புதன், 13 மார்ச், 2019

400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு எல்லாம் நாண்டுகிட்டு சாவணும்.. பொங்கிய பொதுமக்கள்

Pollachi Rape case issue tamiloneindia.com: சென்னை: “400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு பொள்ளாச்சியில எல்லாம் நாண்டுகிட்டு சாவணும்!” என்று திருநாவுக்கரசின் தாய் லதாவிடம் பொதுமக்கள் சரமாரியான கோபத்தை வெளிப்படுத்தினார்கள். மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது நீதிபதி உத்தரவுக்காக கோர்ட் வளாகத்தில் காத்திருந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் லதாவை பார்த்ததும் கொதித்து போய் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் .
பொதுமக்களின் ஆதங்கம், ஆத்திரத்துடன் எழுப்பிய கேள்விகளும், பிள்ளையை பெற்ற லதாவின் சமாளிப்பு பதில்களும்தான் இவை:
பொதுமக்கள்: ஏம்மா.. உங்க மகன் என்னென்ன பண்ணியிருக்கான்னு தெரியுமா? அவன் பெயிலுக்கு போயி வந்திருக்கீங்களே?

லதா: அவன் ஒரு தப்பும் செய்யல. நீங்க எல்லாரும்தான் சேர்ந்து அவன் மேல இப்படி பழி போடறீங்க? நான் வேணா சூசைட் பண்ணிக்கட்டுமா? உண்மை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? அவன் செய்றானோ செய்யலையோ.. விஷத்தை எனக்கு தாங்க, நான் குடிக்கறேன்.
  லதா பொதுமக்கள்: பல பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு போட்டிருக்கிறது உங்களுக்கு தெரியல… உங்க அழுகை அதுக்கு பதிலா இருக்குமா?

கண்கட்டி வித்தைக்காரர் மோடி- குமரியில் தாக்கிய ஸ்டாலின்

கண்கட்டி வித்தைக்காரர் மோடி- குமரியில் தாக்கிய ஸ்டாலின்
மின்னம்பலம் : திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோடு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,
“பல்வேறு நாடுகளுக்கும் போய் வந்துகொண்டு மோடிதான் ஒளிர்கிறார். இந்தியா இருட்டில்தான் இருக்கிறது. வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்றார் மோடி. ஆனால் மோடி காலத்தில் தளர்ச்சி தளர்ச்சி தளர்ச்சியாகவே இருக்கிறது நாட்டின் நிலைமை. மோடி வந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தனர். ஆனால் புதிய வேலைவாய்ப்புகள், திட்டம், தொழிற்சாலை எதுவுமில்லை. கறுப்புப் பணம் ஒழிப்பதுதான் முதல் வேலை என்றார். ஆனால் நல்ல பணத்தை எல்லாம் ஒழித்துவிட்டார்.
கறுப்புப் பணம் எந்த நாட்டில் இருக்கிறது என்பதையாவது சொல்லியிருக்கிறாரா? கண்கட்டி வித்தைக்காரனைப் போல செயல்படுகிறார் மோடி. திருடனைக் கண்டுபிடிப்பதற்காக ஊரில் உள்ள அனைவரையும் கைது செய்து அதில் இருந்து திருடனைக் கண்டுபிடிக்கிறேன் என்கிற அதிபுத்திசாலியாக இருக்கிறார் மோடி.

எனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. "டீப்" யோசனையில் திருமாவளவன்!

VCK has different plans for 2 seatstamil.oneindia.com - sherlinsekar-lekhaka.: சென்னை: வருகிற லோக்சபா தேர்தலில் ரவிக்குமாருக்கோ வன்னியரசுக்கோ சீட் இல்லையாம். பலே பிளானில் இருக்கிறாராம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் .
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்கள் எது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் சார்பில் சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.
இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடவுள்ளார். காஞ்சிபுரம் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரவிக்குமார் போட்டியிடவேண்டும் என்று திமுகவும் விரும்பியதாக ஒரு செய்தியும் பரவியது. அதே வேளையில் திருமாவளவனோடு நெருக்கமாக இருக்கும் வன்னியரசும் போட்டியிட கடுமையாக முயற்சித்து வந்தார்.

