வியாழன், 21 மார்ச், 2019

காஷ்மீர் சி ஆர் பி எப் வீரர் 3 சக வீரர்களை சுட்டு கொன்றார் youtube


மின்னம்பலம் : காஷ்மீரிலுள்ள சிஆர்பிஎஃப் முகாமில் வீரர் ஒருவர் சுட்டதில், அவருடன் பணியாற்றிய மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) முகாம் அமைந்துள்ளது. நேற்று (மார்ச் 20) இரவு 10 மணியளவில், இந்த முகாமிலிருந்த 187ஆவது பட்டாலியனைச் சார்ந்த வீரர்கள் நான்கு பேருக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அஜித்குமார் என்ற சிஆர்பிஎஃப் வீரர் தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களைச் சுட்டார்.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த பொகர்மல், டெல்லியைச் சேர்ந்த யோகேந்திர சர்மா, ஹரியானாவைச் சேர்ந்த உமேத் சிங் ஆகியோர் இறந்துபோனது தெரியவந்துள்ளது. மூன்று பேரைச் சுட்டதுடன், அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியார் - பூலே சமத்துவபுரம்: கலைஞர் பாதையில் ஸ்டாலின்!

பெரியார் - பூலே சமத்துவபுரம்: கலைஞர் பாதையில் ஸ்டாலின்!
மின்னமபலம் : ;பிரகாசு
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுகவும், அதிமுகவும் ஒரே நாளில் மார்ச் 19 அன்று வெளியிட்டிருக்கின்றன. நீட் தேர்வு ரத்து, கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கை, தனியார் துறை இட ஒதுக்கீடு, ஏழு தமிழர் விடுதலை எனத் தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கும் கோரிக்கைகள் இருகட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதையும் தாண்டி பல தனித்துவமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆளுநர் பதவியை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்க வேண்டும்; நீக்கும் வரை முதல்வரால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்; மாநில அரசை கலைக்கிற சட்டப்பிரிவு 356ஐ நீக்க வேண்டும் என்று கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதியாகட்டும், இந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்புகளில் ஒன்றான நீதிமன்றங்களில் தற்போதைய நீதிபதிகள் நியமன முறை தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதியாகட்டும்

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் இந்தித் திணிப்பு ......?

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் இந்தித் திணிப்பா?மின்னம்பலம் :மா.மாரிராஜன் : சமூக வலைதளங்களில் திடீரென்று ஒரு பெரும் பரபரப்பு. தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்க் கல்வெட்டு அகற்றம். இந்தி மொழி கல்வெட்டுகள் திணிப்பு.
இச்செய்தி உண்மைதானா?
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (Archaeological Survey of India – ASI) கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில் இம்மாதிரி செய்ய இயலாது என்று சொன்னால்... ASIதானே ரவிசங்கர் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்து கூடாரம் அமைத்தார்கள் என்னும் மறுமொழி வருகிறது..
இக்கல்வெட்டுகள் இருநூறு வருடங்களுக்கு முந்தைய மராட்டியர்களின் கல்வெட்டுகள் என்றால்... அப்போ 200 வருடங்களுக்கு முன்பே திணிப்பு ஆரம்பமாகிவிட்டதா என்று மறுமொழி வருகிறது.
வடமொழி கல்வெட்டு புகைப்படங்களைப் பார்த்த ஒரு சிலர், பலத்த அதிர்ச்சிக்குள்ளாகி இது தஞ்சை கோயில் கல்வெட்டுகள்தானா என்கிறார்கள். தஞ்சைக் கோயிலில் வேற்று மொழிக் கல்வெட்டுகள் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

ம.பி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று அண்ணன்கள்!

tamil.news18.com : மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமியை அவளது மூன்று சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து தலையை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கடந்த வாரம் தலை வெட்டப்பட்ட 12 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமியை அவளது மூன்று அண்ணன்களும் அவரது மாமாவும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தலையை அறுத்து கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.< இதுகுறித்து தெரிவித்த காவல்துறை, ’12 வயது சிறுமியின்  மூத்த அண்ணன் அவளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக, அவளை பாண்டா பகுதியிலுள்ள அவரது மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அந்த அண்ணனால் முதலில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

