திங்கள், 12 மார்ச், 2012

கர்ணன்: கண் முன் விரியப்போகிறது பிரம்மாண்ட அரசியல் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்று படங்களை குறிப்பாக தமிழகத்து சுதந்திர போராட்ட வீரர்களான, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த,  பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. தமிழ் தியாகிகளை பற்றி படம் எடுத்த பந்துலு ஒரு கன்னடக்காரர்.  அவர் மீதான மதிப்புக்கு இதுவும் காரணம்.
எம்.ஜி.ஆர் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் வித்தியாசமான பின்னணியும் பிரம்மாண்டமும் கொண்ட படம். அதை தயாரித்து இயக்கியவரும் பி.ஆர். பந்துலுவே.
மகாபாரதத்தின் கிளைக்கதையாக அமைந்த ‘கர்ணன்’ திரைப்படம் ஒரு புராணப்படமாக அறியப்பட்டாலும், என்னை பொறுத்தவரை ‘கர்ணன்’ சிறந்த அரசியல் திரைப்படம்.

பெண்களே, மதம் உங்களை நம்பித்தானிருக்கிறது

பெண்களே திரைப்படங்களும் உங்களை நம்பியே இருக்கின்றன

  • பெண்களே அரசியல்வாதியும் உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள்

  • முதலில் விழிப்புணர்வு தேவை பெண்களிடத்தில்தான்!


  • தஞ்சையில் நேற்று அன்னை மணியம்மையார் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அன்னை மணியம்மையார் உருவப் படத்தினைத் திறந்து வைத்து  உரை
    தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், வெற்றிப் பட்டியல்களைக் கேட்டு ஆந்திர மாநிலப் பொது மக்களும் - ஏன் - அமைச்சர்களும்கூட மிகவும் ஆச்சரி யப்பட்டார்கள். தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் அவர்தம் கொள்கைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
    தந்தை பெரியாரின் கருத்துக்கள் வீதியில் பேசப் பட்டாலும் அவரின் களம் என்பது மனித மூளைதான்! அங்குதான் தன் யுத்தத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

    போலீஸ் குவிப்பு Dr.ராமதாசை கைது ?


    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு,  கொலைவழக்கில் ன்று பிற்பகல் விசாரனைக்கு ஆஜரா கும்படி சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

    கடந்த 2006ம் ஆண்டு திண்டிவனம், தைலாபுரம் அருகே தற்போதைய அதிமுக அமைச்சர் சிவி.சண்முகத்தின் உறவினரை டாக்டர் ராமதாசின் தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    இது தொடர்பாக சிவி.சண்முகம் போலீசில் புகார் செய்திருந்தார்.   புகாரில் சம்பவத்தின்போது தான் மையிரிழையில் உயிர் தப்பியதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    கீழ்வெண்மணி... குடிசைக்குள் 44 பேரும் கரிக்கட்டையா உதிர்ந்துபோனாங்க

    தாழ்த்தப்பட்டவன் அவன் என்ன வயசா இருந்தாலும் மிராசுதாரர் வீட்டு புள்ள எட்டு வயசா இருந்தாலும் டேய் வாடான்னுதான் கூப்பிடுவான்
    சாப்பாடு மரக்காலில் கொடுக்கப்படும். டீ குடித்தால் கழுவி வைத்துவிட்டு வரவேண்டும். செருப்பு கூடாது. வேட்டி கூடாது. சைக்கிள் கூடாது.
    சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சிலருடன் இணைந்து நாகப்பட்டிணத்தில் இருந்து கீழ்வெண்மணி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  மதிய நேரம், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். நீண்ட பச்சை நிலப்பரப்புகளையும் சிறிதும் பெரிதுமான பல குளங்களையும் கடந்து முன்னேறினோம்.  திரும்பும் திசையெங்கும் செங்கொடி. ஒரு பக்கம் ஜெயலலிதாவும் இன்னொரு பக்கம் பிரகாஷ் காரத்தும் டிஜிட்டல் தட்டிகளில் வரவேற்றுக்கொண்டிருந்தார்கள்.

