புதன், 23 ஆகஸ்ட், 2017

புதிய முதல்வர் யார்?: தினகரன் அணி ஆலோசனை

முதல்வர் பழனிசாமியை மாற்றி விட்டு புதிய முதல்வராக சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என, தினகரன் அணியினர், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
: தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் நேற்று ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, கடிதம் வழங்கினர். அதில் முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். கவர்னரை சந்தித்த பின் சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்றனர். பரிசீலனை: அங்கு தினகரன் தலைமையில் புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது. அதில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் மற்றும் செம்மலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆட்சிக்கு ஆதரவு 113 ; எதிர்ப்பு 120 - நீடிக்குமா எடப்பாடி ஆட்சி?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.>முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பி.எஸ் அணியும் ஒன்றாக இனைந்து விட்டதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். அதில், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது ஆளும் எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.>ஆட்சியை தக்க வைக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். அதாவது மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் பாதி எண்ணிக்கை அரசுக்கு வேண்டும். கணக்கு படி,
மொத்தம் இடம் - 234
காலி இடம் - 1 (ஆர்.கே.நகர்)
திமுக - 89"
காங்கிரஸ் - 8
முஸ்லிம் லீக் - 1
தினகரன் அணி -19
அதிமுக கூட்டணி - 3
எடப்பாடி அணி - 113

BBC : "நீட்" ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அழைப்பு.. நாளை சென்னையில் ...

தமிழகத்தில் "நீட்" தேர்வு முறையில் இருந்து மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு விலக்கு வழங்கும் நடவடிக்கையில் சரியாக செயல்படவில்லை எனக் கூறி, சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீட்' தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்த மத்திய - மாநில அரசுகளை கண்டித்து நாளை (ஆகஸ்ட் 24) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாணவர்களும், அனைத்து கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்று 'நீட்' தேர்வில் தமிழகத்தை வஞ்சித்துள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற வைத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்திட வேண்டும்" என்றும் திமுக தலைமைக் கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவும் ஹிந்தி எதிர்ப்பு மத்திய அரசு அதிர்ச்சி .. ஒரிய மொழியில் மத்திய அரசுக்கு கடிதம் ....

ஹிந்தி மொழி எதிர்ப்பில் தமிழ்நாட்டின் நிலை யாவரும் அறிந்ததே . தார் பூசி மைல் கல் அழிப்பதில் முன்னோடியா இருந்த தமிழ்நாட்டில் சமீபத்தில் கூட தேசிய சாலையில் உள்ள ஹிந்தி எழுத்துக்கள் அழித்த படத்தை அதை பிரதமர் மோடிக்கு தமிழர்கள் பல பேர் ட்வீட் செய்தார்கள் ..
கால்நடை சட்டம் வந்த போது கேரளா மாநிலத்தினர் மூன்று நாளுக்கு மேல #dravidanadu என்ற ஹாஸ்டேக் மூலம் தங்கள் எதிர்ப்புகளை கொட்டி தீர்த்தத்தை கண்டு மத்திய அரசு பின் வாங்கியது ..
பின்னர் பெங்களூரு மெட்ரோ வில் ஹிந்தி எழுத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் அதனை அழித்தும் தனிக்கொடி பிடித்தும் போராட்டம் நடத்தவே மாநில அரசு மெட்ரோவில் ஹிந்தி கிடையாது என்ற அரசு ஆணை வெளியிட்டதை வேடிக்கை பார்ப்பதை தவிர எதுவும் செய்ய முடியாத நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது ..
இப்போது வைரலாகி வரும் விஷயம் ஹிந்தியில் லட்டர் அனுப்பிச்ச மத்திய பிஜேபி மந்திரிக்கு ஒரியா மொழியில் ரிப்ளை லட்டர் அனுப்பி வைத்த பிஜு ஜனதா தள எம்பி.சத்பதி செயல் தான் ..
இப்படி தமிழ்நாடு , கேரளா கர்நாடக மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கில் பெருகும் ஹிந்து எதிர்ப்பை கண்டு மத்திய அரசு விழி பிதுங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Special Correspondent FB Wing