கலைராஜன் திமுகவில் ..அமமுகவின் முக்கிய தலைவர்: அதிர்ச்சியில் தினகரன்

வெப்துனியா :தினகரனின் கட்சியான அமமுக, அதிமுக அணிகளில் ஒன்று என நீதிமன்றம் கூறியிருந்தாலும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின் அக்கட்சி, தொண்டர்களின் அதிருப்திக்கு ஆளாகி வந்தது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு பின் தினகரனிடம் இருந்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிரிந்து செல்ல தொடங்கினர். >குறிப்பாக தினகரனின் வலது கை போல் செயல்பட்டு வந்த செந்தில்பாலாஜி, திமுகவிற்கு சென்றது அமமுகவின் பெரும் பின்னடைவு ஆகும். இந்த நிலையில் தற்போது அமமுகவின் இன்னொரு பிரமுகருமான விபி கலைராஜனும் திமுகவில் இணையவுள்ளார்.>திருச்சியில் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விபி கலைராஜன் திமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முன்னதாக அம்மா மக்கள் முன்னெற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.<

புதன், 20 மார்ச், 2019

திருமாவளவனுக்கு பானை சின்னம் ... வாசனுக்கும் கமலுக்கும் ஓடிசென்று விரும்பிய சின்னங்கள் கொடுத்த (தறுதலை) ஆணையம்

LR Jagadheesan : அரசியல் கட்சி
சின்னங்களும் கூட இங்கே தனிமனித
சொத்துரிமையை போலத்தான் ஒதுக்கப்படும் போல. தாமாகவை துவக்கிய தந்தையின் சின்னத்தை அவரது தனயனுக்கு தப்பாமல் ஒதுக்க முடிந்த இந்திய தேர்தல் ஆணையத்தால் திருமாவளவனே முன்பு நின்று தேர்தலுக்குத்தேர்தல் உழைத்து பிரபலப்படுத்திய அவரது சின்னத்தை ஒதுக்க “இயலவில்லை, சட்டத்தில் இடமில்லை, விதிகள் அனுமதிக்கவில்லை” என்பதெல்லாம் ஏற்கக்கூடிய வாதக்களா என்ன?
சின்னத்தனம், சில்லறைத்தனம் என்பதைத்தவிர?
இந்தியாவில் “சுயாதீனம்” என்றோ “பொது சிவில் சமூகம்” என்றோ எவையுமே உருவாகவே உருவாகாது போல. சனாதன சாக்கடையை சந்தனம் என்றும் சாதியையே சமூகத்தின் அடிக்கட்டுமானமாகவும் 21ஆம் நூற்றாண்டிலும் கட்டிக்கொண்டு அழும் ஊரில் ஜனநாயகமே ஜாதிநாயகம் தான்.

தேர்தலுக்காக ஹெலிகாப்டர்கள்! .50 வீதமானவை பாஜகவுக்கே ! ஒரு மணிக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3.5 லட்சம் வரை

கிருபாகர் - நக்கீரன் : மத்திய, மாநில அரசுகள், தனியார் வசம் என நாட்டில் மொத்தம் 275 பதிவு பெற்ற ஹெலிகாப்டர்கள் உள்ளதாக ரோட்டரி விங் சொசைட்டி ஆப் இந்தியா தெரிவிக்கிறது.
p இவைகள் அனைத்தும் தேர்தல் காலங்களில் தலைவர்கள் பிரசாரம் செய்ய வாடகைக்கு விடப்படுகின்றன. 180 முதல் 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய இந்த ஹெலிகாப்டர்களுக்கு தேர்தல் காலங்களில் பயன்பாடு அதிகமாக உள்ளது.
முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பார்கள்.