    ஞாயிறு, 11 மார்ச், 2012

    தமிழ் இயக்குனர்களை தவிக்கவிடும் பூஜா

    நடிகை பூஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பும் இயக்குனர்களை அவர் தவிக்க விடுகிறாராம்.
    நடிகை பூஜா சிங்கள படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தனக்கு கோலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்த இயக்குனர் பாலாவின் எரியும் தணல் படத்தில் நடிக்கவிருக்கிறார். பாலாவின் நான் கடவுள் படம் பூஜாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவரைக் காணவில்லை. சிங்களத்திற்குப் போய் விட்டார்.
    தற்போது பாலா படம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். பூஜா தமிழ்ப் படங்களில் நடித்து வந்தாலும், அவர் ஒரு இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தமிழில் நடிக்கும்போது பெங்களூரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கி நடிப்பார். தற்போது அவர் சிங்களப் படங்களில் பிசியாக உள்ளதால் இலங்கையில் உள்ள பாட்டி வீட்டில்தான் அதிக நாட்கள் இருக்கிறார். இடையில் காதல், கல்யாணம் என்றெல்லாம் பேச்சு வந்தது. இருப்பினும் அதை பூஜா மறுத்தார்.
    தற்போதும் கூட பூஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பும் தமிழ் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

    NGOக்கள் அதிக நிதியை நிறுவன செலவுகளுக்காகவே செலவிட்டுள்ளன


    World Vision
    டெல்லி: வருடா வருடம் இந்தியாவில் உள்ள என்ஜிஓக்கள் எனப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து ரூ. 10,000 கோடி அளவுக்கு நிதியுதவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத் தகவல் தெரிவிக்கிறது.
    கடந்த 2009-10ம் ஆண்டு இந்திய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவியை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22,000 தொண்டு நிறுவனங்கள் இந்த வெளிநாட்டு உதவியைப் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவை 3218 ஆகும் என்று அத்தகவல் தெரிவிக்கிறது.
    தமிழக நிறுவனங்கள் மட்டும் கடந்த 2009-10ல் ரூ. 1663.31 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது.

    Pakistan woman Cricket

    Kerala கம்யூனிஸ்ட் MLAக்கு காங்கிரஸ் 20 கோடி லஞ்சம் உம்மன்சாண்டியின்

    திருவனந்தபுரம்: ராஜினாமா செய்த நெய்யாற்றின்கரை மார்க்சிஸ்ட் எம்எல்ஏ செல்வராஜுக்கு முதல்வர் உம்மன்சாண்டியின் வீட்டில் ரூ.20 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டி உள்ளார். கேரளாவில் நெய்யாற்றின்கரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ.வாக இருந்த செல்வராஜ், நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். இது, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா செய்வதற்கு ஒருநாள் முன்பு வரை கூட சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட்  சார்பில் செல்வராஜ் பேசினார். ஆனால், அன்றிரவே யாருக்கும் தெரியாமல் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். மறுநாள் காலையில் தனது ராஜினாமா பற்றி செல்வராஜ் அறிவிக்காத வரை, மார்க்சிஸ்ட் கட்சியினர் யாருக்கும் இந்த விபரம் தெரியாது.

    ராஹுல் திராவிட் போன்ற திறனும் அறிவும் உள்ள ஒரு கிரிக்கெட்டரைப் பார்ப்பது கடினம்.

    காவஸ்கர், விஷ்வநாத், வெங்க்சர்க்கார், மொஹீந்தர் அமர்நாத், சந்தீப் பாடில், கபில்தேவ் ஆகியோர் நான் கிரிக்கெட் பார்த்து ரசித்த முதல் தலைமுறை (மட்டை) ஆட்டக்காரர்கள். அடுத்து என் நினைவில் பதிந்தவர்கள்  கிரிஷ் ஸ்ரீகாந்த், சஞ்சய் மஞ்ச்ரேகர், மொஹம்மத் அசாருத்தீன். அடுத்து தன்னந்தனியாக உள்ளே இறங்கியவர் வயதில் மிகவும் இளையவரான சச்சின் தெண்டுல்கர். இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் உள்ளே வந்தவர்கள்தாம் ராஹுல் திராவிடும் சவுரவ் கங்குலியும். அதன்பின் விவிஎஸ் லக்ஷ்மண், விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மொஹம்மத் காயிஃப், மஹேந்திர சிங் தோனி, இப்போதைய நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி என்று பலர் வந்துள்ளனர்.
    இந்த நீண்ட கிரிக்கெட் பாரம்பரியத்தில், சச்சின் தெண்டுல்கரையும் சேர்த்து அனைத்து பேட்ஸ்மன்களிலும் நான் மிகவும் மதிப்பது ராஹுல் திராவிடைத்தான்.

    கூடங்குளம் தினமும் ரூ.5 கோடி "அவுட்!': ஆறு மாதங்களில் ரூ.900 கோடி வீண்

    "கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், கடந்த ஆறு மாதங்களாக, தினமும் ஐந்து கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது,'' என, இந்திய அணுமின் கழக இயக்குனர் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், கடந்த ஆறு மாதங்களாக, கூடங்குளம் மின் நிலைய பணிகள் முடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் முதல் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம், மேலும் ஆறு மாதங்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    அனுமதி கிடைக்கலை: போராட்டம் இன்று முடியும்; நாளை முடியும் என, சமூக அக்கறை கொண்டவர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், நாளொரு பிரச்னை, பொழுதொரு காரணம் சொல்லி, தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைப்பது தாமதமாகிறது.

