடந்து இருந்தால் தன் ஆட்சியில் தானே மர்ம மரணம் ஜெயலலிதாவும் அடைந்து இருக்க முடியாது
மேலும் திமுக ஆட்சியில் ஜெயா கைரேகை வைக்கும் அளவுக்கு சென்றும் அது பின்னர் பொய் என்றும் நிருபிக்கப்பட்டு இருக்காது ..
ராதாபுரத்தில் 49 ஓட்டு வித்தாயாசம் என்றாகிய நிலையில் 203 போஸ்டர் ஓட்டை கூட எண்ண முடியாம அப்படி என்னய்யா பாதுகாப்பு காரணம் ஆணியை புடுங்கிட்டு ...
என இனி மேல கூசாம தேர்தல் ஆணையத்தை நோக்கி யாவரும் கேப்பார்கள் என்பதை நினைத்து தான் வருத்தமாக உள்ளது

வைரமுத்து - இளையராஜா ஒரே மேடையில் மோதல் ...


இளையராஜா : கண்ணதாசன்தான் திரையுலகின் மிகச்சிறந்த கவிஞர்! வைரமுத்து : எம் எஸ் விஸ்வநாதன்தான் திரையுலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்

ஆந்திரா - ஒரேநாளில் 1.26 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஜெகன்மோகன்

appointments கன்மோகன் -கலிலுல்லா.ச - vikatan.com :   தேர்ச்சிபெற்ற
1,26,728 பேருக்கு பணிநியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிராமங்களில் கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்குகிறது. அதன்படி, இந்தச் செயலகங்களில் 500 வகையான பொது சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலம் ஆகியவை தொடர்பான சேவைகளும் நகர்ப்புறங்களில் நகராட்சி தொடர்பான சேவைகளும் வழங்கப்படும்.

பேராசிரியை கடத்திய அதிமுகவின் வணக்கம் சோமு.. மலைக்கோட்டை பகுதி பொருளாளர்

தினகரன் :சென்னை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வணக்கம் சோமு அதிமுக கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ்., ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். அதிமுகவிற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுக தலைமை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஓ.பி.எஸ்., ஈபிஎஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி. ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் (எ) வணக்கம் சோமு (40), திருமணமாகி மகள், மகன் உள்ளனர். தற்போது  மனைவியை பிரிந்து மகள், மகனுடன் வசித்து வருகிறார்.
இவர் திருச்சி அமராவதி கூட்டுறவு வங்கி இயக்குநராகவும், மலைக்கோட்டை பகுதி  அதிமுக பொருளாளராகவும் உள்ளார்.
மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண், திருச்சியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமாகாதவர். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், சோமு அடிக்கடி அவரை பார்த்துள்ளார். பேராசிரியையை பார்க்கும்போது அவரை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சோமுவுக்கு ஆசை வந்துள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.

மோடிக்கு சு.சாமி : பொருளாதார வல்லுனர்களை பயமுறுத்துவதை மோடி நிறுத்த வேண்டும் !

Subramanian-Swamy-Legal-Action-Rafale-Deal-Jetதினமணி : விரும்பத்தகாத உண்மையை கேட்பதற்கான "மனநிலையை" வளர்த்துக் கொள்ளவும், பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து விரட்ட விரும்பினால் தனது அரசாங்கத்தின் பொருளாதார வல்லுநர்களை "பயமுறுத்துவதை" நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திங்கள்கிழமை அறிவுறுத்தினார். இதுதொடர்பாக புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், மோடி அரசாங்கத்தில் மிகச் சிலரால் மட்டுமே தனித்து செயல்பட முடியும். அவர்களிடம் எது தேவை, தேவையில்லை என்பதை முகத்திற்கு நேராகச் சொல்லபவர்களை பிரதமர் மோடி ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அவர் இன்னும் அந்த மனநிலையை வளர்த்துக்கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.
நமது பொருளாதாரம் குறுகிய காலத்துக்கும், நடுத்தர காலத்துக்கும், நீண்ட காலத்துக்கும் செயல்படும் விதமான திட்டம் தற்போது தேவைப்படுகிறது. ஆனால், அதுபோன்ற ஒரு கொள்கை இன்று நம்மிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல், பிரதமரிடம் உண்மையை உரக்கச் செல்ல அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு... திமுக அப்பாவு எம் எல் ஏவாகிறார்...


