சென்னை : புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் அன்பு. வில்லியனூரில் கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் ஆதி லட்சுமி. அவருக்கும், சஞ்சய் என்பவருக்கும் திருமணமாகி அடையாறில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் அன்புவின் கடைசி மகன் அன்பு சூர்யா(21) தங்கி, லயோலா கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறில் நண்பர்களுடன் சென்று மது அருந்துவது வழக்கம்.அன்பு சூரியாவின் நண்பர்களும் ஃபோக்ஸ்வேகன் காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு 11 மணி வரை மது அருந்தியுள்ளனர். பின் அதிகாலை 3 மணி வரை அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின், பெசன்ட்நகர் செல்வதற்காக மெரினா கடற்கரை வழியாக சென்றனர். கலங்கரை விளக்கம் அருகே மின்னல் வேகத்தில் கார் தாறுமாறாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் மோதி போலீஸ் ஏட்டு சேகர், மீன் வியாபாரி திலகவதி மற்றும் அர்ஜுனன் என்ற வாலிபர் மீது மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர்.
செவ்வாய், 5 நவம்பர், 2013
போதையில் கார் ஒட்டி மூவரை கொன்ற மாணவனுக்கு கொலைக்கு இணையான பிரிவில் வழக்கு தாக்கல்
சென்னை : புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் அன்பு. வில்லியனூரில் கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் ஆதி லட்சுமி. அவருக்கும், சஞ்சய் என்பவருக்கும் திருமணமாகி அடையாறில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் அன்புவின் கடைசி மகன் அன்பு சூர்யா(21) தங்கி, லயோலா கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறில் நண்பர்களுடன் சென்று மது அருந்துவது வழக்கம்.அன்பு சூரியாவின் நண்பர்களும் ஃபோக்ஸ்வேகன் காரில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு 11 மணி வரை மது அருந்தியுள்ளனர். பின் அதிகாலை 3 மணி வரை அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின், பெசன்ட்நகர் செல்வதற்காக மெரினா கடற்கரை வழியாக சென்றனர். கலங்கரை விளக்கம் அருகே மின்னல் வேகத்தில் கார் தாறுமாறாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் மோதி போலீஸ் ஏட்டு சேகர், மீன் வியாபாரி திலகவதி மற்றும் அர்ஜுனன் என்ற வாலிபர் மீது மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர்.
கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் “ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்தியாலயா
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழகத்திலே பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் “ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்தியாலயா” திட்டத்தின்படி, மத்திய அரசும் தனியாரும் கூட்டு சேர்ந்து மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கிட முயற்சிப்பது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் மற்றொரு முயற்சியாகும்.
தமிழ் நாட்டில் மாதிரிப் பள்ளிகளை, தனியாருடனான கூட்டு இல்லாமல், மாநில அரசே நேரடியாகக் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.
2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுகிறது. இலங்கை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.விஷ்ணுபுரம் விருது தகுதியான கவனம்பெறாத மூத்த தமிழ்படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்காக அடுத்த தலைமுறை வாசகர்களின் கூட்டமைப்பால் வழங்கப்படுவதாகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை அளிக்கிறது.
இதுவரை ஆ.மாதவன் [2010] பூமணி [2011] தேவதேவன் [2012] ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது
தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.
திங்கள், 4 நவம்பர், 2013
சீமாந்த்ரா அரசு ஊழியர்கள் தெலுங்கானாவை விட்டு வெளியேற வேண்டுமாம் ! மீண்டும் சந்திரசேகர ராவ் அடாவடி
ஐதராபாத்: தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு, சீமாந்திரா
பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் தெலங்கானாவை விட்டு வெளியேற
உத்தரவிட வேண்டும் என டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், மத்திய
அமைச்சர்கள் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவை பிரித்து
தெலங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு
சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தெலங்கானா தனி
மாநிலம் பிரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்துறை
அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு
அமைத்துள்ளது. இந்தக் குழு இரண்டு முறை கூடி விவாதித்துள்ளது. வரும் 7ம்
தேதி மீண்டும் கூடி விவாதிக்க உள்ளது. இதற்கிடையில் தெலங்கானா பிரிப்பதில்
உள்ள பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு ஆந்திராவை சேர்ந்த 8
கட்சிகளுக்கு மத்திய அமைச்சர்கள் குழு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு சில
கட்சிகள் பதில் கடிதம் எழுதியுள்ளன.
