திங்கள், 13 மார்ச், 2017

கோவை வடக்கு எம்எல்ஏ அருண்குமார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு அணியாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம் அணியினருக்கு மாறிவிடாமல் இருக்க சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண் குமார் கூவத்தூரில் இருந்து வெளியேறி, அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் மிகுந்துள்ளது. அதனால், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நம்பிக்கை தீர்மானத்தில் பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ ஆருகுட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராசு மற்றும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறகணித்த மேற்கு வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆகிய மூவரையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வைக்க திவாகரன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தார். அவர்களோ, கட்சியின் துணை பொது செயலாளரான டி.டி.வி. தினகரன் பேசினால் ஆலோசிப்போம் என்று கூறிவிட்டனராம்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

சிறையில் இருந்தே வென்ற போட்டி வேட்பாளர் அகிலேஷுக்கு அதிர்ச்சி

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மந்திரி அமர்மணி திரிபாதி. இவரது மகன் அமன்மணி திரிபாதி. மனைவி சாராசிங்கை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமன்மணி திரிபாதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமர்மணியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் சார்பாக நாட்டான்வா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அமன்மணி திரிபாதி மனு அளித்திருந்தார். இதனை அகிலேஷ் யாதவ் தலைமையிலான குழு நிராகரித்தது. சமாஜ்வாடி கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சிறையில் இருந்தபடியே சுயேச்சையாக போட்டியிட்டார் அமன்மணி திரிபாதி. வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாடி வேட்பாளர் குன்வர் கவுசல் கிஷோர் சிங்கைவிட 32 ஆயிரத்து 478 வாக்குகள் வித்தியாசத்தில் அமன்மணி திரிபாதி வெற்றி பெற்றார். இந்த முடிவை கேட்ட அகிலேஷ்க்கு அதிர்ச்சி ஏற்பட்டதாம். நக்கீரன்

வெள்ளி, 3 மார்ச், 2017

நீதிமன்றம்... நிறுத்தத் தவறினால், நீதிமன்றமும், ஈஷாவுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

1-20170225_JMT_0590-eவில்லா கட்டும் வில்லன். by Savukku · March 1, 2017
ஜக்கி வாசுதேவ் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 122 அடி உயர சிவன் சிலையை நிறுவி அதை திறப்பதற்கு பிரதமர் மோடியை வரவழைத்ததும், எதிர்ப்புகளை மீறி அதில் பிரதமர் கலந்து கொண்டதும் பல்வேறு மட்டங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷா மையம் குறித்தோ, ஜக்கி வாசுதேவ் குறித்தோ எவ்விதமான விமர்சனங்களையும் எழுப்ப முடியாது.   அந்த அளவுக்கு அவரது ஆதரவாளர்கள் பரவலாக பெருகி இருந்தனர்.   ஆனால், இன்று ஈஷா மையத்தின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தலுக்கு எதிராக பலத்த குரல்கள் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது.     ஈஷா மையத்துக்கு வரும் அனைவரையும் மூளைச்சலவை செய்து, அவர்களை அடிமைகளாக மாற்றும் வல்லமை பெற்ற ஜக்கி வாசுதேவுக்கு எதிராக இத்தனை குரல்கள் எழுந்திருப்பதே ஒரு வியப்பான விஷயம்.

அதிமுக எம்பிகளில் மூன்று அணி தம்பிதுரையின் பதவி காலி?

பிரதமர் மோடியுடனான பத்து நிமிட சந்திப்புக்கு இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.இந்த பயணத்தில் அவர் சாதித்தது என்ன என விசாரித்தால் உதட்டைப் பிதுக்குகின்றனர்,உயர் அதிகாரிகள்.
மாநில முதலமைச்சர்கள் பிரதமரைச் சந்திக்க டெல்லி செல்லும்போது,பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு.அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தால் மட்டுமே பிரதமரைச் சந்திக்கும் நாளுக்கு முன்னதாகவே டெல்லிக்குப் பயணமாவார்கள்.
இல்லையெனில் சந்திப்பு நடக்கும் நேரத்திற்கு 4 மணிநேரம் முன்பாக டெல்லிக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால் எந்த நிகழ்ச்சியும் இல்லாதநிலையில், 27மாலை சந்திப்புக்கு 26-ம் தேதி இரவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்குச் சென்றுவிட்டார்.

121 எம்.எல்.ஏக்களுக்கு தலா 4கிலோ தங்கம்!

பழனியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,"மூன்று கிலோ தங்கத்திற்கும் மூன்று கோடி ரூபாய்க்கும் ஆசைப்பட்டு மக்களின் நன்மதிப்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் இழந்து விட்டார்கள்.இனி அவர்களால் கவுன்சிலராகக் கூட ஜெயிக்க முடியாது” என்று கூறியது, சாதாரணமானது அல்ல. இதன் பின்னணியை விசாரித்தோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறை தேடுதல்வேட்டை நடத்தியபோது, அவர்களுக்கு நெருக்கமான ஒரு நகைக்கடையிலும் சோதனை நடத்தியது. அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரின் லஞ்சப்பணம் வைரங்களாக அந்த நகைக் கடையில் மாற்றப்படுகிறது என சர்ச்சைக்குள்ளான நகைக்கடை,வைர வியாபாரத்துக்குப் பேர்போன கீர்த்திலால் ஜுவல்லரி.அந்த நகைக் கடையிலிருந்து 500 கிலோ தங்கம் 121 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது என வருமானவரித் துறை கண்டுபிடித்தது.

வியாழன், 2 மார்ச், 2017

எலிசபெத் மகாராணியோடு மோடி பாகுபலி 2 பார்க்கப்போகிறார் .. இங்கிலாந்து ராணியை விட இவர் ஆடை ரிச் ஆக இருக்கணுமே? rss கவலை? ....


ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்தியா முழுக்க பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது. அனுஷ்கா–பிரபாஸ் நடித்த இந்தப் படம் இதுவரை ரூ.600 கோடி வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. இதில் ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா என பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவந்தது. இதனால் இதன் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு முதல் பாகம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னரே ஏப்ரல் 24ம் தேதி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடுயூட்டில் இந்தியாவின் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்புக் காட்சியாக இந்தப் படம் திரையிட உள்ளது. பாகுபலி 2 படத்துடன் மற்ற சில படங்களும் இந்த நிகழ்வில் திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் ராணி இரண்டாம் எலிசபெத்தும், பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு முன்னால் இரு நாட்டு தலைவர்களும் பாகுபலி 2 படத்தை பார்க்க உள்ளனர்.  மின்னம்பலம்

என் தேசம் என் உரிமை கட்சி தனித்துப் போட்டி! திராவிட மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டணி கிடையாதாம்!


வரவிற்கும் உள்ளாட்சி தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று என் தேசம் என் உரிமை கட்சி அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 'லஞ்சம் ஒழிந்தால் நாடு முன்னேறும்’ என்ற முழக்கத்துடன் புதிதாக என் தேசம் என் உரிமை என்ற கட்சியை துவங்கினர். இந்த கட்சியை துவங்கிய சில நாட்களில் ஆன்லைன் மூலம் 6 லட்சம் உறுப்பினர்கள் இக்கட்சியில் இணைந்துள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இக்கட்சியின் ஒருங்கிணைபாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது,

தாமிர பரணி உபரி நீரை கோக் பெப்சி கம்பனிகள் பயன்படுத்த (அ) நீதிமன்றம் அனுமதி!

Sundarrajan.Mullai? தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அறிகிறோம். இந்தியாவின் “நீராதார துறை ” (central water commission) தெளிவாக சொல்லியுள்ளது, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என்றும் பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரி நீர் இருப்பதாக சொல்லுகிறது அந்த ஆய்வு அறிக்கை.
ஒரு உண்மையென்னவெனில் தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே (water guage) கிடையாது, அதனால் எந்த இடத்தில் ஓடும் நீரை வைத்து நீதிமன்றம் உபரி நீர் என்று சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே உபரி என்று ஒன்று இருந்தால் கூட (ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்ளுவோம்) அதை எப்படி ஒரு தனியார் நிறுவனம் எடுக்க முடியும்?

ஆர்எஸ்எஸ் தலைவர் : கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொலை செய்தால் 1 கோடி பரிசு !

pinarayi-vijayanகேரள முதல்வர் பினராயி விஜயன் தலையை வெட்டி கொலை செய்பவர்களுக்கு  1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய பிரதேச ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா  தலைவர் டாக்டர் சந்த்ரவாத் அறிவித்துள்ளார்.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களுக்கும், தங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதற்கும் முதலமைச்சரும், கம்யூனிஸ்ட் தலைவருமான பினராயி விஜயனே காரணம் என்றும் சந்திரவாத் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடும் பினராயி விஜயனின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு தனது சொத்துக்களை விற்றாவது 1 கோடி ரூபாய் பரிசு தருவதாக மத்திய பிரதேச ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா  தலைவர் டாக்டர் சந்த்ரவாத் அறிவித்துள்ளார்.thetimestamil.com

சசிகலா புஸ்பா மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற சகோதரிகளில் பானுமதியைக் காணவில்லை!

கடந்த 08.08.2016 அன்று நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகள் பானுமதியும் அவரது அக்காவுமான ஜான்சிராணியும், தாங்கள் எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த போது அவர் உட்பட கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதிப் ராஜா ஆகியோர் தங்களுக்குப் பாலியல் தொல்லை தந்தனர் என்றும் அதற்கு சசிகலா புஸ்பாவின் தாய் கௌரி உடந்தை என்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின்கோட்னீசிடம் புகார் கொடுத்தவர்கள் நடடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.>அவர்களது புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னத்தாய் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். சசிகலா புஸ்பா மற்றும் தாய் கணவர், மகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தனக்கெதிரான எப்.ஐ.ஆர்களுக்கு முன் ஜாமீன் பெற்ற சசிகலா புஸ்பா, வழக்கின் விசாரணையின் பொருட்டு புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

ஜெ.மரணத்தில் மர்மம், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்' பி.ஹெச். பாண்டியன் !

vikatan :
பி ஹெச் பாண்டியன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் புதைந்துள்ளன என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகிறார்கள் ஓ.பி.எஸ். அணியினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது அ.தி.மு.க.வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் பி.ஹெச்.பாண்டியன்.அப்போது அவர் கூறுகையில்,"ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன என்று நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம்.அதன் தொடர்ச்சியாக அதிமுக எம்பிக்கள் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துஉள்ளோம்.

சசிகலா கலண்டர் .. அதிமுக தொண்டர்கள் குண்டர்கள் அதிர்ச்சி!

கோவை:சசிகலா படம் போட்ட காலண்டரை, அ.தி.மு.க.,வினர் பலர் திருப்பி கொடுத்ததால், சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வின் தற்காலிக பொது செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்ட பின், கோவையில் அக்கட்சி நிர்வாகிகள் பலர், ஜெ., மற்றும் சசிகலா படங்களுடன், தினசரி காலண்டரை ஆயிரக்கணக்கில் அச்சிட்டனர். இவற்றை, பகுதி, ஒன்றிய செயலர்கள் மூலம் பேரூராட்சி,ஊராட்சி, நகர, கிளை நிர்வாகிகளுக்கு வழங்க முடிவானது. ஆனால், சசிகலா படம் போட்ட காலண்டரை பெற்று கொள்ளவும், அதை வீட்டில் மாட்டி வைக்கவும், அ.தி.மு.க.,வினர் பலர் விரும்பவில்லை. இதனால், நுாற்றுக்கணக்கான காலண்டர்கள், அந்தந்த பகுதி செயலர்களின் வீடுகளில், குவிந்து கிடக்கின்றன.