    பொதுமக்களால் விரட்டப்படும் உதயகுமார்

    கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமாரின் போராட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் அனுமதி தராமல் விரட்டி விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போகுமிடமெல்லாம், உதயகுமார் கும்பலை பொதுமக்கள் துரத்துவதால், அணு உலை எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    உதயகுமாருக்கு மக்கள் எதிர்ப்பு: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, உதயகுமாரின் தலைமையில், ஒரு குழு போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்திற்கு, வெளிநாட்டு நிதி வருவதாக, மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களுடன் தொடர்புடைய, வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவன உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உதயகுமாரின் போராட்டத்திற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்பெல்லாம் அமைதியாக இருந்த மக்கள், மின்வெட்டால் கடும் அதிருப்திக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாகியுள்ளனர். கூடங்குளம் நிலையத்தை திறந்தாவது, மின்சாரம் கொடுங்கள் என, வெளிப்படையாகவே போராட்டம் நடத்துகின்றனர்.

    தி.மு.க.வாழ்த்து,!முலாயம்சிங்கை பிரதமராக்கும் முயற்சி நடக்கும்

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தேசியவாத காங்கிரஸ்- தி.மு.க., போன்ற மாநில கட்சிகள் பலமாக கருதுகின்றன. வரும் பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க., அணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் அல்லது கூட்டணியிலிருந்து கழட்டிவிடும் வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    சட்டசபை தேர்தலுக்கு முன் தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி சென்ற போது, அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தபோது, போட்டோ எடுக்க விடாமல், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் தடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    சனி, 10 மார்ச், 2012

    நடிகை ரீமா சென் திருமணம்

    தனது நீண்ட நாள் காதலர் ஓட்டல் அதிபர் ஸிவ் கரன்சிங்கை நாளை மணக்கிறார் பிரபல நடிகை ரீமா சென்.


    மின்னலே படம் மூலம் தமிழில் அறிமுகமாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். கொல்கத்தாவை சேர்ந்த இவர், தெலுங்கு, வங்காளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
    தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்தான் கடைசிப் படம். ராஜபாட்டையில் ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டுபப் போனார்.
    வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷிவ்கரன்சிங் டெல்லியில் ஓட்டல்கள் மற்றும் 'பார்' நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    சங்கரன்கோவில்: “டாக்டரை சென்னையில் ‘பிக்ஸ்’ பண்ணியாச்சு!”

    Viruvirupu
    சங்கரன்கோவிலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்துமே (ஆம். அனைத்துமே) ஏதோ ஒரு வகையில் ஜாதி வாக்குக் கணக்கு போட்டுத்தான் அரசியல் செய்கின்றன. அந்த வகையில் தொகுதிக்குள் உள்ள தலித் வாக்குக்களை கவர, எல்லோருமே ஏதோ ஒரு வியூகம் வைத்திருக்கிறார்கள். இதில் அ.தி.மு.க.-வின் வியூகம்தான் வித்தியாசமானது.
    பிரசாரத்துக்கு போய் இறங்கியுள்ள அமைச்சர்களிடம் சீனியர் அமைச்சர் ஒருவர், “தலித் வாக்ககளைப் பற்றி நாம கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி திகைக்க வைத்திருக்கிறார்.
    இது என்ன புதிய புரளி? ஒருவேளை ஆதரவு எக்கச்சக்கமாக இருப்பதால், தலித் வாக்குகள் இல்லாமலே ஜெயித்து விடுவோம் என்ற இறுமாப்பா?
    “சேச்சே, அதல்ல விஷயம். அமைச்சர் கூறியதற்கு அர்த்தம் வேறு” என்றார் எமக்கு நெருக்கமான ஒரு அ.தி.மு.க. பிரபலம். “மற்றைய அமைச்சர்களை தலித் வாக்காளர்கள் தொடர்பாக எதுவும் செய்ய வேண்டாம் என்று சீனியர் அமைச்சர் சொன்னது உண்மைதான்.

