வியாழன், 20 ஏப்ரல், 2017

காதலர்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ... ராஜஸ்தானில் .. காதலுக்கு எதிரிகளாம் ..

ராஜஸ்தானில், காதலர்களை நிர்வாணாமாக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ளது ஷம்பூபுரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பில் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த கன்ஜுரா (20) என்பவர் 18 வயதுடைய அவரது உறவுக்காரப் பெண்ணை காதலித்துள்ளார். இது, பெற்றோருக்கு பிடிக்காததால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி குஜராத்தில் வசித்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அவர்களை தேடிக் கண்டுபிடித்த உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

வருமான வரி சோதனைகளால் கட்சியையும், ஆட்சியையும், நாட்டையும் கா(கூ)ட்டி கொடுக்கும் அமாவாசைகள்

பிடியை இறுக்கிவிட்டது டெல்லி! வேதனைப்படும் அமைச்சர்கள்!
கடந்த 3 நாட்களாக அதிமுகவில் இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுவார்த்தையோடு பரபரப்புகள் நிலவி வந்தது. இதற்கு பின்னணியில் பாஜக தலைமைதான் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான், கடந்த இரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்தது. திடீரென சசிகலா குடும்பத்தை ஒத்திவைத்துவிட்டு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதாகவும் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாகவும் மூத்த அமைச்சர்தகள் கூறினார்கள். இதற்கு ஓ.பி.எஸ். தரப்பிலும் வரவேற்பை கொடுத்தார்கள். கடந்த இரண்டு மாதமாக கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமை செலுத்தி வந்த துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், திடீரென 'நான் ஒதுக்கிவிட்டேன்' என்று சாதாரணமாக கூறிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். இவற்றிக்கெல்லாம் காரணம் பாஜகவினுடைய கடுமையான நெருக்கடிதான் என ’கூறப்படுகிறது.

நெருப்பாற்றில் நீந்தி 30 வயதில் நக்கீரன் ...

No automatic alt text available.Govi Lenin : நக்கீரன் இதழ் 30வது வயதில் அடிவைக்கிறது. வார இதழாகத் தொடங்கி, வாரமிருமுறை இதழாகி, தற்போது 3 நாட்களுக்கு ஓர் இதழ் என்ற வளர்ச்சியைப் பெறுவதற்கு காரணம், ஆசிரியர் நக்கீரன் கோபால் அண்ணனின் துணிச்சலும், நக்கீரன் நிறுவனத்தை ஒரு குடும்பமாக அவர் அரவணைத்துச் செல்லும் அன்பும்தான்.
நாட்டிலும் காட்டிலும் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த உண்மைகளை வெளிப்படுத்தியதால் வாசகர்களின் மனதை வென்ற நக்கீரனுக்கு ஆட்சியாளர்கள் தந்த ‘வெகுமதி’கள் ஏராளம். அவதூறு வழக்குகள், அடக்குமுறைகள், அராஜகத் தாக்குதல்கள், கைது நடவடிக்கை, பொடா சிறைவாசம் என 30 ஆண்டுகளில் பாதிக்கும் மேலான காலகட்டத்தை நெருப்பாற்றில் நீந்திக் கடந்தது நக்கீரன்.

கேள்வி :பேசிக்குன்னே பாம்பை எடுத்து காட்ராம்பா அந்த பண்றீரு ! பதில் : உங்க பாம்பை எடுத்து விடுங்க !