தனுஷின் பூர்வீகம் அறிய டி என் ஏ பரிசோதனை!


தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கொண்டாடிவரும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினரின் வழக்கு விசாரணை கடந்த செவ்வாய் கிழமை மதுரை மேலூரிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்றது.
கதிரேசன் தம்பதியினர் சமர்ப்பித்த பள்ளி மாற்று சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷிடம் இல்லை. தனுஷ் சமர்ப்பித்த பிறப்புச் சான்றிதழில், எந்த அடையாளங்களும் குறிப்பிடப்படாதது, அதில் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஆகிய ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதை தனுஷின் குளறுபடி ஆதாரங்கள்: நாளை தீர்ப்பு என்னாகும்? என்ற தலைப்பில் நமது மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்திய வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு பதிலாக இனி சீனா செல்வார்கள் ?

இந்திய மாணவர்களுக்கு குறிப்பாக பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கணிதம் பயின்றவர்களுக்கு, அமெரிக்கா செல்வது வாடிக்கையாகி வெகு காலமாகிறது. உயர்கல்விக்காக செல்லும் அவர்கள் பின்னர் அங்கேயே பணியில் அமர்த்தப்பட்டு தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்க குடிமகனாக ஆவது ஒரு தொடர்கதை. இப்படி போவது அவர்களது கனவு என்பது ஒருபுறம். கிடைக்கும் கல்வியின் தரம் மறுபுறம். இதனால் தான் அமெரிக்க பலகலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பெரும் எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் இருந்து வருகின்றனர். சொல்லப்போனால் வருடாவருடம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

உயர்கல்வியில் இடஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம்! .... சமுகநீதிக்கு அநீதி !


கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சில ' முன்னுரிமைகள் மாறாமலே இருப்பது' வருத்தமளிக்கிறது என்றும் தேசிய நலன் கருதி உயர் கல்வி நிலையங்களில் உள்ள எல்லாவிதமான இட ஒதுக்கீடுகளும் நீக்கப்படத் தேவையான வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாயன்று வலியுறுத்தியுள்ளது.
உயர் சிறப்பு கல்விப்புலங்களுக்கு இடஒதுக்கீட்டு முறை அல்லாமல் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் தகுதி அடிப்படையை மீறி இடஒதுக்கீடு முறை இன்னமும் பின்பற்றப்பட்டு வருவதாக நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் P.C.பந்த் தெரிவித்தனர்.

ராமதாஸ் :சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், சீனிவாசன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து வந்துள்ளனர். தண்டிக்கப்பட்ட குற்றவாளியை சிறையில் போய் பார்ப்பது எல்லா வகையிலும் தவறு. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள், கட்சியில் பதவி வகிக்கக் கூடாது. இதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார். நக்கீரன்

புதன், 1 மார்ச், 2017

கலைஞர் நலமாக உள்ளார் .. ஆதாரமாக போட்டோ வெளியானது!

DMK chief Karunanidhi is recovering: Photo released
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு ஆதாரமாக, கட்சி செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய படம், கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதலே ஒவ்வாமை, சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார் கருணாநிதி. : 65வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் இதையடுத்து கோபாலபுரம் வீட்டிலேயே கருணாநிதி தீவிர ஓய்வு பெற்று வருகிறார். அவருக்கு பேச்சு தெரபி உள்ளிட்ட பல பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

போராட்டத்தில் நக்சலைட் ஊடுருவல் : எச்.ராஜா

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக சில பிரிவினைவாத நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளன என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா மற்றும் மத்திய பாரதிய ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "இந்தியா முக்கிய கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அம்சமும் நமக்கும் கிடைக்க வேண்டுமென்று உலக நாடுகள் எண்ணுகின்றன. இதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைதான். அனைத்து துறைகளிலும் நாட்டை சமமாக முன்னேற்ற வேண்டுமென்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அதற்கான திட்டங்களை வகுத்து ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக-விற்கு மாற்றாக பாரதிய ஜனதா ஆட்சி வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு பங்களா .. 1 கோடி ரூபாய்! தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு பணம் தியாகம்?


ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது தொகுதிகளில் சொகுசு பங்களா கட்டிக்கொள்ள தெலுங்கானா அரசு தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் பல நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியபோதும், அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவர் மக்கள் வரிப்பணத்தில் கோயில்களுக்கு வேண்டுதலை நிறைவேற்ற தங்கம் மற்றும் வைர நகைகளை காணிக்கையாக செலுத்தினார். சில மாதங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தினார். இதன்பின்னர் அவர் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில், இன்று ஐதராபாத் நகரில், ரூ.100 கோடி செலவில் எம்.எல்.ஏ., குடியிருப்புக்களை கட்ட பணம் ஒதுக்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தங்களது தொகுதியில் அலுவலகத்துடன் கூடிய சொகுசு பங்களா கட்ட தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மின்னம்பலம்

உதயகுமார் மோடி அரசு வெளி நாட்டினருக்கு கைக்கூலியாக செயல்படுகிறது! நெடுவாசல்...


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை இந்த போராட்டம் ஓயாது என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இன்று 14-வது நாளாக பொது மக்கள், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

Save Sakthi.. நடிகை வரலக்ஷ்மி பெண் உரிமை அமைப்பு தொடங்கி உள்ளார்


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் சமீப காலங்களில் அதிக அளவில் சிறுமிகளும் பாதிக்கப்படுகின்றனர். நடிகை பாவனாவுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் வன்முறை சம்பவம் திரைத்துறையச் சார்ந்தவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பின் நடிகை சந்தியா, வரலட்சுமி ஆகியோர் தங்களுக்கும் இது போன்ற கொடுமைகள் நடந்துள்ளது என்று பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக நடிகை வரலட்சுமி ‘SAVE SAKTHI' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து மனுக்களை வாங்கி அதற்குரிய அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க இந்த அமைப்பு வழி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுவாசல் போராட்டம் நிறுத்தப்படுமா? போராட்டகுழு முதல்வர் சந்திப்பு!



ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நெடுவாசல் போராட்டக் குழுவினர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுவாசலில் இன்று 14 வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும், இளைஞர்களும் நெடுவாசலுக்கு வருகை புரிகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்ட எழிச்சியில் உதித்த "என் தேசம் என் உரிமை கட்சி" ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நேற்று இரவு ஒரு குழுவாகப் புறப்பட்டு நெடுவாசல் வந்தடைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலைகளின் நுழைவுப் பகுதியிலே போலீஸார் முகாமிட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் வரும் அத்தனை வாகனங்களையும் ஆய்வு செய்து, அங்கே வருகை தருவோரின் நோக்கம், வாகனத்தின் எண், வருவோரின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்கிறார்கள்.

கோபிநாத்: எந்த கொம்பனையும் தொடவிடமாட்டேன்..! நெடுவாசல் என் சொந்த மண்..!


தங்களுடைய அதீத ஒற்றுமையின் மூலம் வாடிவாசலைத் திறந்து, ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டிய இளைஞர்கள்,
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
நெடுவாசலுக்கே சென்று போராட்டத்துக்கு ஆதரவளித்துத் திரும்பியுள்ள ‘நீயா நானா‘ கோபிநாத் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நெடுவாசலில் இருந்து வெறும் நான்கு கி.மீ தூரத்தில் இருக்கும் சித்துக்காடுதான் என்னுடைய பூர்வீகம்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் நெடுவாசலில் இருந்து 20 கி.மீ தூரத்தில் இருக்கும் அறந்தாங்கி. ஒரு பிரபலம் என்பதை எல்லாம் கடந்து, இது என் ஊரின், என் மண்ணின் பிரச்னை. அதனாலே அங்கு சென்று போராட்டக்குழுவினருக்கு ஆதரவளித்துப் பேசிவிட்டு வந்தேன்.
ஆரம்பத்தில் இங்கு இடம் எடுத்தபோது மண்ணெண்ணெய் எடுக்க என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அன்று இதுகுறித்து பெரிய விழிப்பு உணர்வு இல்லை, மண்ணெண்ணெய்தானே என அஜாக்கிரதையாக இருந்துவிட்டனர்.

