புதன், 7 நவம்பர், 2012

லதா மங்கேஷேகர் எனது கணவரின் கள்ளக்காதலி

Lata Mangeshkar Had An Affair With Bhupen புபென் ஹசாரிகாவின் மாஜி மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மறைந்த பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகாவுடன் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தொடர்பு இருந்ததாக ஹசாரிகாவின் முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபலமாக இருந்து மறைந்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகா. அவரது முதலாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் கலந்து கொண்டார

நக்கீரன் ஆசிரியர் மீது சசிகலா அண்ணன் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!

தஞ்சை நடுவர் மன்ற நீதிபதி உத்தரவு!
  2001ஆம் ஆண்டு நக்கீரன் இதழில் சசிகலா அண்ணன் சுந்தரவரதன், அவரது மனைவி சந்தான லட்சுமி ஆகியோர் அதிமுகவினரிடம் கட்சிப் பதவிக்காக பணம் வசூலிப்பதாகவும், தனது மருமகன் டிடிவி தினகரனை முதல்வராக்குவதற்காக சிறப்பு யாகம் நடத்துவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி அவதூறானது என்று கூறி, சசிகலா அண்ணன், தஞ்சை நடுவர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நக்கீரன் சார்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள், தஞ்சை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கும்பகோணம் வழக்கறிஞர் எம்.முரளி ஆகியோர் ஆஜராகி வந்தனர். http://www.nakkheeran.in/

குருமூர்த்தி கைங்கரியம் கட்காரி தொடர்ந்து BJPயின் தலைவர்தான்

கட்காரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணமே இல்லை: பாஜக

டெல்லி: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் நிதின் கட்காரி தொடர்ந்து பாஜக தலைவராக இருப்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவால் தான் கட்காரி பதவி தப்பியுள்ளது.
 Rss Saves Nitin Gadkari S Day But Future Uncertain பாஜக தலைவர் நிதின் கட்காரி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகிறார். கட்காரியை எதிரி்த்து மூத்த பாஜக எம்பியும் வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானியின் மகன் மகேஷ் ஜேத்மலானி பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்காரி பதவி விலக வேண்டும் என்று ராம் ஜேத்மலானி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் நிதின் கட்காரிக்கு எதிராக கட்சிக்குள் பலர் இருந்தாலும் ஆர்எஸ்எஸ் அவருக்கு பெரும் ஆதரவாக உள்ளது.http://tamil.oneindia.in/  இனி பாருங்க கட்காரி ரொம்ப நல்லவருன்னு  நம்ப  சோ  ஜெயா டிவியில் பேட்டி கொடுப்பார் 

ஜெயலலிதா ஆட்சியில் போலீஸை வசமாக மாட்டிவிடும் முயற்சியில் முன்னாள் அமைச்சர்!


Viruvirupu
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், கைதுகள் எல்லாம் பரபரப்பாக நடந்த நாட்கள் முடிந்து, யாரும், எந்தத் தண்டனையும் பெறாமல் உள்ளார்கள். இதனால், “தி.மு.க. முக்கியஸ்தகளை கைது செய்வது பழிவாங்கல் நடவடிக்கை” என்று ஆரம்பம் முதல் தி.மு.க. கூறிவந்தது, மக்களிடம் ஓரளவுக்கு எடுபடத் தொடங்கியுள்ளது.
அரசுக்கு சங்கடமான இந்த சூழ்நிலையில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தாம் கைது செய்யப்பட்டது பழிவாங்கல்தான் என்பதை நிரூபிக்க முனைப்புடன் உள்ளார். தம்மிடமுள்ள ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கு செல்லவும் தயாராகிறார்.
தி.மு.க.-வின் திருப்பூர் மாவட்டச் செயலாளரான சாமிநாதனை, ‘கொலை மிரட்டல்’ கேஸ் ஒன்றில் பிடித்து 3 வாரங்களாக சிறையில் போட்டிருந்தது காவல்துறை. தமாஷ் என்னவென்றால், சாமிநாதன் வெளியே வந்துவிட்டார். இவர் மிரட்டியதாக புகார் கொடுத்த நபர் இப்போது உள்ளே போயிருக்கிறார்.
காரணம், புகார் கொடுத்தவர்மீது பல மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ளன!

