செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பெண் சப் plus 4 போலீஸாரைI தரதரவென இழுத்துச் சென்ற மீனவர்கள்.

தூத்துக்குடியில், கூடங்குளம் போலீஸ் தடியடிக்குக் கண்டனம் தெரிவித்து மீனவர்கள் நடத்திய போராட்டத்தின்போது பெண் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு பேரை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தரதரவென இழுத்துச் சென்று சிறை வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐஜி மற்றும் எஸ்.பி. தலைமையில் விரைந்து வந்த போலீஸார் நான்கு போலீஸாரையும் மீட்டு வந்தனர்.
கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று கடற்கரையில் நடந்த பெரும் வன்முறை, கலவரம், தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சைத் தொடர்ந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பரபரப்பு நிலவுகிறது. கூடங்குளத்தில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மீனவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டத்தின்போதுதான் மீனவர் அந்தோணிச்சாமி என்பவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவில் Teen Girls உறவில் அதிகம் ஈடுபாடு ஆய்வில் அதிர்ச்சி

டெல்லி: இந்தியாவில் 15 வயதிற்கு முன் உறவில் ஈடுபடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவிகிதம் பேர் 15 வயதுக்கு முன்னரே செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அதே வயதுடைய ஆண்களில் 3 சதவிகிதம் பேர் மட்டுமே உடலுறவு வைத்துள்ளனர் என்பது தெரிவித்துள்ளனர்.
கரீபியன் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் 15 வயதிற்கு முன்பு 17 சதவிகிதப் பெண்கள் அதிக அளவில் உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலும் அதே அளவிற்கு பெண்கள் முன்னேறி வருவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இதேபோல் உலகம் முழுவதும் 15 வயது முதல் 19 வயதிற்குள் தாயாகும் பெண்களின் எண்ணிக்கை 16 மில்லியன் அளவாக உள்ளதாக தெரிவிக்கிறது WHO வின் கணக்கெடுப்பு ஒன்று.

கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு: ஷிண்டே

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆதரவு அளித்து வருகின்றன; அவற்றின் பெயர்களை, இப்போதைக்கு வெளியிட இயலாது. இன்னும் நிறைய அணு மின் நிலையங்கள், அமைக்க வேண்டும் என்பதே, அரசின் கொள்கை,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின், முதன் முறையாக, டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த, சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது:உள்துறை அமைச்சராக, சிதம்பரம் இருந்தபோது, மாதாந்திர அறிக்கை சமர்ப்பித்துப் பேசுவார். அந்த நடைமுறையை, நானும் தொடர முடிவு செய்துள்ளேன். "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்' அமைப்பது, நல்ல யோசனை. ஆனால், அது அனைத்து மாநில முதல்வர்களின், சம்மதத்துடன் இருக்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது

 மாயவலையில் விழ வேண்டாம்
சென்னை: "கூடங்குளம் அணு மின் நிலையத்தால், மீனவர் வாழ்வாதாரத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடையவர்களின் மாயவலையில் விழ வேண்டாம்; எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் எதிர்ப்பாளர்களை போலீசார் தடுத்தது, தாக்குதல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலர் ராஜகோபால், டி.ஜி.பி., ராமானுஜம் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.

குஜராத்தில் தே.ஜ., கூட்டணி உடைந்தது:ஐ ஜனதா தளம் தனித்தே போட்டி

புதுடில்லி: ""தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தாலும், குஜராத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தனித்தே போட்டியிடுவோம்,'' என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறினார்.
குஜராத்தில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, முதல்வராக உள்ள நரேந்திர மோடிக்கும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கும் இடையே, கருத்து வேறுபாடு நிலவுகிறது. நரேந்திர மோடியை, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள், நிதிஷ் குமாரும், சரத் யாதவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தல், விரைவில் நடக்கஉள்ளது.

அசீம் திரிவேதி கைது. நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து Cartoon

இந்திய நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து கார்ட்டூன் வரைந்ததாக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வரைந்த கார்ட்டூன்களை நான் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. கைது செய்தி கேட்டு இணையத்தில் தேடியதில், விக்கிபீடியாவில் இந்த இரண்டு கார்ட்டூன்களும் இருந்தன.
இப்படி கார்ட்டூன் போட்டதற்காகவெல்லாம் கைது செய்வார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒருவகையில் சட்டத்தை ‘டெஸ்ட்’ செய்யவேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கை வலுவான வக்கீல்கள் நடத்தி, வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்த மாநில அரசை சந்தி சிரிக்கவைத்து, கடுமையான அபராதம் விதிக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.