நீதி, நியாயம் ஒருபோதும் தோற்காது...!'- மறுவாக்கு எண்ணிக்கை தீர்ப்பு குறித்து அப்பாவு 
விகடன் :   நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி பெற்ற ஓட்டுகள் செல்லாது என்றும் தேர்தல் அலுவலர்கள் கூறியதாகத் தகவல் வெளியாகின. 2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டார் அப்பாவு. அ.தி.மு.க வேட்பாளராக இன்பதுரை உட்பட மொத்தம் 15 பேர் அங்கு போட்டியிட்டனர். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Hindi was devised by a Scottish linguist of The East India Company – it can never be India’s National Language

thebengalstory.com - devdanchaudhuri : If the Anglophone Indians are derided as ‘Macaulay’s children’, then the Hindi speaking Indians can also be called ‘Gilchrist’s children’.
           My late maternal grandmother – who had studied philosophy and biology in the 1940s Calcutta – had told me once during my boyhood, that Calcutta was the birthplace of the modern Hindi language: it was ‘invented’ by the British in Fort William, Calcutta.
I remembered my grandmother’s words when I read the news reports about the recently concluded ‘Hindi Divas’ day when the Union Home Minister Amit Shah pitched for Hindi as the national language of India.
This prompted me to consider and figure out why my maternal grandmother said what she did.  I wanted to know about the ‘suppressed truths’ and understand the ‘secret history’ of Hindi.
Now I wish to share with you what I found; and have to begin by recalling few essential facts about the languages of India.


Linguistic Diversity of India
Papua New Guinea – with a population of just over seven million – has world’s highest number of languages: 852 (840 are spoken and 12 are extinct). It tops the Linguistic Diversity Index (Source: UNESCO 2009) with 0.990. India comes at #9 with a score of 0.930.
But if we measure linguistic diversity by total population, India with 1.3 billion people (#2 by population) is much ahead of the rest, including China (1), United States of America (3), Indonesia (4) and Brazil (5). And hence, one can say, India is the ‘most populated linguistic diverse country in the world’.

கமலஹாசன் ஞானவேல் ராஜாவின் பத்து கோடியை ஏப்பம் விட்ட கதை!

சாவித்திரி கண்ணன் : ஒரு வாக்கு,ஒரு சொல் இதில் உறுதியாக
நிற்பவனைத் தான் உலகம் பெரிய மனிதன் என்று கைகூப்பித் தொழும்!
உத்தம வில்லன் படத்திற்கு எத்தனை தடைகள்...!
கமஹாசனின் கடந்த காலப் படங்களால் கடும் பாதிப்பு அடைந்தவர்கள் ஒரு புறம் பணம் செட்டில் பண்ணச் சொல்லி நிர்பந்தம் தந்தனர்.
’’ DTH ல் ரிலீஸ் செய்வேன்’’ என கமல் கூற,வினியோகஸ்தர்கள்,தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி தூக்கினர். தாயரிப்பாளர் சங்கத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன!
’கமலை வைத்து படமெடுக்க விரும்பியது தவறான முடிவோ...’ என லிங்குசாமி கலங்கி துடித்த நேரம்!
’’பணம் கொடுத்து உதவ யாராவது முன் வந்தால் நான் அவர்களுக்கு அடுத்த படம் பண்ணித் தருகிறேன்..” என கமல் சொல்லவும் , லிங்குசாமிக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
இதை ஞானவேல் ராஜாவிடம் கூற, அவர், ’’கமல் ஒரு மகத்தான கலைஞன், நீங்களும் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்திட்டீங்க.., இந்த நேரத்தில இப்படி பல தடைகள்! எனக்கும் கமலை வைத்து படமெடுக்க ஆசை! அவருகிட்ட கேளுங்க அவர் எனக்கு படம் பண்ணித் தருவாரா? அப்படியானால் நான் பத்து லட்சம் தருகிறேன்..’’ என ஞானவேல் ராஜ கேட்க, லிங்குசாமி கமலுக்கு தகவல் சொன்னார்.

