படம் : பி.பி.சி. திருவரங்கம் கோவிலில் Vacancy குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு சட்டமான ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்து அறநிலையத்துறை திருவரங்கம் கோவிலில் 4 விதமான பணி நியமனத்திற்கு இந்து பிராமணர் அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் எனவும் 15-3-2013 அன்று விண்ணப்பிக்க இறுதி நாள் என பொறுப்பாகவும் விளம்பரம் கொடுத்திருந்தது.
படம் : பி.பி.சி.
அர்ச்சகர் உட்பட கோவில் பணியாளர் அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரத்திற்கு உட்பட்டது; முறைகேட்டில் ஈடுபடும் அர்ச்சகர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள விதிமுறைகள் இவர்களுக்கும் உள்ளது; அரசு வேலைவாய்ப்பில் பிறப்பை வைத்து சாதிபாகுபாடு பார்க்கக் கூடாது; தீண்டாமை எந்த வடிவத்தில் அமுல்படுத்தினாலும் தண்டனைக்கு உரிய குற்றம் எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது; வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இவை எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதற்கு மீண்டும் ஒரு சாட்சிதான் திருவரங்கம் கோவில் விளம்பரம்.