செவ்வாய், 24 மே, 2016

2002 இல் ஜெயலலிதா :வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரியாதை செய்யவில்லை.. அதிகாரிகள் என்.....bla bla bla..சேம் டயலாக்

2002 மார்ச் 2ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் க. அன்பழகனுக்கு 18வது இடம் தரப்பட்டு இருந்தது. அதற்கு விளக்கம் அளித்தபோது ஜெயலலிதா இப்படி சொன்னார்: ’வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரியாதை செய்யவில்லை. அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்க ஆணையிட்டு இருப்பேன். அவர் மீது எனக்கு நிரம்ப மரியாதை உண்டு.’ ஆக, அன்றும் விளக்கம் கொடுத்தார். இன்றும் கொடுத்தார். வார்த்தைகள்கூட மாறவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா :ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை :

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை : ஜெயலலிதா விளக்கம் ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தார். இதற்கு திமுக தலைவர் கலைஞர் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இதற்கு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’’பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டுள்ளார். அதாவது விழாவில் பதவி வரிசைப்படி விஐபிகளுக்கு இடம் வழங்கப்பட்டது. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ அல்லது திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பச்சை நிறம்.. புதன் ஓரை.. 29 பேர் பதவியேற்பு.. 5 கோப்புகள்

சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று 6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழா சென்னை பல்கலை. நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. கோலாகலமாகத் துவங்கிய பதவியேற்பு விழா வெறும் 25 நிமிடங்களில் எளிமையாக  நடந்து முடிந்தது. தமிழக அரசியல் தலைவர்களிலேயே அதிக சென்டிமெண்ட் பார்ப்பவர் ஜெயலலிதாதான். ஜோதிடங்களிலும் அதிக நம்பிக்கைக் கொண்டவர். அந்த வகையில், அவர் தனது சென்டிமெண்ட், ஜோதிட நம்பிக்கை என எதையும் விட்டுக் கொடுக்காமல் 6வது முறையாக பதவியேற்பு விழா நடந்து முடிந்துள்ளது. அவருக்கு மிகவும் ராசியான பச்சை நிறப் புடவை அணிந்து வந்து, பச்சை நிறப் பேனாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கான கையெழுத்தினை இட்டார். அதோடு, அவருக்கு ராசியான புதன் ஓரையில் பதவியேற்வு விழா நடைபெற்றது. அவருக்கு ராசியான எண்கள் 2 மற்றும் 5. இதில் 2  என்ற எழுத்தின் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா உட்பட 29 (2+9 = 11- 1+1=2) பேர் இன்றைய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டனர்.  எல்லாம்  சரிதான்  ஆனால்  பச்சை பச்சையாக தொகுதிகளை  களவாடி பெற்ற  வெற்றியை கிரகங்கள் சகித்து கொள்ளுமா ? காலை வாரும்  நேரம்  வந்துவிட்டதாக  பெங்களூருவில்  கூறுகிறார்களே ? 

நான் எதிர்பார்த்த தோல்விதான் இது..! வைகோ தடாலடி

 இந்த நாட்டிலேயே கட்சி தலைவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். இந்த கருத்துக்கு நான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.செஞ்ச பாவம் கொஞ்ச நஞ்சமில்லை. 
விகடன்.காம் :தி.மு.க. 89, அ.தி.மு.க. 83 இடங்களில் வெற்றி! -கருணாநிதி கணக்கு
‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை எதிர்பார்த்து அதை முழுமையாக எதிர்கொள்ள தயாராகவே இருந்தேன்’ என மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

சாராய கருப்பண்ணன் சுற்று சூழல் மந்திரியானார் ! Flash back காவல் அதிகாரி சைலேந்திரபாபுவால் அடித்து இழுத்து செல்லப்பட்ட

Venkat Ramanujam's photo.சில வருடங்களுக்கு முன்னர் சாராயம் காய்ச்சிய 
குற்றத்திற்காக வீதி வீதியாக இனி சாராயம் காய்ச்சமாட்டேன் என்ற வாசகங்களை கொண்ட அட்டையை கழுத்தில் மாட்டி நேர்மை வீரம் தீரம் இவை ஒருங்கே பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபுவால் அடித்து இழுத்து சென்று சிறையில் அடைக்கபட்ட பவானி சட்டமன்ற தொகுதி உறுபினரான கே.வி கருப்பண்ணன் சுற்றுச்சூழல் மந்திரியாக்கபட்டுள்ளாரே...
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் ‪#‎ADMK‬ பவுன்ராஜும் பலமுறை சாராய வழக்கில் சிறை சென்றவரே.,
காவிரி ஆற்றில் அரசு ஆணைகளை புறந்தள்ளி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் கூட்டணி போட்டுக்கொண்டு, சாயக்கழிவுகளை காவிரி ஆற்றில் தொடர்ந்து கலக்கி "ஈரோடு முதல் பூம்புகார்" வரை உள்ள மக்கள் குடிக்கும் குடிநீரில் சாய விஷம் கலக்கும் சாய ஆலை அதிபர்கள் சங்கத்தலைவர் ஈரோட்டு MLA. தென்னரசு இப்போது ஜெயலலிதா அரசில் ஒரு அமைச்சர்...

570 கோடியில் ஜெயலலிதா+ அருண் ஜெட்லி +ராஜேஷ் லக்கானி + நரேந்திர மோடி.....இன்னும் யார் யார் சார் ?

Venkat Ramanujam's photo.Venkat Ramanujam
  செங்கப்பள்ளி, கண்டெய்னர் புறப்பட்டதாகச் சொல்லப்படும் கோவையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!லாரிகள் ஒரு மணிக்கு செங்கப்பள்ளி வருகின்றது என்றால், கோவையிலிருந்து அதிகபட்சம் நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டிருக்கவேண்டும்!
Q2 .கோவையில் வங்கிப் பெட்டகம் நள்ளிரவு வரை திறந்திருக்குமா?
Q3. விடிந்தால் சனிக்கிழமை, அடுத்தநாள் ஞாயிறு, இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை!
அப்படித் திறந்திருக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறதா?
Q4. அந்தக் கண்டெய்னர்கள் எந்த நாளில் அந்தப் பணத்தை எந்த வங்கியில் கொண்டுபோய் ஒப்படைக்கும்? அதற்கும் ஆர் பி ஐ அனுமதி அளித்திருக்கிறதா?

பிரெட்டில் புற்று நோய் ஆபத்து வேதி பொருள் கலப்பு... விசாரணைக்கு உத்தரவு

தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. டில்லியில் பரவலாக விற்பனையாகும், 38 வகை பிரெட்களில், 32ல், பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இது, சி.எஸ்.இ., எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

NRI க்கள் தங்கம் கொண்டுவர தடைகள் தளர்த்தப்படும்.

வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது வசித்து வரும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் ஏதேனும் கல்யாணம் அல்லது விழாக்களுக்கு வரும் போதும் ஏர்போர்ட் கஸ்டம்ஸ்-களில் அதிகத் தங்கம் மற்றும் தங்க நகைகளை வைத்திருப்பதற்காக என்ஆர்ஐ-கள் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதேபோல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும் இதேபோன்ற நிலைதான். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை அறிவிக்க உள்ளது. இதன் மூலம் என்ஆர்ஐ-கள் எவ்வளவு தங்க நகைகள் வேண்டும் என்றாலும் கொண்டு வரலாம். மத்திய அரசு பர்சனல் பேகேஜ்-களில் அதிகளவில் தங்க கடத்துப்படுவதால் மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறையினர், கடத்தலைத் தடுப்பதற்காகக் கடுமையாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஜில் ஜங் ஜக்... இப்படியெல்லாம் கடத்தல் நடத்த முடியுமா?

சொல்லியிருந்தால் சில மாதங்களில் ஜில் ஜங் ஜக் பற்ரி மறந்துபோயிருக்கக்கூடும். ஆனால் ஜில் ஜங் ஜக் கொடுப்பதோ முழு இரு மணிநேர கொண்டாட்டம். பெண் என்ற வாடையே இல்லாமல் முழு படத்தையும் நகர்த்தியிருப்பதால் தான் இப்படி ஒரு டைட்டில் கார்ட் ஓடுகிறது என்பதை கடைசியில் தான் புரிந்துகொள்ள முடிகிறது. ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ஜில்லுனு ஒரு டைட்டில் கார்ட். முடிந்ததும் தொடர்கிறார் சித்தார்த். படம் நடக்கும் காலகட்டத்தை கதையாக சொல்லி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார்.

MGR + வைகோ பின்னணியில்...புலிகள் கலைஞருக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் செய்த துரோகம் ...

ஒரே வார்த்தையில் புலிகளை பற்றி கூறுவதென்றால் , அவர்கள் கண்ணை மூடிகொண்டு மனிதர்களை  கொன்றார்கள். அதனால் இலங்கை தமிழ் மக்கள் இனி எந்த காலத்திலும் தமிழ் இன உணர்வு என்றால் ஐயோ சாமி ஆளைவிட்டால் போதும் என்று ஓடி விடுகிறார்கள்.  
புலிகள் முதலில் எம்ஜியார் சொல்லை கேட்டார்கள். பின்பு வைகோ நெடுமாறன் சொற்களை கேட்டார்கள். இறுதிவரை வைகோவின் ஆலோசனைகளை நம்பினார்கள்.  வைகோ விஜயகாந்தை பாவித்தது போல அவர்களையும் பாவித்தார். தனது விருப்பத்தை பூர்த்தி செய்தார்.   

1. கலைஞர் கழகத்தை காத்து கண்ணியத்தை காத்து ஆட்சிக்கட்டிலில் ஏறி நல்லாட்சி நல்கிவருகையில் மொழி உணர்வில் ஈழ இயக்கங்களை ஆதரிக்கப்போய், கூடாரத்திற்குள் நுழைந்த ஒட்டகமாய் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்கி அட்டகாசம் செய்து சென்னை தெருக்களில் வன்முறைகளை நெட் பிராக்டிஸ் செய்து கொண்ட விடுதலைப்புலிகளினால் திமுக ஆட்சியை இழந்தது, விடுதலைப்புலிகள் கலைஞருக்கு வழங்கிய முதற்பரிசு.

2. சோவியத் யூனியன் தடுமாறிய காலங்களில் இந்தியாவை இன்னொரு சோவியத்தாகவோ யூகோஸ்லாவியாவாகவோ மாற்றவிடாமல் இந்திய இறையாண்மையைக் கட்டிக்காத்த ராஜீவ்காந்தியை தமிழகமண்ணில் படுகொலை செய்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் ராஜீவ் கொலையாளி என்ற பட்டத்தை ஈழத்தாய் ஜெ.வின் மூலமாக கலைஞருக்கு சூட்டியது விடுதலைப்புலிகள் கலைஞருக்கு வழங்கிய இரண்டாம் பரிசு.

திங்கள், 23 மே, 2016

தேர்தல் அதிகாரி லக்கானி மீது வழக்கு தொடர ம.ந.கூ, தே.மு.தி.க,தா.மா.க ஆலோசனை

அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, ம.ந.கூ., - தே.மு.தி.க., - த.மா.கா., இணைந்து உருவாக்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்துார்பேட்டை தொகுதியில், 'டிபாசிட்' இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.
மேலும் தே.மு.தி.க., போட்டியிட்ட, 104 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவல கத்தில், ஆறு பேரும் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணிநேரஆலோசனையில், தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர திட்ட மிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவ தாவது:பணப்பட்டுவாடா காரணமாகவே, கூட்ட ணிக்குஎதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என, விஜயகாந்த் உட்பட, கூட்டணி கட்சி தலைவர் கள் கருதுகின்றனர். தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள தஞ்சா வூர், அரவக்குறிச்சி போன்ற தொகுதிகளிலும் பண ப்பட்டுவாடா நடந்துள்ளது. இதை காரணமாக்கி, அனைத்து தொகுதிகளி லும் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர உள்ளனர். பணப்பட்டு வாடாவை தடுக்க தவறியதாக, தலைமை தேர் தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீதும் வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப் படுகி றது.- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

