வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

வாசுகி பாஸ்கர் :வந்தேறி மாடு The Immigrant Cow இணைய பக்கத்தை குறித்து Times of India

ஒரு பிராமண பையனின் புகைப்படத்தை போட்டு, "GOES TO ROCK CONCERT, TRIES TO FIND WHICH THAALAM THEY ARE PLAYIN IN" என்பன போன்ற மொன்னையான ஜோக்குகளை எல்லாம் சுய விமர்சனம் என்று அவர்களே ஜோக்கடித்து அவர்களே சிரித்து கொள்வது தான் Tambrahm (Tamil Brahmin) ஜோக்குகள். அதில் ஒரு சாதி பிரச்சாரம் இருக்கும், சுய பெருமை பீற்றல் இருக்கும், பெரிய விவகாரங்களை மெல்லிய ஜோக்குகளால் அதன் வீரியத்தை மறைக்கும் அயோக்கியத்தனம் இருக்கும், அதை கொண்டு போய் கிழித்து தொங்க விடும் வந்தேறி மாடு பக்கத்தில் வைப்பது தில்லாலங்கடி வேலை.
வந்தேறி மாடு The Immigrant Cow இணைய பக்கத்தை குறித்து Times of India வில் ஒரு கட்டுரை வந்து இருக்கிறது, இவ்வளவு வேகமாக பார்வையை நாற்பக்கமும் ஈர்க்க செய்த அந்த பக்கத்தின் அட்மின் அனைவரையும் மனதார வாழ்த்த வேண்டும். நுணுக்கமான விவகாரங்களை ஒரு மீம்ஸில் செய்து விடுகிறார்கள், Rationalism குறித்து பரந்த பார்வை மகிழ்ச்சி.
"ஒடுக்கப்பட்ட சமூகத்தை, ஆதிக்க சமூகத்தோடு ஒப்பிட்டு நடுநிலை பேசினால், அங்கே மேலும் ஆதிக்க சாதிகளை மகிழ்விப்பதாய் ஆகும், அவர்களுக்கு ஆதவராய் போகும்" என்று பேட்டி கொடுத்திருப்பது, இந்த சமூகத்தை, சமூகநீதியை புரிந்து வைத்திருப்பதின் Class கைதட்டல்கள்.
உங்களை தவிர்க்க முடியாமல் உங்களுக்கான ஒரு கவரேஜ் கிடைத்திருப்பது மகிழ்ச்சி,
( Blogs and Facebook pages like `Tambrahm rage' and `Tambrahm tips' which mock the Tamil Brahmin identity through memes have been around for a few years now.But these pages catered to a Chennai-centric and cosmopolitan audience. )

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு முதல் சுற்று நிறைவு

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. இந்த முதல் சுற்றில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் சுற்று நிறைவடைந்துள்ளதால் அதில் பங்கு பெற்ற வீரர்கள் வாடிவாசலை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஓ.பி.எஸ் - சசிகலா விவகாரம் - சட்டவல்லுநரின் கருத்து!

இன்றைக்கு நடந்து வரும் தமிழக அரசியல் சூழல் அக்கப்போராக தான் உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள், பொதுமக்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த அசாதாரன சூழல். அடுத்து என்ன நிகழுமோ என்று தமிழகமே எதிர்பாத்துக்கொண்டுள்ளது.து குறித்து,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெனித்தஅலெக்ஸ் நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி. ;
நக்கீரன் : தன்னுடைய பதவி விலகல் கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டது, சசிகலாவின் மிரட்டல் அடிப்படையில் தான் ஒப்படைக்கப்பட்டது, அதை சட்டப்படி திரும்ப பெறுவேன் என்ற ஓ.பி.எஸ்சின்  முயற்சி பலன் தருமா ..
 வழக்கறிஞர் ஜெனிதா : திரும்பப்பெற வாய்ப்பில்லை ....!
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை 3 - ன் கீழ் உள்ள பதவிஏற்பு உறுதிமொழி மூலம் தான் ஆளுநரிடம் பதவியேற்போ, பதவிவிலகலோ செயல்படுத்தப்படுகிறது ..! அந்த பதவி ஏற்ப்பு உறுதிமொழியை ஆளுநர் ஏற்று அரசிதழிலோ அல்லது பொது அறிவிப்பிலோ வெளியிட்டபின்பு பதவி விலகல் திரும்ப பெறுவதென்பது சட்டத்தில் இடமில்லை.