பொள்ளாச்சி திருநாவுக்கரசுகள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன?- ஓர் உளவியல் அலசல்

tamil.thehindu.com - க.சே.ரமணி பிரபா தேவி : பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் நண்பன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அழைத்து வந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனியார் கல்லூரிப் பேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பான வீடியோக்கள் சில வெளியான நிலையில், பாலியல் வக்கிரங்களை நிகழ்த்தும் திருநாவுக்கரசு போன்றவர்கள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்து மனநல மருத்துவர் அசோகனிடம் விரிவாகப் பேசினோம்.

பொள்ளாச்சி புதிய புகார்.. பாலியல் வன்கொடுமை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: புதிய புகார்!மின்னம்பலம் : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், மேலும் ஒரு பெண் இன்று புகார் அளிக்க முன்வந்துள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகளை ஃபேஸ்புக்கில் நட்பு கொண்டு, அவர்களைத் தனியான இடத்துக்கு வரவழைத்து, மிரட்டி நிர்வாணப்படங்கள் எடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றன திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இளைஞர் மீது புகார் தெரிவிக்க முன்வந்துள்ளார் ஒரு பெண். இது பற்றி, புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், ஒரு இளைஞர் தன்னைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டியுள்ளார் அந்த பெண். “மூன்று வருஷங்களாக நாங்க லவ் பண்ணினோம். என்னை ஆசை வார்த்தை காட்டி, கூட்டிட்டுப் போய், பலவந்தப்படுத்தி தப்பான போட்டோஸ் எடுத்து வச்சு, என்னை மிரட்டி நிறைய காசு பணம் வாங்க ஆரம்பிச்சுட்டான். அதுக்கப்புறம் அவனுக்குத் தேவைப்படுற பொருள், பைக், வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கித் தரணும்னு மிரட்ட ஆரம்பிச்சான். இந்த போட்டோவை எல்லாம் உங்க அப்பாவுக்கு அனுப்பிச்சுருவேன். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல போட்டு உன் மானத்தை வாங்கிருவேன்னு சொன்னான்.

நக்கீரன் கோபால் .. தமிழகத்தின் நாலாவது தூண்!

டான் அசோக் : நக்கீரன் கோபால் அண்ணனின் காணொளியை
இப்போதுதான் பார்த்தேன். பதற்றத்தில் அவர் கைகள் நடுங்குகிறது. கோபம் அவர் குரலில், வார்த்தைகளில் வெளிப்படுகிறது. நக்கீரனும் இல்லை என்றால் தமிழ்நாடு நக்கிக்கொண்டு தான் போகும்.
அரசியலைச் சுத்தப்படுத்த வேண்டும். அரசியல்வாதிகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என பேசுகிறோம், பேச வைக்கப்படுகிறோம். நம் மொத்த கவனமும் அரசியல் மீதுதான் குவிந்திருக்கிறது. ஆனால் உண்மையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியது இந்திய/தமிழக ஊடகங்கள்தான். ஊடகங்கள் எல்லாம் நக்கீரன் போல ஆகும்வரை இங்கே முதல்வர் மரணம் கூட மர்மமாக இருக்கும், 
ரஃபேல் ஊழல் 'தி இந்து'வில் மட்டுமே கரை ஒதுங்கும், 
சமாதியில் நடந்த தர்மயுத்தங்கள் மறக்கப்படும், கொடநாட்டுக் கொலைகள் காணாமல் போகும், 
ஸ்டெர்லைட் கொலைகள் நீர்த்துப்போகும், மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள வைரங்கள் மறையும்,

ஈரான் மனித உரிமை பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டுகள் சிறை