நெடுவாசல் .. முட்டாள் / மோசடி அரசுகளை நம்பி நிலத்தை எப்படி கொடுக்கமுடியும்?

நெடுவாசல்போபால் விஷ வாயு விபத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடியவர்கள் எல்லாம் ஒரு நொடி நின்று ஈரத் துணி கொண்டு முகத்தை மூடியிருந்தால், உயிர் பிழைத்திருப்பார்கள் என்ற அடிப்படை அறிவைக் கூட மக்களுக்குப் புகட்டாத இந்த அரசை நம்பி எப்படி எங்கள் விவசாய நிலங்களைக் கொடுக்க முடியும்?/ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த ஓ.என்.ஜி.சி குழாய்...நெடுவாசல் நிஜங்கள்..! #SpotVisit மாலை நேரம். நெடுவாசல் கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். வடக்காடு கிராமத்தில் தன் வயலில் குடும்பத்தோடு கடலைப் பறித்துக் கொண்டிருந்தார் விஜயா அக்கா... இங்கன என்ன பிரச்சினை இருக்குன்னு சரியாவே வெளங்கல தம்பி. இந்தப் பக்கத்துல ஏற்கனவே பெட்ரோல் எடுக்குறம்ணு சொல்லி ரொம்ப வருஷத்துக்கு முந்தியே பைப்பெல்லாம் போட்டாய்ங்க. இப்போ திடீர்னு ஏதோ புதுசா ஹைட்ரோ கார்பன் வருதுங்குறாய்ங்க. அது வந்தா தண்ணியில்லாம போயிடுமாமில்ல???. அத விடக் கூடாது தம்பி.  நிலத்தடி நீர நம்பித்தா இங்க எல்லாமே இருக்கு. இதோ எம் பொண்ணு கம்ப்யூட்டர் படிச்சுட்டு எங்கூட கொல்லையில தான் வேலை செய்யுது. எங்களுக்கு விவசாயந்தான்... அத மீறி வாழ்க்கை இல்ல. இந்த மத்திய அரசாங்கம் அதப் புரிஞ்சுக்கிட்டு இடத்த காலிபண்ணிடனும்..." என்று உணர்ச்சிவயப்பட்டு பேசினார்.

சசிகலா புஷ்பா மீது குற்றம் சுமத்திய பணிப்பெண்கள் புகார் வாபஸ்.. தூண்டுதலால் பொய் புகார்...


சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்த சகோதரிகள் அந்தர் பல்டி அடித்து தாங்கள் அரசியல் காரணங்களுக்காக போலி புகார் அளித்தாக போலீசில் மனு அளித்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர்.
சசிகலா மீது எம்.பி. சசிகலா புஷ்பா மீதும் அவரின் கணவர்,மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியில் இளம்பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வந்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் எம்.பி. சசிகலாபுஷ்பா மற்றும் அவரின் குடும்பத்தினர் ‘எங்களை பாலியல் தொந்தரவு செய்தார்கள்’ என்றும் ‘எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் அளித்திருந்தனர்.
அவர்கள் புகாரில் திசையன்விளை ஆணைகுடி ஊரைச் சேர்ந்த நானும் எனது அக்காள் ஜான்சிராணியும் கடந்த 2011-ம் வருஷம் சென்னையில் இருக்கும் சசிகலா புஷ்பா வீட்டு வேலைக்குப் போனோம்.