1,400 ஏ.டி.எம்களில் கொள்ளை- 100 கொள்ளையர்களின் கைவரிசை

1.4 bil. yen stolen from 1,400 convenience store ATMs across Japan ...
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்ளையில் ஈடுபட்ட ஏறக்குறைய 100 கொள்ளையரை அடையாளம் காண ஜப்பான் காவல்துறையினர் முயன்று வருகின்றனர். இதற்காக அவர்கள் பல மணி நேர பாதுகாப்பு கேமரா பட பதிவுகளை பார்த்து ஆராய்ந்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் ஸ்டாண்டெர்டு வங்கியிலிருந்து திருடிய தகவல்களை வைத்து மூன்று மணிநேரத்திற்கு குறைவான காலஅளவில் இவர்கள் 13 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர். போலியான கடன் அட்டைகளை பயன்படுத்தி ஜப்பானிலுள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு உள்ளே இருக்கும் 1400 பணம் வழங்கும் இயந்திரங்களிலிருந்து இவ்வளவு பணத்தையும் அவர்கள் எடுத்துள்ளனர். இந்த பணம் வழங்கும் இயந்திரங்களில் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை வசதி இருந்ததால் தான் அவற்றிலிருந்து கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது.

கோட்டை விட்ட கொங்குமண்டலம்... கவுண்டர்கள் கைவிட்டனரா? அடுக்கும் உபிக்கள்

திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர விடாமல் செய்ததோடு மட்டுமல்லாது, அதிமுகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்ததற்கான காரணியாக கொங்கு மண்டலம் மாறியுள்ளது. மாலுமி இல்லாத கப்பல், தளபதி இல்லாத படைபோல் செயல்பட்டதே இந்த முறையும் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை சந்தித்ததற்கு காரணம் என்கின்றனர் திமுகவினர். இதுகுறித்து அக்கட்சி சீனியர்கள் சிலரிடம் பேசியதை இங்கே தொகுத்துள்ளோம்.
கோவையிலிருந்து தர்மபுரி வரை ஒரு காலத்தில் தொழில் கேந்திரமாக இருந்த பிரதேசம். எனவே தொழிலாளர் நலனில் அக்கரை காட்டிய கம்யூனிஸ்ட்டுகள் மீதும், அத்தொழிலாளர்களுக்கான சாதக-பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்து ஆட்சியதிகாரத்தில் இருந்து திட்டங்கள் தீட்டியதால் திமுக ஆட்சியின் மீதும் ஒரு காலத்தில் இந்த மண்டல மக்கள் பாசமும், அக்கரையும் வைத்தே செயல்பட்டு வந்தார்கள்.

ராஜேஷ் லக்கானி ஏன் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில்லை ? லஞ்சம்?

எப்போதும் தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிப்பது வழக்கம்... ஆனால் நமது தேர்தல் ஆணையரோ.... வாக்கு இயந்திரங்களை முதலில் எண்ணிவிட்டு....வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள தொகுதிகளில் ...தபால் வாக்குகளை ..தேவையான அளவு... கழித்துக்கட்டிவிட்டு........ குமாரசாமி போல தோற்ற கட்சியை ...  வெற்றி பெற்றதாக அறிவித்தார்...  சட்டம் செத்து பிணமாக நாறுகிறது...வாழ்க மனுதர்மம்.  damodran chennai

தமிழக அமைச்சரவையில் சாதி ரீதியான இடங்கள்? யார் யாருக்கு எத்தனை?

