செவ்வாய், 2 ஏப்ரல், 2013

வெயிட் பண்ணச் சொன்னாங்களாம் முகம் வாடிப்போச்சாம்

ஞானி இசையத்தான் எம் படத்துக்கு இசை இயக்கமா போடுவேன்னு பால
இயக்கம் ஆரம்பகாலத்துல சொல்லிட்டிருந்தாராம்... இருந்தாராம்... சொன்னமாதிரி செஞ்சிட்டிருந்தாராம். திடீர்னு ஒரு படத்துக்காக இசைய பாக்க போனாராம். அவரோட உதவியாளருங்க, ‘உங்கள சார் வெயிட் பண்ணச் சொன்னாரு உக்காருங்கன்னு சொன்னாங்களாம் இதை எதிர்பாக்காத இயக்கம், முகம் வாடிப்போச்சாம். விசுக்குனு இடத்தை விட்டு போனாராம். இந்த கோபம்தான் அவரை விட்டு பிரிய காரணமாம்... காரணமாம்..

Anil, Mukesh அம்பானி சகோதரர்கள் இணைந்து 1,200 கோடிக்கு ஒப்பந்தம்

அம்பானி சகோதரர்களில், மூத்தவரான முகேஷ் அம்பானி, தனது 4 ஜி
தொலைத்தொடர்பு வெளியீட்டிற்காக, இளைய சகோதரர் அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸின், கண்ணாடி இழை வலைத்தள இணைப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் விதத்தில், ரூ. 1,200 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார்.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம், அனிலின் ரிலையன்ஸ் டெலிகம்யூ னிகேஷன் நிறுவனத்தின் 120000 கி.மீ நீள இணைப்புகளை தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். இதற்கு மாறாக, பின்னாளில் ஜியோ இன்போகாம் நிறுவும் இணைப்புகளை அனிலின் நிறுவனம் உபயோகப் படுத்திக்கொள்ளும்.இந்த ஏற்பாடு உடனடியாக இணைந்து செயல்படுவதற்கும், புதிய இணைப்புகளை தடையில்லாமல் தருவதற்கும் வழிகோலும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத்துறை குறித்த அனைத்து விஷயங்களிலும், இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட எடுத்த முதல் முடிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : நாளை விசாரணை

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சாட்சிகள் விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களுரூ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையில் முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பின்னர் நாளை மீண்டும் விசாரணை நடைபெறும் என நீதிபதி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

ஆட்டிசம் எளிமையாக உணர சில வழிகள் இன்று ஏப்ரல் 2. உலக ஆட்டிச தினம்


சவுதி அரேபியா, பெண்கள் பூங்காக்களில் சைக்கிள் செலுத்த அனுமதி


சவுதி அரேபியா, பெண்கள் சைக்கிள் மற்றும் மொப்பெட் செலுத்துவதற்கு
அனுமதி வழங்குகிறது. ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட இடங்களிலேயே இவற்றை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியில் இருந்து வெளியாகும் அல்-யவுன் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, பெயர் குறிப்பிட விரும்பாத மத காவல்துறை (religious police) அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, பெண்கள் பூங்காக்களில் சைக்கிள் செலுத்த அனுமதிக்கப் படவுள்ளனர். அதே நேரத்தில், சைக்கிள் மற்றும் மொப்பெட் செலுத்தும் பெண்கள், சைக்கிளுடன் வந்தால் மட்டும் போதாது, தமது உறவினரான ஆண் ஒருவருடனும் வந்திருக்க வேண்டும். அத்துடன், தலையில் இருந்து பாதம்வரை உடல் முழுவதும் மறையும்படி இஸ்லாமிய ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் சைக்கிள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்துக்கு அல்ல, பொழுதுபோக்குக்கு மட்டுமே எனவும் அல்-யவுன் தெரிவித்துள்ளது. அதுவும் சரிதான். பூங்காவில் போக்குவரத்து செய்ய முடியாதுதானே. /viruvirupu.com/

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான அமெரிக்க வழக்கு தள்ளுபடி

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவிற்கு எதிராக அமெரிக்க
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் இணைந்து, ராஜபக்ஷேவிடம் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு இது.
விடுதலைப் புலிகள் மீது போர் தொடுத்ததால் தமக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதற்கு ராஜபக்ஷே இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் இணைந்து தாக்கல் செய்த மனுவை, அமெரிக்க நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை செய்தது.
மஹிந்த ராஜபக்ஷே ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரையில் அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு (Diplomatic Immunity) உள்ளதால், இந்த வழக்கு மேற்கொண்டு தொடரப்பட முடியாது என ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது.