சொந்த வீடு இருக்கா விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்

சொந்த வீடு வைத்திருந்தும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை பரிசீலித்து வருகிறது.மாத ஊதியம் வாங்குவோரின், வருமானத்திற்கு ஏற்ப, அந்தந்த அலுவலகத்திலேயே, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், மாத ஊதியம் பெறுவோர், வருமான வரித்துறையின் கண்ணில் இருந்து தப்ப முடியாது.நடவடிக்கை ஆனால், வீடு வாடகைக்கு விடுவோர், கார், வேன் போன்ற வாகனங்களை வாடகை மூலம் வருவாய் ஈட்டுவோர் என, சொந்த
வருவாய் ஈட்டுவோரில் பெரும்பாலானோர், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதில்லை. அத்தகையவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு, இதுவரைவழிவகை இல்லை. ஆனால், இப்போது அதற்கான நடவடிக்கையை வருமான வரித் துறை துவங்கி உள்ளது.

19 எம் எல் ஏக்கள் பதவி விலக தீர்மானம் ! ஆட்சி கவிழ்கிறது ..இதுவரை 25 எம் எல் ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு!

டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் இன்றோ அல்லது நாளையோ ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர்கள் பதவி விலகினால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் கவிழும் என கூறப்படுகிறது. அதிமுகவில் உள்ள டி.டி.வி.தினகரன் அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி அணியினர், தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனார். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், கட்சியில் அவரது நியமனங்களும் செல்லாது என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் எந்த வகையில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தினகரனால் பதவி பெற்ற, 19 எம்எல்ஏக்கள் , தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி அரசு கவிழும் என, தினகரன் ஆதரவு வட்டாரம் தெரிவித்தது.  /m.dailyhunt.in/

தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுனரிடம் தனித்தனியே கடிதம் .. எடப்பாடிக்கான அரசுக்கு ஆதரவு மறுப்பு !

ஆதரவு வாபஸ் tamil.oneindia.com/mathi சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று தனித்தனியே கடிதம் தந்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் பழனிச்சாமி மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; முதல்வர் பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ.வாகிய நானும் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆதரவு வாபஸ் ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் ஏற்கனவே அளித்த ஆதரவை இக்கடிதம் மூலம் திரும்பப் பெறுகிறேன். என்னுடைய இக்கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினகரனுக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்: திவாகரன் பேட்டி

தினகரனுக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்: திவாகரன் பேட்டி தமிழக அரசு மைனாரிட்டி அரசாக மாறியதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டுமென சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆதரவை விலக்கி கொள்கிறோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துடோம் என தமிழக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் பழனிசாமி முதல்வர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.
இந்நேரம் அவர் பதவி விலகியிருக்க வேண்டும். கவர்னரை சந்தித்த 19 எம்எல்ஏக்களை தவிர எங்கள் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். கூடுதலாக 8 எம்எல்ஏக்கள், என்னிடம் ஆதரவு தெரிவித்துள்ள 7 எம்எல்ஏக்களையும் சேர்த்து எங்களுக்கு ஆதரவாக 37 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது மேலும் அதிகரிக்கும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த அரசுக்கு மெஜாரிட்டி இல்லையென கூறியுள்ளார்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வரலாற்றை அழித்து, தமிழ் இலக்கியத்தை கைபற்றி, சாதியத்தை திணித்து, தன் ஆதிக்கத்தை நிறுவியது ஆரியம்


Devi Somasundaram:பெரியார் என்றோரு பகுத்தறிவு சுடர் தந்த புத்தி, அம்பேத்கர் ,மார்க்ஸ் போன்ற அறிஞர் தந்த அறிவு , பத்திரிக்கை, மீடியா, போன்ற வெகு ஜன தொடர்பு , ஷோஷியல் மீடியா போன்ற மக்களுடன் உடனடி தொடர்பு, ஐ நா சபை, மனித உரிமை அமைப்பு போன்ற அன்னிய கண்காணிப்பு , படித்து அறிந்த மக்கள் என்று இத்தனை விஸ்தாரமான அறிவு கிடைத்த இந்த நாட்களில் ஆரியம் தன் அதிகார ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ள முடிகிறதென்றால்.
சங்க காலம் தொட்டு, அப்பாவிகளாய் இந்தமண்ணி வாழ்ந்த தமிழ் குடி மக்களை, இந்த மண்ணில் நுழைந்து , நம் பண்பாட்டை சிதைத்து , மக்களை பிரித்து , மன்னர்களை தன் கை வச படுத்தி .வரலாற்றை அழித்து, மாற்றி ,தமிழ் இலக்கியத்தை கைபற்றி, சாதியத்தை திணித்து, தன் ஆதிக்கத்தை நிறுவியது ஆரியத்துக்கு எளிதான செயலாக தான் இருந்திருக்கும்...
வரலாறுகள் தன்னை எப்படி கடத்தி வந்து இருக்கிறது என்று யோசித்தால் மலைப்பாக தான் இருக்கு ...

அர்விந்த் கேஜ்ரிவால் அரசு அவசர சட்டம் .. டெல்லியில் மனிதர்கள் மூலம் சாக்கடை சுத்தம் செய்பவர் மீது கொலை வழக்கு

Shalinmarialawrence?:"கடந்த ஞாயிற்று கிழமை டெல்லியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் மருத்துவமனையின் சாக்கடை டேங்க்கை சுத்தம் செய்யும்பொழுது விஷவாயு தாக்கி இறந்தார் ,மற்றும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர் ."
இது போன்ற செய்திகள் தமிழ்நாட்டிற்கு புதிது இல்லைதான் . இந்தியாவிற்கும் புதிது இல்லைதான் .ஆனால் இதற்கு பின்பு நடந்த விஷயம்தான் புதிது .
இந்த சம்பவத்திற்கு பின் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அவர்கள் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார் அதன் பின்னே அவசர சட்டம் ஒன்றை டெல்லி அரசு கொண்டுவந்தது .அது ஒரே இரவில் சாக்கடை டேங்குகளை மனிதர்களை வைத்து சுத்தம் செய்வதற்கான தடை உத்தரவு .
இனிமேல் டெல்லியில் யாரும் மனிதர்களை வைத்து சாக்கடை டேங்குகளை சுத்தம் செய்ய வைப்பது சட்டப்படி குற்றம் ..அப்படி யாரவது செய்வார்களெனின் அவர்கள் மீது கொலை வழக்கு (culpable homicide ) உடனடியாக பதிவு செய்ய படும் .
இன்னும் 15 நாட்களில் சாக்கடை டேங்க்குகள் சுத்தம் செய்யும் உலகளாவிய மிக நவீன இயந்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அவைகள் உபயோகப்படுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது .அதுவரை சாக்கடை அடைப்பினால் பாதிக்கப்படுவோர் நீர் வாரியத்தை மட்டுமே அணுக வேண்டும் என்று அவசரஉதவி தொலைபேசி எண்களுடன் டெல்லி முழுவது பாதாகைகள் ஒட்டப்பட்டிருக்கின்றன .

அரசியல் விபச்சாரி தமிழருவி மணியன் ... செ.கார்கி

rajini and tamilaruvimaniankeetru : இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” என வீரமாக சொல்லிவிட்டு அரசியலில் இருந்து ஓடிபோனார் தமிழருவி மணியன். தமிழக மக்களும் ஒரு ஒன்னாம் நம்பர் புரோக்கர் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்று மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் புரோக்காராக அரசியலில் இருந்து ஒதுங்கியவர் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இப்போது விபச்சாரியாகவும் மாறி அரசியலில் களம் இறங்கி இருக்கின்றார். புரோக்கர் வேலை பார்த்தால் அரசியலில் கடைசி வரைக்கும் நம்மை புரோக்கர் வேலை மட்டுமே பார்க்க வைத்துவிடுவார்கள், நாம் ஆண்டியாக கடைசியில் நிற்க வேண்டியதுதான் என்பதை 2016 சட்ட மன்ற தேர்தல் மூலம் நன்றாக உணர்ந்துகொண்ட மணியன் அவர்கள் ஒரு சிறிய ஓய்வுக்குப் பின்பு தனது கூச்சத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு தேர்ந்த விபச்சாரியாக தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கின்றார்.

கலைஞரின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும்: முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்... வைகோ!

tamilthehindu : : கருணாநிதி விரைவில் நலம் பெறுவார். அவரின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், முரசொலி பவள விழாவில் பங்கேற்பதாக அவர் கூறியுள்ளார்.
கருணாநிதியை சந்திப்பதற்காக இன்று அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு வைகோ வருகை புரிந்தார். அப்போது ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் வைகோவை வரவேற்றனர்.
கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரித்த பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''53 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவனாக இருந்தபோது கருணாநிதியை சந்தித்தேன். 23 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழலாக இருந்தேன். அவர் மீது ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக் கொண்டேன். வை கோபால்சாமியாக என்னை வைகோ என்று முதன்முதலாக அழைத்தவர் கருணாநிதி.
என்னை அரசியலில் வளர்த்தவர் கருணாநிதிதான். நெருக்கடி நிலை காலத்தின்போது எனக்கு ஆதரவு தந்தார். கடந்த 2 மாதங்களாக ஒவ்வொருநாளும் கருணாநிதி கனவில் வருகிறார்.போய் வருகிறேன் என்றதும் கருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார். நல்ல நினைவாற்றலுடன் உள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெறுவார். அவரின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும்.

வைகோ : 2 மாதமாக கலைஞர் என் கனவில் வந்து கொண்டிருக்கிறார் !


இரண்டு மாதமாக கலைஞர் என் கனவில் வந்து கொண்டிருக்கிறார். ஏன் என்றே எனக்குத் தெரியவில்லை - வைகோ.
venkatram Ramanujan :Vaiko on the way to meet Kalaignar Karunanidhi .. எல்லா தப்பையும் செய்ய வேண்டியது அப்பறம் சின்ன குழந்தை மாதிரி அங்கே போய் தேம்பி தேம்பி அழவேண்டியது ... அவரும் மன்னிச்சு விட வேண்டியது அப்புறம் இவரும் யோசிக்காம திரும்ப மானாவாரிய திட்ட வேண்டியது .. Time has come for alignment .. #மதிமுக வை #திமுக வில் இணைச்சிட்டு வைகோவை டெல்லிக்கு அனுப்புங்க .. திராவிட குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கட்டும் ..அது தான் அவருக்கும் Apt திமுகவுக்கும் Fit . Vaiko is a smart organiser , excellent speaker but can never be a good leader ..

Rajagopal Meenatchisundaram சரி ! யோசிச்சிப் பாத்தேன்! நீங்களே கேக்குறீங்க...முடியாதுன்னும் சொல்ல முடியில...ஓகே! அவர எம்பியாக்கி விட்டுர்றேன்! எந்தக் காரணம் கொண்டும் மோடியைப் பாத்தவுடனே கட்டிப் பிடிக்கறதோ பார்லிமெண்டில அழுவுறதோ கூடாது. சரியா ?

சாய் லட்சுமிகாந்த் :இங்கே பிரோக்கர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று போர்டா வைத்திருக்காங்க.. கட்சிய கலைச்சிட்டு செய்த பாவத்துக்கு பிராயசித்தமா கோபாலபுரத்தில் கலைஞர்க்கு சேவை செய்ய சொல்லுங்க.. அதுவே  அதிகம்

வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு! பெரிய வாய் அக்காவின் பெரிய ஊழல்!

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை வந்ததால் அரசியல்வாதிகள் யாரும் அதிர்ச்சியடையவில்லை. அவர்களுடைய சொத்துக்கள் எல்லாம் பினாமி பெயரில் பாதுகாப்பாக இருப்பதால் பத்திரத்தில் அவர்கள் காட்டும் மதிப்பு என்பது வெறும் பாக்கெட் மணிக்கு நிகரானது. தனது கட்சிக்காரர் கடையில் வாங்கிய மின்விசிறிக்கு கூட தவணை கட்ட முடியாத நிலையில் இருந்த வானதி சீனிவாசன், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பது போக எவ்வளவு வைத்திருப்பார்? அது பா.ஜ.க காரர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
வானதி சீனிவாசன் இந்த ஆண்டு மார்ச், 2017 -ல் கோவையில் கணவர் சீனிவாசன் பெயரில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். கடைசியாக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்த வீடு சேராது. கோவை, ராஜேந்திர பிரசாத் சாலை, பிளாட் எண் 304 -ல் அடுக்ககத்திலுள்ள அந்த வீட்டின் மதிப்பாக பத்திரப் பதிவில் காட்டப்பட்ட தொகை ரூ. 56 இலட்சம். அதன் சந்தை மதிப்பு நிச்சயம் சில மடங்கு அதிகம் இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடுக்கக வீடுகளின் விலை சந்தை விலைப்படி சதுர அடி ரூ 5,500 முதல் 8,000 வரை இருக்கிறது.

கோபாலபுரத்தில் கலைஞர் வைகோ சந்திப்பு ... உடல் நலம் குறித்து விசாரித்தார்!

கலைஞரை சந்தித்து உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். அப்போது முரசொலி பவள விழாவுக்கும்  வைகோ வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோபாலபுரத்துக்கு செவ்வாய்கிழமை இரவு சுமார் 8.15 மணியளவில் சென்ற வைகோவை திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
தமிழகத்தில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் சூழல்களுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிவேல் : சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்குவதாகச் சொன்னால் விட்டுவைப்போமா?



விட்டுவைப்போமா?சசிகலாவை நீக்குவதாகச் சொன்னால் விட்டுவைப்போமா, அதனால்தான், வைத்தியலிங்கம் மீது டி.டி.வி. தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் தெரரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைத்தியலிங்கம் அறிவித்தார்.
வைத்தியலிங்கத்தின் இந்த அறிவிப்பு தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து வைத்தியலிங்கத்தை நீக்குவதாக தினகரன் அறிவித்தார். இதற்கு பதிலளித்த வைத்தியலிங்கம் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று (ஆகஸ்ட் 22) தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

நடிகை கடத்தல்: மொத்த குற்றத்துக்கும் பின்னணியில் ஒரு பெண் !

நடிகை கடத்தல்: குற்றவாளி வைத்த சஸ்பென்ஸ்!
மின்னம்பலம் : கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். நடிகர் திலீப்புக்காகத்தான் இந்தக் குற்றத்தைச் செய்தோம் என பல்சர் சுனில் போலீஸுக்குக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டு அலுவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நேற்று (21.08.17) இவர்கள் இருவரும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்த மொத்த குற்றத்துக்கும் பின்னணியில் ஒரு பெண் இருக்கிறார் என்று பல வாரங்களாக சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டு வந்தது. கேமராவைப் பார்க்கும்போதெல்லாம் இதே கதையைச் சொல்லிவந்த பல்சர் சுனில் இம்முறையும் அதையே சொல்லியிருக்கிறாரே தவிர, அந்தப் பெண் யார் என்பதை சொல்லவில்லை. M என்ற மேடம் ஃபோன் செய்து நான் செய்ய வேண்டியதைச் சொல்வார். அவரைப் பற்றி அடுத்தமுறை வரும்போது சொல்கிறேன் என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டுச் சென்ற பல்சர் சுனிலை அவர் குறிப்பிட்டிருந்த ஆகஸ்டு 14ஆம் தேதி போலீஸ் தரப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை.

உச்சநீதிமன்றம் : 3 தலாக் மணமுறிவுக்கு இடைக்கால தடை! புதிய சட்டம் இயற்றாவிடின் தடை தொடரும்

முஸ்லிம் பெண்களை ‘முத்தலாக்’ என்ற ஒரே வார்த்தையில் விவாகரத்து செய்வது தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக விவாதிக்க இஸ்லாமிய தனிநபர் சட்டவாரிய செயற்குழு விரைவில் கூடுகிறது. முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - இஸ்லாமிய தனிநபர் சட்டவாரியத்தின் நடவடிக்கை என்ன? லக்னோ: முத்தலாக் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.
5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் முத்தலாக் முறைக்கு எதிராகவும், 2 நீதிபதிகள் எதிராகவும் கருத்து தெரிவித்தனர். இறுதியாக, முத்தலாக் முறைக்கு ஆறு மாதங்கள் இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், ‘மத்திய அரசு 6 மாதத்தில் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அப்படி 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவில்லையென்றால் முத்தலாக் மீதான தடை அதன் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கிடையாது ,,, மத்திய அரசின் பச்சை துரோகம் !

துடெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்ததையடுத்து 3 அமைச்சகங்கள் ஒப்புதலும் அளித்து விட்டன. எனவே, அவசர சட்டத்தற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அவசர சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் நளினி சிதம்பரமும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

கருணாஸ், தனியரசு, அன்சாரி கூட்டறிக்கை ..

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் முடிவெடுப்போம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பி.எஸ் அணியும் ஒன்றாக இனைந்து விட்டதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். அதில், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது ஆளும் எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா நீக்கம்: ஓ.எஸ்.மணியன் கருத்து!

‘சசிகலா நீக்கம் குறித்து அதிமுக பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும்’ என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வின் இரு அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, ‘சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தாரை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என வலுவான கோரிக்கையை முன்வைத்தது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 21) இரு அணிகளும் இணைந்தன அதிமுக நியமனப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவது தொடர்பாக விரைவில் அதிமுக பொதுக்குழு கூடவுள்ளதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா நீக்கம் குறித்து அதிமுக பொதுக்குழு கூடிதான் முடிவு எடுக்க முடியும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், “அதிமுக பொதுச்செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், உடனடி தேவை என்ற நிலையில் பொது குழுவைக் கூடி சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி பொதுக்குழு கூடிதான் பொதுச்செயலாளர் பற்றி முடிவெடுக்க முடியும். இன்றைய கூட்டத்தில் சசிகலா பற்றியோ, பொதுச்செயலாளர் பற்றியோ ஆலோசனை செய்யப்படவில்லை.

மீண்டும் மெரினாவில் தியானம்... எடப்பாடி அரசைக் கவிழ்க்கும் தினகரன் எம்.எல்.ஏ-க்கள்!

மீண்டும் மெரினாவில் தியானம்... எடப்பாடி அரசைக் கவிழ்க்கும் தினகரன் எம்.எல்.ஏ-க்கள்!1. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி 2. கதிர்காமு, பெரியகுளம் 
3. ஜக்கையன், கம்பம் 
4. தங்கதுரை, நிலக்கோட்டை. 
5. முத்தையா, பரமக்குடி 
6. சுப்ரமணியன், சாத்தூர் 
7. ஜெயந்தி, குடியாத்தம் 
8. மாரியப்பன் கென்னடி, மானாமதுரை 
9. பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி 
10. செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி 
11. வெற்றிவேல், ஓமலூர் 
12. பார்த்திபன், சோளிங்கர். 
13. கோதண்டபாணி, திருப்போரூர் 
14. ஏழுமலை, பூந்தமல்லி 
15. ரெங்கசாமி, தஞ்சை 
16. பாலசுப்பிரமணியன், ஆம்பூர் 
17. முருகன், அரூர் 
18. சுந்தராஜ், ஓட்டப்பிடாரம்

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மெரினாவில் ஜெ நினைவிடத்தில் ஓ.பன்னீர் செய்த தியானத்தால் கட்சி இரண்டுபட்டது; குழப்பம் கும்மியடித்தது.
நேற்று ஆகஸ்ட் 21ஆம் தேதி ஓ.பன்னீரும் எடப்பாடி அணியினரும் இணைந்துவிட்ட நிலையில் நேற்று இரவு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டதால் அடுத்து என்னாகுமோ என்ற பதற்றம் அதிமுக-வில் ஏற்பட்டுள்ளது.

தினகரன் 25 எம்..எல்..ஏ.க்களுடேன் ஆளுநரை நாளை சந்திக்றார் !

mayura-akilan. Oneindia Tamil சென்னை: ஓபிஎஸ் உடன் இணைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கூறியுள்ளனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பு முடிந்த உடன் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இது டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அணிகள் இணைப்பு குறித்து மாலை முதலே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் திடீரென்று ஜெயலலிதா சமாதிக்கு வந்து தியானம் மேற்கொண்டனர்.
அரைமணி நேர தியானத்திற்குப் பிறகு எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கர்நாடகாவில் மீண்டும் காங்., அரசு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது

பெங்களூரு, 'கர்நாடகாவில், மீண்டும் காங்கிரஸ் அரசு அமையும்; பா.ஜ., இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்கு, 2018 துவக்கத்தில், 225 தொகுதிகள் உடைய சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், அங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து, 'சி - போர்' என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.ஜூலை, 19 முதல், ஆகஸ்ட், 10 வரை நடந்த இந்தக் கருத்துக்கணிப்பின் போது, 165 தொகுதிகளில், 24 ஆயிரத்து, 676 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி, காங்., கட்சி, 120 முதல், 132 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ., 60 - 72 தொகுதிகளில் வென்று, இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.< மதச் சார்பற்ற ஜனதா தளம், 24 - 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு, 43 சதவீதம், பா.ஜ.,வுக்கு, 32 சதவீதம், மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு, 17 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் செய்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 150 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும் என கூறியுள்ள நிலையில், இந்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது  தினமலர்

அல்வா வாசு ... 'அல்வா கொடுப்பதில் ' திரைத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன ?

davamudhalvan.davan? திரையில் மின்னும் மாபெரும் நடிகன் -நடிகை , இயக்குனர் போன்றவர்களின் பின்னால் இருக்கும் எளிய மனிதர்களின் உழைப்பை அதன் அருமை உணர்ந்தோரே அறியமுடியும். முகம் அறியாத நூற்றுகணக்கான மனிதர்களின் உழைப்பின் ஒளியால்தான் நட்சத்திரங்களே திரையில் மின்னுகின்றன . தமிழ் திரை உலகில் நகைச்சுவைக்கு என்று பலர் இருப்பினும் கலைவாணர் தொடங்கி, நாகேஷ், சுருளிராஜன் , கவுண்டமணி , ஆகியோருக்கு பிறகு என் மனதில் நிற்கும் கலைஞன் வடிவேலு என்பேன். கவுண்டமணியின் பெரும்பாலான காட்சிகளில் செந்திலை ' ஓட்டி' ' உதைத்து' இருந்தாலும் அந்த வசனங்களோடு விமர்சனங்களாக சமூகத்தின் எல்லா தரப்பினரையும் ஓட்டியிருப்பார் .