தீபாவளி மதுவிற்பனையில் தமிழகம் சாதனை ! குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதிலும் தமிழகம் சாதனை ! மக்களே பெருமை,,படுங்கள்
தீபாவளியை
மக்கள் உற்சாகமாக கொண்டாடி முடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இன்று வெளியான நாளிதழ்களில் சிந்திக்க தூண்டும் வகையில் மூன்று செய்திகள். ஒன்று, தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களில் மட்டும் இது வரை இல்லாத அளவுக்கு ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை மது விற்பனையாகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதன் விற்பனை சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.90 கோடி வரை உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ரூ.90 கோடியும், சனிக்கிழமை ரூ.160 கோடியும், நேற்று ரூ.120 கோடியுமாக கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் ரூ.370 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
இரண்டாவது செய்தி, சென்னையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக ஒரு மாதத்தில் 486 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தகவல். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, போதையில் வாகனம் ஓட்டுபவர்களில் 10ல் ஒருவர் அல்லது 20ல் ஒருவர் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பலர் போலீசாரிடம் சிக்குவதில்லை என்பதுதான்.
சென்னையில் 3000 செக்ஸ் தொழிலாளர்கள் தினமும் மாமூல், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் ! இங்கும் ரெட் லைட் ஏரியா வேண்டும்
சென்னை: மும்பையில் இருப்பது போலவே சென்னையிலும் விபச்சாரத்
தொழிலாளர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர்
ஜெயலலிதாவுக்கு செக்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வருக்கு அவர்கள் கடிதமும் எழுதியுள்ளனர்.
போலீஸ் தொல்லை அதிகரிப்பதாலும், பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுகளைத் தடுக்க
சிவப்பு விளக்குப் பகுதி உதவும் என்பதாலும், தங்களுக்கு எதிரான
வன்முறைகளிலிருந்து தப்புவதற்கு வசதியாகவும், மும்பையைப் போல சென்னையிலும்
விபச்சாரத்திற்காக பிரத்யேகமாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று அவர்கள்
கோரியுள்ளனர்
இதுகுறித்து இந்திரா மகளிர் கூட்டுறவு அமைப்பு என்ற பெயரிலான செக்ஸ்
தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கலைவாணி கூறுகையில், சென்னையில் மட்டும் 3000
செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்தியாவின் பெருநகரங்களில் சென்னை, பெங்களூரில் மட்டும்தான் தனியாக சிவப்பு விளக்குப் பகுதி இல்லை.
அரசுக்கல்வியை சீரழிக்க கங்கணம் கட்டியுள்ள பார்பன கும்பல் ! ஜெயா சோ தினமணி தினமலர் பத்ம சேஷாத்ரி
சமீபகாலமாக மெக்காலே கல்விமுறை ஏற்படுத்தியுள்ள சீரழிவுக்கு மாற்றாக குருகுலக்கல்வியை முன்வைத்து பார்ப்பனக்கும்பல் செய்து வரும் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுபோலவே காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை இந்திய அரசின் அனைத்து உயர் பதவிகளிலும் இருந்து கொண்டு திட்டமிட்டே அரசுப் பள்ளிக்கூடங்களையும் உயர் கல்வி நிறுவனங்களையும் சீரழித்த இந்த பார்ப்பன ஆளும் வர்க்கம், இட ஒதுக்கீட்டில் வந்த தரமற்ற மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் தான் இந்தியக் கல்வித் துறை அழுகி நாறுவதாகவும், எனவே கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், திறமையான (பார்ப்பன) மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு இந்த சீரழிவை சரி செய்து விடலாம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.