எம் எல் ஏயை காணவில்லை! கிருஷ்ணராயபுரம் கீதா mla .. கணவர் மணிவண்ணன் ஆட்கொணர்வு மனு தாக்கல்!

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் மணிவண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா நேற்று கூட்டியிருந்தார். இதில் பேசிய சசிகலா, "நம்மைப் பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. ஒற்றுமையுடன் இருப்போம்" என அறிவுறுத்தினார். வழக்கமாக கூட்டம் முடிந்து எம்எல்ஏக்கள் விடுதிக்கோ, தங்கள் வீடுகளுக்கோ செல்வார்கள். ஆனால், நேற்று கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்கள் யாரையும் அதிமுக தலைமை வெளியில் விடவில்லை. கல்பாக்கத்தில் உள்ள அரசு விடுதியில் சசிகலாவுக்கு ஆதரவான 130 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீதி மன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு... சசிகலா முதல்வராக முடியவே முடியாதாம்?

தமிழகத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் ஆளுநரை சந்தித்தனர். இருவரிடமும் ஆலோசனை நடத்திய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், ஜனாதிபதிக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பாரா? இல்லை அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பாரா? என்ற நிலை தற்போது ஆளுநர் கையில்தான் உள்ளது. மேலும், ம இந்நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் பரவிவரும் செய்தியில், சசிகலா இப்போதைக்கு முதல்வராக முடியாதாம். அதனால்தான் ஆளுநர் அவசரமாக டெல்லி சென்று சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்துவிட்டு மும்பை சென்றுவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிடாஸ் முதலாளி சசிகலா வெறும் ஆயம்மாவா? தமிழகம் திவாலாகி கொண்டிருப்பது தெரியவில்லையா?

FOOD FOR THOUGHT Does Rs. 11, 432 Crores of Liquor Sales to TASMAC (Tamil Nadu State Marketing Corporation) by Jayalalitha's MIDAS GOLDEN DISTILLERIES PRIVATE LIMITED, HE ED THE IMPLEMENTATION OF PROHIBITION IN TAMIL NADU ? Siva Elango, President, Satta Panchayat Iyakkam
MIDAS GOLDEN DISTILLERIES PRIVATE LIMITED, the major supplier to TASMAC was indirectly owned by JayaLalitha Aide VK Sasikala brother's son - in - law Dr Sivakumar and Karthikeyan Kaliyaperumal. MIDAS is currently owned by Hot Wheels Engineering Private Limited and Signet Exports Private Limited. (97% of share holdings together by VK Sasikala, Illavarasi (VK Sasikala's Sister in law) . Three days before VK Sasikala was sent out from Poes Garden , Mr CHO SRINIVASAN RAMASWAMY has been appointed as the DIRECTOR for a total of 9 companies inclusive of Hot Wheels Engineering Private Limited and Signet Exports Private Limited in 2011 . This e vidently proves VK Sasikala is a binamy and MIDAS GOLDEN DISTILLERIES PRI VATE LIMITED IS OWNED BY THE CHIEF MINISTER OF TAMIL NADU Ms. JAYALALITHA
Don Ashok ஏன் இந்த தமிழக மக்கள் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள்? சசிகலாவை ஆயம்மா, வேலைக்காரி என கிண்டல் செய்வதைவிட ஒரு அரசியல் குருட்டுத்தனம் இருக்க முடியுமா? எந்த ஆயம்மா சாராய ஆலை வைத்திருக்கிறார்? எந்த வேலைக்காரி ஜாஸ் தியேட்டர் வாங்கியிருக்கிறார்? பாத்திரம் விளக்குகின்றவரால் பையனூர் பங்களாவை பிடுங்க முடியுமா? இப்போது கங்கை அமரன் தனது பையனூர் பங்களாவை சசிதான் பிடிங்கினார் என பேட்டி கொடுக்கிறாரே, பையனூர் பங்களா பிடுங்கப்பட்டபோது ஜெ தானே முதல்வர்? அப்போதே பிரஸ்மீட் வைத்து அந்த பிடுங்கலில் சம்பந்தமே இல்லாத ஜெவிடம் நியாயம் கேட்க வேண்டியதானே? முடியாது! ஏனெனில் பிடிங்கியது ஜெ-சசி என இருவருமாக சேர்ந்துதான். பாலு ஜுவல்லர்சில் இருந்து ஜாஸ் தியேட்டர் வரை இருவரும் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்பதுதான் உண்மை. இதில் எங்கே ஜெ முதலாளியானார், சசி வேலைக்காரி ஆனார்? கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?

கேள்விகள் ???? அடுத்த முதல்வர்? மீண்டும் தேர்தல்? இடையில் ஆளுநர் ஆட்சி?

l. . ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2 சசிகலா மீதான சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
3 சொத்து குவிப்பு வழக்கில் குமாரசாமி தீர்ப்பா இல்லை குன்ஹா தீர்ப்பா என்று தெரியவில்லை. சுவாமி சசிகலாவை ஆதரிப்பதை பார்த்தால் அது குமாரசாமி தீர்ப்புதான் என்று எண்ணத்தோன்றுகிறது.
 4 . அப்படியே குன்ஹா தீர்ப்பாக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடி புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவே இது மீண்டும் தேர்தலை நோக்கியே பயணிக்கும் என்று தெரிகிறது. ஒன்று - குமாரசாமி தீர்ப்பு - சசிகலா முதல்வர். இரண்டு - குன்ஹா தீர்ப்பு - ஓ பி எஸ் - க்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு. புதிய மந்திரி சபை. மூன்று - கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு மீண்டும் தேர்தல். தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை தீர இன்னும் பல மாதங்கள் ஆகலாம்...  உண்மையான்னு தெரியல..  முகநூல் பதிவு  Krishnan Kumar

மெரீனா தீவைப்பு.. குட்கா ஜோர்ஜ் மாற்றம் ..முன்பே கூவிய முகநூல் whistle blower

நடுகுப்பம் மீனவர்கள் பகுதிக்கு சென்று தீ வைத்தது எந்த காவல்துறை அதிகாரியின் தலைமையிலான குழு என்று எனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் விசாரித்துவிட்டேன்.. யாருக்கும் அதற்கான பதில் தெரியவில்லை.. அந்த கேரக்டரும் பின்னால் இருந்து இயக்கியது யார்.. என்பதும் மிக ரகசியமாக இருக்கிறது. நடுக்குப்பத்தில் நடந்தது எல்லாம் திட்டமிடப்பட்டு நடந்தது. எதற்காக செய்தார்கள் எனபதில்தான் அந்த அரசியல் ஒளிந்திருக்கிறது. இப்போது சென்னையில் அதேப்போன்று ஏதேனும் அசம்பாவிதம் மர்ம நபர்களால் நடத்தப்பட்டுவிடக்கூடாது என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை கமிஷனரும் நம்ம மலையாள சேட்டனுமான ஜார்ஜை முதல்வர் பன்னீர் செல்வம் மாற்றப்போவதாக தகவல்கள் வருகின்றன. அப்புறம் இரண்டு செய்திக்கும் தொடர்பில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
முகநூல் பதிவு Bala G முகநூல் பதிவு  

Sivasankaran Saravanan :ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தை கேலிக்கூத்தாக்கியதில் பன்னீருக்கும் பங்கிருக்கிறது..!

எனக்கென்னவோ ஓபிஎஸ் சை விட ஜெ.தீபா சற்று நேர்மையானவராக தெரிகிறார். தன்னை மருத்துவமனையில் ஜெயலலிதா வை பார்க்க அனுமதிக்கவில்லை என அப்போதும் சொன்னார் இப்போதும் சொல்கிறார். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவை எதிர்ப்பவரும் இவரே.
செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி போன வாரம் வரைக்கும் சசிக்கு முட்டுக்கொடுத்து வந்த பன்னிர் இன்று தனக்கு பதவி இல்லையென தெரிந்தவுடன் சசியை எதிர்ப்பது நேர்மையான செயலாகத் தெரியவில்லை. ஓபிஎஸ் மட்டும் அன்றைக்கே தான் ஜெயலலிதா வை பார்க்கவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தால், என்ன செய்வதென்று தெரியாமல் புழுங்கிக்கொண்டிருந்த ஜெ விசுவாசிகள் கண்டிப்பாக சசிகலாவிற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள் ..! ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தை கேலிக்கூத்தாக்கியதில் இவருக்கும் பங்கிருக்கிறது..! முகநூல் பதிவு சிவசங்கரன்

Ayyar :யார் இந்த பன்னீர்செல்வம்?! தமிழனுக்கு அங்கீகாரம் கொடுப்போம்?

