திங்கள், 23 ஜனவரி, 2012

13,000 மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ் ரத்து-உடனே பணியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் உடனியாக பணியில் சேர்க்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த நீக்கத்தையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தின்போது ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் இதுபோல பணியாற்றி வந்தனர். பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை இவர்கள் செய்து வந்தனர். இவர்கள் உள்ளாட்சித் துறையின் கீழ் வருவார்கள்.

கனிமொழிக்கு கட்சியில் 'கனமான' பதவி கிடைக்குமா?

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பதவி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்களிடையே ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொதுக்குழு வருகிற 3-ந்தேதி கூடுகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க.வின் 14-வது உள்கட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தல், வருங்கால கூட்டணி உள்பட கருத்துக்கள் குறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிறது.

வெளிநாட்டு நடிகையை ஏமாற்றிய டைரக்டர்


“சொன்ன நேரத்திற்கு வராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களே” என்று சரோஜாவிடம் கேட்டால், “நான் என்ன வெளிநாடுவரை போயாஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்?” என்று பதில் கேள்வி கேட்டார். “இதென்ன புதுக்கதை? ” என்றதும் சொல்லத் தொடங்கினார். “விண்ணைத் தாண்டும் இயக்குநர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த போது பழைய சென்னைப் படத்தில் நடித்த நடிகையைப் பார்த்து, ‘ என் படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கேட்டாராம். அவரும் சம்மதித்திருக்கிறாராம்” என்றார். “இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது?” என்று நாம் கேட்டதும், “அடுத்து சூரிய நடிகரை வைத்து இயக்கப்போகும் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டதும் நடிகை ஒப்புக்கொண்டாராம். சிறிது நாட்கள் கழித்து, ‘நான் சொன்ன படம் தொடங்க இன்னும் சிறிதுகாலம் பிடிக்கும். அதற்குள், நான் இயக்கும் இந்திப்படத்தில் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாராம். நடிகை அதற்கும் சம்மதித்திருக்கிறார்.

நண்பன்.. விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான்


 கடைசியாக வந்த சில படங்களில் விஜய் ஒரே மாதிரியாக நடித்திருந்ததால், இந்த மாறுபட்ட நடிப்பு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டுவிட்டார். ஏற்கனவே பார்த்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை உச்சு கொட்ட வைக்காமல் இருக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றார் இயக்குனர்.
ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இவர்களின் மற்றொரு நண்பனான சத்யன் போன் செய்து ஜீவா, ஸ்ரீகாந்தின் மிக முக்கிய நண்பனான விஜய் வந்திருப்பதாக அழைக்கும் போது அவசரமாக தங்களது பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் விஜய் அங்கு இல்லை, விஜய்யின் இருப்பிடம் தெரியுமென்று சத்யன் கூறுவதால் அங்கு செல்கிறார்கள்.
பின்னோக்கி பிளாஷ்பேக் செல்கிறார்கள்.

சசிகலாவின் தம்பி திவாகரனை காணவில்லை

சசிகலாவன் தம்பி திவாகரன் மீது கொலை மிரட்டல் புகார் வந்துள்ளதைத் தொடர்ந்து போலீஸார் அவரை விசாரிக்கவும், கைது செய்யவும் தேடுதலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து திவாகரன் தலைமறைவாகி விட்டார்.
திவாகரன் மீது ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருவாரூர் போலீசில் புகார் அளித்த கஸ்தூரி, கடந்த ஆண்டு நவம்பர் 28ந் தேதி, அரசு வழங்கிய தொகுப்பு வீட்டை திவாகரன் இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டதாகவும், நிலத்தை சுற்றி வேலி அமைத்து தங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை, திவாகரன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு: உரிமையாளர்கள் முன்வந்து நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வின் அதிரடியை அடுத்து, சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்தை அதன் உரிமையாளர்களே இடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சென்னை ஐகோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக, தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் உள்ள 64 அடுக்குமாடி கட்டடங்களில் அதிகளவில் விதிமீறல் இருப்பதாக கண்டறியப்பட்டன. இதில் ஆறு கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 19 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். ஐகோர்ட்டின் கிடுக்கிப்பிடியால் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக கடைகளை திறக்க இடைக்கால நிவாரணம் பெற்றனர். இதனால், 71 நாள்கள் மூடப்பட்டிருந்த பிரபல வணிக வளாகங்கள் கடந்த 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.

கேரளாவுக்கு பதிலடி கொடுக்க பாண்டியாறு புன்னம்புழா திட்டம்?