‘அரசு பள்ளி என்றால் சீரழிவு’ – துக்ளக் சோ
வடிவேலு : இப்ப உள்ள காமெடியை பார்த்து எனக்கே காமடி மறந்துரும் ! TRUE
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போதுள்ள காமெடி நடிகர்களை
விளாசித் தள்ளியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் வடிவேலு. பிரச்சாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான ஒருவரை காய்ச்சு, காய்ச்சு என்று காய்ச்சி எடுத்தார். தேர்தல் முடிந்த பிறகு வடிவேலுவுக்கு பிரச்சனைகள் வந்தன. இதையடுத்து அவர் 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் தற்போதுள்ள காமெடி பற்றி கூறுகையில், நான் சினிமாவில் இல்லாத காலகட்டத்தில் ஏராளமான காமெடி நடிகர்கள் வந்துவிட்டனர் என்றார் வடிவேலு. (அவர் இல்லாத கேப்பில் அசுர வேகத்தில் வளர்ந்தவர் சந்தானம் தான்) நல்ல காமெடியை யார் செய்தாலும் அதை பார்த்து சிரிப்பு வந்தால் சிரிக்கலாம். ஓரிரு படங்களை பார்த்தேன். ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை என்று வடிவேலு தெரிவித்தார். நான் முழுப்படத்தையும் பார்த்தால் எங்கே எனக்கு காமெடியே மறந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். காமெடி என்ற பெயரில் கெட்ட விஷயங்களை காட்டுகிறார்கள் என்றார் வடிவேலு.
தற்போதுள்ள காமெடி காட்சிகளில் கெட்ட விஷயங்களை காட்டுவதால் அவற்றை
குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. அந்த காட்சிகளை பார்த்தால்
மன அழுத்தம் தான் வருகிறது. அதனால் இது போன்ற காமெடி காட்சிகளை பார்த்து
மனதையும், கண்ணையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழக மக்களை
கேட்டுக் கொள்கிறேன் என்று வடிவேலு கூறினார்.tamil.oneindia.in/
சவுதி பெண்களின் வாகனம் ஓட்டுதற்கான போராட்டம் வெற்றி பெறுமா ?
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமை வேண்டி நடத்தப்படும் போராட்டம் வெற்றி பெறுமா என்பது உலகம் முழுவதும் தற்போது உற்று நோக்கப்படுகிறது , உலகிலேயே சவுதியில் மட்டும்தான் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை மறுக்கப்படுகிறது,
இதில் வேடிக்கையோ வேதனையோ என்னவென்றால் இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான இந்த நடை முறை இருப்பதையும் பொருட்படுத்தாது பல மேற்கு நாடுகளும் மற்றும் பல இஸ்லாமியர்களும் இன்னும் இந்தநாட்டை ஆதரிப்பதுதான் விந்தை ,
இந்த நாடு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேசமாக சில மதவாதிகளால் கருதப்படுகிறது, எப்பொழுதும் சமயங்கள் எல்லாமே பெண்களை தாழ்த்தியே நடத்துகிறது, ஆனாலும் சவுதியில் மட்டும்தான் இந்த மாதிரியான மதவாத சட்டங்கள் உள்ளன,
கடன் பத்திரம் தான் இருக்கு: ரெய்டுக்கு வந்தவர்களிடம் தெரிவித்த தயாரிப்பாளர்
சென்னை: தல நடிகரின் துவக்கம் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான
வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கடன் பத்திரங்கள் தான் சிக்கியதாம். கடந்த வியாழக்கிழமை தல நடிகரின் துவக்கம் படம் ரிலீஸ் ஆனது. அன்றைய தினமே அந்த படத்தின் தயாரிப்பாளர், தளபதி நடிகரின் மாவட்டம் பட தயாரிப்பாளர், சிங்கம்-சிறுத்தையின் ஆஸ்தான தயாரிப்பாளர் மற்றும் முன்னணி காமெடி நடிகர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் துவக்கம் பட தயாரிப்பாளர் வீட்டில் சோதனை நடத்தியபோது பெரிதாக ஒன்றும் சிக்கவில்லையாம். நான் காசு இல்லாமல் இருக்கிறேன், என்னிடம் இந்த கடன் பத்திரங்கள் தான் இருக்கின்றன என்று கூறிய தயாரிப்பாளர் அவற்றை அதிகாரிகளிடம் அளித்தாராம். சோதனை நடத்திய அதிகாரிகளும் தயாரிப்பாளரிடம் கடன் தான் இருக்கிறது வேறொன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்களாம். இந்த தயாரிப்பாளரின் கஷ்டத்தை போக்க தல நடிகர் அவருக்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in
ஸ்வேதா மேனன் வழக்கை வாபஸ் பெற்றார் ! குறுப்பு சேட்டன் மன்னிப்பு கேட்டாராம்!
