வியாழன், 5 ஏப்ரல், 2018

காவிரி போராட்டத்தில் கைதான 85,000 பேர் விடுதலை.. காவல்துறை அறிவிப்பு

Shyamsundar - Oneindia Tamil சென்னை: காவிரி போராட்டத்தில் தமிழகம் முழுக்க கைதான 85,000 பேர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. திமுக அழைப்பு விடுத்து இருந்த இந்த போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டது. சென்னை தொடங்கி குமரி வரை போராட்டம் நடந்தது. கட்சி சாராத பொதுமக்களும் அங்காங்கே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் காலையில் போராட்டம் நடத்திய போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பின் சில மணி நேரம் கழித்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதேபோல் தமிழகம் முழுக்க 10,000 பெண்கள் உட்பட 85,000 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நிறைய கல்லூரி மாணவ, மாணவிகளும் அடக்கம். தற்போது இந்த 85,000 பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது வழக்கு எதுவும் போடப்படவில்லை. காவிரி போராட்டத்த்தில் மொத்தம் 41 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இந்த போராட்டத்தில் பெரிய அளவில் வேறு

மெரீனாவில் போராட்டம் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு .. தொண்டரகள் குவிந்தனர் ,,, ஸ்டாலினை குண்டு கட்டாக தூக்கி கைது


சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின்
சென்னை அண்ணாசாலை மற்றும் மெரீனா கடற்கரையில், மு.க ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதலே திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் மு.க ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இதில் பங்கேற்றனர். பின்னர் ஊர்வலமாக சென்ற எதிர்கட்சியினர் சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து. இதனால் அண்ணா சாலை-வாலஜா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது

முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது  ; 10 லட்சம் பேர் கைது  -மு.க.ஸ்டாலின்தினத்தந்தி :மத்திய அரசு மற்றும் துணை நிற்கும் தமிழக அரசை கண்டித்து திமுக போராடி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. சென்னை:& காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மட்டுமின்றி ரெயில்களை மறித்தும் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.< அவ்வகையில்  சென்னை காமராஜர்  சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.   மறியலில் ஈடுபட்டு கைதான, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.  திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில் தங்கவைக்கபட்டு உள்ளனர்.

நடிகர் சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பு .. 5 வருட சிறை .. ஏனையோர் விடுதலை

Salman Khan has to spend Thursday night in Jodhpur Central Jail Veera Kumar-Oneindia Tamil : டெல்லி:
சல்மான்கான் இன்று ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
1998ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் "ஹம் சாத் சாத் ஹயன்" என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான்கான் அன்று இரவு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. மான்களை நடிகர் சல்மான்கான் சுட்டுக்கொன்றது பற்றி ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. சல்மான்கான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், 5 வருடங்கள் சல்மான்கானுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சல்மான் கானின் ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை விசாரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் வியாழக்கிழமை இரவு சல்மான்கான் செலவிட வேண்டியுள்ளது.
சல்மான் கானுக்கு இக்குற்றத்திற்கான, அதிகபட்ச தண்டனையாக ஆறு ஆண்டுகள் விதிக்க அரசு தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டு வாதிடப்பட்டது. ஆனால் சல்மானின் வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச தண்டனை விதிக்க கேட்டுக்கொண்டதால் 5 வருட சிறை தண்டனையை கோர்ட் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுதும் 144... :கடைசிக் கட்ட ஆலோசனை!

மின்னம்பலம்:
தமிழகம் முழுதும் 144...  :கடைசிக் கட்ட ஆலோசனை!காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு தட்டிக்கழித்துவருவதன் விளைவாக தமிழகம் முழுதும் போராட்டக் களமாகியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது. அந்தக் கூட்டம் முடிந்த நிமிடத்திலிருந்து இன்று ஏப்ரல் 4ஆம் தேதிவரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் தினந்தோறும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில்தான் தமிழக முதல்வருக்கு இன்று முற்பகல் வாக்கில் டெல்லி தரப்பிடமிருந்து வந்த தகவலும், அதன் பின் முதல்வர் மேற்கொண்ட ஆலோசனைகளும், இன்று இரவு முதல்வரை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதும் அதிகார வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி நாம் விசாரணை நடத்திய தகவல்களின் தொகுப்பு இதோ...