AVM முருகனின் மரணத்தில் சந்தேகம் போலீசில் புகார்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மூத்த மகன் ஏவி.எம்.முருகன் (77). சென்னையில் இன்று காலை மரணம் அடைந்தார்.
A V M Murugan, a family member of the famous AVM Group with interests in films, music was found dead at his friend's house in Krishnanagar, Maduravoyal. He was 77.
His son Karthik Meyappan lodged a complaint with the Maduravoyal police that the family received a phone call from the family of his friend Vinayagam, 53, that Murugan had died of heart attack. Police said Murugan has been staying with Vinayagam for the past three days. Police quoted Vinayagam as saying that when he went to wake up Murugan on Monday morning, he was found dead. Police have registered a case of suspicious death and are awaiting the postmortem report to proceed with investigations.
The body was later handed over to the family. A V M Murugan was the eldest son of A V Meyyappa Chettiar. His body will be brought to AVM studios at 8am on Tuesday for the public and the film fraternity to pay their last respects.

முருகனின் மரணத்தில் சந்தேகம் போலீசில் புகார்
இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வளசரவாக்கத்திலுள்ள வீட்டில் அவரது உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நாளைய தி.மு.க அழகிரி தான்!' - ராசிபுரத்தில் புகழாரம்!


ராசிபுரத்தில் சலவை தொழிலாளர்களுக்காக 'நவீன சலவை வளாகம்' மத்திய அமைச்சர் மு.க.அழகிரியால் திறக்கப்பட்டது. மதுரையில் இருந்து காரிலேயே வந்தார். ராசிபுரம் எல்லை ஆண்டலூர் கேட்டில் இருந்து ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை முன்னூறுக்கும் மேற்ப்பட்ட டூ-வீலர்களில் உ.பிக்கள் வரவேற்று ஊர்வலமாக வந்தனர்.

புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நவீன சலவை வளாகத்தை அழகிரி திறந்து வைக்க அருகில் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், எம்.பி கே.பி ராமலிங்கம் இருந்தனர்.
'அறிஞர் அண்ணாவை நாங்கள் பார்த்தது இல்லை ஆனால் அந்த அண்ணாவாக எங்களுக்கு காட்சி தருபவர் எங்கள் அண்ணன் அழகிரி தான்' என்றார் நாமக்கல் மாவட்ட விவசாய அணி து.செ ஈஸ்வரன்.எம்.பி
கே.பி ராமலிங்கமோ 'எதிர்காலத்தில் கலைஞர் கோட்பாடுகளை இந்திய தீபகற்பதிலேயே தாங்கி பிடிக்கும் தீப ஒளி அண்ணன் அழகிரி தான்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

Amala Paul இளமையாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்ள ஜிம்முக்கு


நடிகை அமலாபால் மார்கெட் சரசரவென ஏறிய வேகத்திலேயே குறைந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்து மறுபடியும் நடிக்கத் துவங்கியிருக்கும் அமலா பால்  தெலுங்கில் ராம் சரன் தேஜாவுடன் ‘நாயக்’ படத்திலும், தமிழில் ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கும் அமலாபால் தன்னை இன்னும் இளமையாகவும், கவர்ச்சியாகவும் காட்டிக் கொள்ள தொடர்ந்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.>இதற்காக தனியாக ஒரு பயிற்சியாளரை நியமித்து அவருடன் பயிற்சி செய்வது, ஹோட்டலுக்கு சென்று சரியான உணவு வகைகளை அவரது அறிவுரையின் பேரில் உண்பது என இருக்கிறாராம். தனது ரசிகர்களுக்காகத் தான் இத்தனை சிரமப் படுகிறார் அமலா பால்.ஆனால் அமலாபாலின் ரசிகர்களோ ”பயிற்சியை நிறுத்திவிட்டால் முகத்தில் விரைவில் முதுமை தெரியும். இந்த வயதிலேயே எதற்கு ஜிம். நிமிர்ந்து நில் படங்களை பார்த்தோம் அதிலேயே அழகாகத் தான் இருக்குறீர்கள்” என்று சொல்கின்றனர்.

