சனி, 12 ஜனவரி, 2013

இதுதான் சரியான நேரம் சொல்கிறார் சோனாலி முகர்ஜி...

இந்த சம்பவம் நடந்தது, கடந்த 2003ம்ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியாகும்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜிக்கு அன்று ஒரு கருப்பு தினம், வாழ்க்கை சிதைந்து போய் சோகமான திசைக்கு மாறிப்போன மோசமான தினம்.
மகளை நன்கு படிக்க வைத்து பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றோரின் கனவை நனவாக்க, நன்கு படித்தார். கூடுதலாக அழகும் கொண்டிருந்தார், அது ஒன்றும் தப்பில்லையே.
ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த பிரம்மதேவ், தபாஸ்மித்ரா, சஞ்சய் பஸ்வானுக்கு அது தப்பான எண்ணத்தை வளர்த்துவிட்டது, விரட்டி, விரட்டி தொந்திரவு செய்தார்கள்.
என்சிசி மாணவியான சோனாலி அவர்களை துணிச்சலுடன் விரட்டியதுடன், இனியும் தொந்திரவு தொடர்ந்தால் போலீசிடம் புகார் செய்வேன் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மூவரும், "அழகாய் இருக்கிறோம் என்ற ஆணவத்தில்தானே எங்களை எடுத்தெறிந்து பேசுகிறாய், உன்னை என்ன செய்கிறோம் பார்'' என்று எச்சரித்தவர்கள், அன்று இரவு மொட்டை மாடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சோனாலியின் முகத்தில், கப்பலின் இரும்புத் துருவை அகற்றுவதற்கு பயன்படும் பயங்கரமான ஆசிட்டை ஊற்றி விட்டனர். 
Anniyan Bala - Chennai,இந்தியா

Anniyan Bala அது என்ன சட்டம். மைனர் என்றால் செய்த தப்புகள் மறைந்துவிடுமா.? அவனுக்கு அது முடியுமென்றால் அதற்கு அதற்குரிய தண்டனையும் தேவைதான் 

செல்போன் வீடியோவால் சிக்கிகொண்ட தாத்தா சிறுமி கற்பழிப்

மும்பையில் தொலைந்து போன செல்போனின் உதவியால் மசூதி அசரத் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.மும்பையில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் நியாஸ் அகமத் ஹசான் ராசா (70) இவர் அதே பகுதியில் இருக்கும் மசூதியில் அசரத்தாக இருக்கிறார். ஓய்வு நேரத்தில் அப்பகுதி குழந்தைகளுக்கு அரேபிய மொழி கற்றுகொடுப்பார்.அவரிடம் சிறு குழந்தைகள் பலர் அரேபிய மொழி கற்றுவந்தனர்.>இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நியாஸ் அகமத் தனது செல்போனை தொலைத்துவிட்டார். தொலைந்து போன செல்போன் அப்பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் சிக்கியது, அந்த நபர் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்க்கும் போதுதான் நியாஸின் சுயரூபம் தெரிந்துள்ளது.

“எனக்கு கார் தந்து, சீர் தந்த ஜெயலலிதா மடியில் விழுந்தேன்!”

நாஞ்சில் சம்பத் கொடுத்த ஷாக் “எனக்கு கார் தந்து, சீர் தந்த ஜெயலலிதா மடியில் விழுந்தேன்!”