பொன்னம்பலம்: ரெட் லைட் ஏரியாவை அனுமதிக்கணும்! ரேப் சீனுன்னா நடுங்கிடுவேன்

தமிழ் சினிமாவில் அதிக ரேப்களை நிகழ்த்தியவர் என்ற 'கெட்டப் பெயரை’ சம்பாதித்தவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். அ.தி.மு.க-விலும் சேர்ந்து மேடைப் பேச்சுகளில் கலக்கி வருகிறவரிடம் வகை தொகையாகக் கேட்ட கேள்விகளில் இருந்து...
''ரேப் சீன்ல நடிக்கிறப்போ பாத்திரமாவே மாறிடுறீங்களே, வீட்டுல திட்ட மாட்டாங் களா?''

''அதை ஏன் கேட்குறீங்க. வீட்டுல ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. என்னாலதான் ஒழுங்கா நடிக்க முடியாது. அதுதான் பெரிய கொடுமையே. கஷ்டமான சண்டைக் காட்சியிலேயும் ரிஸ்க் எடுத்து சாவு வரை தொட்டுப்பார்த்து திரும்பி இருக்கேன். ஆனா, ரேப் சீனுன்னா நடுங்கிடுவேன். 'ஸாரிம்மா ஸாரிம்மா’னு சொல்லுவேன். பக்கத்துல போக கூச்சமா இருக்கும். பாவம் அந்த நடிகைங்களே, 'சார், என்னா சார்... இவ்ளோ குழந்தையாட்டம் இருக்கீங்க’னு சொல்லுற அளவுக்குக் கூச்சப்படுவேன். மனசுக்குள்ள ராகவேந்திரரை நினைச்சுட்டுதான் அந்த மாதிரி சீன்ல நடிப்பேன். கடவுள் சத்தியமா ஒரு கெட்ட எண்ணமும் எனக்கு வராது. நல்ல வேளை இப்போவெல்லாம் ரேப் சீன்ஸ் கொடுக்கிறது இல்லை.''
''என்ன சார், நான் என்னமோ நினைச்சுக் கேள்வி கேட்டா, இப்படிப் பொசுக்குனு சொல்லிட்டீங்க. யாரு சார் நீங்க? இம்புட்டு வெள்ளந்தியா இருக்கீங்க?''
''பூந்தமல்லிதான் பொறந்தது. நாங்க அண்ணன் தம்பிங்க 11 பேரு. அப்பா வாஹினி ஸ்டூடியோவில இன்சார்ஜா இருந்தார். எல்லோரும் சினிமாவுல சொல்லிவெச்ச மாதிரி எடிட்டிங்ல இருந்தோம். நான் மட்டும் யோகா, களரினு ஒரு மார்க்கமாத் திரிவேன். தாஸ் மாஸ்டர் மூலமா இந்தியில அமிதாப், தர்மேந்திரா, ஜிதேந்திராவுக்கு டூப் போட்டுக்கிட்டு இருந்தேன்.

இலங்கை ராணுவ வீரர்கள் ஐ.நா. அமைதிப்படைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

ஹைதி (Haiti) நாட்டில் உள்ள ஐ.நா. அமைதிப்படையில் (UN Peace Keeping Mission in
Haiti – MINUSTAH) இலங்கை ராணுவத்தை சேர்ந்த வீரர்களையும் இணைத்துக் கொண்டுள்ளது, ஐ.நா. (மேலேயுள்ள போட்டோவை பார்க்கவும். யூனிபார்மில் ஐ.நா. பேட்ச்சுடன் இலங்கை ராணுவ வீரர்கள்) மொத்தம் 750 இலங்கை ராணுவ வீரர்களை அமைதிப் படையில் பணிபுரிய அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசிடம் ஐ.நா. கோரிக்கை விடுத்ததை அடுத்து, இன்று இலங்கை ராணுவத்தின் சின்ஹா ரெஜிமென்ட் படைப்பிரிவில் இருந்து 400 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவத்தை சேர்ந்த 750 வீரர்கள் உட்பட, இலங்கை முப்படைகளையும் சேர்ந்த மொத்தம் 1,071 பேரை அனுப்பி வைக்கும்படி கோரியிருக்கிறது, ஐ.நா. “இலங்கை ராணுவ வீரர்கள் ஹைதி நாட்டின் அனைத்து நகரங்களிலும், வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களை வன்முறையாளர்களிடம் இருந்து காப்பாற்றும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது, ஐ.நா. viruvirupu.com

