புதன், 8 ஆகஸ்ட், 2012

Children of the Pyre காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்!

 சிதையின் குழந்தைகள்  ஆவணப்படம் | Children of the Pyre
சுடுகாட்டுச்-சிறுவர்கள்“நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால்  தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா.
குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது.  காரணம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணங்களால் மட்டும் அல்ல, அந்த படம் முன் வைக்கும் அனல் தகிக்கும் உண்மைகளால்.
குழந்தைகள் என்றவுடன் ஹார்லிக்ஸ் பிள்ளைகளும் அமுல் பேபிகளும் நினைவுக்கு வந்தால் நீங்கள் இந்தப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். இது புனித பூமியான காசியில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு நேராக போய்ச் சேர உதவும் வகையில் பிணங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றியது.
www.vinavu.com

இந்திக்கு எதிராக, இந்திக்கு ஆதரவாக

மொழிப்போர் / அத்தியாயம் 3
இந்தியாவின் பொதுமொழியாக இந்தி என்ற காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற காங்கிரஸ் செய்த காரியங்களில் ஒன்று இந்தி மாநாடு நடத்துவது. ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது அகில இந்திய இந்தி மாநாட்டையும் சேர்த்து நடத்தும் நடைமுறை 1924ல் இருந்து அமலுக்கு வந்தது. இந்தியின் பெருமை, தேசிய மொழியாக இந்தி ஆகவேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை பற்றி இந்தி மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. முக்கியமாக, நாடு தழுவிய இந்திப் பிரசாரம் பற்றி.
அந்த வகையில் நான்காவது அகில இந்திய இந்தி மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் சரோஜினி நாயுடு. இந்திப் பிரசார இயக்கம் என்பது ஒரு கட்சியின் அல்லது ஒரு வகுப்பாரின் வேலை அல்ல; இது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் – கட்சிகளின் – வகுப்பாரின் ஒற்றுமை உணர்வின் அடையாளம் என்ற சரோஜினி நாயுடுவின் பேச்சுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு.
காந்தி முன்மொழிந்த இந்தியை இதர காங்கிரஸ் தலைவர்களும் வழிமொழிந்தனர். முக்கியமாக, இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்த சர். டி. விஜயராகவாச்சாரி. பள்ளி, கல்லூரிகளில் இந்தியை இரண்டாவது மொழிப்பாடமாக வைக்கவேண்டும். அதன்மூலம் இந்தி கற்றுக்கொடுக்கும் பணிகள் கல்வித்துறைக்கு எளிமையாகும்; மக்களுக்கும் பலன் தரும் என்றார் இவர். இந்தி என்பது மிக எளிமையான மொழி. ஆறே மாதங்களில் ஒருவர் வட இந்தியர் புரிந்துகொள்ளும் அளவுக்குக் கற்றுக்கொள்ள முடியும் என்று சொன்ன விஜயராகவாச்சாரி, இந்தித் தேர்வில் ஒருவர் வெற்றிபெற முடியவில்லை என்றால் அவரைப் படித்தவராகவே கருதமுடியாது என்றார்.

மதுரை ஆதீனர்: நித்யானந்தாவின் சீடர்களின் போக்கு சரியில்லை.

சென்னை: "நித்யானந்தாவின் சீடர்களின் போக்கு சரியில்லை. அவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுப்பேன்' என, மதுரை ஆதீனகர்த்தர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா தனது சீடர் குழுவுடன் கயிலை மலைக்கு யாத்திரை சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கச்சனம் மற்றும் திருப்புறம்பியத்தில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான கோவில்களுக்கு மதுரை ஆதீனகர்த்தர் சென்றார். அப்போது, அவரை திருப்பனந்தாள் காசித்திருமடத்து அதிபர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நித்யானந்தாவிடம் தான் சிக்கவில்லை என்பதை தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாக நிருபர்களிடமும் மதுரை ஆதீனகர்த்தர் தெரிவித்திருந்தார்.

நீங்கள் சொல்லுவது ஆன்மிகம் , இவர்களுக்குள் நடப்பது பெண்மீகம்......