"இவரே பரவாயில்லை...!..இவர்தான் வேண்டும்..!" என்று மக்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ள தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் பற்றிய சில தகவல்கள்.
"பேச்சிமுத்து" என்ற கிராமத்து மணம் வீசும் தமிழ்ப்பெயர்தான் அவரின் இயற்பெயர். இந்த பெயர் வீட்டில் மூத்தவர் ஒருவரின் பெயராக இருந்ததால், பன்னீர்செல்வமாக மாறினார். இளவயதில் எம்ஜிஆர் பக்தராக வலம்வந்த இவர் அவரைப்போலவே "ஓபிஎஸ்" என்னும் மூன்றெழுத்துடன் அரசியல் உலகில் வலம்வரத்தொடங்கினார்.
டீக்கடை நடத்தியவர் என்று கூறும் பலருக்கு அதற்கான காரணம் தெரியாது. பல ஏக்கர்களில் விவசாயம் பார்க்கும் குடும்பத்தில் பிறந்தவருக்கு டீக்கடை நடத்தி பிழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதே இல்லை. தாய் மூகாம்பிகை பால்பண்ணை என்ற பெயரில் பெரிய பால்பண்ணையை ஆரம்பித்த இவர், அதில் உபரியாக கிடைக்கும் பாலை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தனது நண்பர் விஜயனுடன் இணைந்து "PV கேண்டீன"் என்ற பெயரில் டீக்கடையை தொடங்கினார்.

சசிகலாவை விட்டு பிரிந்த பிறகு உத்தமர் வேடம் போட முயற்சி ஓ.பன்னீர்செல்வம் மீது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த அனைத்திலும் சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்து விட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம்
.  சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை விட்டு பிரிந்த பிறகு உத்தமர் வேடம் போட முயற்சி செய்கிறார் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– விசாரணை கமி‌ஷன் தமிழகத்தின் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். ஆனால், அதன்பின்னர் 24 மணி நேரமாகியும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாதது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

சஞ்சய் அரோரா புதிய சென்னை காவல் ஆணையராக ... குட்கா மாமூல் ஜோர்ஜ் விடுவிப்பு

சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டு சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டதாக தகவல் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அறிவிப்பு சற்று நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நக்கீரன்

கூவத்தூர் சிறப்பு முகாமில் (ரிசோர்ட்) 12 எம் எல் ஏக்கள் உண்ணாவிரதம்

நக்கீரன் : சசிகலா கோஷ்டியின் பிடியில் உள்ள 12 எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்! கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 எம்.எல்.ஏக்கள் தடபுடல் விருந்துகளை தவிர்த்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சசிகலா கோஷ்டியினர் அதிமுக எம்எல்ஏக்களை சொகுசுப் பேருந்தில் அழைத்துச்சென்று அவர்களை நேற்றிரவு முதல் கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூரில் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். எம்எல்ஏக்கள் மற்றவர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து கும்பல் இறக்கப்பட்டுள்ளதாக தகவல். ரிசார்ட் பகுதியாக அன்றாடப் பணிக்கு செல்லூம் மக்களைக் கூட விடாமல் தடுத்து அவர்களை அடித்து விரட்டி வருகின்றனர்.

எம்எல்ஏகளுக்கு சொகுசு காரு, பணம், பட்டாவோட நிலம் .. மிடாஸ் முதலாளிகள் வாக்குறுதி!