மியான்மர் நாட்டில் 50 ஆண்டிற்கு பிறகு தனியார் பத்திரிகைகள்

50 ஆண்டிற்கு பிறகு தனியார் பத்திரிகைகள்
மியான்மர் நாட்டில் தடை காரணமாக தனியார் பத்திரிகைகள், 50 ஆண்டிற்கு பிறகு ‌நேற்று முதல் வெளியிடப்பட்டன.
ராணுவ ஆட்சியின் கீழ் அரசு பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்தன. தனியார் பத்திரிகைகள் ராணுவ கட்டுப்பாட்டிற்கு வந்ததால் 1964 முதல் தனியார் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2011ல் இருந்து ஜனநாயக முறைக்கு திரும்ப வந்த நிலையில் நேற்று முதல் பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. வார இதழ்களும் கூட தினசரி பத்திரிகைகளாக வெளிவரத்துவங்கிவிட்டன

சேது சமுத்திர திட்டம்: தமிழக அரசின் முடிவு என்ன?

புதுடில்லி:"சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் நிலை என்ன என்பதை இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இந்தியா - இலங்கை இடையே, பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவை இணைக்கும் வகையில், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான பணிகளுக்காக, 2005ல் துவங்கி, 2012 ஜூன், 30ம் தேதி வரை, 830 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது.இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற, ராமர் சேது பாலத்தை இடிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த ராமர் பாலம் என்பது, ராமாயண காலத்தில், இலங்கையை ஆண்ட அரசன் ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்க, கடவுள் ராமரின் வானர சேனைகளால் போடப்பட்டது என, நம்பப்படுகிறது. அதனால், இந்துக்கள் புனிதமானதாக கருதும், ராமர் சேது பாலத்தை இடிக்கக் கூடாது என, பா.ஜ., உட்பட, சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.  வழக்கமாக பல பல்டிகளை அடிக்கும் ஜெயலலிதா அவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என 2004 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்...பிறகு ராமர்பாலம் என கூறி இத்திட்டத்தை எதிர்த்து பல்டி அடித்தார்..

நடிகர் லாரன்ஸ்: திருப்பதி கோவிலில் பெண்களை கண்ட இடங்களில் கையை வைத்து தள்ளிவிடுகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் லாரன்ஸ்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:– எனது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டேன். தாயார் பூரண குணமடைந்ததும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் திருப்பதி வந்தோம். சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த எனது தாயாரை கோவில் ஊழியர் ஒருவர் பிடித்து தள்ளி விட்டார். நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்து விட்டார்.சாமி தரிசனத்தின்போது, பிடித்து தள்ளி விடுவது சரியான மரியாதை அல்ல. இது, கொடூரமான செயல். இது, எனது குடும்பத்தை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது. இதனால், ஆவேசமாக பேசி விட்டேன். சாமி தரிசனம் செய்ததில் திருப்தி இல்லை. பெண்களை மரியாதையாக போங்க என்று சொல்லலாம். ஏய் போ என்று கண்ட இடங்களில் கையை வைத்து தள்ளிவிடுகிறார்கள். திருப்பதிக்கு எப்போது வந்தாலும் ஊழியர்களின் நடவடிக்கை வேதனை அளிக்கிறது.

