வியாழன், 27 டிசம்பர், 2018

இரத்த பரிசோதனையில் அரசு அலட்சியம் .. மொத்த செலவே 1000 ரூபாய்தான் ..

மருத்துவர் புகழேந்திஅரசு மருத்துவமனைராம் பிரசாத் -விகடன் : விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனை சென்றுள்ளார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தற்போது அரசு மருத்துவமனை குறித்த அச்சத்தைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி, “சாத்தூரைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணிப்பெண் ரத்த சோகைக்காக, முறையாகப் பரிசோதிக்கப்படாத ரத்தம் அரசு மருத்துவமனையில் ஏற்றியதின் விளைவாக ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் கருவில் உள்ள குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி தொற்றும் மஞ்சள் காமாலையும் ஏற்பட நிச்சயம் வாய்ப்புள்ளது. அவருக்கேகூட மஞ்சள் காமாலை தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது.

புகார் அளித்தவர்களையே கைது செய்த பொன்.மாணிக்கவேல்! இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார்

tamil.thehindu.com : பொன் மாணிக்கவேல், அறநிலையத்துறை அதிகாரிகள் படம்; எல்.சீனிவாசன்
சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில்  இன்றும் டிஜிபி அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்த அதிகாரிகள் 23 பேர், பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிராக டிஜிபியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து. சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல் தனது ஆயிரக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள சிலையை விற்க முயன்றபோது அதை தொன்மைவாய்ந்த சிலை எனக்கூறி வழக்குப்போட்டு சிறையில் அடைத்தனர் என டிஜிபியிடம் புகார் அளித்தார், உடன் சிலையின் உரிமையாளர் தீனதயாளனும் டிஜிபி அலுவலகம் வந்து, பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புகார் மனு கொடுத்தனர்.

மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்: காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு

நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்: காங்கிரஸ், அதிமுக வெளிநடப்புமாலைமலர் :நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு மக்களைவயில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு செய்தது. முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அங்கு முடங்கிவிட்டது. எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

மம்தா பானர்ஜி : திட்டத்திற்கு மாநிலத்தின் நிதி, நற்பெயர் மட்டும் மத்திய அரசுக்கா?:

திட்டத்திற்கு மாநிலத்தின் நிதி, நற்பெயர் மட்டும் மத்திய அரசுக்கா?: மம்தா பானர்ஜி வேதனை மாலைமலர் : திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை மாநில அரசு ஒதுக்கும் நிலையில், நற்பெயர் மட்டும் மத்திய அரசுக்கா? என்று மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெற்கு 23 பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசு 80 சதவிகிதம் நிதியை அளிக்கிறது. ஆனால் மத்திய அரசு திட்டத்திற்கான நற்பெயரை தட்டிச்சென்று விடுகிறது. ஏன் இது நடக்க வேண்டும்?. பழைய பெயர்கள் மாற வேண்டும். பிரதான் மந்திரி கிராம் சடாக் யோஜனா திட்டத்தின் பெயர் பங்க்ளா சடாக் யோஜனா என பெயர் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு எதார்த்தம் தெரியவரும். இதுபோன்ற விவகாரத்தில் நாங்கள் ஒட்டுமொத்த திட்டத்திற்கும் பொறுப்பேற்க இருக்கிறோம்.

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு.. (தேர்தல் வருகிறது ,,,)



தினத்தந்தி : நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி, ஆங்கிலம் தவிர, இனி உள்ளூர் மொழிகளிலும் பொது அறிவிப்பு வெளியிட, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி, ஆங்கிலம் தவிர, இனி உள்ளூர் மொழிகளிலும் பொது அறிவிப்பு வெளியிட, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. விமான பயணிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இனி, தமிழ் மொழி இடம் பெறும். எனவே, மொழி தெரியாத விமான பயணிகளுக்கு, மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம்! அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது!

நக்கீரன் :கடலூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தெய்வநாயகி. இவர் கடலூர்
முதுநகரை சேர்ந்த ஹவுஸ் அகமது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தெய்வநாயகியை கைது செய்தனர். இதேபோல் முட்லூரை சேர்ந்த ஷேக் அமீது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சமாக பெற்ற பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பானுமதி கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் கொடுத்தவர் தற்கொலை முயற்சி!