சாய்பாபா மரணத்தில் மர்மம்: சிபிஐ விசாரணை கோரி ஆந்திர வியாபாரி வழக்கு

ஹைதராபாத்: சத்ய சாய்பாபா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும், அதனால் அது குறித்து சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும் என்றும் கூறி ஆந்திராவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது சொத்துக்கள் சாய் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் சாய்பாபாவின் சீடரான சத்யஜித் அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் சாய்பாபாவின் உயில் விவரங்களை தெரிவித்தார்.

போலீஸாரை வலை வீசி கடலுக்குள் இழுத்தத் தள்ள திட்டமிட்ட போராட்டக்காரர்கள்

கூடங்குளம்: போலீஸார் தங்களைத் தாக்கினால் அவர்களை மீன்பிடி வலைகள் மூலம் வலை வீசிப் பிடித்து கடலுக்குள் இழுத்துத் தள்ள போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், அதை முன்பே கண்டுபிடித்து விட்ட போலீஸார் அதை முறியடித்து விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கலவர பூமியாகியுள்ள கூடங்குளத்தில் இன்று காலை போலீஸார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு காரணமாக பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இதுவரை இல்லாத அளவு இன்று கூடங்குளம் போராட்டத்தில் வன்முறை வெடித்து விட்டது. நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கில் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலோரத்தில் கூடிய மக்களைக் கலைக்காமல் போலீஸார் இன்று காலை வரை அமைதி காத்தனர். இன்று காலைக்கு மேல்தான் போலீஸார் தடியடி நடத்தினர்.

வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புதல்

டெல்லி: தமிழகம் கோரியபடி காவிரி நதிநீரை திறந்துவிட கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சம்பா சாகுபடியைத் தொடங்க கர்நாடக அரசு தினந்தோறும் 2 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும். பிரதமர் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு முன்பாக இது தொடர்பான இடைக்கால உத்தரவைக் கர்நாடகத்துக்குப் பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

கூடங்குளம், தப்பி ஓடும்போது குழந்தை பலி - போலீசார் விரட்டியதில்

இடிந்தகரை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரை லூர்துமாதா ஆலயத்தில் ஒன்று திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டியடித்ததில் குழந்தை ஒன்று கீழே விழுந்து பலியான பரிபாதம் நிகழ்ந்திருக்கிறது,
கூடங்குளம் சுனாமிகாலனி கடற்கரையில் குவிந்திருந்த பல்லாயிரம் மக்களை கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். இதில் கடலுக்குள் குதித்தவர் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. இதனிடையே கூடங்குளம் மக்களுக்காக நடந்த போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் அந்தோணிசாமி, மணப்பாடு கிராமத்தில் பலியானார்.

உதயக்குமார்! Fiber படகில் ஏறி முதல் ஆளாக ஓடிவிட்டார்


கூடங்குளம்: போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கியதுமே முதல் ஆளாக போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமாரும், அவரது குழுவினரும் பைபர் படகு மூலம் தப்பி கடலுக்குள் போய் விட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று காலையில் வந்து குழுமிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை வரை விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதுவரை கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது தடியடியோ அல்லது வேறு ஆயுதப் பிரயோகமோ நடத்தியிராத போலீஸார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு மூலம் ஆயிரக்கணக்கான மக்களையும் போலீஸார் சம்பவ இடத்திலிருந்து விரட்டியடித்தனர். இதனால் கடலோரப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. பலர் இதில் காயமடைந்துள்ளனர். போலீஸார் மீது பொதுமக்கள் கடல் மணலை வீசி எதிர்ப்பைக் காட்டினர். பலர் கடலுக்குள் படகுகள் மூலம் தப்பி ஓடி விட்டனர்.