நிர்மலா தேவி 11 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்

tamil.thehindu.com மாணவிகளை தவறாக வழிநடத்திய குற்றம்சாட்டப்பட்ட
உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி  11 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு  ஜாமீனில் வெளியே வந்தார்.
அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகினர். மூவருக்கும் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இதனால் முருகனும், கருப்பசாமியும் உச்ச நீதிமன்றத்தை அணுகி கடந்த மாதம் ஜாமீன் பெற்றனர்.

மக்கள் நீதி மய்யம் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு.. நாடாளுமன்ற தேர்தல் ...

பாராளுமன்ற தேர்தல்- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு
மாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்.  பெயர் வருமாறு:-
அரக்கோணம்-என். நாகேந்திரன், வேலூர்-ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரி- காருண்யா, தர்மபுரி-வழக்கறிஞர் ராஜசேகரன்,
விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி, சேலம் -என் பிரபு மணிகண்டன், நீலகிரி -வழக்கறிஞர்  ராஜேந்திரன், திண்டுக்கல்- டாக்டர் சுதாகர், திருச்சி- வி. ஆனந்தராஜா, மத்திய சென்னை- கமிலா நாசர், சிதம்பரம்- ரவி, மயிலாடுதுறை- ரிபைதின், நாகை- குருவையா, தேனி- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன் குமரன், திருநெல்வேலி- வெண்ணிமலை, கன்னியாகுமரி-எபிநேசன், புதுச்சேரி-எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், திருவள்ளூர் - லோக ரங்கன், வடசென்னை- ஏஜி மவுரியா, ஸ்ரீபெரும்புதூர்- என் சிவக்குமார். முதற்கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற வேட்பாளர்கள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்

நீர்வ மோடி கைது . கைவிலங்கு மாட்டப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

நிரவ் மோடிவிகடன் ; மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவந்தனர். இது பலரின் கவனத்துக்கு வரும் முன்னரே அவரும், குடும்பத்தினரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டறிந்து மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததிலிருந்து அமலாக்கத் துறை  நிரவ் மோடியை நாடு கடத்திக்கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. அந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையொப்பமிட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நிரவ் மோடியைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.

பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா !

வினவு : பாஜக தலைவர்களின் சர்வாதிகாரத்தன்மை தொண்டர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் இதற்குமேலும் பொறுமையாக, இந்த அநீதியை சகித்துக் கொண்டிருக்க முடியாது. > கலைமதி<>“பா
ஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனிபோல மாறிவிட்டது. தினமும் வெத்து திட்டங்களை, அறிவிப்புகளை மக்களிடம் புகழச் சொல்லி எங்களை விற்பனையாளர்கள் போல ஆக்கிவிட்டார்கள்” என்கிறார் பாஜக-விலிருந்து விலகிய இளம் தலைவர் ஒருவர்.
குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ரேஷ்மா பட்டேலும் ஒருவர். போராட்டம் நடந்த நேரத்தில் பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், பா.ஜ.க ஒரு மார்க்கெட்டிங் நிறுவனம் போல செயல்படுவதாக குற்றம்சாட்டி, அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.

BBC : திமுக தேர்தல் அறிக்கை - 15 முக்கிய அம்சங்கள்

2019 மக்களவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். அதில் உள்ள சில அம்சங்களை வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.
  • தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படும் வகையில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.
  • வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
  • மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நிதி பங்கீடு செய்யப்பட வேண்டும்.
  • மத்திய நிதிக்குழுவின் அமைப்பும் அந்த பணிகளும் மாநிலங்கள் மன்றங்களால் வரையறுக்கப்பட வேண்டும்.
  • மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்.
  • தொழிலாளர் ஊதிய திட்டத்தின் குறைந்தபட்ச தொகையாக 8,000 ரூபாய் நிர்ணயிக்கப்படும்.
  • மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்டவற்றிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
  • வேலையில்லா திண்டாட்டத்தை போக்கிட மத்திய மாநில அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
  • முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்

தேர்தல் ஆணையத்தின் அடாவடி .. அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் கமலுக்கு கேட்ட சின்னங்கள் தாராளம் .. ஏனைய கட்சிகளுக்கு?