ரத்த தானம் கொடுத்தவர் தற்கொலை முயற்சி!
வெப்துனியா :விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சமீபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றியதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவருடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க அவர் தற்போது மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் ஏற்றிய அரசு மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அவருடைய தகுதிக்கு ஏற்ப அரசு பணியும் வழங்கப்படும் என்றும் சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார்.
இருப்பினும் அரசு வேலை உள்பட எந்தவித நிவாரணமும் வேண்டாம் என்றும், தனது மனைவிக்கு உயர் சிகிச்சை அளிக்க அரசு வழி செய்தால் போதும் என்றும் அவருடைய கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதிபதியை ஓங்கி அறைந்த வழக்கறிஞர் ..நாக்பூர் நீதிமன்ற வளாகத்தில்

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை ஓங்கி அறைந்த வழக்கறிஞர்zeenews.india.com/tamil : மகாராஷ்டிராவில் நாக்பூரின் நீதிமன்ற வளாகத்தில் ஒரு துணை வழக்கறிஞர், நீதிபதியை ஓங்கி அறைந்துள்ளார்.
இந்த சம்பவம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் ஏழாவது மாடியில் ஒரு லிப்ட் வெளியே புதன்கிழமை மதியம் நடந்துள்ளது,
இதுக்குறித்து சதானி போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் சுனில் பாண்டே கூறியது, மூத்த நீதிபதி கே. ஆர் தேஷ்பாண்டே அவர்கள், நான் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வரும் உதவி வழக்கறிஞர் டி. எம். பராதே என்னை ஓங்கி அறைந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒரு வழக்கில் நான் அளித்த தீர்ப்பின் காரணமாக என்னை தாக்கினார் என்றும் மூத்த நீதிபதி கே. ஆர் தேஷ்பாண்டே கூறியுள்ளார். இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று  என்று காவல் அதிகாரி சுனில் பாண்டே தெரிவித்தனர்.

5000 கோடியை தானமாக எழுதிவைத்த ஹாங்காங் திரை நட்சத்திரம் சவ் யுன் ஃபேட்

THE HINDU TAMIL : உலகைவிட்டுப் போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை என்ற வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தாரோ என்னவோ ஹாங்காங் திரை நட்சத்திரம் சவ் யுன் ஃபேட் தனது சொத்துக்களை தானமாக வழங்க உறுதியேற்றிருக்கிறார். "The Giving Pledge" என்ற உறுதியேற்பு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார்.
"The Giving Pledge" என்ற ஒப்பந்தம் உலகப் பணக்காரர்கள் பில் கேட்ஸ், வாரன் பஃப்ஃபட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. பணக்காரர்கள் ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குவதை ஊக்குவிக்க இது தொடங்கப்பட்டது.தற்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் நடிகர் சவ் யுன் ஃபேட்.
Crouching Tiger, Hidden Dragon தமிழில் பாயும் புலி பதுங்கும் நாகம் என்ற பெயரில் வெளியான படம் இது. உலகளவில் பிரம்மாண்ட ஹிட் அடித்த படம் இது.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஏ பெட்டர் டுமாரோ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன.

கருஞ்சட்டை பேரணி ஒரு ஆர் எஸ் எஸ் பேரணி.. திராவிடத்தை தவிர்த்தது ஏன்? .. சுப்பிரமணியம் சுவாமி விடியோ!

திராவிடம் என்ற சொல்லே அவர்கள் எழுப்பிய  முழக்கங்களில் கிடையாது. திமுகவை குறி வைப்பதாக பாவ்லா காட்டி கொண்டு திராவிட கோட்பாட்டுக்கு எதிரான ஒரு சதியாகத்தான் கருஞ்சடை பேரணி அமைந்திருந்தது  .. திராவிடம் என்பது திமுகவையும் தாண்டியது .
இது முழுக்வும் திராவிட கருத்தியலை எதிர்ப்போரின் நிகழ்ச்சி நிரல் ஆகத்தான்  தெரிகிறது.
திராவிட கோட்பாடே ஒரு ஆங்கிலேயரின் கற்பனை வாதம் என்றுதான் பார்பனீயம் இன்றுவரை கூறிக்கொண்டு இருக்கிறது .
தங்களின் ஜாதி பெருமையை அழிந்து விடாமல் காப்பாற்றவே அப்படி கூறுகிறது.  .
திராவிட தேசத்தில் ஒருபோதும் ஜாதி இருந்ததே கிடையாது . ஜாதி என்ற சொல்லே தமிழில் கிடையாது .
ஆரிய பார்ப்பன பனியாக்களின் ஒரே எதிரி திராவிட கருத்தியல்தான்
கூலி பட்டாளங்களை வைத்து தங்கள் நாடகத்தை தொடக்கி  உள்ளார்கள். பெரியாரை களவெடுக்கும் முயற்சியே இந்த் கருஞ்சட்டை பேரணி . பெரியாரின் அடிப்படை திராவிட கருத்தியலின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்தான் இந்த திருமுருகன் காந்தி போன்றவர்கள் அரங்கேற்றிய திருச்சி நாடகம்.

Kalai Selvi : உண்மையான பெரியாரிஸ்ட்
களே கொஞ்சம் பதில் சொல்லுங்கள் அன்றைக்கு வந்து குறுக்குசால் ஓட்டாதீர்கள் என்று  மல்லுக்கட்டியவர்கள்
பதில் சொல்வார்களா?
கலைஞரும் | மா நன்னன்  மற்றும் சிலர் வணக்கத்துக்குரிய உரியவரில்லாமல் போனதெப்படி?
வீர வணக்கத் தீர்மானங்கள்: 
 1. தமிழ்மொழி, இன, நாட்டுரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும், 1938 - 1965 மொழிப் போராட்டங்களில் உயிரீந்த நடராசன், தாளமுத்து, அரங்கநாதன், சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற மொழிப் போராளியர்களுக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக் களங்களில் இதுநாள் வரை உயிரீந்த கீழ்வெண்மணியின் 44 தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் உயிரீந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஈகியர்களுக்கும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளுக்கு எதிராக மக்கள் நேயத்தோடுப் போராடி உயிரீந்த ஈகியர்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது. 

பாஜகவை நொறுக்கி தள்ளும் 14 கேள்விகள் ... நக்கீரன்

1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?
3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?
5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

அதிமுக அமைச்சர்களை மிரட்டிய நிர்மலா சீதாராமன்

மின்னம்பலம் : ”டெல்லியில் கஜா புயல் நிவாரண
நிதி கேட்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் சந்தித்த அதே தருணத்தில்தான், சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னையில் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்திருக்கிறார்.
டெல்லியில் நடந்த சந்திப்பின் போது, நிதி தொடர்பான பேச்சுக்குப் பிறகு அரசியலும் பேசியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். ‘அதிமுக அரசை எப்போதும் அரவணைத்துப் போகணும் என்றுதான் நாங்க நினைக்கிறோம். ஆனால், உங்களுக்குதான் அந்த எண்ணம் எப்பவும் இல்லை. பல இடங்களில் எங்களைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வெச்சுட்டே இருக்கீங்க... இது உங்க ஆட்சிக்கு நல்லது இல்லை. உங்களுக்கு இப்பவும் எந்த சிக்கலாக இருந்தாலும் எங்ககிட்டதான் ஓடி வர்றீங்க. அது ஆட்சியில் பிரச்னையாக இருந்தாலும் சரி... கட்சியில் பிரச்னையாக இருந்தாலும் எங்ககிட்டதான் வறீங்க. ஆனால், வெளியே பேசும்போது பிஜேபியை பற்றி விமர்சனம் செய்யுறீங்க.
இதையெல்லாம் பிரதமர் ரசிக்கவில்லை. தமிழ்நாட்டில் எதுவாக இருந்தாலும் எங்களைத்தான் கூப்பிட்டுக் கேட்கிறாரு. பார்த்து நடந்துக்கோங்க...’ என்று எச்சரிக்கும் தொனியில்தான் பேசியிருக்கிறார் நிர்மலா.

ஆசிரியர் போராட்டம் .. ஸ்டாலின் நேரில் ஆதரவு ..

minnambalm : "2009 மற்றும் டெட் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புப்
போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த ஆசிரியர்கள், டி.பி.ஐ. வளாகத்தில் மூன்றாவது நாளாக முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இவர்களைச் சந்திக்க இன்று மதியம் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் டிபி.ஐ. வளாகத்திற்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் பார்த்துப் பேசினார். தினகரன் அங்கே இருந்து திரும்பும் அதே நேரம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளே வந்தார்.

இருவரும் எதிர் எதிரே சந்தித்துக் கொண்டார்கள். ஸ்டாலினைப் பார்த்ததும் தினகரன் வணக்கம் சொல்ல... பதிலுக்கு ஸ்டாலினும் வணக்கம் சொன்னார். ‘என்ன பார்த்துப் பேசிட்டீங்களா?’ என ஸ்டாலின் தினகரனைப் பார்த்து கேட்க, ‘பேசிட்டேன்.. நீங்க பார்த்துட்டு வாங்க...’ என தினகரன் சொல்ல... ‘சரி பார்த்துட்டு வரேன்... நீங்க கிளம்பிட்டீங்களா?’ என்று ஸ்டாலின் கேட்டிருக்கிறார். ‘ஆமா பார்த்துட்டேன். கிளம்பிட்டேன்’ என தினகரன் சிரித்தபடியே சொல்ல... தலையசைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஸ்டாலின். அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் திட்டம்? 17 இடங்களில் சோதனை, 10 பேர் கைது.. ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் அமைப்பாம்


BBC : இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற ஒரு குழு தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வெடிகுண்டு செய்து வந்ததாகவும் தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

2வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்-. மயங்கி விழும் ஆசிரியர்கள்..டிபிஐ வளாகத்தில் பரபரப்பு

கைது நடவடிக்கை அடுத்தடுத்து மயக்கம் tamil.oneindia.com - Keerthi.: சென்னை : சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் தமிழக அரசு பள்ளிகளில் 2009ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள்.அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர். 2 அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர். 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்ததால், செவ்வாய் கிழமை 16 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர்.

புதன், 26 டிசம்பர், 2018

கர்நாடகாவில் 15,000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 98 வயது பாட்டி காலமானார்


தினத்தந்தி: "15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்த 98 வயது பாட்டி மரணம்" சமூக பணியாளர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவரான சுலகிட்டி நரசம்மா நேற்று காலமானதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"கர்நாடகாவின் பெங்களூருவில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுலகிட்டி நரசம்மா. இவர் தனது கிராம பகுதியில் இதுவரை 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்துள்ளார்.
இவருக்கு 2018ஆம் ஆண்டு மார்ச் 20ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் தம்பி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டது ஏன்? ஜெயக்குமாரின் ’அடடே’ விளக்கம்!

NDTV : சுனாமி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில்,
சென்னையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காசிமேடு கடலுக்கு படகில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், நடுக்கடலில் பால் ஊற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
ஓ.பி.எஸ் தம்பி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டது ஏன்? ஜெயக்குமாரின் ’அடடே’ விளக்கம்!பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க எந்த கால அளவும் இல்லை.
மறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை, ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா தான் செய்த தவறை உணர்ந்ததால் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சசிகலா குடும்பத்தவர் தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு மனம் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் அதைத் தாண்டி எதையும் சொல்ல முடியாது எனவும் கூறினார்.

திருப்பூர் கிளி ஜோசியரை வெட்டிக் கொன்றவர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண்

திருப்பூர் கிளி ஜோசியரை வெட்டிக் கொன்றவர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண்மாலைமலர் :திருப்பூரில் கிளி ஜோசியரை வெட்டிக் கொலை செய்த நபர், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
TirupurParrotAstrologer சென்னை: திருப்பூர் குமரன் சாலையில் கிளி ஜோசியராக இருந்தவர் ரமேஷ் என்னும் குமார். நேற்று முன்தினம் இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்ததார். அப்போது, பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் ரமேஷை அரிவாளால் வெட்டினார். கீழே விழுந்த ரமேஷை பலமுறை அரிவாளால் வெட்டிய அந்த மர்மநபர், துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றார். அதில் கிளி ஜோசியர் ரமேஷ், பெண்களை வசியம் செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ரத்த தானம் பாதுகாப்பா? என்னென்ன சோதனைகள், எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும், யார் பெறலாம்

 க.சே.ரமணி பிரபா தேவி tamil.thehindu.com/:
 மனித ரத்தத்துக்கு மாற்று எதுவுமில்லை. உடலில் ஓடும் உயிர்த்திரவம் ரத்தம். இதனால்தான் ரத்த தானம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிக்கு பரிசோதிக்காமல் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கனிமொழி :கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது-

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது -  கனிமொழி எம்.பிதினத்தந்தி :சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை, இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
எச்ஐவி குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னும், சுகாதாரத் துறை ஊழியர்களின் கவனக் குறைவால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், ஒரு மாதத்தில் குழந்தை பெற உள்ளார். இந்த வைரஸ் அக்குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கும், அப்பெண்ணின் நலனை பாதுகாப்பதற்கும் அரசு உயரிய சிகிச்சை வழங்குவதோடு, உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். 

இலங்கையில் அதிபர் தேர்தல்: ஜனவரியில் தேதியை அறிவிக்கிறார் சிறீசேனா

Sirisenaதினமணி : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, அவரது இலங்கை சுதந்திர கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அதிபரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதே சமயம், இலங்கை அதிபருக்கான பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்துவதற்கு சிறீசேனா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு கட்சியினரை தயார் செய்யும் வகையிலேயே இந்தக் கூட்டத்தை அவர் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் ஆண்டுக்கு தயாராகும்படி சுதந்திர கட்சியின் நிர்வாகிகளை அதிபர் சிறீசேனா அறிவுறுத்தியிருக்கிறார். மாகாண சபைகளின் தேர்தலும், அதிபர் தேர்தலும் அடுத்த ஆண்டில் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ., இறப்புக்கு தி.மு.க.,தான் காரணம்'

dinamalar :கரூர்: ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு, தி.மு.க., - காங்.,
கட்சிகள் தான் காரணம்,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.கரூரில், அவர் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சோனியா, ராகுலிடம் பேசி, மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு கட்ட முயன்றால், காங்., உடன் கூட்டணி கிடையாது என, ஸ்டாலின் அறிக்கை விட தயாரா?லோக்சபா தேர்தலுக்கு பின், பிரதமரை முடிவு செய்யும் நிலையில், அ.தி.மு.க., இருக்கும். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெற்று சவால் விட வேண்டாம். மேகதாது அணை கட்ட, வரைவு அறிக்கையை ஏற்றது யார் என, என்னுடன் விவாதம் நடத்த அவர் தயாரா?ஜெயலலிதா இறப்பிற்கு காரணம், தி.மு.க.,வினர் போட்ட வழக்குகள் தான். அதற்கு உடந்தையாக, காங்., இருந்தது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான், அவர் இறந்தார். ஜெயலலிதா இறப்புக்கு காரணமான, தி.மு.க., - காங்., கூட்டணியை, தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு

தேர்தல் தோல்வி: அமித் ஷா Vs கட்கரி..

மின்னம்பலம் : “எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் சரிவர செயல்படாததற்கு கட்சியின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும்” என்று அமித் ஷாவை நிதின் கட்கரி மறைமுகமாகச் சாடியுள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று முன்தினம் (டிசம்பர் 24) புலனாய்வுத் துறை அதிகாரிகளின் 31ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். என்னுடைய கட்சியின் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் சரிவர செயல்படவில்லை. அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும், நான்தானே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழி மீது திருச்சி சிவா கோபம்? சமாதானப்படுத்திய ஸ்டாலின்?

  ‘கனி யாருனு நினைச்சீங்க?- சிவாவிடம்  கோபப்பட்ட ஸ்டாலின்மின்னம்பலம : டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான திருச்சி சிவா சற்றே கோபமாகி பாதியிலேயே வெளியேறிவிட்டார் என்ற தகவல் திமுகவில் பரவி வருகிறது.
அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதே இதன் காரணம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பேச வாய்ப்பு அளிக்கப்படாததற்கு என்ன காரணம் என விசாரித்தால் விஷயம் டெல்லி வரை செல்கிறது.
“நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கஜா புயல் பற்றி தான் பேசுவதற்காக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் முன்கூட்டிய அனுமதி பெற்றிருக்கிறார் சிவா. இது தெரியாமல் கனிமொழியும் கஜா பற்றி பேச தயாராகிவிட்டார். கடைசிநேரத்தில்தா சிவா ஏற்கனவே அனுமதி கேட்டிருப்பது கனிமொழிக்குத் தெரிந்திருக்கிறது.

85 நாட்களுக்குப் பின் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்ட அமமுக பிரமுகர்!

Imagens7.tv/ta/tami :   85 நாட்களுக்கு முன்பு மாயமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரின் உடலை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு எலும்புக் கூடாக காவல் துறையினர் கண்டெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேணு. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகரச் செயலாளராக பொறுப்பில் இருந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கோவை நீதிமன்றத்திற்கு
அடிக்கடி சென்று வந்துள்ளார் ஜெயவேணு. அதன்படி கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்ற சாட்சி
விசாரணைக்காக கோவைக்கு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர் தூத்துக்குடிக்கு திரும்பிச் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயவேணுவின் அண்ணன் ஜெய்சுரேஷ் மற்றும் உறவினர்கள் சிலர் ஜெயவேணுவைத் தேடி கோவைக்கு சென்றனர்.