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்: பிடிக்காத தம்பதிகள் பிரிந்து விடுவது மேல்''…

ஜெய்ப்பூர்: மனதிற்குப் பிடிக்காத தம்பதிகளை ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ வற்புறுத்துவது நரகவாழ்க்கைக்கு ஒப்பாகும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் - ரேகா தம்பதியருக்கு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரேகா மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 1994ஆம் ஆண்டு திருமணம் செய்த மோகன்லால் - ரேகா தம்பரியர், திருமணம் செய்து இரண்டே ஆண்டுகளில் பிரிந்துள்ளனர். பின்னர் தம்பதியர் இடையே மீண்டும் சமரசம் ஏற்பட்டு 2000ஆவது ஆண்டு சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுள்ளனர். பிறகு மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2001ஆம் ஆண்டில் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியுள்ளது.

கென்யாவில் விடுமுறை ஒபமாவின் வெற்றியை கொண்டாட

People took to the streets as they celebrate Barack Obama's election victory
 கென்யாவின் மைந்தனான ஒபமாவின் வெற்றியை கொண்டாட கென்யா அரசு வியாழக்கிழமை விடுமுறை தினமாக அறிவித்து உள்ளது  குர்டிஷ் கிராமத்தில்  44 ஆடுகளை பலிகொடுத்து கொண்டாடினர் . அங்கும் ஒரு அரசபட்டி உள்ளதோ ?
"Obama: The Musical" opened in Kenya’s capital Nairobi Sunday just days after President Mwai Kibaki declared Thursday a national holiday to let citizens in Obama’s ancestral homeland celebrate his success. The long-anticipated musical tells the story of Obama’s life set to traditional and contemporary Kenyan music though it ends with his acceptance of the Democratic nomination.
Pop stars were not the only ones dancing, though, with reports that Obama relatives danced in the streets of his grandmother’s village of Kogelo singing his praises in the wake of his victory. His half-brother told World Bulletin last week that he planned to roast a bull in celebration the win. In Turkey villagers in a predominantly Kurdish village sacrificed 44 sheep to celebrate Barak Obama’s election last week and smeared Obama posters with blood to ward off bad luck, the local Today’s Zaman reported.

Obama வெற்றி உரை! ரோம்னியின் ஆதரவும் எனக்குத் தேவை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா சிகாகோவில் வெற்றி உரை நிகழ்த்தினார்.அதில், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு, ஒபாமா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.மேலும் அவர பேசுகையில், நாம் ஒன்றாக இணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக பணியாற்றுவோம். அதன்படி, முன்னேற்றமான பாதையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செல்வோம். சாதாரண மக்களும் எந்தவொரு உயர் பதவிக்கும் வரலாம்.<வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றங்கள் காத்திருக்கின்றன. இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. ஆனால், நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய உதவி செய்தீர்கள். எனக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழு, மிகக் வலிமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அவர்களுக்கும் எனது நன்றிகள்

Obama wins reelection Obama 281..Romney 203 ஒபாமா வெற்றி முகம்

President Obama wins reelectionஒபாமா வெற்றி பெறுவது உறுதியாகி vவிட்டது . இன்னும் பூரணமான தேர்தல் முடிவு  வெளிவரவில்லை .பிரதிநிதிகள்சபையில் ரிபப்ளிகன் கட்சிkக்கு பெரும்பான்மைகிடைக்கும் என்று தெரிகிறது செனட் சபையில் டெமோக்ரடிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் தெரிகிறது 
  President Obama won a second term in the White House Tuesday night, Fox News projects, overcoming concerns about the fragile economic .. 

President Barack Obama won re-election Tuesday night despite a fierce challenge from Republican Mitt Romney as well as the weak economy and high unemployment that encumbered his first term and crimped the middle class dreams of millions.

கலர் கதாநாயகன் ரவிச்சந்திரன்

அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.
காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967),  நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் இரண்டு பேரும் அன்றைக்கு பிரபலம்.ஜெய்சங்கருக்கு ஒரே ஒரு படம்  ‘பட்டணத்தில் பூதம்’(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!
காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ”ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?” என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?  http://rprajanayahem.blogspot.com/

மைய்யா மைய்யா உன்ட்விட்டரில் சுடர்விட்ட சொற்களும் பொய்யா பொய்யா


சின்மயி ஸ்ரீபாதா (ட்விட்டரில் நிர்மலா கொற்றவையிடம்): அதைப்போன்ற நிறைய பாடல்களை நான் பாட மறுத்திருக்கிறேன். அதைப்பற்றியெல்லாம் (பொதுவெளியில் சொல்லி) அலட்டி ஆர்ப்பரிப்பதில்லை.