தமிழக அமைச்சரவையில், தேவர் சமுதாயத்தினர் ஒன்பது பேர், கவுண்டர்கள் ஐந்து பேர் உட்பட, பல சமுதாயத்தினருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
 முதல்வர் ஜெயலலிதா(பார்ப்பனர்)
 புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. முதல்வர் ஜெ.,வுடன், 28 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்கின்றனர்.
 இதில், ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன் என, எட்டு பேரும் தேவர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
 எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகிய ஐந்து பேரும், கவுண்டர் சமுதாயத்தினர்.
சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், வீரமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு ஆகியோர்வன்னியர் சமுதாயத்தைசேர்ந்தவர் கள்.
சரோஜா, ராஜலட்சுமி இருவரும் தலித் பிரிவினர். வளர்மதி - முத்தரையர்;

முதல்வர் ஜெயலலிதா முதல் கோப்பில் கையெழுத்து : பயிர் கடன்கள் தள்ளுபடி. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்,காலை சத்துணவு ..

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.b>மின் கட்டணச் சலுகை< 2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
திருமண உதவித் திட்டம்
3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின்......வெறும் கூட்டத்தோடு கூட்டமாக...

முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது. அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது. அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார். பீஷ்மரால்  பிறப்பை காட்டி வெறும் கூட்டத்தோடு கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்ட கர்ணன்தான் மகாபார கதைக்கே நாயகன் என்கிறது வரலாறு! 

மருது படம் திருட்டு விசிடியாம்... வன்முறையை தூண்டி நாட்டை கெடுக்கிற சினிமாவை திருட்டு விசிடிதான் திருத்தணும்


‘மருது’ திரைப்படம் மே 20-ல் ரிலீஸாகி பலவகையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படம் சரியாக போகாததைப் பற்றி கவலைப்படாமல், திருட்டு டிவிடி ரிலீஸ் செய்பவர்களின்பின் ஓடிக்கொண்டிருக்கிறார் விஷால். பெங்களூருவில் உள்ள பிவிஆர் சினிமா தியேட்டரில்தான் கடைசியாக வெளியான பல படங்கள் திருடப்பட்டிருப்பது அந்த பிரிண்ட்களைச் சோதனை செய்ததன் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், அந்த தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதுகுறித்த அவசர பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஷால் வழக்கம்போலவே மிகவும் ஆவேசமாக பேசியிருந்தார். அவர் பிரஸ் மீட்டில் சொன்னது மாதிரியே அவரது ‘மருது’ திரைப்படமும் ரிலீஸான அன்றே இன்டர்நெட்டில் வெளியானது.  அது சரி இத  வேற காசு கொடுத்து பாக்கனுமாக்கம் ?  மருதுவை  பார்க்கிறதுக்கு  ரெட்டிகாருதான்  பணம் தரனும்

Modi's Biggest Scam of $ 350 Millions Exposed


Indian PM Modi's Biggest Scam of $ 350 Millions Exposed view desileakMay 2, 2015  |  Delhi, India
THE STORY AT A GLANCE:. Sources Tehelka.
01. The Modi regime gave 10 percent stake in a KG Basin gas field to GeoGlobal Resources, a company only on paper, incorporated in Barbados

02. GeoGlobal, a one-man firm controlled by Jean Paul Roy, was formed just six days before the JV with GSPC, and was incorporated with a capital of just $64

03. GeoGlobal was picked as JV partner in a whimsical and arbitrary manner. No tendering procedure or transparent methods were adopted in selecting the

company for the project

04. The worth of 10 percent stake could run into millions of dollars with total gas reserve in the field expected to be between 2 and 20 trillion cubic feet

32 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளார்கள்

2016 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.
வரும் 23/5/2016 -ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.  இதுகுறித்த விவரம் பின்வருமாறு :
  • ஆர்.கே. நகர் - ஜெ.ஜெயலலிதா- முதல்வர்., உள்துறை, சட்டம் ஒழுங்கு
  • போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை 
  • மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.
  • ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
  • ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
  • மதுரவாயல்- பா.பெஞ்சமின்-  உள்ளாட்சி, நகர நிர்வாகம்
  • திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை

ஜி.பார்த்தசாரதி : இலங்கையில் 46000 வீடுகள் வழங்கியுள்ளோம்.... பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை அபிவிருத்தி....