நியமனம் ஏன்: இந்நிலையில், ஆதீனத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழல்கள் குறித்து மதுரை ஆதீனகர்த்தர், தன் நெருக்கமான சீடரிடம் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் தகவல்: மதுரை ஆதீனம், ஆதீன கோவில்கள் நிர்வாகம், சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் நான் நித்யானந்தாவை நியமித்தேன். துவக்கத்தில் அவர் என்னிடம், 100 கோடி ரூபாய் தந்து விடுவதாகவும், அந்தப் பணத்தை வைத்து சன்னிதானம் நிர்வாகத்தை சீர் செய்து கொள்ளலாம் எனவும், முதல் தவணையாக ஐந்து கோடி ரூபாய் தருவதாகவும் என்னிடம் உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை அவர் ஒரு பைசா கூட தரவில்லை.

கிரிக்கெட் என்றொரு தேசபக்தி லேகியம்

ஒலிம்பிக் போட்டிகளின்  தொடக்க நாள் விழாவில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி கௌரவிக்கப்பட்டார். முதன்முதலாக குத்துச்சண்டை ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்று நாடு திரும்புகையில் அவரை வரவேற்க ஒருவரும் வந்திருக்கவில்லை. அவரது ஊரிலிருந்த ஓட்டலின் சர்வர் கூட அவருக்கு பரிமாறத் தயாரில்லை. கருப்பின தோலின் முன் தங்கம் கூட மினுமினுக்கவில்லை. தன் பதக்கத்தை கழற்றி ஆற்றில் வீசி எறிந்தார். அவருடைய மனஉளைச்சல் எந்த அளவு இருந்திருக்கும்!  இது போன்ற உளைச்சலில் தான் நம் இந்திய விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். நம் விளையாட்டு அமைச்சகம் அவர்களை அவ்வாறு தான் நடத்துகிறது.
இந்திய கால்பந்து அணி வீரர்கள் ஷுக்கள் வாங்க கிரிக்கட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.   ஹாக்கி வீரர்கள் உலகளவிலான சாம்பியன் பட்டம் வென்று வந்த போதும் அவர்களை வரவேற்க ஒருவரும் இன்றி ஆட்டோவில் வந்திறங்கியதைக் கண்டோம். அதிசயமாக பதக்கம் வெல்லும் வீரர்களையும் பாலின சோதனை என்று அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வேலை கேட்டு மன்றாடினாலும் அரசின் காதுகளுக்கு விழுவதில்லை.

குரு ராம்தேவ் நான்கு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

புதுடில்லி: கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவ், நான்கு கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
 திருடனை துரத்திக்கொண்டு பொது மக்கள் ஓடும்போது, திருடனும் சேர்ந்துக்கொண்டு திருடன் திருடன் என்று கூப்பாடு போட்டானாம்,அதுபோல்தான் ராம்தேவும்.அவர் ஒரு ஏமாற்று பேர்வழி எனபது போலிஸ் விரட்டியடித்தவுடன் பெண்களின் உடையை அணிந்துக்கொண்டு பெண்களுடன் ஒளிந்துக்கொண்டபோதே வெட்ட வெளிச்சமாகிவிட்டது, யோகா என்ற போர்வையில் வலம்வரும் இவரும் ஒரு நித்யானந்தாதான்.
அறிக்கையில் தகவல்: இந்நிலையில், மத்திய கலால் வரித்துறை இயக்குனரகம், ராம்தேவ், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளதாக, தனியார் "டிவி' சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாபா ராம்தேவ், திவ்ய யோகா மந்திர் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு, 2007லிருந்து 2011 வரை, உறுப்பினர் சேர்க்கை மூலம், 37.98 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மதுரை கிரானைட் முறைகேடு: மு.க. அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது வழக்கு

 Granite Smuggling Dayanidhi Azhagiri Booked
 அரசு குவாரியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததற்காக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கை அளி்த்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்த 2 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார் தற்போதைய மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டிச் செல்லும் வரை அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் சுப்புராஜ்,செல்வராஜ் ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அன்சாரிக்கு 490 ஓட்டு - ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே!