மக்கள் சோத்துக்கு அலையுறான், எம்எல்ஏவுக்கு பார்ச்சூனர் காரு, பணம், பட்டாவோட நிலம் பாத்துக்கோங்க இளைஞா்களே?? அதிமுக எம்எல்ஏக்களுக்கு தற்போது அதிர்ஷ்டம் சொகுசு ஓட்டலில் வைத்து கொட்டுகிறது. எம்எல்ஏக்களுக்கு இனோவா, பார்ச்சூனா், கிறிஷ்டா ஆகிய கார்களுக்கு முன்பணம் கட்டப்பட்டுள்ளது. இதோடு மட்டும் அல்லாது அவா்களுக்கு நிலம், மற்றும் ரொக்க பணமும் தேவைப்படும் அளவு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு ஏழை எம்எல்ஏக்கள் உச்சக் கட்ட சந்தோஷத்தில் உள்ளனா். இதில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவின் முகாமில் இருந்தாலும் அவா்கள் ஓபிஎஸ்க்குத் தான் ஆதரவு அளிப்பார்கள் எனவும் தெரிகிறது. இவா்கள் மட்டும் அல்லாது சசி ஆதரவு எம்எல்ஏக்கள் கூட ஓபிஎஸ் பக்கம் சாய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ 30 போ் உண்ணாவிரதம் ,சித்திரவதை! கவர்னர் மீட்க வேண்டும், மைத்திரேயன் பேட்டி!

சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என்று கூறி அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க.எம்..பி.,யும் , முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பதாவது : சசிகலாவால் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறி ரிசார்ட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

திமுக ஏன் அமைதி காக்கிறது? பிரேக்கிங் நியூஸ், பிக் நியூஸில் விடுபட்ட கேள்வி?

சிவசங்கர் எஸ்.எஸ்  :; இந்த "பிரேக்கிங் நியூஸ், பிக் நியூஸ்" பரபரப்பில் ஒரு விஷயத்தை ஊடகங்கள் மறைக்க முனைகிறார்கள்.
அது தளபதி ஸ்டாலின் அவர்களின் நிதானம், கண்ணியம்.
ஜெயலலிதாவால் வெற்றி பெற்ற 134 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, அதிமுக இரண்டு தரப்பாக பிரிந்து 'பகடை' ஆடிக் கொண்டிருக்கிறது. கட்சியை கைப்பற்றுவதில் நடைபெறுவது இன்னும் அதிகம். ஆனால் அது அவர்கள் உள்கட்சி விவகாரம்.
அதே சமயம் ஆட்சி விவகாரத்தில் நடைபெறும் ஆட்டம், அவர்கள் கட்சிக்கானது மாத்திரமல்ல. தமிழக மக்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. வாக்களித்தவர்கள் மாத்திரமல்ல, வாக்குரிமை இல்லா குழந்தைகள் வாழ்வையும் பாதிக்கும் விவகாரம், இவர்கள் ஆட்சிப் பொறுப்பு குறித்து நடத்தும் 'கண்ணாமூச்சி விளையாட்டு'. ஆட்சி இயந்திரம் இயங்காமல் முடங்கியே போய் விட்டது.
134 பேரில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் எத்தனை பேர், சசிகலா அவர்களிடம் எத்தனை பேர் என்பது 'கன்னித்தீவு ரகசியம்' போல் நீடிக்கிறது. ஆளுநர் மாளிகையிலோ, சட்டசபையிலோ பலம் நிரூபிக்கப் படும் வரை இந்தக் குழப்பம் நீடிக்கும். அதுவரை இருவருமே எங்களிடம் 'தான்' அதிக எண்ணிக்கை என அறிவித்தவாறு இருப்பார்கள்.

கூவத்தூரில் பொதுமக்கள் மோதல்! அதிமுக எம் எல் ஏக்களை விடுவிக்குமாறு மன்னார்குடி அடியாட்களுடன் ...

இதுவரை பன்னீர்செல்வத்துக்கு கிடைக்கப் பெற்ற ஆதரவின் எண்ணிக்கை 43 சட்டமன்ற உறுப்பினர்களாமே? இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை !
Heavy fight between the public and the ADMK people near in resort at koovathoorசென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்றக்கோரி கூவத்தூர் பகுதி மக்கள் அதிமுகவினர் மற்றும் மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்ட அடியாட்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக ஓபிஎஸ் அணி விகேஎஸ் என பிரிவுகளாக உள்ளது. யார் முதல்வர் பதவியை ஏற்பது என்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் மன்னார்குடி கும்பல் அச்சமடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவி விடக்கூடாது என்பதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் அனைத்து எம்எல்ஏக்களையும் அந்தக் கும்பல் சிறை வைத்துள்ளது.

வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஜோதிமணி : வரவிருக்கும் குடியரசு தேர்தலை தீர்மானிக்க போகும் அதிமுகவின் 37+14 எம்பிகள்,134 சட்டமன்ற உறுப்பினர்கள் !