கொல்லத்தில் நடந்த படகுப் போட்டி நிகழ்ச்சியில்
கலந்து கொண்டார் மலையாளத் திரை நடிகை ஸ்வேதா மேனன். அப்போது அவரிடம் அந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குரூப்பு தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து பீதாம்ரா க்ருப் மன்னிப்பு கோரியதால், புகாரை திரும்பப் பெற்றதாக ஸ்வேதாமேனன் தெரிவித்துள்ளார்.
பீதாம்ரா க்ருப் மீது கொல்லம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே புகார் வாபஸ் பெறப்பட்டதால், அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கை கைவிடப்படுகிறது.
வீரமணி : மோடி மஸ்தான்கள் பின் சென்றால் இந்தியா கைபர் ஸ்தான் ஆகிவிடும் !
ஆரிய
ஆதிக்கத்தின் சனாதனத்தை வீழ்த்திட இந்தியா கைபர்ஸ்தான் ஆகாமல் தடுத்து
நிறுத்தப்பட திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு
நவம்பர் 9ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள திராவிடர் எழுச்சி மாநாட்டின் அவசியத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருச்சியில் நடைபெறவிருக்கும் திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கு (நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை) இன்னும் 5 நாள்கள்தான் உள்ளன.

மோடி மஸ்தானின் அரசியல் மாநாடல்ல!
திருச்சி தோழர்கள் கடுமையாக உழைக்கின்றனர்; காரணம் இம்மாநாடு, மற்ற மோடி மஸ்தான் வித்தைக்கான அரசியல் மாநாடல்ல.
கோடி கோடியாக செலவழித்து, தேடித் தேடிப்
பிடித்து உயர் ஜாதி ஊடகங்களின் ஒத்துழைப்புடன் அவர் களை ஊதி ஊதி விளம்பரம்
தந்து, மீண்டும் ஒரு மனுதர்ம ராஜ்யத்தை நாட்டில் உருவாக்கக் கால்கோள்
விழாவுக்கான கடப்பாறை வீர தீர சூரர்கள் ஏற்பாடு செய்தது போன்ற மாநாடு அல்ல.
திமுக காங்கிரசுக்கு இடையே என்னதான் நடக்கிறது ?
டில்லியில் நடந்த, 15 கட்சிகளின் மூன்றாவது அணிக்கூட்டத்தில், அ.தி.மு.க.,
பங்கேற்றதால், காங்கிரஸ் பா.ஜ., கட்சிகளுடன், அ.தி.மு.க., கூட்டணி இல்லை
என்பது உறுதியாகியுள்ளது. தி.மு.க.,வுடன் ஏற்பட்டுள்ள விரிசலை போக்கி,
அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பித்துக் கொள்ள, தி.மு.க., தலைவர்
கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் திடீரென
சந்தித்து பேசியுள்ளார். மேலும், இம்மாதம், 7ம் தேதி, கோவையில்,
காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமை
ஏற்று நடத்தி வைப்பதால், "தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மலருமா?' ஊகத்தின் அடிப்படையில் மேலும் மேலும் எழுதிக் கொண்டே போகலாம்....
ஞாயிறு, 3 நவம்பர், 2013
தேவர் சாதிவெறிக்கு ஆதரவாக சம்பத் கமிசன் அறிக்கை ! தேவர் வாக்குகளை கவர்ந்திழுக்க ஒரு அறிக்கை!
2011 செப்டம்பர் 11 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவராகிய தியாகி இமானுவேல் சேகரன் குருபூசையையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டில் இறந்த மஞ்சூரை சேர்ந்த ஜெயபால் என்ற இளைஞனை செத்த நாயைத் தூக்குவது போல நான்கு போலீசார் சேர்ந்து தூக்கிச் சென்ற காட்சி ஊடகங்களில் வெளியான போது ”நாம் ஒரு நாகரீக சமுதாயத்தில் தான் வாழ்கின்றோமா?” என்ற கேள்வியும், அதிர்வுகளும் இந்தியா முழுக்க பல்வேறு தரப்பில் கிளம்பியது. அடுத்த இரு நாட்களில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சம்பத் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிசனை அமைப்பதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஆய்வு செய்யும் சம்பத் கமிஷன் (படம் : நன்றி தி ஹிந்து)
தினமலர்: கலைஞரை சமாதானப்படுத்த சிதம்பரம் எடுத்த முயற்சி தோல்வி ! எங்கே வெற்றி பெற்று விடுமோ என்று பயப்படுவது தெரியறது !