காஞ்சிபுரத்தில் கள்ள மணல் எடுக்கும் எடப்பாடியின் லாரிகள் .. வழக்கு பதிந்த போலீசுக்கு ஈமெயிலில் இடமாற்றம்

சவுடு மண் எடுக்கும் லாரிகள்`விகடன் :இது யாரோட லாரி தெரியுமா?'- காஞ்சி அதிகாரிகளைப் பதறவைத்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்!
அதிகாரிகள், அதிரடியாகத் தென்மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சக காவலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
சவுடு மண் எடுக்கும் லாரிகள்  சட்டவிரோதமாக குளத்தில் மண் எடுத்த ஆளும் கட்சியின் ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமானவர்களின் லாரிகளைப் பிடித்து, காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததால், அதிகாரிகள் அதிரடியாகத் தென்மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், சக காவலர்கள் கொதிப்படைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே உள்ளது மேலக்கோட்டையூர். இங்குள்ள குளத்தில், சில நாள்களாக திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டுவந்தது. இதனால் இப்பகுதி மக்கள் காவல்துறையின் புகார் எண் '100' க்கு போன் செய்து தகவலைச் சொன்னார்கள். இந்தப் புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் எஸ்பி கண்ணன் தாழம்பூர் காவல்நிலையத்திற்கு போன் செய்து, விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., படிப்புக்கான கல்வி கட்டணம் 900% உயர்வு!


தினமலர் :ென்னை:'எம்.டெக்., படிப்புக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்படும்' என, ஐ.ஐ.டி., நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.ஐ.டி.,யில் சேரும், எம்.டெக்., மாணவர்களுக்கு, பல ஆண்டுகளாக கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே, கல்வி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிப்பை பாதியில் விடாமல் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக, ஐ.ஐ.டி.,யின் நிர்வாக குழு கூடி, கட்டண உயர்வை முடிவு செய்யும். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். அதேநேரத்தில், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
 
M.m. Abdulla  : ஐ.ஐ.டி யில் நான்காண்டு பி.இ படிப்பதற்கு இடம் பெற்று படிப்பவர்களில் திறமை குறைவான மாணவர்களுக்கு மூன்றாம் ஆண்டோடு பி.எஸ்.சி பட்டம் வழங்கி வீட்டுக்கு அனுப்ப ஐ ஐ டி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளி வருகின்றன!
மிகக் கடினமான ஐ ஐ டி நுழைவுத் தேர்வின் மூலம் உள்ளே வரும் மாணவர்களில் திறமை குறைவானவர்களும் இருப்பார்கள் என்றால் திறமை குறைவானது அந்த நுழைவுத் தேர்வு முறைதானே தவிர மாணாக்கர் அல்ல!!
ஏற்கனவே அதில் பெரும்பாலும் உயர்சாதி மாணாக்கர்கள் தான்!
உயர்சாதி மாணாக்கரின் ஒட்டு மொத்த கூடாரம் தான் ஐ ஐ டி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கீழடி மட்பாண்ட சிறு கீறல்கள் .. வரலாற்றை கூறும் நூலங்கள் ... அந்த காலத்து கூகிள்கள்!