தினமலர் :தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, அவை
ஏற்கனவே போட்டியிட்ட, பழைய சின்னம் கிடைக்காததால், அதிர்ச்சியில் உள்ளன. தி.மு.க., கூட்டணியில், காங்., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொ.ம.தே.க., ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவற்றில், தேசிய கட்சிகளான காங்., கம்யூ., கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், அக்கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவதில், சிக்கல் இல்லை. ஏனெனில், அவை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றவை.தி.மு.க.,வும் அங்கீகாரம் பெற்ற கட்சி என்பதால், சின்னம் பிரச்னை இல்லை. மற்ற கட்சிகள், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெறாதவை.
எனவே, தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும்படி, < அக்கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தி.மு.க., சின்னத்தில் போட்டி யிட்டால், அக்கட்சியின் வேட்பாளர் கணக்கில்சேருவர் என்பதால், அதை கூட்டணி கட்சிகள் தவிர்த்தன. தற்போது, அக்கட்சிகளுக்கு, ஏற்கனவே அவை போட்டியிட்ட சின்னத்தை பெறுவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.

அந்தக் காற்றை சுவாசிக்க ஓர் உயிர்கூட மிச்சமிருக்காது!


அந்தக் காற்றை சுவாசிக்க ஓர் உயிர்கூட மிச்சமிருக்காது!
மின்னம்பலம் : கதவைத் தட்டும் பேரழிவு - நரேஷ் கடல் உயிரினங்களில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாகியிருக்கிறது, மனிதர்களால் வெளியான கார்பன் - டை- ஆக்ஸைட் வாயு. நான்கில் ஒரு பங்கு என்பது எவ்வளவு பெரிய அழிவு என்பதைப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. இந்தியாவில் வாழும் மக்கள் ஒருவர்கூட மிச்சமில்லாமல் இறந்துவிட்டால், அது எவ்வளவு பெரிய அழிவோ அப்படிப்பட்டது மேற்குறிப்பிட்ட கடல் உயிரின அழிவு.
கடலில் உள்ள அமிலத்தன்மையின் அளவைக் (pH value) கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது கடல் படிமங்களில் உள்ள கால்சியம் கார்பனேட் (Calcium Carbonate). கடலில் உயிரினங்கள் உருவாக ஆரம்பித்த காலத்திலிருந்து தன் கடமையைக் கண்ணிமைக்காமல் செய்துவந்தது கால்சியம் கார்பனேட். அதிகமான கரியமில வாயுவை உள்வாங்கி கடலில் அமிலத்தன்மை அதிகமாகாமல் பாதுகாத்துவந்த இந்தக் காவலர்கள் தற்போது சாம்பலாகி வருகின்றனர். அறிவியல்பூர்வமாகச் சொல்ல வேண்டுமானால், கால்சியம் கார்பனேட் படிமங்கள் அதிகப்படியான அமில வாயுக்களுடன் வினைப்புரிந்து கரைந்துவிடுகின்றன (dissolution of calcium carbonate sediments).

கமல் கட்சியில் இருந்து வரிசையாக விலகும் நிர்வாகிகள்

மின்னம்பலம் : கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகிவருவதால் கமல்ஹாசன் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக என இரு கட்சிகளின் தலைமையில் அணி அமைந்துள்ள நிலையில், தனித்துப் போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். கோவையில் இன்று அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

முதல் லோக் பால்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

 முதல் லோக் பால்: குடியரசுத் தலைவர் உத்தரவு!மின்னம்பலம் : உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் பால், லோக் ஆயுக்தா ஆகிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆண்டுகள் கடந்தாலும், நாட்டில் முதன் முதலாக லோக் பால் ஆணையத்தை நேற்று (மார்ச் 19) இரவு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பிறகே இந்த லோக் பால் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், சட்ட நிபுணர் ஆகியோர் கூடி லோக் பால் ஆணைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இந்த குழுவை அமைக்காமல் காலம் கடத்தியதால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

கோவாவில் இன்று பிரமோத் சாவந்த் நம்பிக்கை ஓட்டெடுப்பு; தப்புவாரா?