 Vp Poll Underway Sonia Pm Caste Votes
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்று 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகியுள்ளார். அவருக்கு 490 ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன.

மறக்கடிக்கப்பட்ட, வறண்டு போன ஒரு நதியின் History

வரலாற்றின் பல பக்கங்களிலும் பதியப்பட்டு இருக்கும்  சரஸ்வதி நதி இப்போது எங்குள்ளது? நதி மூலத்தை ஆராயாதே என்னும் மூதோர் அறிவுரையைச் சற்றே நகர்த்தி வைத்துவிட்டு ஆராயத்தொடங்கினால், அதிர்ச்சியூட்டும் சுவாரஸ்யமான ஒரு வரலாற்றை நம்மால் கண்டடையமுடியும்.
19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் சரஸ்வதியை மறுகண்டுபிடிப்பு செய்தபோது, நம் நிகழ்காலம் மட்டுமல்ல, கடந்த காலமும் பெரும் மாற்றத்துக்கு உள்ளானது. இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகமே; சரஸ்வதியின் கரையில் உருவான இந்த நாகரிகம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சிந்து நதிக் கரையை நோக்கிச் சென்றது என்று நூதன புவியியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இன்று வறண்டு கிடக்கும் சரஸ்வதி நதியின் கரையில் நூற்றுக்கணக்கான ஹரப்பா குடியிருப்புகள் இருப்பது இந்த உண்மையை உறுதிப்படுத்தியிருக்கிறது.
மறக்கடிக்கப்பட்ட, வறண்டு போன ஒரு நதியின் வரலாற்றை மிஷல் தனினோவின் இந்தப் புத்தகம் உயிர்ப்புடன் மீட்டெடுத்து தருகிறது.

14 நிமிஷங்கள் ஆகும் செவ்வாயிலிருந்து சிக்னல் பூமிக்கு வர

செவ்வாய் கிரகத்தில் முன்னர் தரை இறங்கிய அமெரிக்க விண்கலங்கள் .வைக்கிங்-1
வைக்கிங் 2 1975) ஸ்பிரிட் (2003), ஆப்பர்சூனிடி (2003), பீனிக்ஸ் (2007)
வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருந்தார்கள்  நாஸா விஞ்ஞானிகள். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப்ப்பட்ட கியூரியாசிடி விண்கலம் பத்திரமாகத் தரை இறங்க வேண்டுமே என்பது அவர்களது கவலை. கடந்த ஆண்டு நவம்பரில் பூமியிலிருந்து கிளம்பிய அந்த விண்கலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு செவ்வாயில் தரை இறஙகியது.

ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து, ‘உஸ்.. உஸ்..’ என்றார்


Viru News
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார், முதல்வர் ஜெயலலிதா. இதை, ஒரு முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மீது தொடர்ந்துள்ள வழக்கு எனவும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது, ஒரு கட்சித் தலைவர், மற்றொரு கட்சித் தலைவர் மீது தொடர்ந்த வழக்கு எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

Sex and Colour வண்ண மருத்துவம்

மனிதர்கள் அணியும் உடையின் நிறத்திற்கும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றால் உண்டு நிரூபித்துள்ளனர் நிபுணர்கள். 
 செந்நிற உடை அணிந்திருப்பவர்களை கண்டால் இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள்ளனர். பசி உணர்வை தூண்டுமாம். அதேபோல் செந்நிற உடை அணிந்த பெண்களைக் கணும் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவப்பு நிற ஆடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். ரத்த ஓட்டத்தை சரியாக கவனித்துக்கொள்ளும், தொற்றுநோய் உள்ளவர்கள், இதயபாதிப்பினால் எக்ஸ்ரே எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம்.