(காசுக்கு ஒட்டுப்போட்டார்கள் தமிழக வாக்காளர்கள் .. அந்த காசை மீட்டெடுக்க பாஜகவிடம் காசுவாங்குவர்கள் அதிமுக உறுப்பினர்கள் .. அதை தவறு என்று கூற வாக்காளருக்கு உரிமை உண்டா? மக்கழே மக்கழே உங்களை நீங்களே விற்றது மறந்து போய் விட்டதா? அரசியல் விபசாரத்தில் நீங்கள்தானே வாடிக்கையாளர்கள்? )
jothimani. இன்னும் சில மாதங்களில் குடியரசு தலைவர் தேர்தல் வர இருக்கிறது. இதில் இந்தியாவெங்கும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கும். பெரிய மாநிலங்களான பீகார்,மேற்குவங்காளம்,மகாராஷ்டிராவில் (சிவசேனாவுடன் பிரிவு. சரிபாதி உறுப்பினர்கள் காங்கிரஸ், என் சி பி வசம்) பிஜேபிக்கு சொற்ப உறுப்பினர்கள். அடுத்து மிகப்பெரிய மாநிலமான உபியின் தேர்தல் முடிவு பிஜேபிக்கு அதிர்ச்சியளிக்கும். பஞ்சாப் கைவிட்டுப் போய்விட்டது. இந்தச் சூழலில் ஆந்திராவும்,தமிழகமுமே கைகொடுக்க வேண்டும். தமிழகம் குறிப்பாக அதிமுக (37+14 எம்பிகள்,134 சட்டமன்ற உறுப்பினர்கள்) எதிர்த்து வாக்களித்தால் பிஜேபி வேட்பாளரின் தோல்வி உறுதியாகிவிடும். இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. ஆகவே எண்ணிக்கையை ஒட்டியே பிஜேபி காய் நகர்த்தும். பிஜேபியின் முக்கியத் தலைவரான சுப்ரமணியம் சுவாமியின் சசிகலா ஆதரவு நிலைப்பாடும், குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி காய்களை நகர்த்துவதுபோல் தோன்றும் கவர்னரின் செயல்பாடும் சொல்கிற செய்தி உங்களுக்குப் புரிகிறதா ஓ பி எஸ்? 
டெல்லி,ராஜ்பவன் சதுரங்க ஆட்டங்களை எதிர்கொள்ள வெறும் பத்திரிக்கையாளர் சந்திப்புகள்,'ஆன்மாவின் வழிகாட்டல்' மட்டும் போதாது. அதற்கு மேலான சாதுர்யமும்,சாணக்கியத்தனமும்,தலைமைப் பண்பும் தேவை. இந்த நெருப்பாற்றை நீங்கள் நீந்திக் கடக்க வேண்டும். இதில் நீங்கள் தவறினால் இழப்பு உங்களுக்கு மட்டுமல்ல
ஓ பி எஸ். தமிழகத்தை தவறான கைகளில் ஒப்படைத்த வரலாற்றுப் பழியை நீங்கள் சுமக்க நேரிடும்.முகநூல்பதிவு ஜோதிமணி 

ஸ்டாலின் : கலைஞரும் பேராசிரியரும் தீர்மானிப்பார்கள் ! பன்னீர்செல்வம் ஆதரவு கோரினால் உரிய முடிவை ...

சென்னை: முதல்வர் ஓபிஎஸ் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு கோரினால் அளிக்கப்படும் என்று திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாக செய்தி வெளியானது. இதனை உடனடியாக மறுத்தார் அக்கட்சியின் செயல்தலைவரான மு.க. ஸ்டாலின். மேலும், சுப்புலட்சுமி ஜெகதீசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றும், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அது குறித்து திமுக ஆலோசனை செய்து முடிவு செய்யும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாஜகவிடம் ஒட்டுமொத்த அதிமுகவும் சரணாகதி? கொல்லைபுற வழியாக RSS கசாப்பு கடைக்காரன் வந்தே விட்டான்!

