
Hemavandhana - tamil.oneindia.com :
சென்னை: "சார்.. நான் கொள்ளை எல்லாம் அடிக்கிறவன் இல்லை.. ஆட்களை
வெட்டுவேன்.. அவ்வளவுதான்" என்று போலீசாரிடம் தைரியமாக சொல்கிறார் இந்த
இளம் ரவுடி!
சென்னை எருக்கஞ்சேரி ஐயப்பா தியேட்டருக்கு அருகில் டிராபிக் எப்போதுமே
நெரிசலாக இருக்கும். அதனால் போலீசாரும் வழக்கம்போல் வாகனசோதனையில் நேற்று
பிசியாக இருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 பேர் பைக்கில் வேகமாக வந்தனர். ஹெல்மெட் போடாமல்
இருந்தனர். அவர்களின் வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர். போலீசாரை
பார்த்தும், பைக்கை நிறுத்தாமல் வேகமாக பறந்தனர்.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசாரும், பைக்கை விரட்டி சென்று மடக்கி
அவர்களை பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர்
சிக்கினார். பெயர் நாகராஜ், வயசு 18தான் என்பது தெரியவந்தது.