    அமெரிக்காவில் 34 லட்சம் இந்தியர் - பெருமளவு தெலுங்கர், தமிழர்

    அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி அங்கு 34 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் 10 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
    இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய இனமாக ஆசிய - அமெரிக்கர்கள் உயர்ந்துள்ளனர். பத்தாண்டுகளில் 68 சதவீத வளர்ச்சி கண்டுள்ளனர் இந்தியர்கள், எண்ணிக்கையில்.
    அமெரிக்காவில் அதிகளவில் உள்ள பிற இனத்தவர்களில் அமெரிக்க சீனர்கள் முதலிடம் வகிக்கின்றனர். எண்ணிக்கையில் அவர்கள் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர். இவர்களுக்கு அடுத்து பிலிப்பினோ - அமெரிக்கர்கர்கள். அவர்களின் எண்ணிக்கை 34.2 லட்சம். அடுத்து இந்தியர்கள் 34 லட்சம் பேர் (இவர்களில் பெருமளவு தெலுங்கு மற்றும் தமிழர்கள்).

    தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும் சி.பி.ஐ.

    Dayanidhi Maran
     2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
    மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றையை ஒதுக்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்தார் என்றும் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவனத்தை விற்க வற்புறுத்தினார் என்பதும் குற்றச்சாட்டு.
    2ஜி ஊழலில் பலரும் அகப்பட்டு சிறைக்குப் போய் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் தயாநிதி மட்டும் எஸ்கேப் ஆகிக் கொண்டே வருகிறார்.

    புதிய NGO அமைப்பு தொடங்குகிறார் அஜீத்?

    ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்ட பிறகு மங்காத்தாவை ரிலீஸ் செய்து ஹிட் செய்தும் காட்டிய தெம்பிலிருந்த அஜீத், விரைவில் புதிய இயக்கம் தொடங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
    அஜீத் ரசிகர் மன்றம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் எல்லாமே அமைதியாகத்தான் போயின.
    ஆனால் சமீப காலமாக நிறைய பிரச்சினைகள். நிர்வாகிகளின் நடவடிக்கைகள் அஜீத்தை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கின. அவர்களை கட்டுக்குள் வைக்க பல்வேறு நிபந்தனைகளை அவர் உருவாக்கினார்.

    சங்கரன்கோவில் யாருக்கு?- களநிலவரம் Opinion

    திருநெல்வேலி: தமிழக அரசியல் கட்சிகளின் "திராணியை" தீர்மானிக்கக் கூடியதாக சங்கரன்கோவில் தொகுதியில் விசைத்தறியாளர்கள் அதிகம் இருப்பதால் மின்வெட்டு விவகாரம்தான் முதன்மையான பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
    சங்கரன்கோவில் தொகுதி
    விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த சங்கரன்கோவில் தொகுதி முதன் முதலாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1957ல் நடந்த முதல் பேரவைத் தேர்தலில் தொடங்கி கடந்த 2011 தேர்தல் வரை 13 பேரவைத் தேர்தல்களை சங்கரன்கோவில் தொகுதி சந்தித்துள்ளது.
    காங்கிரஸ்

    பலுசிஸ்தான் உருவாக்கம் இந்தியா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானத்தை பிரித்து தனிநாட்டை உருவாக்கினால் மிக மோசமான விளைவுகளை இந்தியாவும் அமெரிக்காவும் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜமாத்-உத்-தவா எச்சரிக்கை விடுத்துள்ளது.
    2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்திய அமைப்பு ஜமாத்-உத்-தவா.
    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 40க்கும் மேற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் ஜமாத்-உத்-தவாவின் தலைவர் ஹபீஸ் சையத் பேசியதாவது:
    ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு இன்னும் என்ன வேலை? பலுசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து பிர்க்க முயற்சிக்கிறீர்களா?
    எங்கள் நாட்டு விவகாரங்களில் நீங்கள் தலையிட முடியாது.. இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நாங்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம். பலுசிஸ்தான் தனிநாட்டை உருவாக்கும் முயற்சிகளை உடனே கைவிடுங்கள். இல்லையெனில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார் அவர்.
    லஸ்கர்-இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனறும் சயீத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது

    UP 38 வயதில் நாட்டின் மிக இளம் முதல்வராகிறார் அகிலேஷ் யாதவ்!

    Akilesh Yadhav
    லக்னெள: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் அரசியல் சண்டை ஒருவழியாக தற்காலிக சமாதானத்துக்கு வந்துள்ளது.
    உத்தரப் பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுகிறார். இன்று நடந்த கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 403 தொகுதியில் 224 இடங்களில் சமாஜ்வாடி வெற்றி பெற்றது.
    இதைத் தொடர்ந்து முலாயம் சிங்கை விட அவரது அகிலேஷ் யாதவ் மீதே மக்கள் அதிக நம்பிக்கை வைத்து சமாஜ்வாடிக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள்ளதாக பேச்சு எழுந்தது.
    இந் நிலையில் அகிலேஷ் யாதவையே முதல்வராக்க முலாயம் சிங்கும் விரும்பினார். இதற்கு எப்போதோ தயாராகிவிட்டார் அகிலேஷ்.
    ஆனால், கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் இதை எதிர்த்தனர். தங்களை விட வயதில் மிகவும் குறைந்த அகிலேஷ் யாதவிடம் பணிந்து செல்ல முடியாது என்று இவர்கள் வாதிட்டனர்.