பள்ளிகள் ஏப்பம், ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை

இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் என்று சொல்வதை தவிர்த்து பள்ளி தலைமை திருடர்கள் என்று சொல்லணும் ..அட பாவீங்கள நீங்க நல்லா இருக்கவே மாட்டீங்க உங்கள் குடும்பம் குழ்ந்தை எல்லாம் நாசமாபோகட்டும் இப்படி ஏழைகளின் பணத்தை திருடி இருக்கும் நீங்கள் எல்லாம் இந்த ஆசிரியர் பணிக்கு பதிலா வேறு எதாவது செய்யலாம் ...
நாமக்கல்: ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் மோசடியின் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை, கோவை மண்டல தணிக்கை பிரிவு அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 12 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சில பள்ளிகளில், ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்காத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கேசுபாய் படேல்: வேதனையுடன் BJP லிருந்து வெளியேறுகிறேன்

அகமதாபாத்  பாரதீய ஜனதா கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய கேசுபாய் படேலும், முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஷிராம் ராணாவும் 'குஜராத் பரிவர்த்தன் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று துவங்கினர். அடுத்த வருடம் நடக்க உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என கேசுபாய் படேல் தெ ரிவித்துள்ளார்.
தனது புதிய கட்சி பற்றி பேசிய படேல், ‘நான் மிகுந்த வேதனையுடன் பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேறுகிறேன். தற்போது பாரதீய ஜனதாவுக்கும், ஜனநாயகத்திற்கும் இடையே வெகுதூரம் காணப்படுகிறது. மேலும், பாரதீய ஜனதாவுக்கு தற்போது மக்கள் மீது அக்கறை இல்லை.

நீண்ட கால நட்புக்காக ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கிறோம்: ஜெ.

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிக்கிறோம் என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி: துணை ஜனாதிபதி தேர்தலில், ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க., ஆதரிக்க இரண்டு காரணங்கள் உள் ளன. ஒன்று, கடந்த 28 ஆண்டுகளாக ஜஸ்வந்த் சிங்குடன் எனக்கு நட்பு உள்ளது. 1984ல் அவரும், நானும் பார்லிமென்டில் இணைந்து பணியாற்றியுள்ளோம். இந்த நீண்ட கால நட்புக்காக அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.

Mylapore கபாலீஸ்வரர் நிலம் கொள்ளை வாடகை வெறும் 3000 ரூபாய்

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிரவுண்டு நிலத்தை, தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு கோவில் நிர்வாகமும், சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
10 கிரவுண்டு நிலம்: பசுமை வழி சாலையில், கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான, 10 கிரவுண்டு நிலம் உள்ளது. இந்த நிலம், "விமன்ஸ் இந்தியா அசோசியேஷன்' என்ற தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு, 1984 வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப் பட்டு இருந்தது. அதன் பின் 2005 முதல் 2015 வரை மீண்டும் குத்தகை வழங்கப்பட்டது. இந்த குத்தகைக் காலத்தில் வாடகை மாதம் 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

அசாம் : மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும்


கலவரங்கள் இரு வகைப்படும். திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம். முதல் வகை, லாப நோக்கத்தோடு அரங்கேறும். அடையவேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்பட்டு, என்ன நடந்தது என்றே தெரியாதபடி மக்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். 
கடந்த மாதம் அசாமில் நிகழ்ந்தது இந்த வகை கலவரம்தான்.
ஜூலை 19 அன்று கொக்ரஜார் (Kokrajhar) மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள்மீது, வங்கதேசத்தினர் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அந்த வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுருவி, வங்கதேசத்தினரைக் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம்.

செவ்வாயில் Rover விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியது

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட "ரோவர்' விண்கலம், எட்டு மாதப் பயணத்துக்கு பின், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆராய, சில விண்கலங்கள் அனுப்பப்பட்டன. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக, சில தடயங்கள் கிடைத்தன.
"கியூரியாசிட்டி': இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த நவம்பர் மாதம், "ரோவர்' விண்கலம் செலுத்தப்பட்டது; 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரித்து, செவ்வாய் கிரகத்தில் நேற்று தரையிறங்கியது. "ரோவர்' விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற "ரோபோ' வாகனம், செவ்வாயின் நிலப்பரப்பில், நேற்று காலை, இறக்கி விடப்பட்டது.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஆண்ட்ரியா விஜய் படத்தில் பாட்டு

ஒரு பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், 
 மங்காத்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் மார்கெட் இல்லாத நடிகையாகவே இருந்தார். திடீரென்று கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பாட்டு பாட வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முருகதாஸிடம் இந்த படத்தில் தனக்குமொரு வாய்ப்பு தரும்படி அவராகவே வ்முன்வந்தௌ கேட்டுள்ளார் ஆண்ட்ரியா. முருகதாஸும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டாராம்.