Little publicity, big success India’s development assistance to Sri Lanka and particularly to the war-torn northern and eastern provinces, has been a little publicised success story, which few even in India are aware of. In an imaginatively crafted and financed construction effort, India has assisted around 46,000 Tamil families to move into new homes. Moreover, rehabilitation assistance has also been extended to small businesses across the Northern Province, together with the establishment of an industrial estate in Jaffna. Indian assistance has included the construction and equipping of hospitals, clinics and water supply projects.  After clearing up the Kankesanthurai harbour and renovating the Palaly airfield, there are now possibilities of Indian investment to convert Palaly airfield into a hub for tourism across the Palk Straitsசீனாவானது
கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் மீள்கட்டுமாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் நான் சிறிலங்காவிற்குச் சென்ற போது அது மிகவும் ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவமாக இருந்தது.

இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் நாளை விண்வெளியில்

இன்று மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியுள்ளது.
இது இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
இதற்காக ஆர்.எல்.வி டிடி என்கிற ராக்கெட்டை தயாரித்துள்ள இஸ்ரோ, நாளை காலை 9.30 மணிக்கு அந்த ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துகிறது.

கே. ரகோத்தமன் ::பத்மநாபா கொலை வழக்கு ராஜிவ் படுகொலை வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய ....

ilakkiyainfo.com:  சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் செய்த பெரிய சேவை’ என்றும் சொன்னார். சின்ன சாந்தனுக்கு அப்போது இருபது, இருபத்தொரு வயதுதான். அந்த வயதுக்கே உரிய ஆர்வமும் பரபரப்பும் சாகசச் செயலில் ஈடுபடும் குதூகலமும் இருந்தன. சிவராசனுக்காக  ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்துக்குச் சென்று பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு ஒற்றறிந்து சொல்வதாக உறுதியளித்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. சின்ன சாந்தன் அங்கே செல்லத் தொடங்கினார். இலங்கையிலிருந்து புதிதாக வந்து இறங்கியிருக்கும் அகதி என்பது போன்ற அறிமுகத்துடன் அங்கே சென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின்மீது தனக்கு அக்கறையும் ஈடுபாடும் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அங்கிருந்த நபர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டார். பேச்சுக்கிடையே அடிக்கடி விடுதலைப் புலிகள் பற்றிப் போலியாகக் கோபப்பட்டு, விமரிசனம் செய்து, தன்னை அவர்களில் ஒருவனாக அடையாளப்படுத்திக்கொள்ளவும் தவறவில்லை.

தருண் விஜய் எம்பி தாக்கப்பட்டார்.. தலித் கோவில் நுழைவு போராட்டம்


டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், கோவில்களில் நுழைவதற்கு தடை உள்ளது. அதை பாரதீய ஜனதா எம்.பி., தருண் விஜய் தீவிரமாக எதிர்ப்பதுடன், பிரசார இயக்கம் நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த 20–ந் தேதி அங்கு சக்ரதா பகுதியில் உள்ள சில்குர் தேவதை கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட இனத்தவரை அழைத்துச் சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது அவர் தாக்கப்பட்டார். காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கவர்னர் கே.கே.பால், முதல்–மந்திரி ஹரிஷ்ராவத் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் மந்திரி ஹரிஷ் ராவத் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், அந்த வழக்கில் சர்தார்சிங், நயின் சிங், ராஜேந்திர சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். dailythanthi.com

அதிமுகவுக்கு அள்ளி கொடுத்த மேற்கு மண்டலம்... விபரம்.

அதிமுகவின் வெற்றிக்கு தமிழகத்தின் மேற்கு மண்டலம் பெரிதும் கைகொடுத்திருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் என 8 மாவட்டங்களைக் கொண்ட மேற்கு மண்டலத்தில் 57 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 45 தொகுதிகளை அதிமுகவும், 12 தொகுதிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளன.
கொங்கு மண்டலத்தில் ‘இரட்டை இலை’ மீதான விசுவாசம் மற்றும் பண பலம் அதிமுகவுக்கு சாதகமானதாக கூறப்படுகிறது. பாமக, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பிரித்ததும் திமுகவின் தோல்விக்கு காரணம்.