    மின் வெட்டுக்கு ஜெ.தான் காரணம்: வாசன்


    தமிழகத்தில் கடும் மின் வெட்டு நிலவுவதற்கு ஜெயலலிதா தான் காரணம்,'' என, மத்திய அமைச்சர் வாசன் குற்றம் சாட்டினார்.
    சங்கரன்கோவிலில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வாசன் பேசியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையம் உற்பத்தியைத் தடுக்கும் கும்பலை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.

    கூடங்குளம் அணு மின் நிலைய உற்பத்தியைத் துவக்க ஜெ., முயற்சிக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் 11 மணி நேர மின் வெட்டுக்கு அவர் தான் காரணம். விரைவில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவக்கப்படும் என்றார்.

    முலாயம் சிங் இனி தேசிய அரசியலுக்கும் King


    ராகுல் காந்தி வாழ்த்துகிறார். மன்மோகன் சிங் பாராட்டுகிறார். ஜெயலலிதா மகிழ்ச்சி தெரிவிக்கிறார். கருணாநிதி கடிதம் எழுது குதூகலிக்கிறார். இன்னும் இன்னும் நாட்டில் இருக்கும் அத்தனை முக்கியத் தலைவர்களும் முலாயம் சிங்கின் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு முலாயம் சிங் யாதவின் பெயர் தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து பத்திரிகைகளும் அவரைப் பற்றித்தான் எழுதித் தீர்க்கின்றன. ஒரே காரணம்தான். இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலத்தில் அவர் பெற்ற அசாத்திய வெற்றி.
    மொத்தமுள்ள நானுற்றியிரண்டு இடங்களில் 224 இடங்களைக் கைப்பற்றி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது அவருடைய சமாஜ்வாதி கட்சி. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கூடப் பெற்றிருக்கமுடியும்

    அ.தி.மு.க., பணம் தி.மு.க.,வுக்கு ஓட்டு: அழகிரி வேண்டுகோள்

    சங்கரன்கோவில் :""அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்'' என, வாக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சங்கரன்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சங்கரன்கோவிலில், கடந்த முறை, 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., தோல்வியுற்றது. இந்த தேர்தலில், 10 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று, தி.மு.க., வெற்றி பெறும்.தேர்தல் பணியில் நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர். பொருளாளர் ஸ்டாலின் மார்ச், 12, 13, 14 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்கிறார். மார்ச் 15ல், தி.மு.க., தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அழகிரி கூறினார்.

    வெள்ளி, 9 மார்ச், 2012

    கடிதம் மூலம் தலாக்! Talaq by letterஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

    இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுபவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.
    தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மணமேல்குடி பாசித் மரைக்காயர் என்பவர்  பெண்களிடம் தவறாக நடந்ததையும்; மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் அனாதையாக விட்டு விட்டு, மற்றொருucmd ஏழைப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததையும்: ஆணாதிக்க திமிருடன் “இஸ்லாமிய முறைப்படி சரி” என்று கூறி ஜமாத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றதையும் வினவின் வாசகர்கள் தழிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித்மரைக்காயர் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் அறிந்திருப்பீர்கள்.
    இந்த இஸ்லாமிய தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஏழை குடும்பத்தினர் இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம் புகார் செய்யவே தோழர்களுடைய உதவியால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பாசித் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது பிணையில் வெளியில் உள்ளார்.

    நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 15 நாள் சிறை

    நடிகர் ஜான் ஆபிரகாம், அபாயகரமாக வண்டியை ஓட்டிய வழக்கில் 15 நாள் சிறைத் தண்டனை பெற்றார்.
    கடந்த 2006ல் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் தன்னுடைய மோட்டர்பைக் வண்டியை ஓட்டி இரண்டு இளைஞர்கள் மீது மோதி காயம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ஜான் அபிரகாமுக்கு 15 நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
    அந்த விபத்து ஏற்பட்டவுடன், ஜான் ஆபிரகாம் உடனடி யாக இளைஞர்கள் இருவரையும் மருத்து வமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்திருந்தார்.