prakash jp : ஒரு
பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது
ஒரு நாள் உண்மை என
நம்பப்படும் என்பார்கள்.... அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல
வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,
அது "50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது" என்பது..
நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!
கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!
#உயர்க்_கல்வி
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே
தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.
தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி -
17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.
#கல்வி_நிலையங்களின்_தரம்
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க்
பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலின் படி,
முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,
பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ
வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார்,
ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம்
பிடிக்கவில்லை.
முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.
முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;
பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4
#பொருளாதார_மொத்த_உற்பத்தி (GDP)