போர் வரும் தயாராக இருங்கள்.. அன்று ரஜினி கூறியது ... .இன்று முழு தமிழகமும் போர்க்கோலம் .. எப்ப வருவாரோ?

mathi. Oneindia Tamil : சென்னை: அன்றாட பிரச்சனைகளுக்கெல்லாம் கருத்து
சொல்ல முடியாதுன்னு எத்தனைவாட்டி சொல்றது... போர் வரும்போது பார்க்கலாம்... என 'முத்துகளை' உதிர்த்த 'முரட்டு காளை'தான் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என கடந்த காலங்களில் கூறியிருந்தாலும் வராமல் பம்மிக் கொண்டிருந்தார். தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார். அத்துடன் எம்ஜிஆர் போல நல்லாட்சி தருவேன் என அடித்துவிட்டார். ஆனால் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு கருத்து சொல்ல மாட்டார்; போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தவர் ரஜினிகாந்த்.
இப்போது தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் போராட்டங்கள்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4 நாட்களாக தமிழகத்தின் அத்தனை சாலைகளும் ரயில் பாதைகளும் மறிக்கப்படுகின்றன. திரும்பிய திசையெல்லாம் மத்திய அரசு அலுவலகங்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளன.
வீதிக்கு வராத கட்சிகளே தமிழகத்தில் இல்லை.. உரத்து முழக்கம் எழுப்பாத இயக்கங்களே இல்லை.. ஆளும் அதிமுகவும் கூட உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி விட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நம்பிக்கை வாக்கெடுப்பில் பெருவெற்றி ஆதரவாக 122,, எதிராக 76 எம்பிக்கள்


கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை
இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பிரதமருக்கு எதிராக மகிந்தாவின் கட்சியும் அதிபர் மைத்திரிபாலாவும் கூட்டாக இந்த தீர்மானத்தை கொண்டுவந்தனர். அதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த மாதம் 21ம் திகதி சபாநாயகரிடம் தரப்பட்டது. அதன்மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் 46 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
திரு.சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் மலையக தமிழ் எம்பிக்களும் இஸ்லாமிய எம்பிக்களும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது 

புதன், 4 ஏப்ரல், 2018

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ... பொய் சத்தியம் பண்ணி அரசு நிலத்தை திருடிய பார்ப்பான்

திருச்சிபெரியார்சரவணன் : யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா?
மோதலின் பின்னணி என்ன?
"சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்" என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா.
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா இவருடைய மாமா ஆவார்.
1979 ல் வழக்கறிஞர் ஆக வாழ்க்கையை ஒடிசாவில் துவக்கி, மத்திய பிரதேசம், பீகார் என தலைமை நீதிபதி பொறுப்புகளை வகித்தவர்.
தீர்ப்புகளில் பண்டைய இலக்கியம், ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றிலிருந்தும் கருத்துக்களை சொல்லி தீர்ப்பை வழங்கும் பக்திமான்.
1985 ல், "நான் ஒரு பிராமணன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவொரு நிலமும் இல்லை " என உறுதிமொழி கொடுத்து,,,,
இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஓட்டியபொழுது, கட்டாக் மாவட்ட நீதிமன்றம் இவருடைய மோசடியை கண்டு பிடித்து ரத்து செய்த பின்னரும் நிலத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நீதிமான் ;
2012 CBI விசாரணை போதுதான் இந்த நில மோசடி அம்பலமானது.
அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ பூவ் தற்கொலை கடிதத்தில் தீபக் மிஸ்ரா பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது.

வன்கொடுமை சட்டத்தை செயலிழக்க வைத்த உச்சி குடுமி நீதிமன்ற தீர்ப்பு


பட்டியலின மக்களின் மீதான வன்கொடுமைத் தடைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளது சமீபத்திய உ நீ மன்றத் தீர்ப்பு
அதாவது
= புகாரின் அடிப்படையில் கைது என்பது கட்டாயமல்ல
= குற்றம் சுமத்தப்படுமுன் அரசு ஊழியர்கள் என்றால் தலைமை அதிகாரிகளின் முன்னனுமதியோ, பொது மக்களாக இருந்தால் அந்தப் பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் முன்னனுமதியோ பெற்றபின்னரே புகார் அளிக்க முடியும்
இப்படி ஒரு தீர்ப்பு ஏனென்றால் அப்பாவி சாதியவாதி ஒரு குற்றமும் செய்யாமல் பாதிக்கப்படக் கூடாது.
ஆஹா, என்னே நீதிபதிகளின் கருணை!

இந்தச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் உரிய நிவாரணம் பெற்றவர்கள் வெறும் பத்து சதவீத்துக்குக் கீழ்தான்
மற்றவை-
சாட்சி இல்லை,
குற்றம் சுமத்தப்பட்ட நபர் காணவில்லை

NoIPLTamilNadu ,, ஐ.பி.எல். கூடாது:.. காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை . போர்க்கொடி !

BBC :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் வேண்டாம் என்பதைக் குறிக்கும் #NoIPLTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிரெண்டாகி வருகிறது. சமூக ஊடகங்களில் இதற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் போட்டியை புறக்கணித்தால் சேப்பாக்கம் மைதானம் காலியாக இருக்கும் என்றும், தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு காரணம் தெரிய வந்தால் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் இப்பிரச்சனை சின்ன தியாகத்தால் சென்று சேர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளார். e>ஒரு ஐம்பதாயிரம் பேர் செய்யக்கூடிய இந்த தியாகத்தால் ஏழு கோடி பேர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், இது மொழிப்பிரச்சனை அல்ல வாழ்வுப் பிரச்சனை என்றும், விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.

திமுகவின் ஆரம்பகால தலைவர் மாதவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

செ.மாதவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!மின்னம்பலம்: மறைந்த முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மாதவன் மறைவுக்கு வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியுமான செ.மாதவன் உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 3) சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். திமுக சார்பில் 1962 ஆம் ஆண்டு அப்போதைய திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்டு, திமுகவின் முதல் 15 எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக சட்டமன்றம் சென்றவர் செ.மாதவன். 1962, 1967, 1971, 1984 என 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
இதில் 1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக சார்பில் வென்றார். அதிமுகவின் பொருளாளராகவும் பதவி வகித்த மாதவன், எம்.ஜி.ஆர் காலமான பின் மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார். 1990 முதல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

கனிமொழி: ஆதார் .. மக்களின் பயோ மெட்ரிக்.. உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்க மத்திய அரசு என்ன ..

மின்னம்பலம்: ஆதார் தகவல்கள் கசிந்து வருவதாக ஊடகங்களில் பரபரப்பாக
விவாதிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி மத்திய அரசு நாடாளுமன்ற மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளது.
திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி, "ஆதார் எண் வழங்கப்படுவதற்காகச் சேகரிக்கப்பட்ட பொதுமக்களின் பயோ மெட்ரிக் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் சமீபத்தில் விதிமுறைகளைமீறி கசிந்ததாகத் தகவல் வெளியானது. எனவே ஆதார் தகவல்கள் கசிவதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? என்று எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

நாளை திமுக முழு அடைப்பு போராட்டம் ..அனைத்து வணிகர் சங்கங்களும் , கட்சிகளும் ஆதரவு ....

Mohan Prabhaharan - Oneindia Tamil சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக அழைப்பு விடுத்துள்ள நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
Trade Unions supporting DMK Strike Tomorrow இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்து இருந்தது.
 இதற்கு மதிமுக, விசிக,காங்கிரஸ், பாமக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும், நாளைய போராட்டத்தில் தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ள நிலையில், வணிகர் சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆசிரியையுடன் லெஸ்பியன் உறவு ... அனுமதிக்காத தாயைக் கொன்ற மகள்! டெல்லியில் ...