கீழடி ..மட்பாண்ட சிறு கீறல்கள்!
அச்சிறு மண் பாத்திரங்களில் உங்கள்  பெயர்களை செதுக்கி வைத்த எங்கள்  முன்னவர்களே!
அவை வெறும் மட்பாண்டங்கள் அல்ல  காலவெள்ளத்தில் காணமல் போகாமல் மீண்டும் முளைத்து வந்து  எழுந்து நிற்கும் வரலாற்று கோபுரங்கள்!
 தொலைந்து போக கூடாது என்று பெயர்களை கீறிய பெருமக்களே !
அந்த சிறு கீறல்கள்  உலகம் இதுவரை பார்த்திராத வரலாற்று பொன்னேடுகள்!
நீங்கள் ஒரு நாகரீகம் அற்ற நாடோடி கூட்டங்கள் அல்ல ..
நாடும் நகரமும் நல்ல வாழ்வியலும் கொண்ட மண்ணின் மனிதர்கள் ..
இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள் .
உங்களுக்கு கற்று கொடுக்க வேறொருவரும் தேவையில்லை.
எல்லோர்க்கும் கற்றுகொடுக்கும் கல்வியும் நல்ல குணமும் உங்களிடம் இருந்திருக்கிறது!
அதை அங்கு நீங்கள் விட்டு சென்ற எச்சங்கள் காட்டுகின்றன!
கொஞ்சம் அசந்து விட்டால் ஆயிரமாயிரம்  கட்டுகதைகள் ..
அத்தனையும்  பூர்வகுடிகளை அடிமைப்படுத்தும் வஞ்சக வேதங்கள் !
வகுப்பு பேதங்கள்!
அத்தனை புரட்டுக்களையும் புரட்டி போட்டுவிட்டன அந்த எச்சங்களும் அதில் இருக்கும் அந்த சிறு சிறு கீறல்களும் !
அவை வெறும் சிறு  கீறல்கள் அல்ல ..குறைந்த பட்சம் மூவாயிரம் வருட வரலாற்றை கூறும்  நூலகங்கள ..
நம் முன்னோர் காலத்து கூகிள்கள்


சஜித் பிரேமதாசாவின் வரவினால் கோட்டாபாயா ராஜபக்சவுக்கு தோல்வி? - ராவய விக்டர் ஐவன்

Jeevan Prasad : சஜித் வரவினால் கோட்டாவுக்கு தோல்வி ? -
கோத்தபாயா - அனுரகுமாரா - சஜித்பிரேமதாசா
ராவய விக்டர் ஐவன்:     இனி வரும் ஜனாதபதிக்கு இப்போதுள்ள அதிகாரம் கூட இல்லை. பெயரளவில் ஒரு ஜனாதிபதி மட்டுமே. அதை இன்னும் யாரும் விளங்கிக் கொள்ளவில்லை. அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கு இயற்கையாகவே சென்றுவிடும். ஆகக் குறைந்தது ஒரு அமைச்சைக் கூட ஜனாதிபதி வைத்திருக்க முடியாது. அதுவே 19வது திருத்தச் சட்டத்தால் நடந்துள்ளது. முன்னர் பாராளுமன்றம் ஒரு ஜனாதிபதியை தேர்வு செய்தது. உதாரணத்துக்கு வில்யம் கொபல்லாவ. இப்போது மக்கள் தேர்வு செய்கிறார்கள். அவருக்குள்ள அதிகாரம் மிக மிகக் குறைவு.
இலங்கையின் பொருளாதாரம் மட்டுமல்ல சமூக வீழ்சியும் ஏற்பட்டுள்ள தருணம் இது. மாற்றம் ஒன்று தேவையான நேரம். மாற்று போட்டிகள் இருந்தாலும் சஜித் - கோட்டா இருவர் இடையே மட்டுமே போட்டி உள்ளது. கரு அல்லது ரணில் போட்டியிட்டிருந்தால் கோட்டாவுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் சஜித் ஒரு பெரிய ஆள் இல்லாமல் போனாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏமைகளின் நாயகனாக சஜித்தை மக்கள் நினைக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அதிகமானது. இதனால் அதிக ஈர்ப்பு சஜித்துக்கே உள்ளது.