தினமலர் :தெஹ்ரான் : ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ் ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நாட்டின் உயர் நிலைத் தலைவர்களை அவமதித்துப் பேசியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது பெண்கள் உரிமைக்காகவும், மரண தண்டனைகளுக்கு எதிராகவும் மற்றும் மனித உரிமைகளுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நஸ் ரீனுக்கு ஈரான் அரசு தண்டனை வழங்குவது குறித்து உலக அளவில் பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சிஎன்என் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி 2010 ம் ஆண்டும் இதே போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2013 ம் ஆண்டே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

ராகுலை சந்திக்க ஸ்டாலின் மறுப்பு? காங்கிரஸ் கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி.... .தினமலர்

ராகுல்,சந்திக்க,ஸ்டாலின்,மறுப்பு?,காங்கிரஸ் கோஷ்டிகள்,கடும் அதிர்ச்சிசில தொகுதிகளை, தங்களுக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு, தி.மு.க.,விடம், காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால், அதிருப்தி அடைந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று சென்னை வரும், காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் உட்பட, ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து, தி.மு.க., குழுவிடம், காங்கிரஸ் குழு பேச்சு நடத்தி வருகிறது. தாங்கள் விரும்பும், 15 தொகுதிகள் பட்டியலை அளித்து, அதிலிருந்து, ஒன்பதை ஒதுக்கும்படி, காங்கிரஸ் கேட்டுள்ளது. அந்த ஒன்பதில், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள, ஈரோடு, திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆரணி, அரக்கோணம் உள்ளிட்ட, சில தொகுதிகள் இடம் பெறவில்லை. பத்தாவது தொகுதியாக, சிவகங்கை இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலை தயாரித்தது, காங்கிரஸ் கட்சியின், தேசிய அமைப்பு செயலர் வேணுகோபால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த, முன்னாள், எம்.பி., ஒருவரும் என்பதால், அவர்கள் இருவர் மீதும், கோஷ்டி தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

BBC :போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் பறக்க தற்காலிக தடை

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தமது வான் எல்லையில் பறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு இந்தியா இம்முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். முன்னதாக 5 மாதங்களுக்கு முன்பு இந்தோனீசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இதே ரக விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 189 பேரும் இறந்தனர்.
ஐந்து மாத இடை வெளியில் ஒரே ரக விமானம் இரண்டு பெரும் விபத்துகளை சந்தித்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன.

ராகுல் - ஸ்டாலின் ஒரே மேடையில் .. நாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்

தினத்தந்தி :சென்னை நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக சென்னை வருகிறார். இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல்காந்தி கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார். பின்னர், அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, கார் மூலம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்துக்கு அவர் வருகிறார். மாலை 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.

செவ்வாய், 12 மார்ச், 2019

மத்திய அரசுப் பணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழர்கள்!

மத்திய அரசு பணித் தேர்வுகள்
vikatan.com - விஷ்ணுராஜ் சௌ: >ம
த்திய அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை
குறைந்துகொண்டே வருகிறது. சமீபத்தில் தெற்கு ரயில்வே சார்பில் 1,765
பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் வட மாநிலங்களைச் சேர்ந்த 1,600 பேர் தேர்ச்சியடைந்தனர். இதே நிலைதான் வருமான வரித்துறை உள்ளிட்ட இதர மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான
பணியாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகளிலும் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி குறைந்த அளவே இருக்கக் காரணம் என்ன?”