தினமணி :டெல்லி கவி நகர் பகுதியில் வசிக்கும் ராஷ்மி ராணா எனும் 21 வயதுப் பெண் கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று தனது ஆசிரியையும், லெஸ்பியன் துணையுமான நிஷா கெளதமாவுடன் இணைந்து தன் அம்மா புஷ்பா தேவியை இரும்புத் தடியால் அடித்துக் கடுமையான காயங்கள் ஏற்படுத்தி இருக்கிறார். இது குறித்து ராஷ்மியின் தந்தை சதிஷ் குமார் சம்பவம் நடந்த அன்றே ‘தன் மனைவியை மகளும் அவளது லெஸ்பியன் துணையும் இணைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தாக்கியதாக் கூறி கவி நகர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்திருக்கிறார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தேவி மரணமடைந்ததைத் தொடர்ந்து இன்று ஆசிரியை நிஷாவும், தாயின் மரணத்துக்குக் காரணமாகி விட்ட மகள் ராஷ்மியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
காவல்துறை விசாரணையின் போது கொலைக்கான தூண்டுதலாக ராஷ்மி சொன்ன காரணம்;

ஈராக் ... 39 இந்தியர்களும் தலையில் சுட்டு கொல்லப்பட்டனர் ... ஐ எஸ் கொடுரம்

நக்கீரன் :ஈராக்கில் கடத்திக் கொல்லப்பட்ட இந்தியர்கள் தலையில் சுடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் கடந்த 2014ஆம் ஆண்டு 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் என்னவாயினர் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில், இந்திய அரசு அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டது. பஞ்சாப் மாநில அமிர்தசரஸுக்கு கொண்டு வரப்பட்ட 7 பேரின் இறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அவர்கள் ஏழு பேருமே தலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரிப் போராட்டங்கள்: கேட்டறிந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா !

காவிரிப் போராட்டங்கள்: கேட்டறிந்த தலைமை நீதிபதி!
மின்னம்பலம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரித் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இது குறித்துத் தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டறிந்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கட்சிகளும் அமைப்புகளும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. நான்காவது நாளாக இன்று போராட்டம் தொடர்ந்துவருகிறது.
திமுக போராட்டம்
சென்னை ஆலந்தூரில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தி.நகரில் இளைஞரைத் தாக்கிய போலீஸ் ,, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம்

tamilthehindu : தி.நகரில் இளைஞரும் அவரது தாயாரும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து விளக்கம் அளிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை வடபழனியில் வசிப்பவர் பிரகாஷ் (21) தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இவரது தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். சகோதரி படித்து வருகிறார்.

ஸ்டெர்லைட்,,, தூத்துக்குடியில் 5,000 மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்...

DMK doing protest against Sterlite in Tuticorin Shyamsundar- Oneindia Tamil: தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 52 ஆம் நாளாக மக்கள் போராடி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக களம் கண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடியின் பிற கிராம மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி சிதம்பரம் நகரில் திமுக கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் 5,000க்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கிறார்கள்.
திமுக கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று பேசியுள்ளனர்

காவிரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம் ,, மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்மாலைமலர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று 4-வது நாளாக தி.மு.க.வினர் சாலை மற்றும் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #CavuryIssue #DMKProtest காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம் சென்னை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று 4-வது நாளாக தி.மு.க.வின் மறியல் போராட்டம் நீடித்தது. சென்னை கொரட்டூர் மற்றும் திருவொற்றியூரில் திமுகவினர் ரெயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை ஆலந்தூரில் மா.சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மற்றும் அதன் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மற்றும் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்

திமுக + காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தொகுதி ஒதுக்கீடுகளில் அதிருப்தி?.


தினமலர் :லோக்சபா தேர்தலில், நான்கு; சட்டசபை தேர்தலில், 24 தொகுதிகளை மட்டும், காங்கிரசுக்கு ஒதுக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் தெரிய வந்ததும், அதிர்ச்சி அடைந்த, தமிழக காங்கிரஸ் தலைமை, இதுபற்றி விவாதிக்க, செயற்குழுவை கூட்டியுள்ளது. சென்னையில், வரும், 7ல் நடக்கும் அவசர செயற்குழுவுக்கு பின், தி.மு.க., கூட்டணிக்கு, காங்கிரஸ் முழுக்கு போடலாம் என, கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரம் கூறியதாவது: தமிழக காங்., கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், வரும், 7ம் தேதி, சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. மாநில தலைவர், திருநாவுக்கரசர் தலைமையில் நடக்கும், இக்கூட்டத்தில், தி.மு.க., உறவு குறித்து, விவாதிக்கப்பட உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு, ஐந்து தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முன்வந்ததால், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தது.