யஷ்வந்த் சின்கா : JPC முன் ஆஜராக ராஜாவை அழைக்காதது ஏன்

புதுடில்லி :""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து, விசாரிக்கும்பார்லிமென்ட் கூட்டு குழு முன், முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ராஜா மீண்டும் ஆஜராக வாய்ப்பு அளிக்காமல் புறக்கணித்தது தவறு. இதன் மூலம், உண்மையை மூடி மறைக்க, முயற்சி நடந்துள்ளது,'' என்று பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறினார்.   ராஜாவின் குற்றம் என்ன?  வடநாட்டார்கள், ஒரு தலித்தை வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றனர்பிஜேபி -யில் நன்கு விவரம் தெரிந்தவர்கள் என்றால் அது அருண் ஜெட்லி , யஸ்வந்த் சின்கா , நரேந்திர மோடி போன்றவர்களே... யஸ்வந்த் கேட்டது மிக சரியான கேள்வி...// குற்றவாளியை விசாரிக்காமல் என்ன விசாரணை நடத்துகிறார்கள் ?? யாரை வைத்து விசாரணை நடத்துகிறார்கள் ?? சாக்கோ அப்பட்டமாக காங்கிரஸ் -க்கு சாதகமாக நடக்கிறார்.. .

விஜயகாந்த்: நாடாளுமன்ற தேர்தலை தேமுதிக புறக்கணிக்கும்

வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர்
விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த், இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தார். மேலும் தமது கட்சியைப் போன்று இலங்கை தமிழர்களை காக்க மற்ற கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைக்கக்கூடும் என்றும், இதற்கான பேச்சுவார்த்தை இருதரப்புக்குமிடையே ந்டைபெற்றதாகவும் கூறப்பட்ட நிலையில், விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தி உள்ளது. vikatan.com

திங்கள், 1 ஏப்ரல், 2013

டெல்லியில் ஓடும் காரில் மாணவி பாலியல் பலாத்காரம்

புதுடெல்லி: டெல்லியில் பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்திச்
செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்டாவில் எழுது பொருள் வாங்க கடைக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்த சென்ற மர்ம நபர் மயக்க மருந்து அடித்து காரில் கடத்திச் சென்றார். பின்னர் ஓடும் காரிலேயே அந்த மர்ம நபர் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். சுய நினைவை இழந்து கிடந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவியை பலாத்காரம் செய்த அந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதே போல் டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது. ஷாப்பிங் மஹாலில் வேலை செய்யும் அந்த பெண், அலுவலக காரில் வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றிய பிறகும் டெல்லியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பெண்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மருந்துகளுக்கு காப்புரிமை இல்லை : இந்திய உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு Gleevec cancer treatment


India’s Supreme Court denied Novartis AG (NOVN)’s request for patent protection for its Gleevec cancer treatment, allowing the nation’s generic-drug makers to continue to sell copies of the drug at a lower price.
மருந்துகளுக்கு காப்புரிமை: இந்திய உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

புற்றுநோய்க்கான மருந்து தொடர்பில், இந்திய உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பிரபல ரத்த புற்று நோய் மருந்தான க்ளீவெக்கிற்கு இந்தியாவில் காப்புரிமை இல்லை என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் மருந்து தயாரிப்பு பெரு நிறுவனமான நோவார்டிஸ், புற்று நோய்க்கான புதிய வடிவிலான இந்த மருந்துக்கு காப்புரிமை கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்திய சட்டங்களின் கீழ் 'க்ளீவெக்' எனும் அந்த மருந்து காப்புரிமை பெரும் தகுதியை பெறவில்லை என்று இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று(1.4.13) தீர்ப்பளித்தது.
அம்மருந்தொன்றும் ஆழமான ஆய்வின் விளைவாய் உருவான புதிய மருந்தல்ல, மாறாக ஏற்கெனவே காப்புரிமை காலாவதியாகியிருந்த அம்மருந்தில் சில மேலோட்டமான மாற்றங்களைச் செய்து மீண்டும் அதற்குக் காப்புரிமை பெற நோவார்ட்டிஸ் முயல்கிறது, இதற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதன் விலை வானத்தை எட்டும், ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவர் எனக் கூறி இந்தியக் காப்புரிமை வாரியம் 2009 ஆம் ஆண்டில் காப்புரிமை மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது நோவார்ட்டிஸ்.

பாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க வாரிசுகளால் செய்யப்பட்டால் தண்டனையில்லை

பிட்டி மொகந்திபாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க பொறுக்கிகளாலோ அவர்களின் வாரிசுகளாலோ செய்யப்பட்டால் அதற்கு தண்டனையில்லை என்ற மசோதாவை நாடாளுமன்றம் அடுத்து முன்மொழியுமா?
    2005-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு பெண்ணை ஒரிசாவின் போலீஸ் தலைமை ஆணையர் வித்யபூஷண் மொகந்தியின் மகனான பிட்டி மொஹந்தி ராஜஸ்தானில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளான். 2006-ல் கைது செய்யப்பட்டு விரைவு நீதிமன்றத்தில் அவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

    படம் உதவி : தெகல்கா
    சிறையில் 7 மாதங்கள் இருந்தவன், தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லையென்று அவர் சாகும் முன் அவரைச் சென்று பார்த்து வர அனுமதி வேண்டினான். போலீஸ்கார தந்தையின் உத்தரவாதத்தின் கீழ் 15 நாள் பரோலில் வெளியில் வந்தவன், மீண்டும் சிறைக்கு திரும்பவேயில்லை. ராஜஸ்தான் மாநிலத்தின் போலீஸார் நடத்திய தேடல் வேட்டைகள் பொய்த்துப் போய், ஒரிசா மாநில அரசிடம் மேல் முறையீடு செய்தும் பலனில்லை. பிற மாநில காவல் துறைகளுக்கு அவனைப் பற்றிய தகவல்களை அனுப்பி கைது செய்யும்படி அறிவித்தது.
    குற்றவாளியை தப்ப விட்டதற்காக வித்யபூஷண் மொகந்தி, 2008-இல் தற்காலிக பணிநிக்கம் செய்யப்பட்டாலும் 2009-இல் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு, ஓய்வூதிய பலன்கள் அனைத்துடனும் 2012 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

    கணவனின் சபலம் கலங்கிப் போன பெண் விதியின் விளையாட்டு

    கணவனின் சபல புத்தியினாலும் தனது ஆத்திர குணத்தினாலும் வாழ்க்கையை சீர்குலைத்த இந்தப் பெண் சிறையில் வேதனைப்படுகிறாள்

    கொழும்பு 7, கறு வாக்காட்டில் உள்ள  பல வாகனங்களின் உரிமையாளரான வர்த்தகரை தந்தையாகக் கொண்டிருந்த  இந்தப் பெண்ணுக்கு தாயும், ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் இருக் கிறார்கள்.
    இவரது தந்தைக்கு ஐந்து ஆறு வாகனங்கள் இருந்தன. கொழும்பிலுள்ள பிரபல பெளத்த அரசாங்க மகளிர் பாடசாலையில் கல்வி கற்ற இந்தப் பெண் தந்தையாரின் காரிலேயே பாடசாலைக்குச் சென்று திரும்பினார். எவ்வளவுதான் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டாலும் இந்தப் பெண் பாடசாலையில் இருக்கும் போதே ஒரு ஆடவனுடன் காதல் கொண்டாள்.
    இந்தப் பெண் பெளத்த மதத்தைச் சார்ந்த செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனாலும் இவள் காதலித்த ஆடவன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். காதல் தலைக்கேறியதனால் இப்பெண் தனது 15வது வயதிலேயே காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.
    இந்தப் பெண் தன்னிச்சையாக பெற்றோரையும் சகோதர, சகோதரியை யும் மறந்து காதலனுடன் தப்பி ஓடிய தனால் ஆத்திரமடைந்த அவளது பெற்றோர் இவள் இறந்து விட்டாள் இனி நாம் இவளை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்பதை உலகத்துக்கு காட்டுமுகமாக வீட்டு வாசலில் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டு தங்கள் மன அழுத்த த்தை வெளிப்படுத்தினர்.

    கேடி பில்லா கில்லாடி ரங்கா


    பசங்க, மெரினா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. பசங்க படத்துல நடித்த விமலையும், மெரினா படத்துல நடித்த சிவகார்த்திகேயனையும் மிக்ஸ் பண்ணி கேடி பில்லா கில்லாடி ரங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. கதைனு சொல்லனும்னா அப்படி எதுவும் இல்ல. விமல் (கேடி கேசவன்), சிவகார்த்திகேயன் (பட்டை முருகன்) நல்ல நண்பர்களா இருக்கிறார்.. நட்பு பிரியக்கூடாதுனு என லவ்வே பண்ணாம இருக்கிற அளவுக்கு நண்பர்களா, ஊதாரித்தனமா சுத்துறது தான் இவங்களோட வேலை.