12 எம்.எல்.ஏ.வை மட்டுமே வச்சிக்குனு இருக்குற பன்னீர்செல்வத்தைப் பார்த்து எடப்பாடி குரூப் ஏன் பயப்படுது...!
அவன் பர்ஸூல பணம் வச்சிருந்தா பரவாயில்லை பாம்பை இல்லை வச்சிக்குனு இருக்குறான்...!
பாம்பும் பாரதீய ஜனதாவும் ஒண்ணு...!
அப்பப்ப பர்ஸூல இருக்குற பாம்பை எடுத்து கொத்த (இன்கம்டாக்ஸ் ரெய்டு) விடுறான் பயப்படாம இன்னா பண்றது...!
அதான் காம்பரமைசா போயிடறோம்...!
நாதாரி டெய்லி இரண்டு முட்டையும் ஒரு கப் பாலும் மிச்சமிருக்குற நாலு வருஷத்திற்கு பாம்புக்கு வைக்கணுங்கறான் அதான் இடிக்குது பேச்சுவார்த்தையில...!
பேசிக்குனே இருக்கும் போது பாம்பை எடுத்து காட்றாம்பா ரொம்ப கஷ்டமாகீது அதான் அண்ணன் தினகரன்கிட்ட அழுதுக்குனே சொல்லிட்டோம் நாங்க போறோம்னு...!
கடைசியா அண்ணன் ஒண்ணு சொல்லிக்குனாரு அவனை கூப்புட்டாந்து உங்க எல்லார் பாம்பையும் எடுத்து அவன் வாயில வைய்யிங்கன்னாருப்பா....!

இராணுவத்தில் மிகப்பெரும் ஊழல்கள் ... தட்டி கேட்பவர்கள் கதி ?

இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.
இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் பொதுமக்கள் வெறுப்பும் கோபமுமாகக் குமுறிக் கொண்டிருந்த வேளையில், “இராணுவ வீரர்கள் நாட்டு எல்லையில் நேரம் காலம் பார்க்காமல் நின்று கொண்டிருக்கும்பொழுது, உங்களால் ஒரு சில மணிநேரம் வங்கி வாசலில் காத்திருக்க முடியாதா?” என இந்து மதவெறியர்களும் தேசபக்த சிரோமணிகளும் எதிர்க்கேள்வி கேட்டு, பொதுமக்களின் வாயை அடைக்க முயன்றார்கள்.

ரஷ்யாவுக்கு இனி விசா தேவை இல்லை ... 18 நாடுகளுக்கு சலுகை ...இந்தியா, சீனா,வட கொரியா ,மெக்சிகோ .....

Brunei, India, China, North Korea, Mexico, Singapore, Japan, Algeria, Bahrain, Iran, Qatar, Kuwait, Morocco, UAE, Oman, Saudi Arabia, Tunisia and Turkey will be eligible to the new rules,
ரஷ்யாவுக்கு சுற்றுலா வரும் இந்தியர்கள் உள்பட 18 நாட்டினருக்கு விசா தேவையில்லை என, ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும்வகையில், ரஷ்யா அரசு துணிந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரஷ்யா நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை விசா இல்லாமல் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாட்டினர் அதிகம் வந்து செல்கின்றனர்.
அதையடுத்து, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ஆகியோர் சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பாக ரஷ்யாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் தீவிர ஆலோசனை நடத்தினர்.

பொதுத்தேர்தலில் ஒப்புகைச் சீட்டு அறிமுகம் ... மின்னணு இயந்திர மோசடிகள் தொடரும்?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதால், இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.

ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை : மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாரா?

சென்னை: இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மேற்கொண்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு.< இந்த மண்ணின் சிறப்பம்சம் என்பதே பன்முகத்தன்மைதான். பாரம்பரிய பெருமை மிக்க இந்த மண்ணில் பல மதத்தைச் சார்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசுவோரும், பலவித பண்பாடுகளைப் பின்பற்றுவோரும் அவரவருக்கான உரிமைகளுடன் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில், இந்தி-சமஸ்கிருத திணிப்பு முயற்சிகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது.

நேற்றைய ஜெயாவின் பூச்சிகள்... இன்றைய பாஜகவின் பூச்சிகள் .. மக்களுக்கு பூச்சியம்!

சசி, தினகரன் அண்ட் குரூப்ஸ் யோக்கியர்களில்லை தான், ஆனால் ops அண்ட் கோ மட்டும் புனித ஆத்மாக்களா ?
பின்ன ஏன் ops யை ஆதரித்து, சசி கோஷ்டியை விரட்டி, விரட்டி அடிக்கிறது பாஜக?
அம்மையாரையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சசி கோஷ்டி இப்போது தங்களை நிலைநிறுத்தி கொள்ள இப்போதைக்கு அனுசரித்து போனாலும் எல்லாம் 'செட்டில்' ஆன பிறகு தங்களை கண்டிப்பாக எதிர்ப்பார்கள், கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவிடுவார்கள். பிறகு பாஜக வழக்கம் போல டெபாசிட் இழக்கனும். அதே ops என்றால் பதவியையும், பல்லாயிரம் கோடி சொத்துக்களையும் காத்துக்கொள்ள அவர்கள் கை காட்டும் இடத்தில் கையெழுத்து போடுவார்.. காலிருக்கும் இடத்தில விழுந்து கிடப்பார்..
அவர்கள் அடிமைகளையே விரும்புகிறார்கள்..
By Akila Ramakrishnan  முகநூல் பதிவு