கமலஹாசன் டிவிட்டரில் முன்னணியில் நிற்பதற்கு கடும் முயற்சி ... விளம்பரத்தால் ஆட்சியை பிடிக்கமுடியுமா?

ஸ்பெஷல்: கமலின் ‘ட்விட்டர் நிதி மய்யம்’ தாக்குப்பிடிக்குமா?மின்னம்பலம் : தமிழ்நாட்டின் புதிய அரசியல்வாதிகளாக, நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த்தை முந்திக்கொண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டார். மதுரையில் பொதுக்கூட்டம், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் என ஒரு ரவுண்டை முடித்துக்கொண்டு, அடுத்ததாக இன்று (04.04.18) திருச்சியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். நேற்று இதற்காக ரயில் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார்.
எம்ஜிஆர், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் அவர் அரசியல் ரீதியாக மேற்கொண்ட முதல் பயணம் மதுரை. விமானத்தில் பயணித்து வந்த எம்ஜிஆர் மதுரைக்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்தார். சென்னையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து பயணமானார் எம்ஜிஆர். காலை 7 மணிக்கு மதுரைக்கு வழக்கமாக சென்று சேர வேண்டிய ரயில் 32 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தடைந்தது. வழி எங்கும் மக்கள் எம்ஜிஆர் அவர்களைப் பார்க்க ரயிலை மறித்ததால் இந்த தாமதம். கட்சி தொடக்க விழாவுக்கு மதுரையைத் தேர்வு செய்த கமல்ஹாசன் எம்ஜிஆர் பாணியில் ரயில் பயணத்தை மேற்கொள்ளவில்லை.

காவிரி ..முழு அடைப்புக்குப் பெருகும் ஆதரவு!

முழு அடைப்புக்குப் பெருகும் ஆதரவு!மின்னம்பலம்: திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நாளை நடத்தவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக நாளை (5ஆம் தேதி) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இதற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு தரப்பிடமும் ஆதரவு கோரியிருந்தார். இதையடுத்து காவிரி உரிமைகளைப் பெறுவதற்கு அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி முழு அடைப்புக்கு பாமக ஆதரவு தெரிவித்தது.

காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் தரப்புடன் மோதிய காங்கிரஸ் திரவியம் தரப்பு ... கிராஸ் பயரில் சிக்கிய திமுக

காங்கிரஸார் மண்டையை உடைத்த திமுகவினர்!மின்னம்பலம்: வடசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக ஏப்ரல் 5ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் பங்கெடுக்கவுள்ளன. அதற்கு முன்னதாக, திமுக சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக வடசென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

IndiaBetraysTamilNadu ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்கில் இருந்து நீக்கியதா ட்விட்டர்?


BBC : சாய்ராம் ஜெயராமன்;
'தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தியா' என்று பொருள் தரும் #IndiaBetraysTamilNadu என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து பல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததால் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.< இந்நிலையில் திடீரென அந்த ஹேஷ்டேக் ட்விட்டரின் ட்ரெண்டிங்கிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறி அதற்கான காரணம் குறித்தும் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதம் நடந்துவருகிறது. /> காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் பிரச்சனை, நெடுவாசல், வரிவிதிப்பு மற்றும் மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு போன்ற பல பிரச்சனைகளில் பாஜகவின் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகக் குறிப்பிடும் பதிவுகள் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பதிவிடப்படுகின்றன. தமிழகம் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிருந்தும் கடந்த சில நாட்களாக பதிவுகள் இடப்படுகின்றன.

நீதிபதி லோயா பின் தலையில் தாக்கப்பட்டார்.. உடற்கூறு அறிக்கை...

மாரடைப்பு மரணம் Shyamsundar : tamiloneindia:
நீதிபதி லோயா பின் தலையில் தாக்கப்பட்டார்.. உடற்கூறு அறிக்கையில் மறைக்கப்பட்ட உண்மை! …. கிளம்பிய புதிய சர்ச்சை ….
டெல்லி: நீதிபதி லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மையான விஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு இருந்ததை மருத்துவர் வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவை முக்கிய குற்றவாளியாக கருதி சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் அமித்ஷா ஒவ்வொரு முறையும் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த லோயா உத்தரவிட்டிருந்தார்.
இது பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.