தீண்டாமை ஒழிப்பு, இரு டம்பள்ர் பிரச்சனை, தலித் உயர்வு, இட ஒதுக்கீடு, மீனவர் உயிர்காப்பு, சாதீய மறுப்பு போன்ற பற்பல அரிய சமூகத்திற்கு அத்தியாவசியமான சிந்தனைகள் நேர்த்தியாகத் தொகுத்து பாடப்பட்ட மேலே இருக்கும் அருமையான பாடலின் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சிவசிதம்பரம்:
கூத்துபாக்க வந்தீகள
குத்துவெக்க வந்தீகளா 
குத்துப்பாட்டு கேக்கணுமா ஆ...
கும்மாங்குத்து பாக்கணுமா ஆ...
சிம்மகல்லு சிமுரனோட
சிலுமிசத்த காட்டணுமா 
....போடு
சின்மயி ஸ்ரீபாதா:
சிம்ம்மக்கல்லு சிம்ம்மகல்லு சிம்முரண்டா நா
தெம்பிருந்தா என்ன அள்ளி தின்னுக்கடா நீ
தாலி இல்லாமநா தார மாவேண்டா

பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இஸ்லாமாபாத்: ராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் பிரிவினையை தூண்டி விடும் எந்த செயலையும் பொறுத்து கொள்ள முடியாது. ராணுவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பாகிஸ்தான் நீதிபதிகளுக்கு ராணுவ தளபதி அஷ்பக் கயானி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் மற்றும் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ.யின் தலையீடு அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. ராணுவ புரட்சி மூலம் நாட்டின் அதிகாரத்தை பலர் பிடித்த வரலாறும் உண்டு. ஆனால், இப்போது உச்சநீதிமன்றம் அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அரசியலில் தலையிட வேண்டாம். அரசியலில் தலையிடுவதை ராணுவ அதிகாரிகள் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ராணுவத்துக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உத்தரவிட்டார்.

நான் சிறையில் இருப்பதையே சிலர் விரும்புகின்றனர்: வீரபாண்டி ஆறுமுகம்

சேலம்:""சிலர் நான் உள்ளே இருப்பதையே விரும்புகின்றனர், அவர்களெல்லாம் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் இல்லை,'' என, தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.சேலம் மாவட்ட, தி.மு.க., சார்பு அணிகளைச் சேர்ந்த, புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்து பேசியதாவது:
தலைமை அறிவிப்பின்படி, புதிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய உடல் நிலை எப்படி உள்ளது என்பதை பார்ப்பதற்காகவே, இங்கு கட்சியினர் பலர் திரண்டு வந்துள்ளனர்.திருச்சி, கோவை, சென்னை, வேலூர் என, தடுப்புக் காவல் சட்டத்தில் என்னை அலைக்கழித்தபோதும், பிற மாவட்டங்களில் இருந்து, தி.மு.க., தொண்டர்கள் நேரில் வந்து பார்த்தனர். மற்ற மாவட்டங்களை விட, சேலம் மாவட்டத்தில் தான், தி.மு.க.,வினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்படுகிறது. http://www.dinamalar.com/

Mad City (1997) பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!

ஊடகங்களின் வணிக வெறி எப்படி ஒரு அப்பாவியை அலைக்கழித்து அவனது இயல்பான பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக மாற்றி மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசுகிறது கோஸ்டா கவ்ராசின் மேட் சிட்டி
மேட்-சிட்டி-124 மணி நேரமும் செய்திகளை அள்ளித்தரும் தொலைக்காட்சிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமல்ல, தமிழிலும் நிறைய வந்து விட்டன. இந்த செய்தி ஊடகங்கள் வெறுமனே ரேடியோ போல் இல்லாது காட்சி ஊடகமாகவும் இருப்பதால் எந்நேரமும் பரபரப்பான செய்திகளுக்காக ஒரு வேட்டை நாயைப் போல அலைகின்றன. குறிப்பிட்ட நாளில் தீனி சரியாக அமையவில்லை என்றால் இவர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக ஒன்றுமில்லாத செய்திகளையும் விசுவரூபமாக சித்தரித்து விடுவார்கள்.
செய்தி, அதன் முக்கியத்துவம், ஆதாரங்களின் நம்பகத்தன்மை, நெருடும் காட்சிகள் மீதான சுய தணிக்கை, பார்வையாளர்களின் மலிவான உணர்ச்சிகளைத் தூண்டாமல் விமரிசனமாகப் பார்க்க கற்றுத்தரும் பொறுப்பு என்று அடிப்படை ஊடக அறவியல் எதனையும் இச்செய்தி ஊடகங்களிடம் பார்க்க முடியாது. 24 மணி நேர செய்திகளின் தாயகம் அமெரிக்காதான். அமெரிக்க மக்களை அறிவும், விமரிசனமும் இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் ஆர்வலர்களாக  உருவாக்கியிருப்பதில் இந்த ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
இத்தகைய அமெரிக்க ஊடகங்களை முன்மாதிரியாக வைத்து தான் நமது செய்தி ஊடகங்களும் செயல்படுகின்றன. சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன.  http://www.vinavu.com