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அடியோடு நின்றது.. 100 ஆண்டுகளில் முதல்முறை!

 ஒகேனக்கல் பகுதியில் நீரின்றி வறண்டு கிடக்கும் காவிரி ஆறு.எஸ்.ராஜாசெல்லம் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி, தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் பகுதி ஆகும். சுற்றுலாத் தலமாகவும், சுற்று வட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் கம்பீரமாக விளங்கிவரும் ஒகேனக்கல் அருவி, காவிரி ஆறு மொத்தமாக வறண்டுவிட்டதால் களையிழந்து காணப்படுகிறது. கடந்த
100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து சில நாட்களுக்கு முன்பு அடியோடு நின்றுவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சி குறித்து அறிந்துகொள்ள இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: ‘‘நடுத்தர வயதைக் கடந்துவிட்ட நாங்கள், எங்கள் வாழ்நாளில் ஒகேனக்கல் அருவி வறண்டதைப் பார்த்ததே இல்லை. 80 வயதைக் கடந்த எங்கள் குடும்ப முதியவர்களும் இது போன்ற நிலையைப் பார்த்ததில்லை என்றனர்.

தம்பிதுரை : முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்த அ.தி.மு.க.வை மீண்டும் ஓரணியாக இணைக்கும் முயற்சி தொடங்கி உள்ளது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். அவரை கட்சியில் இருந்து விலக்கி வைத்து அ.தி.மு.க. இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மூத்த நிர்வாகிகளும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். ‘‘கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கப்போவதாக எடுக்கப்பட்டு இருக்கும் முடிவு எங்கள் தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கட்சியில் இருந்து என்னை ஒதுக்குவதாக சொன்னவுடன் தானே ஒதுங்கிவிட்டதாக  டி.டி.வி.தினகரன் கூறினார்.

புதன், 19 ஏப்ரல், 2017

டெல்லி.. தமிழக விவசாயிகள் போராட்டம் 2 நாட்கள் தற்காலிகமாக ஒத்திவைப்பு ! 37 நாட்களாக ...

புதுடெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 37-வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடைசியாக நேற்று பிரதமர் மோடி விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்ற போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று சட்டையை கிழித்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

சசிகலா - தினகரனை விட மோசமான துரோகிகள்தான் அதிமுகவில் ..? பாஜகவின் கைகூலிகள்!

சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்தி இரண்டு மந்திரிகளை மத்தியில் (தம்பி துரை மைத்திரேயன் ) கொடுத்து ஒன்று இணைந்த அதிமுகவுடன் வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. 35 சதவீத இடங்களை கொடுத்து ., பிரிதிபலனாக #EC அந்த 43 lakhs கள்ள ஓட்டுகளை அழிக்காமல் அதே போல் EVM மெஷின் மூலம் வெற்றி பெற பிஜேபி வியூகம்
Image may contain: 1 personஓ பி எஸ் ...எடப்பாடி ..தம்பிதுரை ..உதயகுமார் ஜெயக்குமார் ....போன்ற கேவலமான கழிசடைகளை விட டி டி வி தினகரன் எவ்வளவோ தேவலாம் என்பதே என் பார்வை..
சொல்லப்போனால்...ஜெயாவை விட சசிகலாவை விட மோசமானவர் இல்லை என்பதே என் கருத்து.
எல்லோரும் மோடிக்கு பயந்து முதுகில் குத்தி கிளறிய போதும்...
பதற்றம்...படபடப்பு...எரிச்சல்..ஆத்திரப்படாமல்...
சிரித்துக்கொண்டே மிக இயல்பாகவே நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
மிகுந்த முதிர்ச்சியோடு பக்குவமாக விலகுவதாகவும் சொன்னது பாராட்டுக்குரியதே....