சத்துணவில் ஒரு மாணவருக்குச் செலவிடப்படும் தொகை எவ்வளவு? ஆர்.டி.ஐ. அதிர்ச்சி

சத்துணவுvikatan.com - கு.ஆனந்தராஜ் : அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டம் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்விகளைக் கேட்டிருந்தோம். அதன்படி கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மற்றும் கிடைத்த பதில்களின் விரவங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1. மதிய சத்துணவில் சாப்பிடும் ஒரு மாணவருக்கு ஒதுக்கப்படும் நிதி விவரத்தைத் தரவும் : 
சத்துணவில் சாப்பிடும் ஒரு மாணவருக்கு: பருப்பு உணவுக்கு ரூ.1.40 (Upper Primary) மற்றும் ரூ.1.30 (Primary)
பருப்பு அல்லாத உணவுக்கு ரூ.1.80  (Upper Primary)  மற்றும் ரூ.1.70 (Primary)
உருளைக்கிழங்கு சாப்பிடும் நாள் ஒன்றுக்கு (வருடத்துக்கு 44 நாள்கள்) : ரூ.0.40 (Upper Primary)
வாழைப்பழம் சாப்பிடும் நாள் ஒன்றுக்கு (முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு மட்டும் வாழைப்பழம் வழங்கப்படுகிறது) : ரூ.1.25 (Upper Primary)
2. சத்துணவு சாப்பிடும் மாணவர் ஒருவர் விடுமுறை எடுத்தால், அவருக்கு என ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு வரவு வைக்கப்படும் அல்லது மீதமாகும் உணவு என்ன செய்யப்படுகிறது என்ற விவரத்தைத் தரவும் : 
பள்ளி வேலை நாள்களில் பள்ளிக்கு வந்த உணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே உணவுப் பொருள்கள் எடுக்கப்பட்டு உணவு தயாரிக்கப்படுகிறது.

இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!’


thirunavukkarasu_14312_15313 `இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!' பொள்ளாச்சி கும்பல் விவகாரத்தில் அதிர்ச்சி- வீடியோ `இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!' பொள்ளாச்சி கும்பல் விவகாரத்தில் அதிர்ச்சி- வீடியோ thirunavukkarasu 14312 15313விகடன் : நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் படு பிஸியாக இருக்கின்றன. ஆனால், பொள்ளாச்சியில் பெண்களை பயன்படுத்தி, பணம் பறிக்கும் கும்பலால் பல குடும்பங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.
`இவர்களின் முதல் ஆசை பெண்கள்தான்; பின்னர் ரூட்டை மாற்றினர்!’ பொள்ளாச்சி கும்பல் விவகாரத்தில் அதிர்ச்சி- வீடியோ200 பெண்கள், 50 வீடியோக்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் தொடர்பு என்று இந்த வழக்கின் ஒவ்வொரு தகவலும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றன. இன்றையே தேதிக்கு, சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் இல்லாதவர்கள் மிகவும் குறைவு. அதைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தியிருக்கிறது கைது செய்யப்பட்டுள்ள கும்பல். பொள்ளாச்சி கும்பல் இதைப்பற்றி போலீஸ் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைத்துத் தரப்பிலும் விசாரித்தோம்.
“இந்தக் கும்பல் குறித்து தற்போதுதான் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஊடகங்களில் வெளி வராத செய்திகள் ஏராளம். டிப் டாப்பாக உடை அணிந்துகொண்டு, சரக்கடித்துவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றும் இளைஞர்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தோம்.

தனிச்சின்னம்? விடுதலைச் சிறுத்தைகள் டெல்லியில் முகாம்: அதிருப்தியில் திமுக?

/tamil.thehindu.com :  திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு தனிச்சின்னம் கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாததால் திமுக அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகி, திமுக தோழமைக்கட்சியாக முதலில் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக்களங்களில் ஒன்றாக இருக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதன் பின்னர் இடதுசாரிகள், மதிமுக என பல கட்சிகள் வந்தது. கூட்டணியாக இல்லாமல் திமுகவுடன் கொள்கை அணியாக விடுதலைச் சிறுத்தைகள் விளங்கியது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் பாமக திமுக கூட்டணிக்கு வருவதாக தகவல் வெளியானது.
இதனால் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் தொடருமா? என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கூட்டணி இறுதிப்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்...!tamil.news18.com: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தின் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல்துறை நான்கு பேரை கைது செய்தது. இந்தநிலையில், இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ தமிழ்நாட்டைக் கொந்தளிக்கச் செய்தது.