BJP: கட்காரி தலைவர் பதவியில் தொடர்வார்

"நிதின் கட்காரி மீது, கட்சியும், தலைவர்களும் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே, கட்சி தலைவர் பதவியில் இருந்து, கட்காரியை நீக்கும் திட்டம் இல்லை' என, பா.ஜ., திட்டவட்டமாக அறிவித்தது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி, பரபரப்பை ஏற்படுத்தி வந்த பா.ஜ.,வுக்கு, கட்சி தலைவரான நிதின் கட்காரியால், இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலும், விமர்சனங்களிலும், அவர் சிக்கி வருகிறார். இதனால், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்காரி விவகாரத்தால், பா.ஜ.,வில் கோஷ்டி பூசல்களும் வலுவடைந்துள்ளன. கட்காரியின் தலைமையை எதிர்த்து, மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி போர்க்கொடி உயர்த்தினார். நேற்று முன்தினம், அவரது மகன் மகேஷ் ஜெத்மலானி, தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை, ராஜினாமா செய்து விட்டார். http://www.dinamalar.com
A JEYARAJ - madurai at Talahassee ,USA,இந்தியா

A JEYARAJ இங்கே ஒருவர் காங்கிரஸ் வீழ்த்தப்படவேண்டும் , மோடி ,வகையறா அல்லது ஜெயா பிரதமர் ஆக வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறார் ,, ஏன் என்னும் நாட்டில் பாக்கியுள்ள மசூதிகள் இடிக்கபடவேண்டுமா? ,,சவப்பெட்டி , ஆயுத பேர ஊழல்கள் தொடர ஆசையா ? அது சரி கனவு காண்பது அவரவர் விருப்பம் ,, இருந்தாலும் ஜெயா/// பிரதமர் ?? எப்படிப்பா ?? தமிழ்நாட்டில மின்வெட்டு, கொலை கொள்ளை கற்பழிப்பு செயின்பரிப்பு மிடாஸ் கொள்ளை , கமிசன் எல்லாம் சரியாகி நம்பர் ஒன்னு ஆனதுனால ப்ரோமோசனா?

தேவர் குரு பூஜை 6 பேர் பலி எதிரொலி மதுரையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு;7.11.2012 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குருபூஜைக்கு சென்று திரும்பியவர்கள் மீது ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியது. இதில் பலத்த தீக்காயமடைந்த 6 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தை கண்டித்து ஒரு பிரிவினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ( புதன்கிழமை) மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அறிவித்துள்ளார். தேவர் குரு பூஜை 

பனை வாரியத்தை முடக்கியதால் ஜெ.,வுக்கு குமரி அனந்தன் பாராட்டு???

ஜெ.,வுக்கு குமரி அனந்தன் பாராட்டு மழை: கலைஞர் தாக்கு முதல்வர் ஜெயலலிதாவை குமரி அனந்தன் பாராட்டியிருப்பது குறித்து திமுக தலைவர் கலைஞர் கருத்துத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில், ’’இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், நீண்ட நாள் காங்கிரஸ்காரர். அவர் அந்தக் கட்சியில் வகிக்காத பதவிகள் கிடையாது. சிறந்த பேச்சாளர். எழுத்தாளர். நான் முதல் அமைச்சராக இருந்த நிலையில், என்னைச் சந்தித்தபோதும், பல நிகழ்ச்சிகளிலும், கடிதங்களிலும் பாராட்டிப் பேசாத வார்த்தைகளே இல்லை. பனை வெல்லத்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் பேசத் தவறிய தில்லை.

செவ்வாய், 6 நவம்பர், 2012

DGP துக்கையாண்டி மனைவி காவல் நீடிப்பு! சாப்பிட மறுத்ததால், நோ விசாரணை!!