தமிழக அரசை ஹைஜாக் செய்த பாஜக? மோசமான அதிகார துஷ்பிரயோகம்!

பாலாஜி பூபதி : இன்று மதிய மீட்டிங் கேன்சல், கட்சியில் இருந்து நேற்று முதல் ஒதுங்கி தான் இருக்கிறேன் - தினகரன் பேட்டி
யோசிக்க யோசிக்க நம்பிக்கை துரோகங்களும், விசுவாச துரோகங்களும் தான் விஞ்சி நிற்கின்றன.. நமக்கு சசிகலாவை பிடிக்கவில்லை, தினகரனை பிடிக்கவில்லை, இது எல்லாம் சரி.. ஆனால்..,
ஜெ சாகும் வரை, இத்தனை ஆண்டுகளாக ஜெயலலிதாவிற்கு பிடித்த சசிகலா யாரை சொல்கிறாரோ, அவருக்கே அதிமுகவில் சீட்டு கொடுத்தவர் ஜெ.. இன்று பதவியில் இருக்கும் அனைவருமே, சசிகலா மூலம் சீட்டு வாங்கி மந்திரி ஆனவர்கள் தான்.. ஒருவர் கூட ஜெ நேரடி தேர்வு அல்ல.. இப்படி அனைத்து பதவி சுகம், சொத்து சுகம் எல்லாம் சசிகலா மூலம் அனுபவித்தவர்கள் தான் இன்று அந்த நம்பிக்கைத் துரோகத்தை செய்துள்ளார்கள்.. சசிகலா குடும்பம் மட்டுமே அதிமுகவில் கொள்ளையடித்து வந்ததா ?! ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், எடப்பாடி என எல்லோருமே அத்தனை பரிசுத்தமானவர்களா, ஏன் தினகரன் குடும்பத்தின் மீது இத்தனை அழுத்தம்.., அவர்கள் இருந்தால் பாஜகவின் கரத்தை தடுப்பார்கள், எனவே அவர்களை அறவே ஒதுக்கவே இத்தனை திட்டங்கள், செயல்பாடுகள்..

எந்த தர்மம் வெல்லும்? - அ.தி.மு.க மானஸ்தர்களுக்கு சில கேள்விகள்

அ தி மு க - இரட்டை இலைபிரேக்கிங் செய்திகள், இன்டர்வெல் ட்விஸ்டுகள் என அடுத்தடுத்து நடக்கிற அரசியல் ஸ்டன்ட்கள் எல்லாம் இப்போது சாமானிய மக்களுக்கும் அத்துப்படி. 'நீங்க எந்த எந்த நேரத்துல எப்படி டைப் டைப்பா முழிய வெச்சுக்குவீங்கனு எங்களுக்கு நல்லாத் தெரியும்' என மக்களே கரைவேட்டிகளுக்கு டைமிங் கவுன்டர் கொடுக்கிறார்கள்.
'அரசியல்வாதி பேச்சு சொன்ன அடுத்த நிமிஷமே போச்சு...' என்பதுதான் லேட்டஸ்ட் சொலவடை. முன் தின இரவு ஒரு அணிக்கு ஆதரவாக உயிரைக் கொடுத்துக் கத்தும் ஒருவர் விடிந்தும் விடியாததுமாக எதிரணியில் தஞ்சம் புகுந்து ப்ளேட்டையே திருப்பிப் போட்டுத் தலைகீழாக தோசை சுடுவதெல்லாம் சமீபத்திய தமிழக அரசியலின் சாதனைகள்.
* 'தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்'னு உலகத்தில் எல்லோரையும் விட அதிகமாகச் சொன்ன அ.தி.மு.க அனுதாபிகளே... மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் சேரத் துடிக்கிற இந்தத் தருணத்தில் யாருடைய தர்மம் வென்றது? யாரோ ஒருவருடைய தர்மம் வென்றதானால் சூதுகவ்வியது உங்களில் ஒரு அணியைச் சேர்ந்தவர்களா அல்லது இந்தமுறையும் வழக்கமாக நீங்கள் மொட்டையடிக்கும் மக்களா?