    அரசியல்ல குதிச்சு கவுன்சிலராகனும்னு லட்சியத்தோட இருந்தாலும் ஒரு கட்டத்துல காதல் அவங்களுக்குள்ள புகுந்திடுது. ஜெராக்ஸ் கடை வெச்சிருக்க பாப்பா(ரெஜினா) மேல் சிவ கார்த்திகேயனுக்கு காதல் வர, ஹாஸ்பிடல்ல வேலை செய்கிற மித்ரா(பிந்துமாதவி) மேல் விமலுக்கு காதல் வருகிறது. 

    உணர்ச்சிகளை கிளறிவிட்டு ஆதாயம் தேடும் தமிழ் நாட்டு அரசியல்

    india todayஸ்ரீலங்காவை பற்றிய எங்கள் வெளிநாட்டுக் கொள்கை இன்று தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை அடிப்படையாக கொண்டதாக இருக்குமானால், நாளை பங்களாதேஷ் பற்றிய வெளிநாட்டுக் கொள்கையை மேற்கு வங்காளம் கட்டளையிடுவதாக மாறிவிடும், மற்றும்  நாளை மறுநாள், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் என்பன நேபாளத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும். எமது உள்நாட்டு அரசியலின் அழுத்தங்கள், மற்றும் உந்துதல்களின் விரிவாக்கத்துக்கு ஏற்றவகையில் எங்கள் உறவுகளை பரிமாற ஆரம்பித்தால் அது மிகவும் தவறான ஒன்றாகும் ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க அனுசரணையிலான தீர்மானத்தின் மீதான எமது நடவடிக்கை,எமது அயலவர் மீதான எங்கள் கொள்கைகள் பற்றிய இசைவிணைவு,  முதிர்வு, மற்றும் நோக்கம் எனபன தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    தங்கச்சிமடத்தில் போலீசார் துப்பாக்கி சூடு

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் ஏற்பட்ட
    கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.தங்கச்சிமடம் அருகே கிரிக்கெட் விளையாடுவதில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பதற்றத்தை தணிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் ஜெயப்பிரதா

    நடிகர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் சமாஜவாதிக் கட்சி எம்.பி.
    ஜெயப்பிரதாவின் கடிதத்தை மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கரநாராயணன், மாநில உள்துறைக்கு அனுப்பியுள்ளார்.
    மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. எனினும், அவருக்கு ஆளுநர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்க வேண்டும் என்று சமாஜவாதிக் கட்சியின் எம்.பி. ஜெயப்பிரதாவும், அமர் சிங்கும் கோரினர். மகாராஷ்டிர மாநில ஆளுநர் சங்கரநாராயணனைச் சந்தித்து இக்கோரிக்கையை வைத்தனர்.
    இந்தக் கடிதத்தை மாநில உள்துறைக்கு அனுப்பியிருப்பதாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    உலகில் வெற்றி பெற ஆங்கிலம் படிப்பது அவசியம்

    திருச்சூர்:""இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமானால்,
    கேரள மாநிலம், திருச்சூரில் நடந்த, சர்வதேச கருத்தரங்கில், கேரளாவைச் சேர்ந்தவரும், மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சருமான, சசி தரூர் பேசியதாவது:
    அவசியம்:உலகம் மிகவும் மாறி விட்டது. பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, நம்மை தயார் படுத்த வேண்டியது அவசியம். இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமெனில், ஆங்கிலம் படிப்பது மிகவும் அவசியம்.நம் குழந்தைகளுக்கு, கட்டாயமாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க மறுத்தால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதற்கு, நாமே காரணமாக இருந்து விடக் கூடாது.

    ஞாயிறு, 31 மார்ச், 2013

    இந்தியாவில் இன்டர்நெட் சேவை மந்தம்! எகிப்து அருகே ஆழ்கடல் கேபிளில் நாசவேலை!!

    இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் இன்னும் 20 – 25 நாட்களுக்கு மந்தமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக் கடலில் போடப்பட்டுள்ள இன்டர்நெட் கேபிள்களில், எகிப்துக்கு அருகே நாச வேலை நடந்துள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
    இரு தினங்களுக்குமுன், கடல் அடியே கேபிள்களை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்துள்ளதாக எகிப்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த மூன்று ஸ்கூபா டைவர்களும் (மேலே போட்டோவில் உள்ளவர்கள்) எகிப்தின் அலெக்சான்ட்ரியா துறைமுகத்துக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கேபிள்களை வெட்டும் முயற்சியில் இருந்தபோது, எகிப்திய கடற்படை ரோந்துப் படகு இவர்களை கைது செய்தது.
    கடந்த 2 நாட்களாக இன்டர்நெட்டின் வேகம் உலகின் பல பகுதிகளிலும் மகா மந்தமாக உள்ளது. ஸ்பாம் ஊடுருவலே இதற்குக் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது இரண்டு முக்கிய நடுக் கடல் கேபிள்கள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்னும் 20 – 25 நாட்களுக்கு இன்டர்நெட் வேகம் மகா மந்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவைப் பொறுத்தவரை அரசின் BSNL மற்றும் MTNL, தனியாரான Bharti Airtel, Tata Communications ஆகியவற்றின் இணைப்புகள்தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

    காம்ரேடுகள் இல்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி: தி.மு.க., புது வியூகம்

    லோக்சபா தேர்தலுக்கு, "மெகா' கூட்டணி அமைக்கும் வகையில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளை இழுக்க, தி.மு.க., தரப்பு விரும்புகிறது.
    நிபந்தனை: ஆனால், தே.மு.தி.க.,வை தவிர மற்ற கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுமானால், கடைசி கட்டத்தில், ஒற்றை இலக்கத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட நிபந்தனைகளுடன், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., புது வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், மத்திய அரசு கவிழும், முன் கூட்டியே தேர்தல் வரும் என்ற யூகங்கள் டில்லி அரசியல் வானில் நிலவுகின்றன. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆதரவில், தற்போது மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், மத்திய அரசு தற்போது முலாயம் சிங் கைப்பிடியில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியை முலாயம் சிங் கடுமையாக விமர்சிப்பதால், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, மத்திய அரசை கவிழ்க்கும் செயலில் முலாயம் சிங் ஈடுபடுவார் என்ற சந்தேகம், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது.

    இலங்கையில் வியாபாரம் செய்து வருகிறோம். தொழிற்சாலைகளும் நடத்தி வருகிறோம். பிழைப்புக்கு ஏற்ற நல்ல

    ஜி.எப்.ராஜி, கண்டி (முகாம் சென்னை)யிலிருந்து எழுதுகிறார்:
    நான், இலங்கை வாழ் இந்தியன். தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவன்.எங்கள் மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும், எங்கள் முன்னோர் காலம் முதல், இலங்கையில் வியாபாரம் செய்து வருகிறோம். தொழிற்சாலைகளும் நடத்தி வருகிறோம். பிழைப்புக்கு ஏற்ற நல்ல ஊர்.நாங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும், தோட்டத் தொழிலாளிகளும், சிங்கள கிராமத்தில் வாழும் தமிழர்களும், சிறு சிறு மளிகை கடைகளை நடத்தி வருகின்றனர்.இங்குள்ள தமிழர்கள், சிங்களர்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவதால், அங்கு, எங்களுக்கு எதிராக, சிங்களர்கள் வந்தால் எங்களால் தாக்கு பிடிக்க முடியாது. இங்குள்ளவர்களுக்கும் இது தெரியும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக, சிங்களவர்களை தூண்டிவிடும் செயலாக இவற்றை கருதுகிறேன்.
    இங்கு வரும், சிங்களவர்களையும், புத்த மதத் துறவிகளையும் தண்டிப்பதால் என்ன லாபம்? போரில் இறந்த உயிர்கள், மீண்டும் வருமா?இறந்த தமிழர்களை சுட்டிக் காட்டி, நன்றாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு, தற்போது தொந்தரவு கொடுப்பது நியாயமா?அரசியல் தலைவர்களை சந்தித்து, நேரில் விவரம் சொல்லி விட்டு வரும்படி, என்னிடம் பலர் கூறினர். இங்குள்ள நிலைமையைப் பார்த்தால், சிங்கள வெறியர் எனக் கூறி, தமிழ் வெறியர்கள் என்னையும் தாக்கி விடுவர் என்றே பயப்படுகிறேன்.