Viruvirupu  “எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்த, ஜெயலலிதாவின் மடியில் விழுந்தேன்” என்று கூறி அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க.வின் புதிய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் “நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை” பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நடந்தது. அதில் கலந்து கொண்டி நாஞ்சில் சம்பத், “இந்திய அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கும் புரட்சித் தலைவி அமமா, இந்தியாவின் தலைமகளாவார். காலம் கனிந்து விட்டது.
எந்த தலைமையை ஏற்றுக் கொண்டதற்காக அடக்குமுறைகளை சந்தித்தேனோ, அந்த தலைமையே என் உயிருக்கு உலை வைக்க நினைத்தபோது, கழுகு விரட்டிய மாடப்புறா சிபிச்சக்கரவர்த்தி மடியில் விழுந்தது போல, நான் அம்மாவின் (ஜெயலலிதா) மடியில் விழுந்தேன்” என்றார்.
வெயிட் எ மினிட். மடியில் விழுந்தீரா? ஐயகோ, இதை வைத்தே உங்களுக்கு டிக்கெட் கிழித்து விடுவார்களே அ.தி.மு.க.வில்.
கழுகு விரட்டிய மாடப்புறாவை சிபிச்சக்கரவர்த்தியின் காலில் விழ வைத்து, “அம்மா காலடியில் விழுந்தேன்” என்று சொல்லியிருக்கலாமே அண்ணே! அ.தி.மு.க.வில் ‘அம்மா மடியில் விழும்’ வழக்கம் ஏதும் கிடையாது என்பதை அறியாதவராக உள்ளீரே ஐயா! இதற்குள் அம்மாவுக்கு புகார் தட்டி விட்டிருப்பார்களே ரத்தத்தின் ரத்தங்கள்!
பேச்சின் ஆரம்பத்தில் இப்படி அ.தி.மு.க. கொள்கை தெரியாமல் மடியில் விழுந்துவிட்ட நாஞ்சில் சம்பத், தொடர்ந்து பேசிய பேச்சும் சுவாரசியமாகவே உள்ளது. இதோ அதையும் படியுங்கள்.
“எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்து, 52 மாவட்டங்களுக்கும் சென்று வா, நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் எனும் குருச்சேத்திர போரில் வெற்றி ஈட்டி வா! என்று அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார். காலம் மாறும், காரிருள் உடையும், உறக்கம் கலையும், உணர்வுகள் பூக்கும், சரித்திரம் மாறும், நாளை இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதாவை அமர வைக்க நாடே தயாராகி விட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சில பரமபத விளையாட்டுகளை விளையாடி, அ.தி.மு.க. அரசுக்கு அவப்பெயர் உருவாக்க கருணாநிதி திட்டமிடுகிறார். ஆனால் அது நடக்காது!” என்றார்.
கருணாநிதி பரமபத விளையாட்டு விளையாடி விட்டு போகட்டும். இப்போது உங்கள் கட்டத்தில், ‘மடியில் விழுந்த பாம்பு’ நிற்கிறதே. காலில் விழுந்தாவது தப்பித்துக் கொள்ளுங்கள்!

கமல் சார் தன் வீட்டில் மல்லாந்து படுத்து யோசித்து

1db48097-7eba-48b8-a2b1-6a00420b701eOtherImage
ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம்.
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்…
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்…
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு…
புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.டி.எச். தொழில்நுட்பம் என்பதும் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான ஒரு சில நாட்களில் சின்னத்திரையில் வெளியாவதும் பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயமே. திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.வி.யில் வெளியிடுவது எந்தவகையில் தொழில்நுட்பப் புரட்சியாகும் என்றே தெரியவில்லை. வேண்டுமானால் மார்க்கெட்டிங் புரட்சி என்று சொல்லலாம். அதுகூட முடியாது. ஏனென்றால், அது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் வழிமுறையே அல்ல.

இந்திய வீரர்கள் கொலை U N விசாரணைக்கு தயார் பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரப்பானி சொல்கிறார்

காஷ்மீரில் உள்ள கட் டுப்பாட்டு எல்லை அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவத்தி னர் படுகொலை செய் துள்ளனர். இறந்த வீரர் களில் ஒருவரின் தலையை எடுத்துச்சென்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந் தியா தனது கடும் கண் டனத்தைத் தெரிவித்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், இந்தியா வில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இது பற்றி கண்டனத்தை தெரி வித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப் பானி கர், இந்திய வீரர் கள் கொல்லப்பட்டதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்று தெரி வித்தார். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் தனது பதிலை ஏற்கெனவே கூறிவிட்டது. 2003இல் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவே விரும்புகிறோம். எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. நாங்கள் விசா ரணை நடத்தியதில், அதுபோன்ற சம்பவத் தில் பாகிஸ்தான் வீரர் கள் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. இதுபோன்ற கொலைச் செயல் பாகிஸ்தானின் கொள்கையல்ல. இந்த தாக்குதல் தொடர்பாக மூன்றாவது தரப்பு விசாரணைக்கு தயாராக இருக்கிறோம். அய்.நா. பார்வையாளர் கள் வந்து இதுபற்றி முழு விசாரணை நடத்தலாம் என்று ரப்பானி கூறினார்.