சென்னை:இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள்
மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என,
மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி விடுத்த எச்சரிக்கையைத்
தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் மூலம்,
பிரதமர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை; தோல்வியில் முடிந்தது.
"தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், மத்திய அரசுக்கு, வெளியலிருந்து அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெறவேண்டியிருக்கும்' என, சிதம்பரத்திடம் கருணாநிதி தெரிவித்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

சனி, 2 நவம்பர், 2013
சிதம்பரம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூற நேரில் வந்தது ஏன் ? உண்மையான காரணம் தேர்தல் ஜூரம் !
சனிக்கிழமை
திமுக தலைவர் கலைஞரையைச் சந்திப்பதற்காக வந்திருந்த ப.சிதம்பரம், அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, தாம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறி;
ஸ்வேதா மேனனிடம் பாலியல் சேஷ்டை செய்த காங்கிரஸ் எம்.பி. பீத்தாம்பர குரூப் (வயது 73)
அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு
நடிகை ஸ்வேதா வெறும் ஒரு சாதாரண சினிமா நடிகை அல்ல . அவர் உண்மையில் சமுக உணர்வு உள்ள ஒரு திரைப்பட போராளி என்றே சொல்ல வேண்டும், பிரசவகாட்சியில் நடித்ததன் மூலம்தாய்மையின் மகத்துவத்தை புரிய வைத்தவராவார்
‘சினேகிதியே’,
‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும்
நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல
விருதுகளையும் பெற்றுள்ளார்.களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.>ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.இந்த
விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா
மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து
கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.‘நடந்த
சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது.
அமெரிக்காவின் மருத்துவ மோசடிகள் செய்த இந்திய டாக்டர் கைது
Amar Nath Bhandary, 53, from Oklahoma was sentenced to 30 months in prison, followed by three years supervised release and a $20,000 fine, US Attorney for the Western District of Oklahoma Sanford Coats said in a statement.
இந்திய மருத்துவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓக்லஹாமாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்த இந்தியரான பண்டாரி, 2008ஆம் ஆண்டு தாம் செய்யாத சேவைக்காக போலி ஆவணங்கள் மூலம் காப்பீட்டுத் தொகை கோரியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பண்டாரி மீது கடந்த மே மாதம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஓக்லஹாமா நீதிமன்றம் பண்டாரிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும் 20 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகள் வரையில் அவரை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை வினியோகம் செய்ததாகவும் பண்டாரி மீது ஓக்லகாமா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானிய தாலிபான் தலைவர் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார் !
A suspected U.S. drone strike possibly targeting Pakistani Taliban leader Hakimullah Mehsud killed
பாகிஸ்தானில் அமெரிக்கா வெள்ளிக்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தின் தலைவர் ஹகிமுல்லா மசூது உள்பட 6 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹிகிமுல்லா மசூதின் பாதுகாவலர் தாரிக் மற்றும் முக்கிய தலிபான் தளபதிகளில் ஒருவரான அப்துல்லா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. dinamani.com

வெள்ளி, 1 நவம்பர், 2013
தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினை ! சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை !
கேள்வி :
பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி வசந்தன் என்பவர் தேவையில்லாத விசயங்களை எழுதியிருக்கிறார்.
- ஆர்.கே தாஸ்
பசும்பொன் முத்துராமலிங்கம்
நீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.
சரி, விசயத்துக்கு வருவோம்.
கும்பகோணம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து ! 9 பேர் வெடித்து சிதறினர் ! குழந்தை தொழிலார்களும் அகப்பட்டனர் ?
பட்டாசு தொழிற்கூடத்தில் திடீர் தீ விபத்து 9 பேர் பலி.கும்பகோணம்
அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த முள்ளங்குடி கிராமத்தில் பல
வருடங்களாக ராஜாங்கம் என்பவரின் மனைவி தனலெட்சுமி பட்டாசு தயாரிக்கும்
தொழில் நடத்தி வருகிறார். இவரது தொழிற்கூடத்தில் 15க்கும் மேற்பட்டோர்
பணிபுரிந்து வருகின்றனா இவர்
விழாக்கலுக்கும் கிராம திருவிழாக்களுக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும்
வானங்கள் மற்றும் வெடிகள், பட்டாசுகள் தயாரித்து கொடுப்பது வழக்கம். இதைத்
தவிர நாளை தீபாவளியை முன்னிட்டு தற்போது பட்டாசு தயாரிப்பது மும்முரமாக
இவரது தொழிற்கூடத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள்
பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் விபத்தில்
ஆனந்த் (18), த.பெ.செல்வகுமார், வெங்கடேசன் (16) சஹாராவை கடக்க முயன்றபோது தண்ணீர் கிடைக்காததால் 92 பலி!
இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகளால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை. தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் இறந்தனர்.
முதல் கட்டமாக கடந்த 28ம் தேதி சடலங்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து
பாலைவனத்தில் வேறு யாராவது இறந்தார்களா என்று மீட்பு படையினர் தேடுதல்
வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சற்று தூரத்தில் மற்றொரு டிரக்
பழுதாகி நின்றது. அதில் பயணம் செய்த 52 பேர் இறந்தது தெரிய வந்தது. அழுகிய
நிலையில் இருந்த சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்திய தம்பதியினர் 12 மில்லியன் டாலர் அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை! தாய் --- 0--- கோதானம் கொடுக்கும் பிள்ளை
அமெரிக்கவாழ் இந்திய தம்பதியரான சதிஷ்-யாஸ்மின் குப்தா வழங்கியுள்ளனர். இந்த தொகையானது டல்லாஸ் பல்கலை க்கழக கட்டிட விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.;
வெவ் வேறு மதத்தை சேர்ந்தவர்களான சதிஷ், யாஸ்மின் இருவரும் இந்தியாவில்
இருந்து அமெரிக்கா சென்றபோது, முதல்முறையாக இந்த டல்லாஸ் பல்கலைக்
கழகத்தில் பயின்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சதிஷ் குப்தா கூறியதாவது:-;
இந்த புதிய கலைக்கட்டிடம் தொடங்கப்பட்டவுடன் வர்த்தகக் கல்லூரியின்
வகுப்புகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இயங்கும். உலக
கலாச்சாரங்களுக்கிடையே ஒரு புரிதலையும் வேறுபாட்டையும் பற்றி ஆராய்வதற்கான
ஒரு உலக அரங்காக இந்த வர்த்தகக் கல்லூரி மாறும் என்பது எங்கள் கனவு. மேலும்
இந்த கல்லூரியானது, மாணவர்களை உலகத் தலைவர்களாக மாற்றும் என்று நாங்கள்
நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர்கள் வழங்கியுள்ள இந்த தொகையானது கடந்த 57 வருட கால அமெரிக்க வரலாற்றில்
இல்லாத அளவிற்கு இதுவே அதிகமான நன்கொடையாக கருதப்படுகிறது. .ilankainet.com<EVKS இளங்கோவன் : ஊதி ஊதி பெருசாக்கபடும் பலூன்தான் நரேந்திர மோடி !
முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்திய அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தான் இலங்கை வடக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தல் நடந்தது.
இதுபோல தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு இன்னும் போலீஸ் துறை உள்பட பல்வேறு உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த உரிமையை இந்திய அரசு தான் பெற்று தர முடியும்.
இதற்கு இலங்கை அரசுடன் இணக்கமான உறவு இருக்க வேண்டும். உறவை துண்டித்து விட்டு உரிமைகளையும், சலுகைகளையும் பெற முடியாது.

கட்டவுட் பாலாபிஷேகத்துடன் அஜீத்தின் ஆரம்பம் மகா மகா வெற்றி போலத்தான் தெரிகிறது ! ம்ம்ம்ம்
அஜித்தின் ஆரம்பம் படம், மெகா ஓபினிங்குடன் ஆரம்பமாகியுள்ளது. படம்
வெளியாகும் முன்னரே வெளியான செய்திகள் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்க, இன்று தமிழகம் முழுவதிலும் சுமார் 1,400 தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. சென்னையிலும் வேறு சில நகரங்களிலும், நேற்று நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருந்தது.
இதனால், அதிகாலையிலேயே படம் திரையிடப்பட்டது. சென்னை எஸ்.எஸ்.பங்கஜம் தியேட்டரில் அதிகாலை 3 மணிக்கே முதல் காட்சி ஓடத் தொடங்கிவிட்டது.வேறு சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணி, 4.30 மணி என விடிவதற்கு முன்னரே காட்சிகள் தொடங்கின.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)