அரசாங்கமா... அவமானமா? - ஆனந்த விகடன் தலையங்கம்


விகடன் டீம்விகடன் டீம்
தமிழக மக்கள், மோசமான ஒரு காலகட்டத்தை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கோடை வெப்பத்தால் புழுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சமும் மக்களைத் தாக்குகிறது. மக்களின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய அரசாங்கமோ, குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில்தான் மும்முரமாக இருக்கிறது. டாஸ்மாக்குக்கு எதிராக வீதிக்கு வந்து மக்கள் போராடினால், போலீஸைக் கொண்டு அடக்குகிறது அரசு. அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் இல்லாமல் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் காலியாகவே இருப்பதால், மக்கள் தினம் தினம் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இன்னொரு புறம், தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வற்புறுத்தி மூன்றுகட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

அமைச்சர்களுக்கு வந்த பயம் : தினகரன் கூறிய விளக்கம்!

கடந்த 5 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, உணவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம் மற்றும் சமூக நலத்துறை போன்ற அதிகளவில் பணம் புரளக்கூடிய முக்கியத் துறைகளில்
அமைச்சர்களுக்கு வந்த பயம் : தினகரன் கூறிய விளக்கம்!
இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்தது, அந்நியச் செலாவணி வழக்கு என்று தினகரன் மீது பல நெருக்கடிகள் வந்தநிலையில், அதிமுக கட்சியைக் காப்பாற்ற வேண்டி சசிகலா, தினகரன் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்கிவைத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி தெரிவித்தார். இதையடுத்து, ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குழு கூட்டம் நடைபெறுவதாக முதலில் தினகரன் அறிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இன்று ராயப்பேட்டையில் நடக்கவிருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கட்சிப் பணிகளிலிருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடந்த 5 நாட்களிலேயே அமைச்சர்கள் என்னை திடீரென நீக்க, ஏதோ ஒரு பயம்தான் காரணமாக உள்ளது. அது என்னவென்று தெரியவில்லை. ஒருசிலருக்கு உள்ள பயத்தால் என்னை ஒதுக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை நீக்குவதால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நன்மை என்றால் நான் விலகத் தயார்.

அதிமுகவிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்: தினகரன்

அதிமுகவிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்: தினகரன்
அதிமுகவிலிருந்து தான் நேற்றே ஒதுங்கிவிட்டதாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்,அந்நிய செலாவணி வழக்கு என ஒருபுறம் வழக்குகள் தினகரனைத் துரத்திக்கொண்டிருக்க, மறுபுறம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தினகரனுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆலோசனையின்படி, அதிமுக கட்சியைக் காப்பாற்ற சசிகலா, தினகரன் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்கிவைக்க முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 19 ஆம் தேதி (இன்று) மாலை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் குழுக் கூட்டம் நடைபெறுவதாக தினகரன் அறிவித்திருந்தார். தினகரனுக்கு கட்சியில் தங்க.தமிழ்செல்வன், ஜக்கையன், வெற்றிவேல் உள்பட 6 எம்.எல்.ஏகளின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம் :தர்மத்துக்கு கிடைத்த வெற்றி .

தர்மத்துக்கு கிடைத்த வெற்றி : ஓ.பி.எஸ்.தர்மயுத்தத்தின் முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதென்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முடிவெடுத்திருக்கிறார்கள் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து, பன்னீர்செல்வத்துடன் இணைந்து அதிமுக-வையும், சின்னத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார், நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி கூறினார். இதையடுத்து, பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு ஒன்றை அமைப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மைத்ரேயன் எம்பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், செம்மலை, ராஜகண்ணப்பன், விஸ்வநாதன், மோகன், சண்முகநாதன், நிர்மலா பெரியசாமி ஆகியோர் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு இன்று ஏப்ரல் 19ஆம் தேதி காலை வந்தனர்.

அதிமுகவுக்குள் உச்சக்கட்ட அடிதடி ஆரம்பம் ..

உச்சகட்ட குழப்பத்தில் #அதிமுக #அரசு கவிழும் அபாயம் .. டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என முதல்வருடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற #OPS விருப்பம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என ஜெயக்குமார் சூசகமாக கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியை அடுத்து டி.டி.வி தினகரன் இல்லத்திற்கு 8 எம்எல்ஏக்கள் மற்றும் 7 மாவட்ட செயலாளர்கள் நள்ளிரவில் ஆலோசனை நடத்தி உள்ளனர் என்று வெற்றிவேல் தெரிவித்தார் . மேலும் 19-04-17 அன்று மாவட்ட செயலார்கள் கூட்டம் 3 மணிக்கு அதிமுக தலைமை கழகத்தில் தினகரன் தலைமையில் நடைபெறும் என்று தகவல் தினகரன் கோஷ்டி அணியினர் தெவித்தனர்

அருவி .. ஒரு அழகான புகலிட குறும்படம் .. கனடாவில் இருந்து ...


அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை ஒரு நண்பர்  அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான 'அருவி' இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

பழனியும் பன்னீரும் தினகரனும் முதல்வர் பதவிக்கு போட்டி! கணிசமான எம்.எல்.ஏ.-க்கள் தினகரனுக்கு ஆதரவு ..

TTV Dhinakaran have the numbers to pull down the government - or even pose a credible threat? His camp says he has around 25 MLAs with him, the number could be much lesser in reality though.
 டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 8 எம்.எல்.ஏ-க்கள் அவரை சந்தித்து
பேசியுள்ளனர். அமைச்சர்கள் தங்க தமிழ்ச் செல்வன், ஜக்கையன், கதிர்காமு, வெற்றிவேல், சாத்தூர் சுப்பிரமணியம், செல்வ மோகன்தாஸ், ஏழுமலை, சின்னதம்பி உள்ளிட்டோர் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ; மேலும் தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். The political situation in Tamil Nadu is no less than a suspense thriller as of Tuesday night.
At least 20 Cabinet Ministers of Tamil Nadu - who were, until this morning at least, supporting the Sasikala faction of AIADMK - have now come out to say that neither Sasikala nor Dhinakaran will be allowed to continue with the party.
They have also announced that Sasikala is not the General Secretary of the party - something they swore to just two months ago.
So an apparently large number of Ministers and MLAs, including Chief Minister Edappadi Palaniswami, have unceremoniously dropped the Sasikala clan - but that is not the end of the TN political drama.
The Ministers did not make any mention of the merger with the OPS camp while making the announcement about dropping Dhinakaran and Sasikala - and sources say, that this means that the state just witnessed the birth of another faction of the AIADMK: Team EPS.

ஆஸ்திரேலியா ‘457 விசா’திட்டத்தை ரத்து செய்தது!... சுமார் 24 ஆயிரம் இந்தியர்களின் விசா காலி ?

இந்தியாவை பாதிக்கும் வகையில் நடவடிக்கையில் இறங்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் அடுத்து ஆஸ்திரேலியா இடம்பெற்று உள்ளது. ஆஸ்திரேலியா, தனது நாட்டில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை காரணமாக  திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்றது. அந்நாட்டு அரசு வெளிநாட்டு பணியாளர்கள் 4 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் ‘457 விசா திட்டம்’ என்ற பெயரில் விசாக்கள் வழங்கி வந்தது. கடந்த ஆண்டு நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் இந்த ‘457 விசா’ திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த 95 ஆயிரத்து 758 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 24.6 சதவீதம்பேர் இந்தியர்கள்தான்.
எந்த நேரம் நம்ம ஆளு அவுஸ்திரேலிய பிரதமரோடு  மாலை மாத்தினாரோ?..  பாக்கிரச்சே ஒரு மாதிரியா இருக்கு.  

அமைச்சர் ஜெயக்குமார் : தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது:

அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம்தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

சி.பி.எஸ். இ.,பள்ளியில் 10ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகிறது


புதுடில்லி: சி.பி.எஸ்இ., பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகப்படுகிறது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கினார். ஜனாதிபதி ஒப்புதல் சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரையி்ல் இந்தியை கட்டாயமாக்கப்பட வேண்டும் என பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்தது. குழுவின் பரிந்துரையை அடுத்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு சி.பி.எஸ்.சி மும்மொழிபாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரையில் கட்டாயமாக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.