பொள்ளாச்சி ஜெயராமன் : தேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு திமுகவினர் களங்கம் ஏற்படுத்துகின்றனர்…

Interpol also inquire; Pollachi jeyaraman tension tamil.oneindia.com - alagesan : சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை இண்டர்போல் கூட விசாரிக்கட்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், தங்கள் மீதான புகார்களுக்கு ஆதாரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
 அரசியல் லாபத்திற்காக பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை வைத்து திமுக குற்றம் சாட்டுகிறது; தேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறு பரப்பப்படுகிறது.

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்!

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்!“திமுக மாவட்டச் செயலாளர்கள்,சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு நேற்று (மார்ச் 11) பகலில் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினிடம், ‘திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு எப்போது அறிவிக்கப்படும்?’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘எந்தத் தொகுதிகள் என்பது குறித்து காங்கிரஸ், விசிக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேசிமுடித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டுவிட்டோம். ஆனாலும் மரபுப்படி அனைத்துக் கட்சிகளுடனும் பேசி முடித்த பிறகு தொகுதிகள் எவை என்பது வெளியிடப்படும். இன்று இரவோ அல்லது நாளைக்குள்ளோ வெளியிடுவோம்’ என்று குறிப்பிட்டார். இதன் பிறகு நேற்று மாலை விடுதலைச் சிறுத்தைகளும் அறிவாலயம் வந்து தங்களது தொகுதிகள் இன்னதென்று பேசி முடிவெடுத்துவிட்டுப் புறப்பட்டனர்.
ஆக இப்போது காங்கிரசோடு மட்டும்தான் எந்தெந்த தொகுதிகள் என்பதில் உடன்பாடு காண வேண்டியுள்ளது. திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ்தான் முதன் முதலாக கையெழுத்திட்டு பத்து தொகுதிகளைப் பெற்றது.அதையடுத்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கட்சிகள் எல்லாம் தங்கள் தொகுதிகளை இறுதி செய்துவிட்ட நிலையில் முதலில் வந்த காங்கிரஸ் மட்டுமே இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது.
நாளை ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தை ஒட்டி இன்று காலை குமரிக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு இன்று சென்னை வந்துவிடுகிறார். காங்கிரஸோடு பிணக்கில் இருக்கும் சில தொகுதிகள் பற்றி தீர்வு கண்டுவிட்டால் திமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியல் தயார்தான் என்கிறார்கள்.
திமுக வட சென்னை, தென் சென்னை , மத்திய சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை , கடலூர், பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், கரூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், தேனி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தேனியில் காங்கிரஸ் சார்பில் ஆரூண் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் காங்கிரஸ் கேட்ட தொகுதிகளில் தேனி இல்லை என்கிறார்கள்.

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி கைதாகி விடுதலை

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி கைதாகி விடுதலை பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தினத்தந்தி : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அரக்கர்களை தப்பவிடாமல் அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகள் மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனுமதி வழங்கப்படாத நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி திமுக போராட்டம் நடத்தியது. போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்! பேட்டி கூடாது..

பேட்டி கூடாது: நிபந்தனையுடன் நிர்மலா தேவிக்கு ஜாமீன்!மின்னம்பலம் : கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் 330 நாட்கள் சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முருகன், கருப்பசாமி ஆகியோருக்குக் கடந்த மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

திமுக 2 தேர்தல் அறிக்கைகள் வெளியிடுகிறது.. தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு தினமும் 1 லிட்டர் பால் இலவசம்?

.nakkheeran.in இரா. இளையசெல்வன்:
Anna-arivalayamதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கட்சிகளிடத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் அதிமுக, திமுக கட்சிகள் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
 இது ஒரு புறமிருக்க, ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கைகள் பல தாக்கங்களை ஏற்படுத்துவதால் தேர்தல் அறிக்கைகள் மீதும் அதீத கவனம் செலுத்துகின்றன பிரதான அரசியல்கட்சிகள். இந்த  நிலையில், திமுகவில் 2 தேர்தல் அறிக்கைகள் வெளியிடவிருப்பதாக  தகவல்கள் கசிகின்றன.