உதயகுமார் தலைமறைவு! போலீசை தாக்கிய போராட்டக்காரர்கள்

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை எதிர்த்து போராட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இன்று அணுமின் நிலையத்தின் பின்புறமாக, கடல் வழியாக வந்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்றார்கள். முற்றுகையிட வந்த போராட்டக்காரர்கள் போலீசாரால்  தடுத்து நிறுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ஐ.ஜி.,ராஜேஸ்தாஸ் போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நேரத்தில் இதில் ஆவேசமுற்ற ஒரு சிலர் ஐ.ஜி.,யுடன் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினர்.' அப்போது போலீசார் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இதனையடுத்து அவரை மீட்க போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. கண்ணீர் புகை குண்டுகள் வீசியது. போலீஸ் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடலில் இறங்கினர். சிலர் கடலில் நீந்திச்சென்றனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் ஏறி தப்பிவிட்டார். ப்போராட்டத்தை தூண்டிவிட்டதாக அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

கூடங்குளத்தில் சமுக விரோதிகள் கைவரிசை, தீவைப்பு! எங்கும் ஒரே புகை மூட்டம்!!

கூடங்குளம் கடற்கரைப் பகுதியில் துவங்கிய பெரும் கலவரம், கூடங்குளம் கிராமத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கிராமம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காணப்படுகிறது. கூடங்குளம் கிராமத்தில் கடும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. கூடங்குளத்தில் சமுக விரோதிகள் கைவரிசை
கிராமம் முழுவதும் ஆங்காங்கே சிலர் தீவைப்பில் குதித்துள்ளனர். தீ வைப்பவர்கள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. காரணம், அரசு சொத்துக்களை மட்டும் இவர்கள் தீவைக்கவில்லை. பொதுமக்களுக்கு சொந்தமான சில சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. “இவர்கள் எல்லாம் யார்?” என்று சில பொதுமக்களே கேட்கும் நிலை காணப்படுகிறது.
ஊராட்சி மன்ற அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியில் தீ வைக்கப்பட்டுள்ளது. ஊரைச் சுற்றிலும் ஆங்காங்கே தீ வைக்கப்பட்டுள்ளது. சில குடிசைகள்கூட தீவைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடிசைகள் யாருக்கு சொந்தமானவை, ஏன் தீவைக்கப்படுகின்றன என்பதில் ஒரே குழப்பம் நிலவுகிறது. சுற்றிலும் புகைமூட்டமாக மாறியுள்ளது.
கூடங்குளம் கிராமத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸ் தடியடி நடத்தி அடித்து கலைத்து விட்டனர். தற்போது கடற்கரையில் போராட்டக்காரர்கள் யாருமில்லை.Viruvirupu

கூடங்குளம்: போராடும் மக்களைவிட அதிக எண்ணிக்கை போலீஸ்!!

Viruvirupu கூடங்குளம் அணு உலையில் எரிபொருளை நிரப்பக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடற்கரையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். நேற்று காலையில் இருந்து போராட்டம் தொடர்வதால், அப்பகுதியில் பதட்ட நிலை தொடர்கிறது.
நேற்று பகல் பொதுமக்கள் அமர்ந்துள்ள இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுவந்த காவல்துறையினர், இரவு தங்களது பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். காவல்துறை அதிகாரிகள், “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்றால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுப்போம். வெளியில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றனர்.

Jeyalalitha's latest தமாஷ்.அண்ணா வளைவு அகற்றம் பத்திரிகை செய்தி மூலம்அறிந்து கொண்டேன்

அண்ணா வளைவு தமாஷ்: ஜெயலலிதா வீட்டு ‘பேப்பர் பாய்’ பொறுப்பு ஏற்கிறார்! முதல்வர் வீட்டுக்கு பேப்பர் போடும் நபர், ஒரு வாரத்துக்கு மேல் பேப்பர் போடாமல் டிமிக்கி கொடுத்து விட்டார்.. அல்லது பழைய பேப்பர் போடுகிறார்!

Viruvirupu
“சென்னை அண்ணா நகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவை அகற்ற நான் உத்தரவிடவில்லை” இந்த அதிரடி அறிவிப்பு, முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து வந்துள்ளது!
முதல்வர் தமது அறிக்கையில் என்ன சொல்கிறார்?
“சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீரென உத்தரவிட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.அப்படிங்களா ?