Best new year Joke அன்புக்கு கட்டுப்பட்டே திரையரங்குகளில் விஸ்வரூபம். கமலஹாசன்

;விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெளியாகும் என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சென்னையில் 11.01.2013 வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டே விஸ்வரூபம் படத்தை முதலில் திரையரங்கில் வெளியிட இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். திரையரங்குகளில் வெளியிடும் அதே வேளையில் டிடிஎச்சில் பாட்னர்களையும் தான் ஏமாற்றப்போவதில்லை என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட் டிடிஎச் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ள கமலஹாசன், அவர்களுடன் பேசி முடிவு எடுத்தபின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். விஸ்வரூபம் திரைப்படம் 10ஆம் தேதி அன்று டிடிஎச்சிலும், 11ஆம் தேதி திரையரங்கிலும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடும் தேதியை 25ஆம் தேதிக்கு மாற்றியுள்ள கமலஹாசன், இனி டிடிஎச்சில் வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்: லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை

தஞ்சாவூர் :""வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை,'' என, தஞ்சையில் நடந்த, தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில், விஜயகாந்த் உறுதியாக தெரிவித்தார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று காலை தி.மு.க., தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் பாராட்டி பேசியதை வைத்து, தி.மு.க.,வுடன் கூட்டணி வரும் போல் தெரிகிறது என, தே.மு.தி.க., தொண்டர்கள் நினைத்திருந்தனர். ஆனால், மாலையே விஜயகாந்த்தின் நடவடிக்கை மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தஞ்சையில், தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் பொங்கல் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நாஞ்சிக்கோட்டை ரோட்டில் நேற்றிரவு நடந்தது.

சிவகாமி IAS: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ராமதாசை கைது செய்ய வலியுறுத்தல்

வேலூர்: ""ஜாதி, மோதல்கள் உருவாக்கும் வகையில் பேசி வரும், ராமதாசை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, சமூக சமத்துவப் படை கட்சி தலைவர் சிவகாமி கூறினார்.சமூக சமத்துவப் படை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், வேலூரில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு பின், கட்சி தலைவர் சிவகாமி கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞருக்கும், வன்னிய இனப்பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல் திருமணத்தை காரணம் காட்டி, 1,500 பேர் திரண்டு, தலித் இன மக்கள் வசிக்கும், சில கிராமங்களில் உள்ள வீடுகளை, பெட்ரோல் குண்டு வீசி, தரைமட்டமாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், கலவரம் நடந்து வருகிறது. தமிழகத்தில், ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்படும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடு வெட்டி குரு ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவை சந்தித்து, மனு கொடுக்க உள்ளோம். "வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என, பா.ம.க., மற்றும் சில கட்சிகள் கூறுகின்றன. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது. இவர்கள் மீது, தமிழக அரசு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி கலவரத்தை தூண்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும், 22ம் தேதி, தருமபுரியில் இருந்து நடை பயணம் புறப்பட்டு, பாதிக்கப்பட்ட கிராமங்கள் வழியாகச் சென்று, அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி, வரும், 29ம் தேதி, தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். dinamalar,com

வெள்ளி, 11 ஜனவரி, 2013

நடிகை ஹேமாஸ்ரீ கொலை : கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூர்: கன்னட நடிகை ஹேமாஸ்ரீ கொலை வழக்கில் அவரது கணவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கன்னட படங்களில் நடித்திருப்பவர் ஹேமாஸ்ரீ. கடந்த அக்டோபர் மாதம் அனந்தபுரில் உள்ள ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து தந்தை நாகராஜ் போலீசில் புகார் செய்தார். அதில் ‘என் மகள் சாவில் மர்மம் இருக்கிறது. அவரை கணவர் சுரேந்திர பாபுதான் கொலை செய்திருப்பார். இதுபற்றி விசாரிக்க வேண்டும்Õ என்று புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து சுரேந்திர பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று ஹேமாஸ்ரீ வீட்டில் இருந்தபோது அவரது அறைக்கு சென்ற சுரேந்திர பாபு ஒரு துணியில் மயக்கமருந்து வைத்து அதை ஹேமாஸ்ரீ மூக்கில் காட்டி மயங்க வைத்திருக்கிறார். இதற்கு சதிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தார். மயக்கம் அடைந்த ஹேமாஸ்ரீயை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து அனந்தபுரில் ரெட்டிபள்ளியில் உள்ள ஒஐ ஓட்டலுக்கு அதிகாலை 4.30 மணிக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே சொல்லி வைத்திருந்தபடி இரண்டு பேர் அங்கு தயாராக இருந்தனர். அவர்கள் உதவியுடன் ஹேமாஸ்ரீயை அறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 7 மணி அளவில் சுரேந்திர பாபு தன் மனைவி மயங்கி கிடப்பதாகவும் உதவி செய்யும்படியும் ஓட்டல் ஊழியர்களிடம் கேட்பதுபோல் நாடகமாடி இருக்கிறார். உடனடியாக ஹேமாஸ்ரீயை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஹேமாஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கணவரே ஹேமாஸ்ரீயை கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால் கன்னட படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த்: கலைஞரிடம் இருந்த பெருந்தன்மை ஜெயலலிதாவிடம் இல்லை

;முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரிடம்  இருந்த பெருந்தன்மை இந்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இல்லை'' என்று எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
.ஸ்ரீவில்லி புத்தூர் வந்து இருந்த எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம்  '' திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்;முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த பெருந்தன்மை இந்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இல்லை'' என்று எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அப்போதைய முதல்வர்  கலைஞர் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். ஆனால் தற்போதோ அரசைக் குறித்து விமர்சித்தால் அவதூறு வழக்கு தொடருவார்கள். என் மீது தொடரப் படும் வழக்குகளைச் சட்டப் படி சந்திப்பேன்'' என்று தெரிவித்தார்

ராமலிங்கம் மீது மோசடி வழக்கு- வருமான வரித்துறை நடவடிக்கை!

ரூ.27,000 கோடிக்கு அமெரிக்க பத்திரங்களை வைத்திருந்த தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வருமானவரித்துறை முடிவெடுத்துள்ளது. பத்திரங்கள் அனைத்தும் போலிப்பத்திரங்கள் என்று தெரியவந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை!தொழிலதிபர் ராமலிங்கம் என்ற இந்த நபர் 2010ஆம் ஆண்டு பரணிதர் ரிபைனரி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்தார். அதில் அவரது மனைவியையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டார்.தொடக்கத்தில் அந்த கம்பெனிக்காக ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். தொடங்கப்படாத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூலம் வருவாய் ரூ.19 லட்சம் ஈட்டியதாக கணக்குக் காட்டியுள்ளார் ராமலிங்கம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ரூ.27,000 கோடிக்கான அமெரிக்க கருவூல பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பத்திரங்களை அவர் பிரேசில் நாட்டில் வாங்கியதாக தெரிவித்திருந்தார். இது போலியென்று சந்தேகம் எழவே பத்திரங்களை அதிகாரிகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர்.இதில் பார்க்ளேஸ் வங்கி அந்தப் பத்திரங்கள் போலியானவை என்று கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் எழ்த்து பூர்வமாக போலி என்று வங்கி தரவுள்ளதாகவும் தெரிகிறது.அந்த உத்திரவாதம் வரும் வரை விசாரணை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பத்திரங்கள் உண்மையானவை என்று ராமலிங்கம் தொடருந்து பேட்டியளித்துவருவது குறிப்பிஅத்தக்கது.மேலும் சீனாவிலிருந்து தங்கப்பத்திரங்களை வாங்கியுள்ளதாகவும் இதனை வைத்துதான் அமெரிக்க பத்திரங்களை பரிமாற்றம் செய்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் கருதுகின்றனர். ஆனால் இந்தத் தங்கப்பத்திரங்களும் போலியானவையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.இதற்கிடையே ராமலிங்கத்திற்குச் சொந்தமான பரணிதர் நிறுவனத்திடமிருந்து சுமார் 2 கோடியைக் கடனாகப் பெற்றதாக வரவு செலவுக் கணக்கில் காண்பித்துள்ளது.>எனவே மிகப்பெரிய மோசடித்திட்டத்தை தீட்டியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.ஆனால் எல்லாம் சட்டப்படியே செய்துள்ளேன் என்று ராமலிங்கம் தொடர்ந்து கூறிவருகிறார்   tamil.webdunia.com

உயர்கல்வியில் அன்னிய நிறுவனங்கள்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை, இந்தியாவில் அனுமதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியாவில் உயர் கல்வியில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்படும்,'' என, மத்திய திட்டக்குழு உறுப்பினர், நரேந்திர ஜாதவ் கூறினார்.குஜராத், காந்தி நகரில், கல்வி நிறுவனங்களுக்கானசர்வதேச மாநாட்டின் நிறைவு விழா, நேற்று காலை நடந்தது. இதில், மத்திய திட்டக் குழுவின், கல்வித் துறைக்கான உறுப்பினர் நரேந்திர ஜாதவ் பேசியதாவது:
பன்னிரெண்டாவது ஐந் தாண்டு திட்டத்தில், கல்வித் துறைக்கு, மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளிலும், கல்வித் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு, தேசிய வளர்ச்சிக் கவுன்சிலும் அனுமதி வழங்கி விட்டது.

RSS முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை

தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறை பல்வேறு தரப்பினரையும் ஏதாவது ஒருவகையில் எதிர்வினையாற்றத் தூண்டியுள்ளது. பரவலான ஜனநாயக சக்திகள் பெண்களைக் குதறும் பாலியல் வன்முறைகளையும் அவற்றைக் களைவது பற்றியுமான விவாதங்களை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளனர். சமீப காலமாக தேசிய ஊடகங்களில் இருந்து உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றன.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க அதிக பட்ச தண்டனை வழங்குவதா அல்லது இக்குற்றங்களின் சமூக அடிப்படை என்னவென்பதைப் பார்த்து அவற்றைக் களைவதற்கு முன்னுரிமை வழங்குவதா, பாலியல் விழிப்புணர்ச்சிக் கல்வி வழங்கினால் குற்றங்களைத் தடுக்க முடியுமா என்று பரவலாக விவாதங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். இப்படி நாடெங்கும் மக்களின் விவாதப் பொருளாக மாறி அமளி துமளி ஆகிக் கொண்டிருந்த போது ஓரமாக உட்கார்ந்து ‘மிச்சர் தின்று கொண்டிருந்த’ இந்துத்துவ சங்கப் பரிவாரங்களும் இப்போது வாயைத் திறக்கத் துவங்கியுள்ளன.

Mumbai Jeyasri Nominated for Oscar.. Tamil Song in Life of Pi



பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது, ஒரு தமிழ் பாடல்!
கனடா நாட்டு இசையமைப்பாளர் Mychael Dannaவின் இசையில், Life of Pi படத்தில் இடம்பெறும் “கண்ணே கண்மணியே கண்ணுறங்காய்” என்ற தமிழ் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்! இந்தப் பாடலை எழுதியதும் பாம்பே ஜெயஸ்ரீயே! மிகவும் அட்டகாசமான தாலாட்டு பாடல்!
ஆஸ்காரில் இந்தப் பிரிவில், 5 பேரே நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்கள். இதனால் பாம்பே ஜெயஸ்ரீக்கு, ஜெயிப்பதற்கு மினிமம் 20 சதவீத சான்ஸ் உள்ளது. அதேநேரத்தில், Life of Pi சவுன்ட் ட்ராக்குகள் வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா) ரொம்ப பிரபலம் என்பதால், அதிக சான்ஸ் உள்ளது. வாழ்த்துக்கள்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

புதுடில்லி : சினிமா உலகின் கனவு விருதாகவும் உயரிய விருதாகவும் திகழும் ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரை செய்யப்பட்டுள்ள 36 விருதுகளில் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள 4 படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 85 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவேரி ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற உள்ளன. இவ்விழாவில் விருதுகள் முறையாக அறிவிக்கப்பட உள்ளன.

பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கார் நாமினேஷன்! தமிழ் பாடலுக்காக!


Viruvirupu
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்காரை ஜெயித்து வந்ததுபோல இந்த ஆண்டு மற்றொருவரும் தமிழகத்துக்கு ஆஸ்காரை அள்ளிவர சான்ஸ் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பெயர், ஆஸ்கார் விருதுக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானைவிட இந்த நாமிநேஷன் மகா விசேஷம்!
காரணம், பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது, ஒரு தமிழ் பாடல்!
கனடா நாட்டு இசையமைப்பாளர் Mychael Dannaவின் இசையில், Life of Pi படத்தில் இடம்பெறும் “கண்ணே கண்மணியே கண்ணுறங்காய்” என்ற தமிழ் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்! இந்தப் பாடலை எழுதியதும் பாம்பே ஜெயஸ்ரீயே! மிகவும் அட்டகாசமான தாலாட்டு பாடல்!
ஆஸ்காரில் இந்தப் பிரிவில், 5 பேரே நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்கள். இதனால் பாம்பே ஜெயஸ்ரீக்கு, ஜெயிப்பதற்கு மினிமம் 20 சதவீத சான்ஸ் உள்ளது. அதேநேரத்தில், Life of Pi சவுன்ட் ட்ராக்குகள் வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா) ரொம்ப பிரபலம் என்பதால், அதிக சான்ஸ் உள்ளது. வாழ்த்துக்கள்.

வியாழன், 10 ஜனவரி, 2013

பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!

வினவு
ammaசங்கரமடம் மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
    மேல்மருவத்தூர் அம்மா பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் (சின்ன அம்மா) மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார். 2012-ம் ஆண்டு எம்டிஎஸ் எனப்படும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பத்திருக்கிறது.
    அக்டோபர் 2012-ல் நடந்த ஆய்வில் கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்திருக்கிறது இந்திய பல் மருத்துவக் கழகம்.  டிசம்பர் 28-ம் தேதி கூடிய கல்லூரியின் நிர்வாகக் குழு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் உறுப்பினர் ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் எஸ் முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முடிவு செய்திருக்கிறது.

    சினிமா துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

    ;அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி அகில இந்திய தலைவர் டி.கே. சத்தியசீலன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை, காவிரி பிரச்னை மற்றும் விவசாயிகளின் வேதனைகளை பற்றி கண்டு கொள்ளாத சினிமா துறையினர் தங்கள் சுயநலத்துக்காக மத்திய அரசின் சேவை வரியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பார்க்கும் பொதுமக்களே கேளிக்கை வரி செலுத்தும்போது இவர்கள் ஏன் செலுத்த கூடாது.
    சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா துறையினர் எவ்வளவு பேர் வருமான வரி கட்டுகின்றனர். எத்தனை படம் நடித்துள்ளனர், எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள். எவ்வளவு செலவு காட்டினார்கள்.
    இதில், பொதுமக்களுக்கு செய்ததாக எவ்வளவு கணக்கு காட்டி உள்ளனர், எவ்வளவு அரசுக்கு வரி கட்டி உள்ளனர் என்ற விவரத்தை ஆர்டிஐ மூலம் கேட்க உள்ளோம். இது கிடைத்தவுடன் தமிழக சினிமா துறையினரின் அரசுக்கு கட்டும் வரியை பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளோம்.
    பொதுமக்கள் வரி பணத்தில் சுமார் ரூ.700 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தை பொதுமக்கள் நலன் கருதி உடனே திறக்க வேண்டும்.

    மீண்டும் அ.தி.மு.க.-வில் இணைய திட்டமிட்டிருக்கிறாராம்.

    கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை யாருடையது என்ற இழுபறியில், இராம.நாராயணன், கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, பாக்யராஜ் என்று பெரிய தலைகள் எல்லாம் இழுத்து விடப்பட்டு இருக்க, இதற்குள் உள்ள நிஜமான விவகாரம் அந்த ‘கதை’ அல்ல என்கிறது ஒரு சோர்ஸ். அப்படியானால் என்ன விவகாரம்? பணமா? அதுவும் கிடையாதாம். நிஜ விவகாரம் அரசியல் தானாம்! “எனது கதையைதான் படமாக்குகிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்” என்று போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார், கே.பாக்யராஜ். ஆனால், சந்தானம் தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை, தம்முடைய கதைதான் என்பது பாக்யராஜூக்கு ஏற்கனவே தெரியுமாம்.
     அவ்வப்போது சந்தானத்தை சந்திக்கும் போதெல்லாம், இந்த சீனை எப்படி எடுத்தீங்க, அந்த சீன் எப்படி வந்திருக்கு என்றெல்லாம் பாக்யராஜ் விசாரித்து வந்தததாகவும் சந்தானம் தரப்பினர் கூறுகிறார். கதைக்கு வழக்கு போடுவதென்றால், அவர் எப்போதோ போட்டிருக்கலாம். அல்லது, இப்போது எழுப்புகிற பிரச்சனையை அப்போது அவர் எழுப்பியிருந்தால் கூட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால் படம் வெளியாகிற கடைசி நேரத்தில் இப்படி செய்துவிட்டாரே என்று பாக்யராஜின் செயலை கவலையோடு அலசுகிறது சந்தானம் வட்டாரம் இதில் மற்றொரு விவகாரம், பாக்கியராஜின் ‘டார்கெட்’, சந்தானம் அல்ல, இராம.நாராயணன்தான் என்கிறார்கள். அங்கேதான் வருகிறது அரசியல்.

    தாராபுரம் கடலை வியாபாரியின் அமெரிக்க பத்திரங்கள் போலி? நெட்டில் டவுன்லோடு செய்தார்?

    Viruvirupu
    லண்டனைச் சேர்ந்த ‘பார்க்லேஸ்’ வங்கி, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட, அமெரிக்க பத்திரங்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. மொத்தம் ரூ.27,500 கோடி பெறுமதியாக அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) அவரிடம் இருந்து வருமாகவரி துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
    கடலை வியாபாரி ராமலிங்கம் வைத்திருந்ததாக இவர்கள் கைப்பற்றிய அமெரிக்க பத்திரங்கள் இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யப்பட்டவை என்றும், பார்க்லேஸ் வங்கி தகவல் தெரிவித்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இந்த விவகாரத்தில் ராமலிங்கத்திடம் முதல் கட்ட விசாரணையை முடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரை நாளை மீண்டும் விசாரணை நடத்த சம்மன் கொடுத்து உள்ளனர். பத்திரங்கள் நிஜமானவைதான் என்றே ராமலிங்கம் இன்னமும் கூறுகிறார்.
    இதில் பதில் தெரியாத கேள்விகள் பல உள்ளன. பத்திரம் போலி என்றால், தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி கேட்டு, மத்திய ரசாயனத் துறை அலுவலகத்துக்கு ராமலிங்கம் அனுப்பி வைத்த 2,500 கோடி ரூபாய் தொகை செக் விவகாரம் என்ன? அது, இந்திய ரூபாவில், இந்திய வங்கி செக்.
    அதையும் இணையத்தில் டவுன் லோடு செய்தாருங்களா?

    பத்தாண்டுகளுக்கு பிறகு, பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன

    புதுடில்லி:  பயணிகளை அதிகம் பாதிக்காத வகையில், உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் மூலம், 6,600 கோடி ரூபாய் திரட்ட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் தொகை மூலம், மிக மோசமான நிலையில் இருக்கும், ரயில் சேவைகள் இனியாவது மேம்படுமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.ரயில்வே துறை, 16 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததும், அமைச்சராக நியமிக்கப்பட்ட, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன்குமார் பன்சால், "கட்டணங்கள் உயர்த்தப்படும்' என, அடிக்கடி அறிவித்தபடி இருந்தார்."பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும், ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம்' என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக கட்டணங்கள் உயர்வு அறிவிப்பு வெளியானது. பார்லிமென்ட் கூட்டம் முடிந்த பின், கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.21ம் தேதி முதல்...டில்லியில் நேற்று மதியம், பத்திரிகையாளர்களை சந்தித்த, அமைச்சர் பவன்குமார் பன்சால், கட்டண மாற்றங்களை அறிவித்தார். அவர் கூறியதாவது:ரயில் பயணிகள் கட்டணம் மட்டுமே, இப்போது உயர்த்தப்பட்டுள்ளன. சரக்கு கட்டணங்களில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    டெல்லி பலாத்காரம் 2 மணி நேர திற்கு பின்புதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்

    எல்லோர் முகத்திலும் கரி...By ப. இசக்கி
    ஓரே ஒரு ஆள், எல்லோர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார். ஆம், தில்லியில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் சகோதரர் சில உண்மைகளை அம்பலப்படுத்தி விட்டார். அவர் கூறியது, அவரது சொந்தக் கற்பனையோ, சுயநலக் கருத்தோ அல்ல.தொலைக்காட்சியில் முகம் தெரியவும், வாக்கு வேட்டைக்கும் நீலிக்கண்ணீர் வடிக்க அவர் அரசியல்வாதியும் அல்ல. அவர் ஒரு சாதாரண பிரஜை. பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது சகோதரி இறப்பதற்கு முன்பு தன்னிடம் கூறிய உண்மையைத்தான் அவர் இப்போது போட்டு உடைத்திருக்கிறார்."அந்த (பலாத்கார) சம்பவத்திற்குப் பிறகு அருகில் இருந்தவர்களிடமும், அந்த வழியாகச் சென்றவர்களிடமும் தனக்கு உதவி செய்யுமாறு என் தங்கை கேட்டிருக்கிறார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. சம்பவம் நடைபெற்ற சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் எனது தங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவருடைய உடலிலிருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறியிருந்தது.விபத்து, தாக்குதல் என எதிர்பாராமல் பாதிக்கப்படுபவர்களுக்குத் தயக்கம் இல்லாமல் உடனடியாகப் பொதுமக்கள் உதவிசெய்ய முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களின் மனோபாவம் மாற வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். இது நம் ஒவ்வொருவரின் முகத்திலும் அறைந்ததுபோல இல்லையா?

    புதன், 9 ஜனவரி, 2013

    இதுவரை தமிழகம் கண்டிராத பச்சோந்தி

    வினவு ,  சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதே இழிவானது என்று கருதும் தமிழகத்தை, மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள் தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு  அரசியலில் களமிறங்கிய ராமதாசு, இதுவரை தமிழகம்  கண்டிராத பச்சோந்தி என்று அம்பலப்பட்டு, சொந்த சாதியினர்  மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால், தனது அடுத்த  ஆயுதமாக ஆதிக்க சாதிவெறியைக் கையிலெடுத்திருக்கிறார்.  51 சாதிச் சங்கங்களைக் கூட்டி “அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை”யை உருவாக்கியிருக்கிறார். சாதி கடந்த  திருமணங்கள் அனைத்தையுமே தடுக்க வேண்டுமென்பதும்,  வன்கொடுமைச் சட்டத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்பதும்தான் அவர்களது கோரிக்கை.
    வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பதற்கு இனி  ஒருவனுக்கும் தைரியம் வரக் கூடாது. பள்ளி, கல்லூரிக்குச்  செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித்  தெளிவாகச் சோல்லுங்கள்” என்று வெறியுடன்  பேசியிருக்கிறார் ராமதாசு. “ஆலய நுழைவுப் போராட்டம்  நடத்த வந்தார்கள். ஒரு லோடு செங்கல் எடுத்துத்  தாக்கினோம். வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்” என்று  ரெட்டியார் சங்கமும், “கலப்புத் திருமணம்தான் நம் முதல்  எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும்  பேசியிருக்கின்றனர். இந்து மக்கள் கட்சியும் இதில் கலந்து  கொண்டு, இந்து என்பவன் எவன் என்று காட்டியுள்ளது.

    Acid Victim உதவி கோரும் வினோதினி


    பார்ப்பன ஜூவியின் சங்கர மட பாசம் !

    ஜூனியர் விகடன்காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தரான வளசை ஜெயராமன் என்ற பீடிகையுடன் ஒரு ஜந்துவை தேடிப்பிடித்து அது உளறியதை வைத்து இரண்டு பக்கத்தில் சங்கர மடத்தின் இமேஜை ஜாக்கி வைத்து தூக்க நினைக்கிறது ஜூவி
      ஜெயேந்திரன் - மோகன் பகவத்“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன்” என்று கருணாநிதி உதிர்த்ததை வைத்து அழகிரியின் வாயில் ஏதாவது பிடுங்கி பரபரப்பு ஏற்ற வேண்டும் என்று பத்திரிகைகள் தொங்கிய நாக்குகளுடன் காத்திருந்தன. போலவே “தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல” என்று அழகிரி கூற பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு அரசியல் அக்கப்போரை அவிழ்த்து விட்டுவருவது நீங்கள் அறிந்ததே. இது குறித்து தனியாக எழுதுவோம்.
      இங்கே சங்கர மடத்திற்கு ஆதரவாக துண்டு போட்டு கச்சேரி நடத்தும் ஜூனியர் விகடனை மட்டும் பார்ப்போம். அழகிரியின் சங்கர மட டயலாக்கிற்கு பதிலடியாக இன்று வந்த ஜூவியின் முதல் கட்டுரை,         ”கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது” என்று தலைப்பில் வந்திருக்கிறது.
      இட ஒதுகீட்டை கிண்டல் செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் பயன்படுத்தும் வார்த்தை “கோட்டா”. புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் இருந்து சென்னை ஐஐடி வரை இட ஒதுக்கீட்டில் பயில வந்தால் கோட்டா மாணவர்கள் என்று கிண்டல் செய்வார்கள். இதனாலேயே பல பிற்படுத்தப்ட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான பார்ப்பனத் திமிரன்றி வேறல்ல. இதையே ஜூவியும் பூணூல் பாசத்துடன் தலைப்பில் வைத்திருக்கிறது.