பெரியார் திடலில் உதயநிதி அசத்தல் பேச்சு .. திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை நூல் வெளியீடு வீடியோ


Arul Prakasam : திமுகழக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக ஆனபிறகு முதல்முறையாக ஒரு மேடையில் நீண்ட உரை ஒன்றை ஆற்றி அசத்தி இருக்கிறார் உதயநிதி .
இந்நிகழ்வின் சிறப்பு அவர் உரை ஆற்றிய இடமும் மேடையும் ஆகும். பெரியார் திடலில் திராவிட இயக்க வரலாற்று ஆவணமாக 1400 பக்கங்களில் திரு அர.திருவிடம் அவர்கள் எழுதிய திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை என்னும் நூல் அறிமுகவிழா மேடையில் அவர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள் இரண்டை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
முதலாவதாக தம்பி உதயநிதி பேசிய பாணி. திமுகழக மேடைகளில் பெரும்பாலும் அறிஞர் அண்ணாவின் அடுக்கு மொழி பேச்சும் கலைஞரின் கன்னல் மொழி உரையும் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் கழகத்தலைவர் தளபதியார் வரையில் தொடர்வதைக் காண்கிறோம். திமுகழக மேடைகளுக்கு புதிய பாணியாக தம்பி உதயநிதி தேர்ந்தெடுத்த பாணி பெரியார் பாணி என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். ஆம் பெரியாரின் பாமரத்தமிழில் பெரியார் திடலில் திராவிட இயக்க வரலாற்று குறிப்புகளுடன் முதல்முதலாக அவர் ஆற்றிய நீண்ட உரை அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல் என்றால் மிகை அல்ல.

குஜராத் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம்: அரசுக்கு கெடு!

கொடுமையிலும் கொடுமையின் விலை ரூ.50 லட்சம்: அரசுக்கு கெடு!மின்னம்பலம் : குஜராத்தில் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை இரு வாரங்களில் வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 30) உத்தரவிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அப்போது அகமதாபாத்தில் உள்ள ரந்தீப்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பனோவையும், அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் மிகக் கொடுமையாக தாக்கியது. அப்போது பில்கிஸ் பனோ 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மூன்றரை வயதில் குழந்தை ஒன்றும் இருந்தது. பில்கிஸ் பனோவை அந்த கும்பல் தாக்கியது மட்டுமின்றி வன்கொடுமையும் செய்தது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இரக்கமின்றி கொன்றது. இதில் பில்கிஸ் பனோவின் மூன்றரை வயதுக் குழந்தையின் தலையைப் பாறையில் மோதி கொலை செய்தது கொடூரத்தின் உச்சம். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 11 பேரைக் குஜராத் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் குஜராத் விசாரணை நீதிமன்றம் சம்பவத்துக்குத் தொடர்புடைய அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் கடமை தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 போலீஸார் மற்றும் 2 அரசு மருத்துவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

ஆன்லைன் டிக்கெட்: கார்ப்பரேட் கேமில் தமிழ் திரைப்படங்கள்!

ஆன்லைன் டிக்கெட்: கார்ப்பரேட் கேமில் தமிழ் திரைப்படங்கள்!மின்னம்பலம் :
தமிழ் சினிமாவின் டிஜிட்டல் கேம் - பாகம் 1 -இராமானுஜம் : சமீப காலங்களாக திரைப்படத் துறை சம்பந்தமான அறிவிப்புகளை செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து வருகிறார்
கோவில்பட்டியில் விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் மஞ்சா வர்மக்கலை பயிற்சிப் பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 17ஆம் ஆண்டு விழா மற்றும் வர்ம பிராத்திகாரா சான்றிதழ் வழங்கும் விழா செப்டம்பர் 29 அன்றுநடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் மட்டும் பதிவு செய்வதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதை அவசர கோலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனாலும் அது விரைவில் அமல்படுத்தப்படும். ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 50 பைசா என்று இருந்த பராமரிப்புச் செலவை நான்கு ரூபாயாக அரசு உயர்த்திக் கொடுத்துள்ளது. இதன் விளைவாக தியேட்டர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.