ஜெயந்தி நடராஜன்தான் பெரும் பணக்காரர்! தமிழக மத்திய அமைச்சர்களிலேயே

Posted by: Sudha
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான். இவர் காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் மகளாவார்  அவருக்கு அடுத்த பெரிய பணக்காரர் ப.சிதம்பரம்.
 தமிழக மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் - மதிப்பு வாரியாக
ஜெயந்தி நடராஜன்: ரூ. 21,69,08,506
ப. சிதம்பரம்: ரூ. 11,96,01,906
மு.க. அழகிரி: ரூ. 9,50,00,000
எஸ். நெப்போலியன்: ரூ. 6,48,92,473
எஸ். ஜெகத்ரட்சகன்: ரூ. 2,42,51,873
பழனி மாணிக்கம்: ரூ. 38,87,586
காந்தி செல்வன்: ரூ. 12,33,524
ஜி.கே. வாசன்: இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் இல்லை.

ஆர்வம் மட்டும் போதும் ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 8


இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.
எனில், ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது, வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ஒருவர் மீதிருந்த ஆதரவை விலக்கிக் கொள்ள நேரும்போது. இப்படிப்பட்ட சூழல் ஏற்படும்போது (அவ்வாறு ஏற்படக்கூடாது என்பதுதான் நம் விருப்பம்) அத்தொழிலைத் தொடர்ந்து நடத்துவது சாத்தியமாகாமல் போகலாம்.
நெகடிவ் விஷயம் என்றபோதும், இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் ஒரு தொழிலுக்கு வளர்ச்சியும் வீழ்ச்சியும் இயல்பானது என்பதால்தான். தொழில்முனைவோருக்குச் சங்கடங்கள் ஏற்படலாம், விபத்து நேரலாம், மரணம் சம்பவிக்கலாம். ஆனால், தொழில் சிந்தனைக்கு எந்த இக்கட்டும் நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

India Pakistan விசா விதிமுறை கள் எளிதாக்கப்படுகிறது

Indian Foreign Minister S.M. Krishna, left, and his Pakistani counterpart Hina Rabbani Khar, right, arrive for a meeting in Islamabad, Pakistan on Saturday, Sept. 8, 2012. Krishna arrive in Pakistan for talks, the latest sign of a thaw in relations between two countries that have fought three major wars against each other. Photo: Anjum Naveed / AP


மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா 3 நாள் பய ணமாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அந் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரப் பானி காரிடம் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார். அப்போது இந்தியா - பாகிஸ்தா னுக்கிடையிலான உறவு கள், எளிமையான விசா கட்டுப்பாடுகள், மும்பை தீவிரவாத தாக்குதல் போன்ற முக்கிய விஷ யங்கள் குறித்து விவாதிக் கப்பட்டு வருகின்றன. எளிய முறையில் விசா வழங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெ ழுத்திடப்படுகிறது.

இந்தியாவில் நாப்கின் பயன்படுத்தும் பெண்கள் வெறும் 12% மட்டுமே

டெல்லி: இந்தியாவில் 12 சதவிகிதம் பெண்கள் தான் மாதவிடாய் நேரத்தில் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 88 சதவிகிதம் பெண்கள் சுகாதாரமற்ற முறையை பின்பற்றுவதால் இனப்பெருக்க பாதையில் அவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் 70 சதவிகிதம் உள்ளது என்கிறது அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு முடிவு.

மோடி அதிர்ச்சி, சிவசேனா தலைவர்: சுஷ்மா சுவராஜ் தான் பிரதமர் பதவிக்கு


புதுடில்லி:"பா.ஜ.,வில், பிரதமர் பதவி வேட்பாளருக்கு பொருத்தமானவர், சுஷ்மா சுவராஜ் தான்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
அடுத்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படலாம் என, செய்திகள் வெளியாகின. ஆனால், கூட்டணியில் உள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். "மதசார்பற்ற கொள்கை உடைய ஒருவரையே பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்று கூறினார்.இதனால், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி உட்பட, பா.ஜ., தலைவர்களில், வேறு யாராவது ஒருவர், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, மீண்டும் வதந்திகள் கிளம்பின.
எது எப்படி இருந்தாலும் மோடி தான் பிரதமர் வேட்பாளர். இதை அறிந்து தான் காங்கிரஸ் பல வழிகளில்  மோடியை வரவிடக்கூடாது என்று முனைப்பாக உள்ளது.  
சோ ராமசாமி:, இப்போது ஆயிரம் கருத்துக்கள் எழுந்தாலும், தேர்தல் அறிவித்த பின்பு தான் பிரதமர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுவார்கள். பிஜேபி யாரை நிறுத்தினாலும் பிஜேபி தான் அடுத்து ஆட்சி அமைக்கும். ஒரு சமீபத்தைய கருத்து கணிப்பு, பிஜேபி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் 400 தொகுதியை கைப்பற்றும் என்றும், மோடி அல்லாத ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் 250 தொகுதிகளை கைப்பற்றும். எது எப்படி இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி பிடிப்பது கானல் நீர். இனி திமுக காங்கிரஸ் கூட்டணி நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந் நிலையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தன் கட்சி பத்திரிகையான "சாம்னா'வுக்கு அளித்துள்ள பேட்டி:பா.ஜ.,வில் உள்ள தலைவர்களில் மிகவும் திறமையானவர், சுஷ்மா சுவராஜ். புத்திசாலியான அவர், கடினமாக உழைக்கக் கூடியவர். பா.ஜ., கட்சியை பொறுத்தவரை, பிரதமர் வேட்பாளருக்கு, சரியான தேர்வு, சுஷ்மா சுவராஜ் தான்.

கனிமொழி:திமுகவினரை அச்சுறுத்துவதையே சிந்தனையாகக் கொண்டு ஜெயலலிதா

ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க.வினரை அல்லல் படுத்தி,  அசிங்கப்படுத்தி, வீண் பழி சுமத்தி கைது செய்யப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சங்கர் வீட்டில் நள்ளிரவில் வீட்டு சுற்றுச் சுவரைத் தாண்டிய போலீசார்  வீட்டில் இருந்த பெண்கள் மீது சோதனை நடத்தினர்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தைக் கைது செய்த போலீ சார் அவரது வயதினையும் பொருட்படுத்தாமல் திருச்சி, சேலம், வேலூர் என ஒவ்வொரு சிறைச் சாலையாகக் கொண்டு சென்று அலைக்களித்தனர்.

  தி.மு.க.வினரை அச்சுறுத்துவதையே சிந்தனையாகக் கொண்டு ஜெயலலிதா செயல்படுகிறார்.
இது போன்று எத்தனை தாக்குதலைத் தொடுத்தாலும் தி.மு.கவினர் துவண்டுவிடமாட்டார்கள். மாறாக எதிர்த்து போராடும் ஆற்றல் தி.மு.க.வினருக்கு அதிகரித்துள்ளது. கலைஞரின் 89 வயதிலும் அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
 திருவொற்றியூரில் டைம்ஸ் பவுண்டேசன் சார்பில் கட்டித் தரப்பட்ட சிறப்பு மருத்துமனையை சரிவர பராமரிக்காமல் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார்.
ஆனால் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றவும், அண்ணா நூலகக் கட்டடத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாகவும் மாற்றம் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிடுகிறார்.  முதலில்  இருக்கிற மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியில் இந்த அரசு ஈடுபடவேண்டும். அதன்பிறகு புதிய கட்டடங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய யோசிக்கட்டும்.

EVKS.இளங்கோவன்:சுயநலவாதிகள், தங்களின் ஆதாயத்திற்காக போராட்டத்தை நடத்தி

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது என, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார். இது குறித்து அவர் தூத்துக்குடியில்,   ‘’நிலக்கரி ஊழல் பிரச்னையில், ஆதாரமற்ற குற்றச் சாட்டை மத்திய காங்., அரசு மீது, பா.ஜ., சுமத்தியுள்ளது. இதுகுறித்து விளக்க மளிக்கத்தயார் என பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் கூறியும், பார்லி.,யை நடக்கவிடாமல் பா.ஜ., முடக்கிவிட்டது. இது, ஜனநாயகத்தை நசுக்கும் வேலை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது. தமிழகத்தில், மிகப்பெரிய அளவில் மின்வெட்டு உள்ளது. ஆகவே, இங்கு மின்உற்பத்தி துவங்கப்படவேண்டியது அவசியம்.