தினமலர்: பனாஜி: கோவா மாநில புதிய முதல்வராக பா.ஜ.,வின் பிரமோத் சாவந்த் பதவியேற்ற நிலையில், இன்று(மார்ச் 20) அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட, கோவா மாநில முதல்வராக இருந்த, மனோகர் பரீக்கர், சமீபத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து, கோவா மாநில புதிய முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரமோத் சாவந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வர்களாக, மஹாராஷ்டிர கோமந்தக் கட்சியை சேர்ந்த, சுதீன் தவாலிகர் மற்றும் கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த, விஜய் சர்தேசாய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று அதிகாலை, இவர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் மூலம் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற கவர்னர், இன்று காலை 11.30 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டத்தில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய், 19 மார்ச், 2019

முற்பட்ட சாதிகள் வாக்கு: பாஜக - அதிமுக புதுத் திட்டம்! தமிழகத்தில் உள்ள பிற மாநில மக்களின் வாக்குகளும்...

டிஜிட்டல் திண்ணை:  முற்பட்ட சாதிகள் வாக்கு: பாஜக - அதிமுக  புதுத் திட்டம்!மின்னம்பலம்  : “தமிழகத்தில் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.தாமதத்துக்கு என்ன காரணம் என விசாரித்தோம். ‘காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழக தலைவரிடம் இருந்து ஒரு லிஸ்டை கேட்டு வாங்கியிருக்கிறார்கள். அதில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் 20 பேரின் பட்டியல் டெல்லிக்குப் போயிருக்கிறது.
ஏற்கனவே தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தீவிரமான முயற்சிகள் நடத்தி வருவது தனி செய்தியாகவே மின்னம்பலத்தில் வெளியானது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடமும் இளங்கோவன் பேசியிருக்கிறார். அவரும் இளங்கோவனிடம் உறுதியாக செய்து தருவதாக சொல்லியிருக்கிறாராம். இது தொடர்பாக ப. சிதம்பரமும் கே.எஸ். அழகிரியிடம் பேசியுள்ளார். ‘இளங்கோவனுக்கு ஏற்ற ஒரு தொகுதியை ஒதுக்குங்கள்’ என்று அவரும் கூறியுள்ளதாகத் தகவல். இவ்வாறு

சிறையிலிருந்து வெளிவரும் நிர்மலா தேவி.. பிணை கொடுக்க கூடாது என்று உறவினர்கள் மிரட்டப்பட்டனர்?

Velmurugan P: விருதுநகர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை சிறையில் இருந்து நாளை மாலை ஜாமீனில் வெளியே வருகிறார். 
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். 
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நிர்மலாதேவிக்கு உதவியதாக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
முதலில் நிர்மலா தேவி வழக்கை விருதுநகர் மாவட்ட போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

நடிகை பூஜா காந்தி அசோக் ஹோட்டலில் பில் கட்டாமல் ஓட்டம்?

Siva பெங்களூர்: நடிகை பூஜா காந்தி சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்துவிட்டு பில் கட்டாமல் நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள படங்களில் நடித்து வருபவர் பூஜா காந்தி. கரணின் கொக்கி படம் மூலம் கோலிவுட் வந்தவர் சரத்குமாரின் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அவர் பெங்களூரில் தங்கி கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பூஜா காந்தி பெங்களூரில் உள்ள ஹோட்டல் அசோக்கில் தங்கியிருந்திருக்கிறார்.
ஆனால் பில் தொகையை செலுத்தாமல் நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் காவல் நிலையத்தில் பூஜா மீது புகார் அளித்தது. பூஜா காந்தி ரூ. 4.5 லட்சம் பில் கட்ட வேண்டி இருந்த நிலையில் எஸ்கேப் ஆகியிருக்கிறார். இதையடுத்து போலீசார் அழைத்து விசாரணை நடத்திய பிறகு முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் அளித்துள்ளார்.