Ex துணை வேந்தரால் ரூ.1,500 கோடி சம்பாதித்த 2 தனியார் பல்கலைக்கழகங்கள்

டெல்லி: இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் நடத்த 2 தனியார் பல்கலைக்கழங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது குறித்து அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் ராஜகேசரன் பிள்ளை. அவர் கடந்த 2007ம் ஆண்டு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தொலைதூரக் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் நடத்த பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம் ஆகிய 2 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி அளித்துள்ளார்.

மீண்டும் நெருக்கமான சிம்பு - நயன்தாரா!! கண்றாவி

Nayan Revives Her Relationship With Simpu மறுபடியும் முதல்லேர்ந்து.... மீண்டும் நெருக்கமான சிம்பு - நயன்தாரா!!

சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி!
சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்
வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள்.

மறு வெளியீட்டில் 150 நாள் ஓடிய ஒரே தமிழ் படம் கர்ணன்

சிவாஜி தொகுதியில் பிரச்சாரம் செய்ய விரும்பிய ரஜினி - கமல்: பிரபு வெளியிட்ட தகவல்

 சென்னை: சிவாஜி கணேசன் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் ரஜினியும் கமலும் பிரச்சாரம் செய்ய விரும்பியதாக நடிகர் பிரபு கூறினார்.நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் 1964-ல் ரிலீஸ் ஆனது. இப்படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து கடந்த மார்ச் 16-ந்தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ரிலீஸ் செய்தனர்.
மொத்தம் 72 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. 30 திரையரங்குகளில் 25 நாட்களும், 14 திரையரங்குகளில் 50 நாட்களும், 3 திரையரங்குகளில் 75 நாட்களும் ஓடியது. சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் 150 நாட்கள் ஓடியது.1

சத்குரு ஜக்கி வாசுதேவ் கஞ்சா முதல் கொலை வரை!! வழக்கு நீதிமன்றத்தில்

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!
சந்தேகத்திற்குரிய மதவாதியான ”சத்குரு” ஜக்கி வாசுதேவ் தன்னுடைய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?
மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன்  ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.
www.vinavu.com
ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”
இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வாலிபர் மர்ம சாவு

 Youth Who Tried Attack Matha Amirthanandamayi Dead
 கொல்லம் ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் வாலிபர் திருவனந்தபுரத்தில் உள்ள  மருத்துவமனையில் மர்மமான முறையில் பலியானார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி அருகே உள்ள வள்ளிகாவு பகுதியில் மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் உள்ளது. கடந்த 1ம் தேதி ஆசிரமத்தில் மாதா அமிர்தானந்தமயி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார். இதையொட்டி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அப்போது திடீரென ஒரு வாலிபர் மாதா அமிர்தானந்தமயியை தாக்க முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரேவே திடீர் அறிவிப்பு


 Team Anna Disbanded மும்பை: வலுவான லோக்பால் மசோதாவுக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட "அன்னா குழு" கலைக்கப்பட்டுவிட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
இதுபற்றி அன்னா ஹசாரே தமது வலைப்பூவில் (ப்ளாக்கில்) கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டது. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்காக இக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குழுவின் பணி இப்போது முடிந்து போய்விட்டது. மத்திய அரசுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை. அதனால் அன்னா குழு கலைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

கிரானைட் கடத்தல் 16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் கணக்கு

 Sagayam Reoport On Granite Scandal In Madurai Dist

கிரானைட் கடத்தலில் ரூ16,338 கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?: சகாயம் காட்டும் பரபரப்பு கணக்கு

சென்னை: தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட ஒருசில நிறுவனங்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் மூலம் வெட்டி எடுத்ததால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அதிகமானது என்று மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மிக விரிவாக கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சட்டவிரோத கிரானைட் கடத்தல் பற்றிய சகாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: