வியாழன், 13 செப்டம்பர், 2018

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கு-

குற்றச்சாட்டு
tamil.oneindia.com - veerakumaran::
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் வசம் உள்ள, நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு வரும் திங்கள்கிழமை விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. எனவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கூடுதல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

SunTV கலாநிதி மாறன் சந்திக்காத வெற்றி ... தோல்விகளே கிடையாது.

இளமை வாழ்க்கைபிற மொழிகளில் சன் நெட்வொர்க்சன் டிவி நிறுவன தலைவர் கலாநிதி மாறனின் வெற்றி கதை..Batri Krishnan<
1991-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி துவங்கப்பட்ட சன் நெட்வொர்க்  27 வருடங்களை நிறைவு செய்துள்ளது
தனிப்பட்ட வாழ்க்கைதமிழ்நாட்டு மக்களைப் பொருத்த வரை இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்று கேட்டாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சன் டிவி தான்
இப்படித் தமிழ் மக்கள் மட்டும் இல்லாமல் உலகத் தமிழ் மக்களிடமும் பிரபலமான சன் நெட்வொர்க் தலைவரான கலாநிதி மாறனின் வெற்றிக் கதை தான்
இன்று நாம் வெற்றிக் கதையில் பார்க்க இருக்கின்றோம்.
காலச் சக்கரம் யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை. அதிலும் காலத்துடன் இணைந்த அதிர்ஷ்டச் சக்கரம் மிகவும் வேகமாகச் சுழலக்கூடியது. இந்த அதிர்ஷ்டச் சக்கரத்தில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். இந்தச் சக்கரத்தின் சுழற்சியில் மேலே இருப்பவர் கீழே வருவதும், கீழே இருப்பவர் மேலே வருவதும் மிகவும் சாதாரணம்.

புதன், 12 செப்டம்பர், 2018

முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு .. சு.சாமியின் ஏற்பாடு ,,, நாமல் ராஜபக்ஷாவும்

மாலைமலர் :இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே
இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
 புதுடெல்லி: பா.ஜ.க. தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் டெல்லியில் இன்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டைவிட்டு புறப்படும் முன் ஜெட்லியை சந்தித்த விஜய் மல்லையா;

.dailythanthi.com/ வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையா
நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சரை சந்தித்தேன் என்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. வங்கி
நிதியமைச்சரை சந்தித்தேன் இன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஜய் மல்லையா செய்தியாளர்களிடம் பேசினார். விஜய் மல்லையா பேசுகையில் “ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது, இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சரை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை செட்டில்மெண்ட் செய்யப்படும் என தெரிவித்தேன்.
இதுதான் உண்மை. இப்போது அரசு தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன். கிங்பிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக ரூ.4000 கோடி முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் செல்கின்றன. இதனை கோர்ட்டு முடிவு செய்யட்டும்,” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருக்கடியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

 The young man who tried to commit suicide by cutting the necknakkheeran.in - ஜெ.டி.ஆர்.: காதல் திருமணம் செய்த வாலிபர் அமைச்சரால் கழுத்தை அறுத்த சம்பவம் கரூர் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கோபிநாத் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கோபிநாத் சேலத்தில் பேக்டிரி கம்பெனியிலும், கோபிக ஈரோட்டில் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இருவரும் தினமும் கல்லூரிக்கும், வேலைக்கு செல்லும் போது தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் வெவ்வெறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி கோபிநாத் - கோபிகா ஆகியோர் திருச்சியில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். வீட்டில் எதிர்ப்பு அதிகமாக இருப்பாதால் இவர் போலிசில் சரண்ட அடைந்து பாதுகாப்பு ஏற்படுத்தி கொள்ளலாம் என்று இதையடுத்து இவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு கரூர் காவல் நிலையத்தில் புதுமண தம்பதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

துரைமுருகனின் காட்டுமிராண்டி வாக்கு மூலம் : ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்

tamiloneindia :நெல்லை: ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
 இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதற்கு இந்தியா முழுக்க பலர் ஆதரவு அளித்தனர். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லையில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பள்ளர் சமுக மக்களின் நிலத்தை விழுங்க கூட்டணி ... ஆண்டாள் கோயில் ஜீயர் , ஜான் பாண்டியன் .. பஜ்ரங் தள் சரவணா கார்த்திக்

Shankar A : இன்று பள்ளர் சமூக தலைவர் ஜான் பாண்டியன், ஆண்டாள்
கோவிலுக்கு சென்று ஜீயரை சந்தித்தார். ஆண்டாளையும் தரிசித்தார்.
பள்ளருக்கு ஆண்டாள் சன்னதியில் என்ன வேலை ?
ஜீயர் மடத்துக்கு சொந்தமாக திருவில்லிப்புதூர் வட்டம், கொளுஞ்சிப்பட்டி கிராமத்தில், 60 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் இருக்கின்றன. அந்த விவசாய நிலங்களில், பள்ளர் சமூகத்தினர் காலங் காலமாக, விவசாயம் செய்து வருகின்றனர். வருடத்துக்கு 10 சதவிகித விளைச்சலை அவர்கள் மடத்துக்கு தந்து விட வேண்டும் என்று ஒப்பந்தம். இது சிக்கலில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
இந்த விளை நிலங்களை தற்போது, தற்போது, வீட்டு மனைகளாக மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது.
இப்படி மாற்றும்போது, அந்த நிலங்களில் ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வரும் பள்ளர்கள், நிலத்தை விட்டுக் கொடுக்கையில் பிரச்சினை செய்யக் கூடாது என்பதற்காகவே இன்று பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த விவகாரத்தை முன்னின்று நடத்துவது மூவர். சோடா பாட்டில் ஜீயர், ஜான் பாண்டியன் மற்றும், முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் இன்னாள் பஜ்ரங் தள் நிர்வாகி சரவண கார்த்திக்.
நல்லா இருக்குடா உங்க கூட்டணி.

மனைவி தலையோடு கணவன் வாக்குமூலம்.. உல்லாசமாக இருந்தாங்க சார்... அதான் சீவிட்டேன்... அவன் ஓடிட்டான் சார்..

Husband's confessionநக்கீரன் :மூட்டையை எடுத்து வந்தார். காவல்நிலையத்திற்கு உள்ளே நுழைந்ததும் அங்கு 3 போலீஸ்காரர்கள் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் அந்த சாக்கை அவிழ்த்து, உள்ளே இருந்த கேரிபேக்கை திறந்து, ''இது என் மனைவி தலை சார்'' என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த போலீசார்,
உள்ளே வை... உள்ளே வை... என்று கூறியதுடன் அதனை அப்படியே ஒரு போலீஸ்கார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம் தரிகரே தாலுக்காவில் உள்ள அஜ்ஜம்பூரா காவல்நிலையத்தில்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை அமைதிப்படுத்திய போலீசார், பின்னர் விசாரித்துள்ளனர். அப்போது அவர், தரிகரே தாலுகா சிவானி கிராமத்தைச் சேர்ந்த தன்னுடைய பெயர் சதீஷ் என்றும், 35 வயதான தான் வாடகை கார் ஓட்டுநர். தனக்கு 28 வயதில் ரூபா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
 ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது என்றும் கூறியிருக்கிறார். உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? ஏன் இந்த மாதிரி செஞ்சீங்க? என போலீசார் கேட்க, நல்லாதான் சார் இருந்தோம்.
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அடிக்கடி கோவமா பேசுவாள். வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுரையெல்லாம் சொல்லுவாங்க. நாளடைவில் தான் எனக்கு தெரிந்தது சுனில் என்ற ஒரு இளைஞருடன் அவளுக்கு பழக்கம் இருந்தது. இதனை கேள்விப்பட்ட நான் ரூபாவை கண்டித்ததோடு, அவள் மீது பாசத்தையும் காட்டினேன்.

கோசாலை மாடுகளை அடிமாட்டு விலைக்கு கொள்ளை அடிக்கும் கும்பல் .. பசு பாதுகாவலர்களும் உடந்தை?

விகடன் :அடிமாட்டு விலைக்கு மாடுகளைக் கேட்டு மிரட்டுகிறார்கள்!" தி.ஜெயப்பிரகாஷ்
கோசாலை பெயரால் கொள்ளை கைவிடப்பட்ட மாடுகளுக்கும், கசாப்பு கடைக்குச் செல்லும் அபாயத்தில் உள்ள மாடுகளுக்கும் மறுவாழ்வு தரும் இடம்தான் கோசாலை. ஆனால், விவசாயிகளிடம் அடாவடி செய்து, நாட்டு மாடுகளை அபகரிக்கும் முயற்சியில் சில தனியார் கோசாலையினர் ஈடுபடுவதாகப் புகார்கள் குவிகின்றன. சமீபத்தில் அப்படியொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது திருப்பூர் மாவட்டம் காடையூரில் இயங்கிவரும் கொங்கா கோசாலை நிறுவனம்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வளையல்காரன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜா. சுமார் 100 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான இவர், 80-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்துவருகிறார். விவசாயம் பொய்த்துப்போனதால், சமீபகாலமாக மாடுகளுக்குத் தீவனம் வாங்கச் சிரமப்பட்டிருக்கிறார். இதை உள்ளூர்க்காரர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட கொங்கா கோசாலை நிறுவனர் சிவக்குமார், அடிமாட்டு விலைக்கு அத்தனை மாடுகளையும் தந்துவிடுமாறு அருண்ராஜாவை மிரட்டியிருக்கிறார்.

எடப்படியை எச்சரித்த பன்னீர் ... ராஜினாமா செய்யவில்லை எனில்? உத்தமன் பன்னீரின் விசுவரூபம்?

வெப்துனியா :ராஜினாமா
செய்யவில்லை எனில்? : முதல்வரை எச்சரித்த ஓ.பி.எஸ்
Edappadi Palanisamy;ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரை பதவியிலிருந்து நீக்குவது நல்லது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரும், உள்ளாட்சி துறை தொடர்பான அரசு ஒப்பந்தங்களை தனது பினாமிகள், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் வேலுமணியும் ஆதாரத்துடன் சிக்கியுள்ளனர். ஆனாலும், தாங்கள் எந்த தவறு செய்யவில்லை என அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்காமலும், அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமலும் முதல்வர் பழனிச்சாமி அமைதி காத்து வருகிறார்.

நித்தியானந்தா தலைமறைவு .. பாலியல் பலாத்கார வழக்கில் .. தேடும் பணி தீவிரம் ..

tamilthehindu :பாலியல் பலாத்கார வழக்கில் கைது உத்தரவு: சாமியார்
நித்யானந்தாவை தேடும் பணி தீவிரம் கர்நாடக மாநிலம் பெங் களூருவை அடுத்துள்ள பிடதியில் நித்யானந்தா தியானபீட ஆசிரம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் பெண் பக்தர்களை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது சீடர் லெனின் கருப்பன் கடந்த 2010-ல் புகார் அளித்தார். இது தொடர்பாக பிடதி போலீஸார் பதிவு செய்த வழக்கு, ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நித்யானந்தா ஆஜராகவில்லை. வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நித்யானந்தா அலட்சியம் காட்டி வருவதாக குறிப்பிட்ட நீதிபதி அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் சந்திரபாபு கூட்டணி போட்டி இடுகிறது,

தெலுங்கானாவில் காங்.,குடன் சந்திரபாபு கூட்டணி
dinamalar.com; ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்,தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.  தெலுங்கானா மாநில அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, கடந்த 6-ம் தேதி அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. . மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இந்தாண்டுஇறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது. தற்போது காபந்து முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார்.இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் காங். மற்றும் இந்திய கம்யூ. என புதிய கூட்டணியை அமைத்துள்ளது. இந்த மூன்று கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது தெலுங்கானா சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

7 தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்களா, மாட்டார்களா? ஆளுநர் அதிகாரங்கள் என்ன தெரியுமா?

மன்னிக்கக் கூடிய அதிகாரம்
ஆளுநர் முன்னிலையில் உள்ள வாய்ப்புகள் tamil.oneindia.com: சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள 7 தமிழர் விடுதலையில் ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடி முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் மற்றும் நளினி ஆகியோரை, விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியது.
பேரறிவாளன் மனு மீது தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவரோடு சேர்த்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 161 விதியின் கீழ் முடிவு செய்துள்ளது.

அழகிரி : கலைஞர் கட்சியில் சேர அழைத்தும் செல்லவில்லை

மதுரை : 'தி.மு.க., தலைவர் கலைஞர்  இருந்தபோது கட்சியில் சேர
அழைத்தும் நான் செல்லவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அவரது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
மறைவிற்கு பின் அவரது நினைவாக சென்னையில் பேரணியை அழகிரி நடத்தினார். நேற்று முன்தினம் அவர் மதுரை திரும்பினார். மாவட்டம் வாரியாக ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். நேற்று தேனி மாவட்டத்தினரை சந்தித்தார். உடன் முன்னாள் துணை மேயர் மன்னன், இசக்கிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர். சந்திப்பின்போது ஆதரவாளர்கள் பேசியதாவது: மாவட்டம் வாரியாக தி.மு.க., அதிருப்தி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்தால் உண்மை நிலை தெரியும். உங்கள் பின் வருவதற்கு தயாராக உள்ளனர். கலைஞர்  பெயரில் பெரிய இயக்கம் துவங்கி, கட்சியில் நம்மை மீண்டும் சேர்க்க வைக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தினர்.

மேற்கு தொடர்ச்சி மலை .. தமிழ் சினிமாவை மலை உச்சிக்கு தூக்கி சென்ற இயக்குனர்

Shalin Maria Lawrence: நான் வைரங்கள் அணிவதில்லை
சிறு வயதில் அதிக பணமில்லாமல் இருந்த பொது வைரங்கள் மேல் அதீத ஆசை இருந்தது.பொருளாதாரம் சரி ஆகி வைரங்கள் வாங்கும் தருவாயில் ஒரு படம் பார்க்க நேர்ந்தது .ஒரே படம்தான் .மொத்த வைர கனவும் க்ளோஸ் .
படத்தின் பெயர் பிளட் டைமண்ட் (ரத்த வைரம் ) ,டிகாப்ரியோ நடித்த படம் .என் வாழ்வில் என்னை பாதித்த முக்கிய படங்களில் முதன்மையானது .நாம் தினந்தோரும் வாழ்வில் அணியும் வைரங்கள் எங்கிருந்து வருகின்றன ,அந்த வைரத்தை யார் எடுக்கிறார்கள் ,எவர் மூலம் எடுக்கிறார்கள் ,எப்படி எடுக்கிறார்கள் ,இபப்டியெல்லாம் செய்வதினால் யார் எப்படி பாதிக்க படுகுரர்கள் என்று வைர ஏற்றுமதியை அக்குவேறு ஆணிவேராக உலகத்திற்கு முதன் முதலில் எடுத்து சொன்ன திரைப்படம் அது .
வைரத்தோடு வைரமூக்குத்தி என்று நாம் நாளுக்கு நாள் சிலாகித்து பேசி ,அலட்டி ,உடம்பில் பகட்டாய் அணிந்துகொண்டு சுற்றுகிறோமே அந்த வைரங்களில் மனிதர்களின் ரத்தம் தோய்ந்திருப்பதை காட்டி கொடுத்த படம் அது .
உலகின் பல இடங்களில் இருந்து வைரங்கள் எடுக்கப்படுகின்ற .ஆனால் பெரும்பாலான இடங்களில் அந்த வைரங்களுக்காக மனித உரிமை மீறல்களை ,குழந்தை தொழிலாளர் முறைகளை ,உள்நாட்டு யுத்தங்களை ,அடக்குமுறையை ,பாலியல் வன்முறையை ,உயிரிழப்புகளை பெரிய வைர கம்பெனிகள் தங்கள் சுயநலத்திற்காக நிகழ்த்துகின்றன .

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

ஹிந்துக்கழே .. பாரதியின் மகா பார்ப்பன வெறி பிரசாரம் .

இக்கட்டுரை ஆசிரியர் இந்த கருத்துக்களை யார் கூறியுள்ளார் என்று வெளிப்படையாக கூறவில்லை. இது பாரதியாரின் பார்ப்பன பிரசாரம் பற்றிய விபரங்கள் :
LR Jagadheesan : பொறுமையாக இறுதிவரை படிக்கவும்
“ஹிந்துக்களை ஒன்றிணைப்பதே மற்ற எதனையும்விட மேலான காரியம்”
”இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.”
”எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.”
”இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன:

1 "வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

வாரிசு சிக்கலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா .. அம்ருதா வடிவில் தொடரும்...

splco.me : இறந்த  பிறகும் வருமான வரிதுறையிடம் வாரிசு விவகாரத்தில் சிக்கிய ஜெயலலிதா மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
 1997-1998-ம் ஆண்டு தனக்கு 4.67 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வருமான வரித்துறையிடம் கணக்கு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் 7.27 லட்சம் ரூபாய் சொத்து வரியாக நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவுக்கு ரூ.3.83 கோடி மதிப்புக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதாகவும், செல்வ வரி கணக்கை ஜெயலலிதா முறையாக காண்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மறு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட தொகையை செல்வ வரியாக செலுத்த ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர்.

தலித் மாணவர்கள் மீது இதர சமுக மாணவர்கள் தாக்குதல். கோவில்பட்டி ..

தலித் மாணவர்கள் மீது தாக்குதல்!மின்னம்பலம் : கோவில்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் தலித் மாணவர்கள் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்துவருகின்றனர். ராஜா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களுடன் படிக்கும் மாணவர்களின் சாதியைக் கேட்டு தெரிந்துகொண்டனர். எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த எத்திலியப்பன், நாயக்கன்பட்டி கிராமங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
அந்தப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் சீனிவாசன், அருண், ராஜேஸ் மற்றும் விஜயபால் ஆகிய நான்கு பேரும் தலித் மாணவர்கள்.

புல்லட் நாகராஜன் வெறும் பினாமியாம் . பின்னணியில் போலீஸ்!.. பாலமுருகன் ...

புல்லட் நாகராஜன் பின்னணியில் போலீஸ்!
மின்னம்பலம்: மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவை வாட்ஸ்அப்பில் மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கடந்த வாரம், தன்னை ரவுடி புல்லட் நாகராஜன் வாட்ஸ்அப்பில் மிரட்டியதாக மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, மதுரை காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதமிடம் புகார் அளித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் தகவல் அளிக்கப்பட்டு, ஒரு சிறப்புக் குழு அமைத்து புல்லட் நாகராஜனைத் தேட ஆரம்பித்தனர் போலீசார்.
தேனி மாவட்டம் மேலமங்களம் மேலத்தெருவில் வசித்து வரும் புல்லட் நாகராஜனின் தந்தை பெயர் சுப்பிரமணி. நாகராஜனின் மனைவி பெயர் சுசிலா. இவர்களுக்கு வினிதா என்ற மகள் உண்டு. புல்லட் நாகராஜனின் அண்ணன் பழனியப்பன், 2006ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 வருடங்களுக்கு மேலாகச் சிறையிலிருந்தவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டபோது பழனியப்பனும் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

ஸ்டாலின் : அடுத்த குறி .. தங்கமணி.. மின் வாரியத்தை போண்டியாக்கி...

ஸ்டாலின் : அடுத்த ‘டார்கெட்’ தங்கமணி
மின்னம்பலம் :மின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் காரணமாக, தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அதிகரித்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்துமாறு தமிழக மின்வாரியத்துக்கு அதிமுக அரசு உத்தரவிட்டிருப்பதாக மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா நேற்று (செப்டம்பர் 10) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

விஜயபாஸ்கர், வேலுமணிக்கு எதிராக ஓ.பன்னீர்.. ஒருவர் மீது ஒருவர் பிராண்டல்

டிஜிட்டல் திண்ணை: விஜயபாஸ்கர், வேலுமணிக்கு எதிராக ஓ.பன்னீர்
 மின்னம்பலம்: தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டுவருகின்றன. அது அத்தனையும் உண்மைக்குப் புறம்பானவை. எந்தத் துறையிலும் தவறு நடப்பதாக எனக்கு தெரியவில்லை. அமைச்சர் வீட்டில் சிபிஐ விசாரணை நடந்தது என்பதற்காக எப்படி அவரைக் குற்றவாளியாகக் கருதமுடியும்? குற்றம் நிருபிக்கப்பட்டால் மட்டுமே அவர் குற்றவாளி. குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக எல்லாம் யார் மீதும் நடவடிக்கை எடுத்துவிட முடியாது...’ - சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் இப்படிப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இது அப்படியே இருக்கட்டும்.... செப்டம்பர் 3ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் ஒரு பகுதியை மட்டும் இங்கே தருகிறேன்.
“துணை முதல்வர் பன்னீர், ‘அம்மா இருக்கும்போது இப்படி ஆதாரம் எல்லாம் தேவையே இல்லை... ஒரு அமைச்சர் மீது புகார் வந்தால் அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குவார். கட்சிப் பொறுப்பையும் பிடுங்குவார்.

தெலங்கானா: பேருந்து பள்ளத்தில் விழுந்து 53 பேர் உயிரிழப்பு

BBC :தெலங்கானா மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று,
செவ்வாயன்று ஜகித்தியால் எனும் நகரின் அருகே பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நகரம் ஹைதராபாத்தில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தப் பேருந்து சனிவாரம்பேட்டா எனும் இடத்தில் இருந்து ஜகித்தியால் நோக்கி சென்று கொண்டிருந்தது.
கொண்டாங்கட்டு எனும் கோயிலுக்கு முந்தைய நிறுத்தத்தில் அந்தப் பேருந்து கீழே விழுந்ததாக சாலைப் பாதுகாப்புக்கான டி.ஜி.பி கிருஷ்ண பிரசாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
86 பேர் பயணித்த அந்தப் பேருந்தில் ஓட்டுநர் ஸ்ரீனிவாஸ் என்பவரும் உயிரிழந்தார். கரீம்நகர் மற்றும் ஜகித்தியால் அரசு மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கிருஷ்ண பிரசாத் கூறினார். வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட தகவலின்படி அந்தப் பேருந்து அக்டோபர் 2007 முதல் பயன்பாட்டில் உள்ளது. அக்டோபர் 3, 2018 அன்று அதற்கு வருடாந்திர பாதுகாப்பு சோதனை செய்யப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் பெட்ரோல் ரூ.55, டீசல் 50 க்கு விற்கமுடியுமாம்..நிதின் கத்காரி

Nitin Gadkari
Petrolவெப்துனியா: இந்தியாவில் பெட்ரோல் மற்றும்
டீசல் விலை நாளுக்கு நாள் விஷத்தை விட வேகமாக ஏறிக்கொண்டே வருகிறது. இப்படியே போனால் இன்னும் ஒருசில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அபாயம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் பொதுமக்கள் பெருந்துயரில் உள்ளனர். நேற்று இதன்காரணமாக நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை பொதுமக்களுகு குறைவாக கிடைக்க எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும் என்றும் இதற்காக 5 ஆலைகளை பெட்ரோலியத்துறை அமைத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் : 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும்

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் - சென்னை ஐகோர்ட் எச்சரிக்கைமாலைமலர் :சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. # சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் மக்களின் நிலை புரியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

புல்லட் நாகராஜன் : போதையில் உளறிவிட்டேன் - சிறையில் போலீசாரிடம் சோகத்துடன் கூறிய புல்லட் ...

போதையில் உளறிவிட்டேன் - சிறையில் போலீசாரிடம் சோகத்துடன் கூறிய புல்லட் நாகராஜன்மாலைமலர் :பெண் எஸ்.பி, இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்து நேற்று தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் திருச்சி சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். BulletNagarajan
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல மங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன் (வயது 53) ரவுடியான புல்லட் நாகராஜன் மீது நகைபறிப்பு, வழிப்பறி, கொலை மிரட்டல், உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதாகி இருந்த ரவுடி நாக ராஜனின் அண்ணனை பரிசோதிக்க வந்த பெண் டாக்டரை அவர் தகாத வார்த்தையில் பேசியதால் அங்கு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக உள்ள ஊர்மிளா, நாகராஜன் அண்ணன் மீது நடவடிக்கை எடுத்தார்.< இது குறித்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்ததும் புல்லட் நாகராஜனிடம் அவரது அண்ணன் தெரிவித்தார். இதனால் புல்லட் நாகராஜன் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா மீது ஆத்திரம் அடைந்தார்.