 பல ஆண்டுகளுக்கு முன்னாள் ஜெயலலிதா (எங்கள் இதய தெய்வம் அம்மா அவர்கள்) கைது செய்யப்பட்டபோது கடமையில் இருந்த டிஜிபி துக்கையண்டியை வஞ்சம் தீர்க்க இப்படியெல்லாம் செய்கிறார் ம்ம் பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் 
Viruvirupu
போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை முடிந்த நிலையில், கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டி மனைவி சுப்புலட்சுமிக்கு, நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3-ம் தேதி முதல், சுப்புலட்சுமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். நேற்று போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் சுப்புலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும், 19-ம் தேதி வரை, நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்வாக்குப் பதிவில் ஒபாமா முண்ணனி!

 Obama Dominates Pre Polls வாஷிங்டன்: பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் போட்டி நிலவும் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று முடிவுக்கு வருகிறது. இதுவரை பல மாநிலங்களில் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் முன் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வந்தன.
அவற்றில், ஒபாமா முண்ணனி வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடித்தட்டு, நடுத்தர மக்களே, முன் வாக்குப்பதிவுகளில் அதிகம் கலந்துகொள்வதால் இது எதிர்பார்த்த செய்தியாகத்தான் இருக்கிறது.
2000 ம் வருட தேர்தலில் ஃப்ளோரிடாவில் வெறும் 547 வாக்குகள் அதிகமாக பெற்று ஜார்ஜ் புஷ் அதிபர் பதவியை கைப்பற்றினார். தற்போதைய முன் வாக்குப்பதிவில் ஃப்ளோரிடாவில் 47 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 42 சதவீதம் ஒபாமா கட்சியினரும், 39.5 சதவீதம் ராம்னி கட்சியினரும் 18 சதவீதம் எந்த கட்சியையும் சாராதவர்கள். பெரும் கூட்டம் இருந்ததால், சில பகுதிகளில் முன்வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டது. http://tamil.oneindia.in/

கன்னா பின்னான்னு குண்டாயிட்டா

கட்டிபுடிடா கவர்ச்சி நடிகை கன்னா பின்னான்னு குண்டாயிட்டே போறாராம். நெருங்கிய ஹீரோக்கள்கிட்ட சான்ஸ் கேட்டும் பட வாய்ப்பு கிடைக்காததால நடிகை ரொம்பவே அப்செட்டாம். துணை நடிகை வாய்ப்புகூட தரமாட்டேங்கிறாங்களேன்னு புலம்புறாராம். அவரை படத்துல யூஸ் பண்ணலாம்னு பாத்த சில இயக்குனருங்க அவரோட தோற்றத்தை பாத்துட்டு சைலன்ட் ஆயிட்டாங்களாம்.

என்னதான் பேசுவதோ? காதல் இல்லாத கதை

சென்னை-: பாலாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஆச்சார்யா ரவி. இவர் ‘என்னதான் பேசுவதோ என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: பீகாரிலிருந்து தப்பி வரும் ஒரு பெண்ணிடம் 5 மாணவர்கள் நட்பாக பழகுகின்றனர். திடீரென்று ஒரு கும்பல் அவளை இழுத்துச் செல்கிறது. அவளது பின்னணி தெரிந்து மாணவர்கள் அதிர்ச்சி அடைக்கிறார்கள். அந்த பெண்ணை மாணவர்கள் காப்பாற்றுகிறார்களா என்பது கதை. விஜய் ராம், தாஸ், ரோஷன், சின்னசாமி, மாஸ்டர் விக்னேஷ் ஹீரோக்கள். தக்ஷா ஹீரோயின். இப்படத்தில் காதல் கிடையாது. இசை டி.இமான். பீகாரில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. மேலும் குற்றாலம், தென்காசி, செங்கோட்டையில் ஷூட்டிங் நடக்கிறது. இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் நானே ஏற்றிருப்பதால் சுமை கூடுதலாகி இருக்கிறது.<

சட்டம் ஒழுங்கு யார் கையில் அகப்பட்டு கெட்டுப் போயிருக்கிறது பாருங்கள்...


சென்னை: முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை அலட்சியம் இவற்றின் காரணமாகத்தான் தேவர் குருபூஜை சமயத்தில் அத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொலை, கொள்ளைகள் நாளும், நாளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன இந்த ஆட்சியில் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
பசும்பொன் தேவர் குருபூஜைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பதாகத் தான் செய்திகள் வந்தன. ஆனால் 30ம் தேதி காலை 10.30 மணி அளவில், பரமக்குடி அருகேயுள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் சிவக்குமார் என்ற வேன் டிரைவர் கல்லாலும் கட்டையாலும் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி பரவியிருக்கிறது.  http://tamil.oneindia.in/

தலித் உயிரை விட தேவரின உயிர் மேலென்றா?

செய்தி: :பெட்ரோல் குண்டு வீச்சில் பலியான, மூன்று பேரின் குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய், நிதி உதவி அளித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நீதி: பரமக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்றோ, இரண்டோ இலட்சம் வழங்கிய பு.தலைவி இங்கு வாரி வழங்குவது ஏன்? தலித் உயிரை விட தேவரின உயிர் மேலென்றா? சாவிலேயே சமத்துவம் இல்லையெனில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சை நிறுத்த முடியுமா?   http://www.vinavu.com/2012/11/05/one-liners-nov5/

வீரபாண்டி பேத்தி நிச்சயதார்த்தம்:பங்கேற்ற அரசு அதிகாரிகள் கலக்கம்

சேலம்: தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தியும், மாஜி எம்.எல்.ஏ., ராஜாவின் மகளுமான, டாக்டர் மலர்விழியின், திருமண நிச்சசயதார்த்தம் நேற்று முன்தினம் பூலாவரியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அரசுத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர்கள், போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை உளவுத்துறை போலீஸார், அரசின் பார்வைக்கு கொண்டு செசன்றுள்ளனர். இது, அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா. இவர் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். ராஜாவின் மூத்த மகள் டாக்டர் மலர்விழிக்கும், கடலூரை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் டாக்டர் இளவரசனின் மகன் செந்தில்ஆனந்துக்கும் திருமணம் முடிவு செசய்யப்பட்டது. கடந்த, 25 நாட்களுக்கு முன், டாக்டர் இளவரசனை, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம், டாக்டர் மலர்விழி, டாக்டர் செசந்தில் ஆனந்தின் திருமண நிச்யதார்த்தம், சேசலம் மாவட்டம் பூலாவாரியில் உள்ள, வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டில் நடந்தது.

ஏமாறுவோர் இருந்தால் ஏமாற்றுவோரும் இருப்பர்

s.maria alphonse pandian மக்கள் மறந்திருப்பார்கள் என ஜெயா எண்ணுவதில் தவறில்லை...ஜெயாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக அந்த நீதிபதியின் மகனை கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளவில்லையா? அந்த வழக்கு என்ன ஆயிற்று? நாம் மறந்திருப்போமே? ஜெயாமீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்ததர்காக சுப்ரமணியசாமியை விமான நிலையத்தில் மகளிர் அணியை அனுப்பி அசிங்கப்படுத்தியதையும் அவரது வலது கரமாக இருந்த பெண் ஐ.ஏ எஸ் அதிகாரி சந்திரலேகா மீது திராவகம் வீசியதையும் மறந்திருப்போமே?அது போல உயர்த்தப்பட்ட பேரூந்து கட்டணத்தையும் மறந்திருப்போம் என ஜயா எண்ணுவதில் தவறில்லை...

சென்னை: "கடந்த ஆண்டு நவம்பரில், பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பசும்போன் தேவர் விழாவை ஒட்டி, முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை அலட்சியம், இவற்றின் காரணமாக, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.ஏமாறுவோர் இருந்தால், ஏமாற்றுவோர் இருக்கத்தானே செய்வர்.

நாட்டின் பல்கலை.கல்விமுறை மோசம்: சசி தரூர் கடும் எதிர்ப்பு

புதுடில்லி: ""நமது பல்கலைக்கழக கல்வி திட்டத்தால், சிறந்த பட்டதாரிகள் உருவாகவில்லை. படித்தும் வேலையில்லாதவர்கள் அதிகரித்துள்ளதால், தீவிரவாதிகள் மற்றும் நக்சல்கள் வலையில் அவர்கள் வீழ வாய்ப்பு உள்ளது,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், சசி தரூர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த, உயர்கல்வி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர், சசி தரூர் பேசியதாவது:
நம் நாட்டில், 621 பல்கலைக்கழகங்கள், 33 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. உலக அளவில், இரண்டாவது பெரிய கல்வி நாடாக இந்தியா இருந்தபோதிலும், கல்வி சிறப்பாக இல்லை; கல்வி கற்றவர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.இதற்கு காரணம், நாம் பின்பற்றும் பல்கலைக்கழக கல்வித் திட்டம். நாம் முன்னர் பின்பற்றிய, தேசிய கல்விக் கொள்கை, பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிகவும் பின்தங்கியுள்ளது. சீனாவைப் பாருங்கள்...மத்திய கிழக்கு நாடுகளைப் பாருங்கள்... அவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர்.