வியாழன், 31 மே, 2018

அரச பயங்கரவாதத்தின் ஊதுகுழலா ரஜினி?

அரச பயங்கரவாதத்தின் ஊதுகுழலா ரஜினி?மின்னம்பலம்: ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்குப் பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு தலைவர்களும் காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று இறங்கினால், தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பல்வேறு தலைவர்களும் ரஜினியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதன், 30 மே, 2018

ட்ரெண்டாகிய " நான்தாப்பா ரஜினிகாந்த்" தூத்துக்குடியில் கிடைத்த சாத்துப்படி!

மாலைமலர் :ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து
ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணம் - இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #நான்தான்பாரஜினிகாந்த்
பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்
ஆறுதல் கூறிய நிலையில், அங்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேரடியாக மக்களை சந்திக்கும் ஒரு முயற்சியாக இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் ரஜினிகாந்திடம், “யார் நீங்கள்?” என்று கேட்டார்.
சென்னை:  அதற்கு சிரித்துக்கொண்டே, “நான் ரஜினி” என அவர் பதிலளிக்க, “எங்கிருந்து வந்தீங்க?” என அந்த இளைஞர் கேட்க, “சென்னையிலிருந்து” என ரஜினி கூறினார். “சென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா” என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார்.

வேல்முருகன் தேச துரோக வழக்கில் ஸ்டான்லி மருத்துவமனையில் கைது!

Velmurugan arrested for Sedition case tamil.oneindia.com/authors/lakshmi-priya.: சென்னை: தேச துரோக வழக்கில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டார்.
காவிரி போராட்டத்தின்போது உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியை தாக்கி போராட்டம் நடத்தியதற்காக விழுப்புரம் போலீஸார் வேல்முருகனை தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வைகோ கூறியதை ஏற்று அவர் இரு நாட்களுக்கு பிறகு கைவிட்டார்.

7 பேரின் உடல்களுக்கு மறு உடற்கூறாய்வு.. எஞ்சிய 6 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை கூடாது- உயர்நீதிமன்றம்

Chennai HC ordered to not to do post mordem for remaining 6 bodies who dead in firing tamil.oneindia.com/authors/lakshmi-priya.:சென்னை: துப்பாக்கிச் சூட்டில் பலியான 7 பேரின் உடல்களுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் எஞ்சிய 6 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் செய்யாவிட்டாலும் பதப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை செய்வது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாஸ்கர், டீக்காராமன் ஆகிய அமர்வு விசாரணை நடத்தியது.

மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம்: துரைமுருகன் பேச்சு நீக்கம்!.. முதல்வரை துடைப்பக்கட்டை என்று விமர்சிப்பது தவறு.

மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம்: துரைமுருகன் பேச்சு நீக்கம்!மின்னம்பலம்: திமுகவின் மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று(மே 30) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், காவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்த திமுக, அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
திமுக சட்டப் பேரவை கொறடா சக்கரபாணி சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக கூட்டணியிலிருந்து வெற்றிபெற்ற முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கருணாஸும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

குட்கா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.

டிஜிபி குட்கா ராஜேந்திரன்
குட்கா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.மாலைமலர் :குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை:
குட்கா அமைச்சர் நத்தம் விசுவநாதன்
 குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன் அடிப்படையில் குட்கா ஊழல் பற்றி விசாரிக்கும் பொறுப்பை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்றனர். அத்துடன் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்னை வந்து விசாரணையைத் தொடங்கியது.
முதற்கட்டமாக குட்கா ஊழல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை ஆவணத்தை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கியது.  அதனை ஆய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம்; திமுக அரசியல் செய்கிறது: ரஜினி குற்றச்சாட்டு

tamilthehindu : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் சமூக விரோதிகள் ஊடுருவலே,  திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது என நடிகர்  ரஜினி,  குற்றம் சாட்டினார்.
ஸ்டெர்லைட் ஆளைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்தனர்.<> நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்த்தார். மருத்துவமனைக்கு சென்ற ரஜினி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 48 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளித்தார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட எல்லோரையும் போய் பார்த்தேன் அதில் சிலபேர் மனு கொடுத்துள்ளார்கள், நிறைய பேர் பயந்திருக்கிறார்கள், நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது இது மாதிரி சம்பவம் இனி நடக்கவே கூடாது என்று நினைக்கிறேன். நல்ல பிரச்சனைக்காக 100 நாள் போராட்டம் நடத்தினார்கள்.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!மின்னம்பலம்: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய ஜூன் 5ஆம் தேதி வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனமாகக் கருதப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்து, பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இல்லங்களில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.

காணமல் போன தஞ்சை ராஜராஜன் சிலை குஜராத்தில் பிடிபட்டது .. 150 கோடி பெறுமதி ..

தஞ்சை கோயில் சிலைகள் மீட்பு!மின்னம்பலம்: தஞ்சை பெரிய கோயிலிலிருந்து காணாமல்போன ரூ.150 கோடி மதிப்பிலான இரு சிலைகள் குஜராத்தில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலோகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது அண்மையில் தெரியவந்தது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அதில் கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர் சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் ஸ்ரீனிவாச கோபால் ஆச்சாரி மூலமாக சென்னையில் கவுதம் சாராபாய் என்பவருக்கு இரு சிலைகளையும் விற்றது தெரியவந்தது.

தூத்துக்குடியில் யார் நீங்க " என்று ரஜினியை கேட்ட மக்கள் ...

விகடன் :ஜெ.அன்பரசன் தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட
கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் படுகாயமடைந்தவர்களைச் சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (30-05-2018) தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவதாக ரஜினி அறிவித்தார். பின்னர், ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்! ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல?

கேபிள் சங்கர்  :சிறப்புக் கட்டுரை: உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்!சமீபத்தில் இயக்குநர் நண்பருக்குப் போன் செய்தேன். பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்காகப் பாடல் ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது நாளிலேயே பாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாக நிறைய பாடல்களை அவர்களது ஸ்ட்ரீமிங் ஆப்பில் பார்த்தேன். நிறைய உழைத்திருக்கிறார்கள். நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு நல்ல நடிகர், நடிகைகளையும் தெரிவு செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் பாடல்களின் மொத்த தரம் மிகக் குறைவாக இருந்தது.
இயக்குநர் நண்பர்களை அழைத்து, “என்னங்க எல்லாம் நல்லா ப்ளான் பண்ணி மேக்கிங்கில் இவ்வளவு மோசமா கொண்டுவந்திருக்கீங்க?” என்றதுதான் தாமதம். ஆளாளுக்கு ‘ஓ’வென அழாத குறைதான்.
“சார்… ஒரு பாட்டு நல்லா வரணும்னா சிச்சுவேஷனுக்கு ஏத்தபடி ரெண்டு அல்லது மூணு நாள் ஷூட் பண்ணணும். இவங்க கொடுக்குற காசுக்கு ஒருநாள் ஷூட் பண்ணவே முடியாது. இதுல எப்படி குவாலிட்டியும் கொடுக்குறது?”
“ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல பண்றது இல்லையா?”
“நூறு படம் பட்ஜெட்டுல பண்ணா ஒண்ணு தேறுறதே கஷ்டம். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியும்” என்றார்.

ராஜ்பவன்களும் ஆளுநர்களும் தேவையா? கர்நாடகம் தரும் பாடம் .

tamilthehindu : சமீபத்திய கர்நாடகத் தேர்தல் மீண்டும் புது விவாதத்தை
உருவாக்கியிருக்கிறது. ஆளுநரின் அதிகாரம் எவ்வளவு என்பதுதான் அது! பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா ஒரு வாரமே அவகாசம் கேட்டிருந்த நிலையில், அவருக்கு 15 நாட்கள் வழங்கி உத்தரவிட்ட ஆளுநரின் முடிவின் காரணமாகவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டிவந்தது. ஆளுநரின் முடிவானது, விருப்ப அதிகாரம் எனும் தெளிவில்லாத அதிகாரத்தின் நிச்சயமற்றத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எனும் வகையில் இது பாரபட்சமானதுதான். ஆனால், நீதித் துறையின் தலையீட்டைக் கோரும் அளவுக்கு சட்டத்துக்குப் புறம்பானது அல்ல.

நடிகையர் திலகம் - ஜெமினி என்ற அகம்பாவம் பிடித்த ஆணின் சூழ்ச்சிக்கு

ஒருமுறை ஆந்திராவில் பந்த் காரணமாக அனைத்து ஒயின் ஷாப்புகளையும் மூடிவிட நடிகை சாவித்திரி அவர்கள் , மதுவுக்கு அடிமையாகியிருந்த காலகட்டம் அது..மது இல்லாமல் தன்னால் நடிக்க இயலாது கை நடுக்கமாக உள்ளது எப்படியேனும்( தெலுங்கில் :-- நாக்கு மந்து தாகாலி , தம்புடு நூ ஏமி சேஸ்தாவோ நாக்கு தெலியது நாக்கு இப்புடு காவாலி லேக்கபோதே நாவல்ல காது..நூ வெல்லி எக்கடனா தீஸ்கோனி ரா பாபு ) தமிழாக்கம் :- நடிகை சாவித்திரியம்மா அப்பாவிடம் எனக்கு மது வேண்டும் , தம்பி எனக்கு தெரியாது நீ என்னபண்ணுவாயோ , எனக்கு இப்போது மது வேண்டும் அது இல்லாமல் என்னால முடியல , நீ எங்கேனும் போய் அக்காவுக்காக வாங்கிவாபாபு என்று ஓவென கெஞ்சி சிறுபிள்ளையைப்போல அழுது கெஞ்சத் தொடங்கிவிட்டாராம்..!
Savitha Munuswamy : எனது அப்பா வாழ்ந்த வாழ்வின் ஒரு பகுதியை இன்று திரைவடிவில் கண்டு துக்கம் என் தொண்டையை அடைக்க ஒரு கனத்தில் அதை அடக்க முடியாமல் ஓவென வெடித்து அழுதுவிட்டேன்..! தியேட்டரில் அக்கம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களெல்லாம் என்னை திரும்பித், திரும்பி பார்த்தது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அதை பொருட்படுத்தாமல் அழுதுக்கொண்டுருந்தேன்...!

கச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணாநிலையம் அருகே தொடரும் காத்திருப்பு போராட்டம்

Murugan Kanna : சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் முக்குலத்தோர்
சாதி இந்து வெறியர்களால் தாழ்த்தப்பட்ட தேவேந்திர சமுக மக்கள் கொலைவெறி தாக்குதல்களில் இருவர் உயிரழிப்பு 5 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்தவுடன் மதுரை நோக்கி விரைந்தேன். அண்ணாநிலையம் அருகே சில அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த படுகொலை சம்பவத்தை விசாரிக்க சிபிசிஐடி விசாரனை வேண்டும் என்ற ஒரே கோரிக்கையோடு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொன்டு இருந்தனர். நானும் போராட்டத்தோடு கலந்து கொன்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பங்கெடுத்த அமைப்புகளின் கருத்துக்களின் படியும் ஒரு கோரிக்கை மனு ஒன்றை தயார் செய்தோம். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் மதுரையில் போராட்டத்தில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவரோ அல்லது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரோ நேரில் இன்னும் பார்வையிடவில்லை ஆகையால் அவர்களுக்கு தகவலை நடைபெறும் போராட்டத்தை பகிர வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தகலை சொன்னோம். அவரின் தகவல் பரிமாற்றம் மூலமாக சிவகங்கை மாவட்ட டிஆர்ஓ நேரில் வந்து பார்வையிட்டு கோரிக்கை மனுவை பெற்றுக் கொன்டார்.

எவிடென்ஸ் கதிர் : கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கச்சநத்தத்தில் நிகழ்த்தப்பட்ட கொலைகள்!

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கச்சநத்தத்தில் நிகழ்த்தப்பட்ட கொலைகள்!- எவிடன்ஸ் கதிர் : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், பழையனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கச்சநத்தம். இக்கிராமத்தில் வசித்து வருகிற இந்து பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (31) த.பெ.அறிவழகன் மற்றும் ஆறுமுகம் (65) த.பெ.கோனான் ஆகியோரை சுமார் 20 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் நேற்று 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனசேகரன், மலைச்சாமி, சுகுமார், சந்திரசேகர், தெய்வேந்திரன், மகேஸ்வரன் ஆகிய 6 பேருக்கு கடுமையான அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.32/2018 பிரிவுகள் 147, 148, 294(b), 324, 307, 302 இ.த.ச. மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r), (s), 3(2)(va) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

பிரான்ஸ் .ஸ்பைடர் மேன் பாணியில் 4 மாடிக்குடியிருப்பில் பாய்ந்து ஏறி குழந்தைய காப்பற்றிய முகம்மது காசாக்

இவருக்கு கட்டிடங்கள் மீது ஏறிய முன் அனுபவம் எதுவும் கிடையாது. இதுதான் முதல் தடவை. நான்காவது மாடியில் ஒரு நான்கு வயது சிறுவன் தொங்கி கொண்டிருந்த காட்சியை கண்டதும் எதையும் யோசிக்கவே முடியாத ஒரு வேகத்தில் வெறும் கைகளால் அந்த நான்கு மாடிகளின் வெளிப்புற தட்டுக்களை பிடித்து பாய்ந்து ஏறி அந்த நான்கு வயது குழந்தையை காப்பற்றி விட்டார் இந்த முகம்மது கசாக்  என்ற பெயரை கொண்ட மாலி  நாட்டு அகதி ... இவர் இன்று பிரான்ஸ் தேசம் மட்டுமல்ல உலகமே போற்றி கொண்டாடும் கதாநாயகன் .. இவருக்கு பிரஞ்சு பிரஜா உரிமையும் பல பரிசுகளும் வழங்க பட்டன. தீயணைப்பு படையில் உடனேயே வேலையும் வழங்க பட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ராமலிங்க வள்ளளார் போன்ற உள்ளத்தை இந்த மாமது பெற்றுள்ளார்

தினமலர் : பாரீஸ் : அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த சிறுவனை, 'ஸ்பைடர்மேன்' போல செயல்பட்டு காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு குவிகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நான்கு வயதான சிறுவன் தவறி விழுந்து, பால்கனியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான். இதை கவனித்த, மாலி நாட்டைச் சேர்ந்த கசாமா முகம்மது என்ற அகதி இளைஞர், 'ஸ்பைடர்மேன்' போல, கீழிருந்து ஒவ்வொரு மாடியாக ஏறி, தொங்கிக்கொண்டிருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.
இதற்குப்பின் தான், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

விகடன் : பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன்
உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
958 -ம் ஆண்டு 'முதலாளி' என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் முக்தா சீனிவாசன். பின், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ரஜினி நடித்த 'பொல்லாதவன்' படத்தை இயக்கியவரும் இவரே. ஜெயலலிதாவின் 100 -வது படமான 'சூரியகாந்தி' படத்தையும் இவர்தான் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 65 படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றுள்ளார். 'நாயகன்' உட்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.
இயக்குநர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ளார். மூப்பானார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

செவ்வாய், 29 மே, 2018

வேல்முருகன் ஸ்டான்லி மருத்துவமனையில் ... என்ன நடந்தது? ஸ்டாலின் நேரில் சந்தித்தார் ..

Lakshmi Priya - Oneindia Tamil சென்னை: சென்னை ஸ்டான்லி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை திமுக செயல்தலைவர் சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை, விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் அவரை 15 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர்.
வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் வாங்கினார்.

துணை வட்டாட்சியரின் அளவு கடந்த அதிகாரம் .... வீட்டோ பவர் உள்ள ஒரே ஒரு அரச ஊழியர்

இதத் தெரிஞ்சுக்கங்க முதல்ல ..
"அதெப்படி துணை வட்டாட்சியர் ங்கற டெபுடி தாசில்தார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு தரலாம்?அவருக்கு அவ்வளவு அதிகாரமா?"
இதான உங்க கேள்வி ..
"நம் சட்டம் என்ன செல்கிறது என்றால், துப்பாக்கிச் சூடு நடத்த உத்திரவு தரக்கூடிய உயர் அதிகாரிகள் பணியில் பிஸியாகவோ அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையிலோ இருந்தால்,பொது மக்கள் பாதுகாப்பு,சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதற்கடுத்த நிலையிலுள்ள அதிகாரிகள் உத்திரவிடலாம்.
அதன்படி தூத்துக்குடியில் கலவரம் நடந்த அந்த நாளில் தூத்துக்குடி எஸ்.பி கலவரத்தை கட்டுப்படுத்துவதில் பரபரப்பாக இருந்திருக்கலாம்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு அவரது அறைக்குள்ளேயே கலெக்டர் முடக்கப்பட்டதால்,அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல்,யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைமையில் இருந்திருக்கலாம்.

மானாமதுரை கச்சநத்தத்தில் அகமுடையார் ஜாதி வெறியாட்டம்- இருவர் வெட்டி படுகொலை- 10 பேர் படுகாயம்

சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் கால்மேல் கால்போட்டு டீ குடித்தார்கள் என்றே ஒரே காரணத்தால் இதைக் கண்டு பொறுக்கமாட்டாத அகமுடையார் ஜாதி  வெறியர்கள் கும்பலாக கிராமத்திற்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். 6 பேர் உயிருக்கு போராடிவருகிறார்கள்
கச்சநத்தத்தில் போலீஸ் குவிப்பு tamil.oneindia.com - mathi. : சிவகங்கை: மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராம மக்கள் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் சமூகத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.
பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்துள்ளது."இதைத் தொடர்ந்து நேற்று இரவு ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராம மக்கள் மீது தாக்குதல்.."பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்" இருவர் வெட்டி படுகொலை.. படுகாயம் அடைந்த ஆறுமுகம் மற்றும் மருது என்ற சண்முகநாதன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் - திமுக அறிவிப்பு

அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் - திமுக அறிவிப்பு
மாலைமலர் :முதல்வர் பதவி விலகும் வரையில் சட்டமன்றத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்த நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக தாக்கல் செய்தது. அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், ஸ்டாலினின் உரை முடிந்ததும்  திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அந்த உரையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபையில் பங்கேற்க போவதில்லை என மு.க ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்துள்ளது

தேசிய மனித உரிமை ஆணைய குழு - துப்பாக்கிச் சூடு குறித்து நேரடியாக விசாரணை

தூத்துக்குடி வருகிறது தேசிய மனித உரிமை ஆணைய குழு - துப்பாக்கிச் சூடு குறித்து நேரடியாக விசாரணை
தினத்தந்தி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித விசாரணை ஆணையத்தின் 4 அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த தூத்துக்குடி வர உள்ளனர். சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.< துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 அதிகாரிகள் தூத்துக்குடி வருகை தந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடம், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்! ஆய்வு முடிவுகள் - 5

மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்! ஆய்வு முடிவுகள் - 5மின்னம்பலம்:  இந்திய அளவில் பாஜகவும், பாஜகவின் ஆட்சியும் மக்களின் ஆதரவை எந்த அளவுக்குப் பெற்றிருக்கின்றன என்பதை டெல்லியைச் சேர்ந்த சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக் நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவை ABP செய்தி நிறுவனத்துக்காக நடத்திய ஆய்வு முடிவுகளின் மூலம் மின்னம்பலத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இதுவரை மோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வர முடியுமா என்பது பற்றியும், இந்துக்களில் அனைவரும் பாஜகவை ஆதரிக்கிறார்களா என்பது பற்றியும், பாஜக எதிர்கொள்ளும் அதிருப்தி அதன் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்கொள்கிறதா என்பது குறித்தும் நடந்த ஆய்வின் முடிவுகளைப் பார்த்தோம்.

தனிநபர் வருவாயில் இந்தியாவை விஞ்சும் வங்கதேசம்!

இந்தியாவை விஞ்சும் வங்கதேசம்!
மின்னம்பலம:  வருகிற 2020ஆம் ஆண்டில் இந்தியாவை விடத் தனிநபர் வருவாயில் வங்கதேசம் முன்னிலையில் இருக்கும் என்று ஆய்வின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியிலும் சமூக மேம்பாட்டுக் காரணிகளிலும் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவையே விஞ்சும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. 2016ஆம் ஆண்டுடனான மூன்று ஆண்டுகளில் வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போதைய டாலர் மதிப்பீட்டில் 12.9 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், இந்தியாவோ வெறும் 5.6 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிகூட இந்தியாவை விட அதிகமாக (8.6%) இருந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவிகிதமாகும்.

ஸ்டெர்லைட் : மூடுவிழா என்ற நாடகம்

ஸ்டெர்லைட் : மூடுவிழா என்ற நாடகம்மின்னம்பலம்: ரவிக்குமார்
தமிழ்நாட்டில் அரசியலை சினிமா நகல் செய்கிறதா அல்லது சினிமாவை அரசியல் நகல் செய்கிறதா என்று பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மாவட்ட ஆட்சியர் மூடி சீல் வைக்கும் காட்சியும் அதே நேரத்தில் முதலமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது நாம் பார்ப்பது ஒரு சினிமாவா என்ற சந்தேகம்தான் எழுந்தது.
ஆதாரமில்லாத அரசாணை
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அரசாணை ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது ( G.O.(Ms) No 72 dated 28.05.2018 ) அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இன்று அந்த ஆலையைப் பூட்டி சீல்வைத்திருக்கிறார். மக்களின் உணர்வுகளை மதித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தமிழக முதலமைச்சர் கூறியிருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை நாம் வரவேற்கலாம். ஆனால், இது தற்காலிகமான ஒரு தீர்வுதானே தவிர நிரந்தரமானதல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.