நாடாளுமன்ற தேர்தலும், தமிழக சட்டமன்றத்திற்குட்பட்ட 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கின்றன. இதனை மையப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு ஒரு தேர்தல் அறிக்கையும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்கிற தலைப்பில் இடைதேர்தலுக்காக ஒரு தேர்தல் அறிக்கையும் என 2 தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என கட்சி தலைமைக்கு சமீபத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

குவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

Fifty two harassed domestic workers in Kuwait return to Sri Lanka
குவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்இலங்கைநெட் : இலங்கையிலிருந்து பணிக்காக குவைத் நாட்டுக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவித்த 26 பெண்கள் இன்று காலை நாடு திரும்பினர். அவர்கள் இன்று காலை குவைத் நாட்டிலிருந்து யூ.எல் 230 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தனர். இவ்வாறு நாடு திரும்பிய குறித்த பெண்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எள்றும் சம்பளம் பெற்றுக்கொள்ளாது பணிப்புரித்தவர்கள் என்றும் வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Full report பொள்ளாச்சி பாலியல் கொடுமை: நடந்ததும் நடப்பதும்!

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: நடந்ததும் நடப்பதும்!மின்னம்பலம் : பொள்ளாச்சியில் இளம்பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த சதீஷ், பக்கோதிபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகிய நால்வரும் நண்பர்கள். திருநாவுக்கரசு குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணை வீடொன்று சின்னப்பம்பாளையம் ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ளது. ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகும் பெண்களை, இந்த வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் சபரிராஜன். பொள்ளாச்சி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல கல்லூரி மாணவிகளை சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் கும்பல் தனியறையில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோவாக எடுத்து அந்த பெண்களை மீண்டும் மீண்டும் மிரட்டிச் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து

தினகரன் : சென்னை: திமுக மற்றும் விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவானது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்
மின்னம்பலம் :    திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்த கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “காங்கிரஸ், விசிக போட்டியிடும் தொகுதிகள் மட்டும் இன்னும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து இன்று இரவு அல்லது நாளைக்குள் முடிவு அறிவிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

திமுக -- காங்கிரஸ் .. திருச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளால் மீண்டும் சிக்கல்?

tamil.thehindu.com/ மு.அப்துல் முத்தலீஃப் திருச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளை திடீரென திமுக கேட்பதால், மீண்டும் மீண்டும் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளதாக திமுக வட்டார தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொகுதிகளை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இழுபறி நீடித்து வரும் நிலையில் நேற்று இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு ஓரளவு சம்மதத்தை திமுக தெரிவித்ததாக கூறப்பட்டது. தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உறுதிப்படுத்தப்படும் என நேற்று தகவல் வெளியானது.
ஆனால் இன்று பேட்டி அளித்த ஸ்டாலின் இன்று அல்லது நாளைக்குள் அனைத்தும் முடிந்து அறிவிப்போம் என பேட்டி அளித்தார். காங்கிரஸ் தரப்பிலும் மேலிடத்திற்கு அனுப்பி வைத்த லிஸ்ட் அனுமதி கிடைத்தவுடன் அண்ணா அறிவாலயம் செல்லலாம் என காத்திருந்தனர்.

கவிஞர் சல்மா : வேலூரில் தமிழ் மொழியை கற்க மாட்டேன் உருது மட்டுமே கற்பேன் என்பது தவறு.

gukkuu.com :பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமொழியாகக் கூட எழுத முடியாது ஆம்பூரில்  இஸ்லாமியர்கள் போராட்டம்  நடத்தியது அறியாமை என்றும் அவர்களுக்கு தலைவர்கள் தகுந்த விளக்கம் அளித்து புரிய வைக்க வேண்டும் என்றும் தி.மு.க. பிரமுகரான கவிஞர் சல்மா நம்மிடம் தெரிவித்தார்.  தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2006ம் வருடம் தமிழக அரசு சட்டம்  ஒன்றை  அமல் படுத்தியது. சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இத்திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை  எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்,  பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்தும்  விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய் மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.