புதன், 28 மார்ச், 2018

தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை ஏடிஜிபி சைலேந்திரபாபு:உட்பட 10 போலீசார் நீந்தி கடந்தனர்

tamilthehindu :எஸ். முஹம்மது ராஃபி - ராமேசுவரம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்த ஏடிஜிபி சைலேந்திர பாபு மற்றும் நீச்சல் வீரர்கள். இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை தமிழக காவல் துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு 12 மணி நேரம் 24 நிமிடங்களில் நீந்திக் கடந்தார்.
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் பகுதி பாக் ஜலசந்தி கடல் ஆகும். ராமேசுவரம் தீவும், அதைத் தொடர்ந்துள்ள 13 மணல் திட்டுகளான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடல் பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் நீரோட்டங்கள் நிறைந்தது. பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்கள், கடல் பாம்புகளையும் உள்ளடக்கிய கடல் பகுதியாகும்.

திருப்பதி உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது தேவஸ்தானம்!

தினமலர்:தினமலர் :திருப்பதி: திருமலையில், உற்சவமூர்த்தி சிலை, கீழே விழுந்ததில் சேதம் அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது. திருப்பதி, திருமலையில், தினசரி காலை, 10:00 மணிக்கு, கல்யாணோற்சவ சேவை நடப்பது வழக்கம். அதற்காக, ஏழுமலையான் கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி சிலைகள், அருகில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த சிலைகளை, அர்ச்சகர்கள், தங்கள் கைகளால் சுமந்து செல்வர்; பின், இரவில், இந்த சிலைகள் மீண்டும் ஏழுமலையான் கருவறைக்குள் வைக்கப்படும்.
 நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலைப்பஸ்வாமி சிலை, கல்யாணோற்சவத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. கல்யாணோற்சவம் முடிந்த பின் சிலைகள் மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, பூதேவி சிலை, அர்ச்சகர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து, சிலையின் கிரீடம் சேதமடைந்தது.

குக்கர்.. உச்ச நீதிமன்ற தடை வாங்கிய எடப்பாடி-ஓபிஎஸ் : காவிரி விஷயத்துக்கு?..

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வெப்துனியா :குக்கர் சின்னத்திற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோர் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏன் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.தினகரன் தரப்பிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் - மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறதா வழக்கு?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் - மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறதா வழக்கு?
மாலைமலர் :மாநிலங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை உச்ச நீதிமன்றம் தீர்க்க வேண்டும் என சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் உருவாகும் என தெரிகிறது.
#CauveryManagementBoard  புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தாமதப்படுத்தலாம் என்று பேசப்பட்டது. ஆனால், தேர்தலுக்கும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கும் தொடர்பு இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் தெளிவுபடுத்திவிட்டார். உச்ச நீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிய உள்ள நிலையில், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் மைதானத்தில் ஆண் பெண் தனி இருக்கைகள் கிடையாது,... பெண்கள் வெட்கம்,அச்சம் தொலைத்தவர்களாக...

Shalin Maria Lawrence : Fully Filmy என்கிற ஒரு youtube சேனல் ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறது. அதில் வீட்டில் கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட பெண் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்க்க சென்று எப்படி தன் வாழ்க்கை மாறியது என்று கூறுவதுபோல் உள்ளது அந்த காணொளி.
அந்த காணொளி முதலில் அபத்தமாக தோன்றினாலும் அதில் ஒரு அசைக்கமுடியாத உண்மை இருக்கதான் செய்கிறது என்பதனை மறுக்க முடியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சை பார்த்தால் பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள் என்பது அபத்தம் ஆனால் கிரிக்கெட் என்கிற விளையாட்டு இந்திய பெண்களின் வாழ்க்கையை பாதிக்கவில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.
இந்த மாநிலத்தில் உள்ள அனைவர்களுக்கும் பெரியாரும் அம்பேத்கரும் படிக்க வாய்பிருந்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.அப்படி இருக்க பெண் விடுதலை ,பெண் விடுதலைக்கான தூண்டுதல் வேறு இடங்களில் இருந்து தாராளமாய் கிடைக்கலாம்.
பெரியாரை படித்தால் பெண் விடுதலை நிச்சயம் அதில் துளியும் மறுப்பில்லை ஆனால் அவரை படிக்க வாய்ப்புகிடைக்காதோர் வேறு வழிகளில் தங்களுக்கான தனிமனித விடுதலையை நோக்கி பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
போராளிகளுக்கு இது தவறாக தோன்றலாம் ஆனால் சாமானியர்களுக்கு இது நன்றாக புரியும்.
எப்பேர்ப்பட்ட பழமைவாத குடும்பமாக இருந்தாலும் சரி கிரிகெட் என்று வரும்போது பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து தான் ஆகிறார்கள்.

Google Street View தெருக்களை 3 டி யில் கூகிள் ஸ்ட்ரீட் வியு ... அனுமதிக்க இந்தியா மறுப்பு ... மக்களை இருட்டில் வைத்திருக்கும் கபட நோக்கம் ?


ஏன் அனுமதிக்க மறுக்கிறது இந்திய அரசு?மின்னம்பலம்: கூகுள் நிறுவனத்தின் ‘ஸ்ட்ரீட் வியூ’ என்ற வசதியை இந்தியாவில்
செயல்படுத்த இந்திய அரசாங்கம் அனுமதி தர மீண்டும் மறுத்துள்ளது.
உலகின் முன்னணி தேடுதளமான கூகுள், பல்வேறு தகவல்களைப் பயனர்களுக்கு வழங்குவதில் முதலிடம் பெற்றுள்ளது. ஓர் இடத்தில் இருந்துகொண்டே உலகின் பல்வேறு இடங்களைக் காண்பதற்கும் கூகுளில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் புகைப்படங்களாகப் பயனர்களுக்கு பல்வேறு இடங்களைக் காண உதவிபுரிந்த கூகுள் நிறுவனம், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ‘ஸ்ட்ரீட் வியூ’ என்ற முறையை அறிமுகம் செய்தது.
ஓர் இடத்தின் 360 டிகிரி புகைப்படத்தையும் பயனர்கள் இதன்மூலம் காண இயலும். அதுமட்டுமின்றி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களை இதன்மூலம் பார்க்க வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஸ்ட்ரீட் வியூ வசதிக்காகப் பல்வேறு இடங்களுக்குக் கூகுள் நிறுவனத்தின் 360 டிகிரி கேமரா கொண்ட கார் ஒன்று சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் மட்டுமல்ல இலங்கையிலும் கூட  இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த கூகுள் இந்தியாவிலும் செயல்படுத்த கடந்த 2015ஆம் ஆண்டே அனுமதி கோரியது.

கிரண் பேடி ஆந்திரா மாநில ஆளுனராகிறார் ? சந்திரபாபு நாயுடுவுக்கு தலையிடி கொடுக்க ஆலோசனை

வெப்துனியா :ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா
உறுவானது. ஆந்திரா பிரிக்கப்பட்ட சமயத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், மத்திய அரசு சொன்னதை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதால் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களவையில் இருந்து தனது எம்பிக்களை ராஜினாமா செய்ய வைத்தார். அதன் பின்னர் பாஜகவுடனான தெலுங்கு தேச கட்சியின் கூட்டணியையும் உடைத்தார். இதன் பின்னர் வெளிப்படையாக மத்திய அரசை விமர்சித்து வந்தவர், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவந்தார். நேற்று ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சி எம்பிக்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால், மத்திய அரசு சிக்கலில் சிக்கி உள்ளது. எனவே, இதற்கு ஒரு முடிவு கட்ட கிரண் பேடி ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை அயோக்கியன் என்று ஈரோட்டு மாநாட்டில் தமிழன் பிரசன்னா....

தமிழன் பிரசன்னாவின் தொலைபேசி இலக்கத்தை எச் ராஜா தனது ட்வீட்டரில் வெளியிட்டு அர்ச்சனை செய்யுமாறு வேண்டிகொண்டார் . அதன் காரணமாக ஏராளமான சங்கிகள் பிரசன்னாவுக்கு கொலை மிரட்டல்கள் விடுவதாக தெரிகிறது
Don Ashok : திமுக மேடையில் தமிழன் பிரசன்னா மோடியை அயோக்கியன்
எனச் சொன்னபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. என்ன இருந்தாலும் பிரதமர் இல்லையா? ஆனால் நாம் சில விஷயங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
1) நாட்டுக்கு பெரும் பொருள் சேதமும், நூற்றுக்கணக்கான ஏழைகளின் உயிர் சேதமும் விளைவித்த டீமானடைசேஷனை கொண்டு வந்துவிட்டு, அது வேலை செய்யவில்லை என்றால் 50 நாளில் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றார். 500நாள் ஆகிவிட்டது. ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.
2) ஜி.எஸ்.டி கொள்ளை பத்தாதென்று வங்கி கட்டணங்களை கண்டபடி ஏற்றியாகிவிட்டது. அதாவது நம் கழுத்தில் கத்தி வைத்து பணத்தை வங்கியில் போட வைத்து, பின்னர் ஒவ்வொரு ட்ரான்சாக்‌ஷனுக்கும் கட்டணம். அதுவும் அநியாயத்திற்கு. ராபின்ஹூட்டுக்கு oppossite நரேந்திர மோடி. ஏழை, நடுத்தர மக்களிடம் பிடிங்கி பணக்காரர்களிடம் கொடுப்பதென்றால் அந்த ஆளுக்கு அல்வா சாப்பிடுவதைப் போல.
3) வேலை வாய்ப்புகளை உருவாக்க வக்கில்லை. இருந்த வேலை வாய்ப்புகளிலும், மோடியின் நிர்வாக சீர்கேட்டினால் 10லட்சம் வேலைகள் போயுள்ளன. பக்கோடா விற்றுக்கொள்ளுங்கள் என அறிவுரை வேறு!!
4) ‎அறிவியல் மாநாடுகளில் எல்லாம் போய் பைத்தியம் போல உளறவேண்டியது. பிள்ளையாருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி, 15000 ஆண்டுக்கு முன்பே விமானம் என்று. இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்கிற பொதுபிம்பம் கடந்த சில பத்தாண்டுகளாகத்தான் உடையத் துவங்கியுள்ளது.

ஜிண்டால் நிறுவனத்துக்காக சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை

தக்ஷனமூர்த்தி: சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?
#சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் #
இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,#சென்னை - #சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்,
இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு #எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, #மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க #பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?
அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலையானது #கார்ப்பரேட் நிறுவனமான #ஜிண்டாலுக்காக.( Jindal steel) ஆம், #ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,
 #ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.

அதிமுக வருடத்துக்கு 250 கோடி சத்துணவு முட்டை ஊழல்

Special Correspondent FB Wing ஏழை, எளிய குழந்தைகள் சாப்பிடும் சத்துணவு முட்டை வாங்கியதில் தமிழக அரசு, ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பியிருப்பதோடு இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லியிலுள்ள காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (Competition Commission of India) அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியிலுள்ள ஆணையத்தில் முறையீடு செய்த சந்திரனின் வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் சொன்ன தகவல் , “என்.இ.சி.சி. (National Egg Coordination Committee) எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுதான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் முட்டைகளின் விலையை நிர்ணயிக்கிறது.

குழப்பத்தில் பாஜக : வரலாறு காணாத விதமாக 4 கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

Special Correspondent FB Wing :வரலாறு காணாத விதமாக மத்திய அரசுக்கு எதிராக நான்கு கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளதால் நாடாளுமன்ற மக்களவை நிகழ்வுகள் பெரும் குழப்பத்தை அது பாஜகவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேச கட்சி ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் நிதி தொகுப்பு வழங்காததை கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அக்கட்சி மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்தது.
இதற்கிடையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடந்த வாரம் நோட்டீஸ் அளித்தது. மக்களவையில் தொடர் அமளி ஏற்பட்டதையடுத்து தற்போது வரை நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

500 ஆர் எஸ் எஸ் ஆதரவு ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் 2019 மக்களவை தேர்தலில் தில்லுமுல்லு செய்ய வசதியாக

.viduthalai.in: நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளில் உள்ள க்கிய நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக டில்லி, அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஷ்வர், சண்டிகர், கவுஹாத்தி மற்றும் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்து ஆணை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவர்களில் ஒரு சிலரின் பின்புலத்தை ஆய்வு செய்தபோது இவர்கள் அனைவரும் தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவளார்கள் மற்றும் பாஜக அனுதாபிகள் என ஈ.நாடு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வந்த கட்டுரையில் விரைவில் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் தங்களது ஆதரவு அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் கூறியதாகவும், ஆனால் இது குறித்து வந்த தகவலை தாங்கள் உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது.

கதை திருட்டு ..அபூர்வ ராகங்கள்’ என். ஆர். தாசன் எழுதிய கதை ..


Karundhel Rajesh :என் கதையை குறிப்பிட்ட இயக்குநர் திருடிவிட்டார்’ என்று புலம்பியவர்களை ஏறத்தாழ பைத்தியக்காரர்கள் போலவே பார்க்கவைத்த சினிமா நம் தமிழ் சினிமாவாக மட்டுமே இருக்கும்.... அப்படி நொந்த உள்ளங்களுக்கு இத்தொடர் சமர்ப்பணம் !!!!!!!!!
@@@@@@@@@@@@@@
'அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் என். ஆர். தாசன் என்ற எழுத்தாளரின் கதை. எழுபது எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் அவர். அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநரை தொடர்பு கொண்டபோது முறையான பதில் கூறப்படவில்லை. இத்தனைக்கும் என்.ஆர். தாசன் அரசுத்துறையில் உயரதிகாரி. பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நெடுநாள் நடந்தது.
இடையில் இதுதொடர்பாக இருதரப்புக்குமிடையில் பேச்சு வார்த்தை நடத்த முயன்றவர் மறைந்த நாடக இயக்குநர் கோமல் சுவாமிநாதன். என். ஆர். தாசனுக்குச் சார்பாகவே தீர்ப்பு வந்தது. ஏற்கனவே வெளியான புத்தகத்தில் வந்த கதையைப் படமாக்கினால் தப்பிக்கவா முடியும்? வழக்கு முடிவில் எதிர்த்தரப்புக்கு அபராதம் ஆயிரம். படத்தில் அவர் பெயரைச் சேர்க்க வேண்டும். பணத்தையோ பெயரையோ அவர் எதிர்பார்க்கவில்லை, நீதிக்காக அந்த வழக்கை நடத்தினார்.

செவ்வாய், 27 மார்ச், 2018

காங்கிரஸ் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக impeachment நம்பிக்கை இல்லா தீர்மானம் .. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ..


Gajalakshmi - Oneindia Tamil டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் தீர்மானத்தை கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை ஆதரித்து திமுக, ஆர்ஜேடி,தேசியவாத காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார், முக்கியமான வழக்குகளை ஜூனியர் நீதிபதிகளுக்கு ஒதுக்குகிறார் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் 4 பேர் முன்வைத்தனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடைய நீதிபதி லோயா மரண வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதும் இவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இந்தியாவின் நீதித்துறையிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளே இப்படி ஒரு குற்றச்சாட்டை பத்திரிக்கைகளிடம் கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது நீதிமன்ற விவகாரம் இதில் மத்திய அரசு தலையிட வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டது.

விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் - டெல்லி உயர்நீதிமன்றம் பெங்களூரு போலீஸ் ஆணையருக்கு உத்தரவு

மாலைமலர் :வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டது. புதுடெல்லி:< வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டது.> இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

BBC : பணத்துக்காக ஊடகங்கள் இந்துத்வா செய்திகளை வெளியிட்டது அம்பலம் .. ஆபரேஷன் கோப்ராபோஸ்ட்' (Cobrapost)


செய்தி இணையதளமான 'கோப்ராபோஸ்ட்' (Cobrapost) நடத்திய ரகசியப் புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக 'இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவான மெல்லிய செய்திகளை ' வெளியிட 17 இந்திய ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது.>'ஆப்பரேஷன் 136' (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த 2017ஆம் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index 2017), இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததை தொடர்ந்து இந்த புலனாய்வுக்கு 'ஆப்பரேஷன் 136 என்று பெயரிடப்பட்டது.
இந்தப் புலனாய்வின்போது, கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் செய்தியாளர் ஒருவர், 'ஸ்ரீமத் பகவத் கீதா பிரசார் சமிதி' எனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, 17 நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் தேதியை ஆணையத்திற்கு முன்பே அறிவித்த பாஜக ஐடி விங்

மாலைமலர்:  கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவிக்கும் முன்பே பாஜக ஐடி விங் அறிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடக சட்டசபையில் 224 பேரவை தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வருகிற மே 12ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். மேலும், வேட்பு மனு தாக்கல் ஏப் 17ம் தேதி எனவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.&;">காலை 11 மணியளவில் பேசத் தொடங்கிய அவர் 11.30 மணிக்கு பின்பே தேர்தல் தேதியை அறிவித்தார்.

கர்நாடக மாநில தேர்தல் 12-ம் தேதி ..ஒரே கட்டமாக ... 15 ம தேதி எண்ணப்படும்

கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்புமாலைமலர் :கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். புதுடெல்லி:< கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் மே 28ம் தேதியுடன் நிறைவடைவதால் தேர்தல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 24ம் தேதி கடைசி நாள். மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

சசிகலா புஷ்பா கணவரின் இரண்டாவது மனைவி, சத்யப்பிரியா மீது வழக்கு... லஞ்சம் டெல்லி போலீசை வளைத்து விட்டது ..

Shankar A : · அருமை அண்ணனும் புஷ்பா புருசனுமான ராமசாமி அவர்கள்,
அவரின் முதல் மனைவி சத்யபிரியா மற்றும், சத்தியபிரியாவின் சகோதரர் ஆகியோர் அண்ணன் ராமசாமியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளை, கொடுமைப் படுத்தியதாக, டெல்லி காவல்துறையில், POSCO சட்டப் பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார். டெல்லி காவல்துறையினர், நேற்று அண்ணன் வீட்டுக்கு சென்று, விமான கட்டணம், மற்றும் வழிச் செலவுக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொண்டு, சத்தியப் பிரியா மற்றும் அவர் சகோதரரை கைது செய்ய சென்னை கிளம்பியுள்ளனர். கல்யாணம் ஆன அன்னைக்கு பாக்க வேண்டிய வேலையை விட்டுட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி சுத்திக்கிட்டு இருந்தா புது அண்ணி திட்ட மாட்டாங்க ? புது அண்ணி ரொம்ப வயலன்டான ஆளு. பி கேர்புல்.

தினகரன் :டெல்லி: சசிகலா புஷ்பா கணவர் ராமசாமியின் இரண்டாவது மனைவி சத்யப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமசாமி மற்றும் அவரது மகள் அஞ்சலி ஆகியோரின் புகாரின் பேரில் டெல்லி போலீஸ் வழக்கப்பதிவு செய்துள்ளது. தனது முதல் மனைவியின் மகளான அஞ்சலியை சத்யப்பிரியா கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாருக்கு தற்போது டெல்லி போலீஸ் வழக்கப்பதிவு செய்துள்ளது.

100 ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்க ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றம்

tamilthehindu :அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் (66). அவர் பிரிட்டனிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு சிறை தண்டனை வழங்கிய ரஷ்யா, பின்னர் விடுதலை செய்தது. அவர் பிரிட்டனின் சாலிஸ்பரி நகரில் வசித்து வந்தார். அண்மையில் அவரும் அவரது மகளும் அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர், இருவர் மீதும் ரசாயனத்தை வீசினார். இதில் நிலைகுலைந்த இருவரும் கோமா நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். ரசாயன தாக்குதல் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம் சாட்டிய பிரிட்டன், 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று 60 ரஷ்ய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவிட்டார். இதேபோல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளன

அமித் ஷா தடுமாற்றம் .. நாட்டின் மிகப்பெரிய ஊழல்வாதி எடியுரப்பா


tamilthehindu :காங்கிரஸ் ஊடகபிரிவு நிர்வாகி திவ்யா ஸ்பந்தனா வெளியிட்டுள்ள ட்விட் ;படம் உதவி: ட்விட்டர் கால்பந்துப் போட்டியில் சொந்த அணிக்கு எதிராகவே சில நேரங்களில் வீரர்கள் ‘சேம்சைட்’ கோல் அடிக்கும் காட்சிகள் அரங்கேறும். அதேபோல் அரசியலில் நடந்தால் எப்படி இருக்கும்.
அதுபோன்ற காட்சிதான் கர்நாடகத்தில் தேவநாகரே இடத்தில் இன்று நடந்தது. பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள எடியூரப்பாதான் உண்மையிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி என்று பாஜக தலைவர் அமித் ஷா நாக்குத் தவறி பேசியது அங்கிருந்தவர்களை டென்ஷனாக்கிவிட்டது.
கர்நாடகத்தில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. டாக்டர் சிகிச்சை.. உறவினர்கள் குவிந்தனர்

Veera Kumar - Oneindia Tamil தஞ்சாவூர்: தஞ்சையில் தங்கியுள்ள சசிகலாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவரது உறவினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'புதிய பார்வை' ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 20ம் தேதி அதிகாலை சென்னையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் தஞ்சை கொண்டுவரப்பட்டு 21ம் தேதி மாலை அடக்கம் செய்யப்பட்டது. 
 நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாள் பரோலில் வெளியே வந்தார். தஞ்சையில் தங்கியுள்ள சசிகலா தஞ்சையில் தங்கியுள்ள சசிகலா நடராஜனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார். 
தற்போது தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் சசிகலா தங்கி இருந்து வருகிறார். தஞ்சாவூரை விிட்டு வெளியே போக கூடாது என்ற கோர்ட் நிபந்தனையை ஏற்று அவர் வேறு எங்குமே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. சசிகலா தங்கியுள்ள வீட்டுக்கு செல்லும் உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

தினத்தந்திக்கு எதிராக மக்கள் கடும் கோபம் .. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தந்தி குழுமம்

anantharamakrishnan .vikram :ஊடகங்களின் பார்வை மக்களின் போராட்டத்தின் மீது
விழவில்லை என எல்லோரும் கையில் மொபைல் வைத்து நோண்டினால் போதுமா... தூத்துக்குடி போராட்ட க்களத்தில் ஊடகங்கள் வராததைக் கண்டித்து ஏன் தலைநகரிலே ஒரு போராட்டத்தை துவக்கக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் கூடியபோது மதுரையில் பாலத்தின் நடுவில் ரயிலை மறித்து நிறுத்தவில்லையா... தமிழகம் முழுவதும் மக்கள் ஆங்காங்கே கூடி போராட்டம் நடத்தவில்லையா.. அதுபோல் செய்யக்கூடாதா. நம் எல்லோருக்கும் நாட்டு நலனில் அக்கரையுள்ளது. போனில் போஸ்ட் போடுவது மட்டும் நாம் மக்களுக்குத்தரும் ஆதரவாகிவிடாது... இதை எல்லோரும் ஷேர் செய்யுங்கள். தலைநகரில் ஒரு போராட்டம் துவங்கி தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவை தந்தால் தானாக ஊடகங்கள் ஓடிவரும். ஏதாவது ஓர் புள்ளியிலிருந்துதான் துவக்கம் உருவாகும் இதுதான் அந்தப்புள்ளியானால் நல்லதுதானே...
Sathish Kongu Kvp #ஸ்டெர்லைட் ஆலை.... என்னோட கருத்தும் அதை மூடனும்கிறது தான் என் கருத்து மட்டுமில்லை அந்த ஆலை நிர்வாகத்தோட கருத்தும் அதே தான் அதிர்ச்சியாக இருக்கா?? கொஞ்சம் பின்னால் போய் பார்ப்போம்...... 2016 ல சென்னை உயர்நீதி மன்ற அனுமதியோடு ஸ்டெர்லைட் ஆலைய மூடிவிட்டு பூனா போய்விடுகிறோம் என சென்ற நிர்வாகத்தை ஆலைய மூடாதே, தொழிலாளர்கள் வாழ்வு அழிந்துவிடும் என உச்சநீதி மன்றம் சென்று ஆலையை தொடர வைத்தவர்கள் அதிலுள்ள கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் யூனியன் தான்.... இன்றைக்கு அதுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் அதே தோழர்கள் தான்....

அரிவாளுடன் பேரணி: சம்புகனை வஞ்சகமாக கொன்ற ராமானின் கலாச்சாராம்

ஆயுதங்களுடன் பேரணி: ராமர் கூறினாரா?மின்னம்பலம் :மேற்கு வங்கத்தில் ராமநவமி பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “ஆயுதங்களுடன் பேரணி செல்லுங்கள் என்று ராமர் யாரிடமாவது கூறியுள்ளாரா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் மற்றும் சங் பரிவார் அமைப்பு சார்பில் ராமநவமி ஊர்வலம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிலையில், ராமநவமி ஊர்வலத்தில் ஆயுதங்களுடன் பேரணி செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் காவல் துறைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் அராஜகம்: விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு!

ஆம்புலன்ஸ் டிரைவர் அராஜகம்: விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு!மின்னம்பலம்: கேரளாவில் விபத்தில் காயமடைந்தவரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலைகீழாகத் தொங்கவிட்ட சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகிலுள்ள தச்சனட்டுக்கரா என்ற பகுதியில் மார்ச் 20ஆம் தேதி வயதான ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் அவரை மீட்டு மன்னார்காடில் உள்ள மதர்கேர் என்னும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், அந்த மருத்துவமனை எங்களிடம் போதுமான வசதி இல்லை என்று கூறி பாலக்காடு மாவட்ட தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தது. விபத்தில் காயமடைந்தவரை அந்த ஆம்புலன்ஸ் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுவந்தபோது, அந்த நபர் வாகனத்தின் உள்ளேயே, வாந்தி எடுத்துள்ளார். சிறுநீரும் கழித்துள்ளார்.