சீமான் மிரட்டல் : டே அவளுக்கு சீட் கொடுக்க சொல்ல நீ யாரடா . போடா வெளியே .. வீடியோ

  வெப்துனியா :சீமான் தனது தொண்டர் ஒருவருடன் வேட்பாளர் தேர்வு தொடர்பாகக் கோபமாகப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
 நேற்று முதல் சமூகவலைதளங்களில் சீமானும் அவருடையக் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் களத்தில் வேலைப் பார்க்கும் நபருக்கு சீட் கொடுக்க சொல்லி அந்த நபர் கேட்க அதற்குக் கோபமாக சீமான் பதிலளிக்கும் படி அந்த ஆடியோ உள்ளதால் அதை சமூக வலைதளங்களில் பரப்பி சீமானை விமர்சனம் செய்து வருகின்றனர்.
 அந்த ஆடியோவில் ’ ஏய் இந்திராங்கிற பொண்ணுக்கு சீட் கேட்டியாமே? எங்களுக்குத் தெரியாதா யார நிறுத்தனும்னு, நாங்கல்லாம் முட்டா பயலுக?
நீங்க களத்துல இருக்குறவங்கள கண்டுபுடிச்சி எங்களுக்கு காட்டிருவீங்க… என்ன நடக்குதுனு, எனக்கு தெரியாதது உனக்குத் தெரியுதா?.. நான் நிறுத்துற ஆளுக்கு வேலை செய்ய முடியும்னா செய், இல்லனா வெளியேறி போய்கிட்டே இரு’ எனக் கோபமாகப் பேசுகிறார்.

கனடா முன்னேறும் டொரண்டோ தமிழ் இருக்கை .. வாழ் தமிழர்களின் வேண்டுகோள்

tamil.thehindu.com ஆர்.சி.ஜெயந்தன் : அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைந்துவிட்டது. அதன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகிவிட்டது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழும் மாநகரம் டொரண்டோ. அங்கே ஒரு தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்ற கனடா வாழ் தமிழ் மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் நடந்த விழாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபதலைவர் புரூஸ் கிட் பேசும்போது “ஒரே இரவில், இரண்டே மணி நேரத்தில் 7,00,000 கனடிய டாலர்கள் நிதியாகத் திரண்டது கனடிய வரலாற்றில் மட்டுமல்ல; பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலும் இதுவே முதல் முறை. மொழியைக் காக்கவும் வளர்க்கவும் தரப்படும் நன்கொடையே அனைத்திலும் சிறந்தது. அதைத் தமிழ் மக்கள் செய்திருக்கிறார்கள்” என, பலத்த கைதட்டல்களுக்கு இடையே தெரிவித்தார். அந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் அணிவகுத்து வந்து, வரிசையில் நின்று நன்கொடை வழங்கிய காட்சி மொழியே தங்களின் அடையாளம் என்பதை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதைக் காட்டியது.

மாயாவதி உதவியாளரிடம் 225 கோடி சொத்து...வருமான வரி துறை அதிரடி...

mayawatinakkheeran.in - kirubahar : உத்திரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற நெட் ராம் ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் லக்னோ நகரங்களில் உள்ள இவரது வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது சொகுசு கார்கள், தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என 225 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டாத சொத்துக்கள் கண்டறியப்பட்டன. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் மாயாவதி முதல்வராக இருந்தபோது அவருக்கு செயலாளராக இருந்தவர் இவர். எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனக்கு ஒரு சீட் வேண்டும் என கட்சி ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதி

நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்- திமுகவின் தேர்தல் வாக்குறுதிமாலைமலர் : நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ளது. சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-< வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்துமாலைமலர் : அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-