நன்றி @Govi Lenin
பா.ஜ.க. ஆட்டி வைக்கிறபடி ஒ.பி.எஸ். செயல்படுகிறார் என்பது ஊரறிந்த ரகசியம். இந்த ஆட்டுவிக்கும் படலத்தை ஒ.பி.எஸ்ஸிடமிருந்து பா.ஜ.க தொடங்கவில்லை. ஜெ இருந்தபோதே தொடங்கிவிட்டது.
கரூர் அன்புநாதன் வீட்டில் பிடிபட்ட ஆம்புலன்சும் அதிலிருந்த கட்டுக் கட்டான பணமும் தோட்டத்தில் விளைந்தவை என்பதை பா.ஜ.க அரசு கண்டறிந்துவிட்டது. விளைந்ததை சரியான முறையில் விற்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் ஒ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
அடுத்ததாக, சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக திருப்பூரில் பிடிபட்ட 3 கண்டெய்னர்களின் ரகசியமும் டாக்குமெண்ட் ஆதாரங்களுடன் பா.ஜ.க அரசின் பிடியில் சிக்கிக் கொண்டது. இப்படி சிக்கியவர் ஒ.பி.எஸ் மட்டுமல்ல, அவரது அம்மாம்மாக்களும்தான். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தொடங்கி அடுத்தடுத்த நடவடிக்கைகள் அனைத்திலும் பா.ஜ.க.வின் கையில் இவர்கள் அனைவரின் குடுமிகளும் சிக்கின.

பன்னீருக்கு முதல் மரியாதை? முதல் அதிர்ச்சி?

தங்களுக்கு கேட்ட appointment முதலில் கிடைக்காத காரணத்தினால் போயஸ் கார்டன் தரப்பு பெரும் கலக்கத்தில் உள்ளது .

M. K. Stalin #திமுக செயல் தலைவர் சசிகலா #அதிமுக MLA களை பிணை கைதிகளாக வைத்து இருப்பதாக பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். புதுடெல்லி: முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். லகம் ஆகியவற்றிற்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அன்புமணிMP :சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்க வேண்டும்

சசிகலா அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டுள்ள 120-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசு பதவி விலகிவிட்ட நிலையில் புதிய அரசு இன்னும் பதவியேற்கவில்லை. பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும், சசிகலா தலைமையிலான அணியும் தங்களுக்குத்தான் பெரும்பான்மை இருப்பதாக கூறி வரும் நிலையில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலா அணியினரால் கடத்திச் செல்லப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விடுதிகளிலும், புதுச்சேரியிலும் கட்டாய சிறை வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆதாரங்களுடன் கூடிய இந்த செய்திகளை உதாசீனப்படுத்தி விட முடியாது.

நாட்டுமாடுகளை பாதுகாப்போம் ! ஜல்லிகட்டு இளைஞர்கள் உறுதிமொழி !

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது அதிகாரப்பூர்வ ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 850 காளைகளும் 1607 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்போம், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என்று ஒரே குரலி ல் கூறி உறுதி மொழி ஏற்றனர்.
இதையடுத்து பாலமேடு விழா கமிட்டி சார்பாக 7 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளை யாரும் பிடிக்கக் கூடாது என்பது மரபு.
ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அரசின் விதிமுறைக்குட்பட்டு காளைகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு சார்பில் நற்சான்று வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஸ்டாலின் : பன்னீர்செல்வம் ஆதரவு கோரினால் திமுக ஆதரிக்காது! சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது பற்றி தெரியாது!

மதுரை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு கோரினால் திமுக ஆதரிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்தின் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தான் ராஜினாமா செய்ய மிரட்டப்பட்டேன் என்ற பகீர் தகவலை சென்னை மெரினாவில் வெளியிட்டார். அதன் பிறகு, சசிகலா தலைமையிலான அதிமுகவே ஆட்டம் கண்டுவிட்டது. அப்போதே, ஓபிஎஸ் இப்படி பேசுவதற்கு காரணம் திமுகதான் என்று சசிகலா குற்றம்சாட்டினார். மேலும், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உடன் ஓபிஎஸ் சிரித்து சிரித்துபேசினார் அப்போதே எனக்கு தெரியும் இதுபோல் நடக்கும் என்று யூகித்தேன் என்றெல்லாம் சசிகலா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசினார். முன்னதாக, சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசும் போது ஓபிஎஸ் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார். இதெல்லாம் சசிகலா திமுக மீது குற்றம்சாட்டு வைக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது திமுகவின் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ்சை திமுக ஆதரிக்கும் என்று சத்தியமங்கலத்தில் செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.