ஊட்டி: "முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் முரண்டு பிடிக்கும், கேரள அரசுக்கு "செக்' வைக்க, பாண்டியாறு புன்னம்புழா திட்டத்துக்கு, தமிழக அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பாண்டியாறு புன்னம்புழா நீர்மின் திட்டம், 1969ம் ஆண்டில் முழு வடிவம் பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து மரப்பாலம் பகுதி வரை, இதற்கான பணிகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் ஓடும், 10க்கும் மேற்பட்ட சிறு ஆறுகளை இணைத்து, பாண்டியாறு புன்னம்புழா நீரை, மின் உற்பத்திக்குப் பயன்படுத்த அணைகள் கட்ட திட்டமிடப்பட்டன. மரப்பாலம் பகுதியில், 42 மீ., உயரத்திலும், பாண்டியாறு பகுதியில், 62 மீ., உயரத்திலும், சோலாட்டி புழா பகுதியில், 65 மீ., உயரத்திலும், மூன்று அணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டது. இந்த அணைகள் கட்டப்படும் போது தேக்கி வைக்கப்படும் தண்ணீர், நீர்மின் திட்ட பணிகளுக்காக, மாயாருக்கு திருப்பி விடவும் திட்டமிடப்பட்டது. மின் உற்பத்தி பணிகளை, மசினகுடி அருகேயுள்ள சீகூர் மேற்கொள்ளவும், மின் உற்பத்திக்குப் பின் தண்ணீரை, கீழ் பவானி திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

யு.எஸ். ஜெர்மனியிலிருந்து கேரளா வழியாக கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு நிதி வருவது கண்டுபிடிப்பு!


Udayakumar
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவில் நிதி வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ஜெர்மனியிலிருந்து இந்த நிதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிதியை கேரளாவில் உள்ள மீனவர் சங்கம் மூலம் கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு விநியோகித்துள்ளனர். இதன் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கேரளாவின் பங்கும் முக்கியமாக அமைந்திருப்பது தெரிய வந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

நைஜீரியாவில் பயங்கர தீவிரவாதத் தாக்குதல்- இந்தியர் உள்பட 160 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவில் நடந்த பயங்கர தீவிரவாதத் தாக்குதலில் ஒரு இந்தியர் உள்பட 160 பேர் கொல்லப்பட்டனர். 6 இந்தியர்கள் படுகாயமடந்தனர்.
நைஜீரியாவின் 2வது பெரிய நகரான கானோ என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அந்த நகரையே சுடுகாடாக்கி விட்டது. இதுவரை 160 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த படம்-பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!


Pooja Gandhi
தண்டுபாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல் காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில், திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழில் கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். சமீபத்தில் தேவகவுடாவை ரோல் மாடலாக அறிவித்து அவரது மகன் குமாரசாமி தலைமையில் இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பசுபதி பாண்டியனைக் கொல்ல உத்தரவிட்டது சுபாஷ் பண்ணையார்- எஸ்.பி.


Pasupathi Pandian
திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் துப்பு துலங்கி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலையைத் தூண்டி கூலிப்படையை ஏவி விட்டவர் என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மொத்தம் 14 பேர் கொண்ட கும்பல் இந்த கொலைச் சதியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன்,

வன்னியர்கள் அதிகாரிகளாக வலம் வர திராவிட இயக்கமே காரணம்

"வன்னியர்கள் கலெக்டராக, பேராசிரியர்களாக வலம் வர, திராவிட இயக்கம் தான் காரணம்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பா.ம.க., மாநில துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
இதில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:பா.ம.க.,வுடன், கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க., தோழமையோடு இருந்துள்ளது. இடையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து நிற்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என் இயக்கத்தையே இழித்துப் பேசியுள்ளார். என்னுடைய தலைவர்களை இழிவுபடுத்தினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் சமூகத்தை உருவாக்கிய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தினால், நான் என்ன செய்வேன்.இதற்காக, நான் பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருக்கிறேன்.

tamil directors ஜாதி இந்துக்களின் குடியிருப்புகளான ஊரை மட்டுமே கிராமங்களாக காட்டுகிறார்கள்.

முந்தைய இயக்குநர்களைவிடவும், இன்றைய இளம் இயக்குநர்களின் எதார்த்த திரைப்படங்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.
-கே.எஸ். சிவபாலன், திருநெல்வேலி.
பழைய, புதிய இயக்குநர்கள் அனைவருமே, சோற்றுக்குள் பூசிணிக்காயை அல்ல, இமயமலையையே மறைக்கிற அளவிற்கு பெரிய கில்லாடிகள்.
இந்திய, தமிழக கிராமங்கள் ஊரு வேறு சேரி வேறு என்ற பாகுபாட்டோடுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் குளம், பொது சுடுகாடு, கிணறு, ஊர் கோயில் இப்படி பொது தளங்களுக்குள் இன்றுவரை அனுமதிக்கப்படுவதில்லை.

நண்பன் வசூல் பற்றி விஜய்....அதையெல்லாம் நம்பாதீர்கள்...எஸ் ஏ சந்திரசேகரன்

Vijay At a Press Meet
கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து 'ரஜினி படத்துக்கு ஈக்குவலா...' என்ற சுயபுராணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது விஜய் தரப்பு.
எல்லாம், நண்பன் படம் நன்றாகப் போகிறது என்று வரும் செய்திகள் மற்றும் பேச்சுக்களின் விளைவு!
இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இதுதான் நல்லாருக்கு என்று பலரும் நண்பன் படத்தைப் பாராட்டி வருகின்றனர். காரணம், நிச்சயமாக விஜய் இல்லை!

பொன்னுத்தாய் எழுப்பிய நாதஸ்வர ஓசை.... ஆணாதிக்கமிக்க சமுதாயத்தில் சாதித்திருக்கிறார்

தனது நாதஸ்வர இசையால் பல கோடி உள்ளங்களைக் கட்டிப்போட்டவர் பொன்னுத்தாய். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக விடாது இவர் எழுப்பிய நாதஸ்வர ஓசை இப்போது நிரந்தரமாக ஓய்வெடுத்துவிட்டது.
‘ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும்... நாதஸ்வரத்தின் எடை, அதைக் கையாளும் ஆற்றல், அனைத்தும் ஆண்களுக்கே சாத்தியம்’ என்ற எண்ணத்தை முதன்முதலாக தகர்த்தவர் பொன்னுத்தாய்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள புது ஆயக்குடிதான் பொன்னுத்தாயின் சொந்த ஊர். சிறுவயதிலேயே தாயை இழந்தவர்.

சனி, 21 ஜனவரி, 2012

சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு போலீஸ் வலை வீச்சு!

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை விட சசிகலா மீதான உணர்ச்சி போராட்டதிற்குதான் முக்கியம் கொடுக்கிறார்.நேற்று வரை ஜெயா வேறு அல்ல சசி வேறு அல்ல ஆனால் இன்றோ சசியோடு தொடர்புள்ள எல்லோரையும் சித்ரவதை செய்வார் போல் தெரிகிறது.ம்ம்ம் இதெல்லாம்  ஒரு கட்சி இதற்கு ஒரு ஆட்சி பொறுப்பு இந்த கட்சிக்கெல்லாம்  போயி ஒட்டு போட்ட மகா ஜனங்கள் ...விளங்கிடும் 
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் தம்பி திவாகரன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் திவாகரனை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் நெருங்கிய தோழியான சசிகலாவை திடீரென கட்சியை விட்டும், போயஸ் கார்டனை விட்டும் வெளியேற்றினார் ஜெயலலிதா. இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.

பஞ்சாபில் ஆட்சியை இழக்கிறது பா.ஜ., ; காங்கிரசுக்கு கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு

அமிர்தசரஸ்: நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.,தலைமையிலான கூட்டணி ஆட்சியை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், வளர்ச்சி பணிகள் சரிவர எதுவும் நடக்கவில்லை என்பது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவும், இங்கு காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் இடம் கிடைக்கும் என்றும் இந்தியா டூடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அன்னா ஹசாரேயின் கருத்தை ஏற்று வாக்களிப்பீர்களா என்று கேட்டதற்கு அவ்வாறு செய்ய மாட்டோம் இதனை ஏற்க போவதில்லை என்றும் 46 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

வருணாசிரம மோகத்தால் வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றான்

வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி?
-சுந்தரவடிவேலன். திருப்பூர்
வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.
இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் மூட்டிய தீ திகு திகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது, அதில் ஒரு சுள்ளியை கூட எடுத்து போட்டவர் இல்லை வாஞ்சி.
ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல. வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது.

சசி ஜெயா பங்கு பிரிப்பு இலகுவானதல்ல

''சசிகலா சும்மா இருந்தாலும் எம்.நடராஜனும் கருணாநிதியும் அவரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல!'' என்று சொல்லிச் சிரித்தபடியே நம் முன்னால் ஆஜரானார் கழுகார்.
கழுகாருக்கு இடைஞ்சல் தராமல் அமைதி காத்தோம்.
'' 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காத்திருந்த சசிகலா அண்டு கோ-வுக்கு மேலும் வலிதான் ஏற்படப்போகிறது. ஆட்சி மேலிடத்துக்குக் கோபத்தை ஏற்படுத்திய விவகாரங்கள் என்று இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒன்று எம்.நடராஜனின் தஞ்சாவூர் பேச்சு. இன்னொன்று கருணாநிதியின் முரசொலி எழுத்து!'' என்று சொல்லி சிறிது இடை வெளிவிட்டுத் தொடர்ந்தார் கழுகார்!
''நடராஜனின் தஞ்சாவூர் விழாவைக் கண்கொத்திப் பாம்பாக உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித் தார்கள். வெளிப்படையாக ஜெயலலிதாவை அவர் அட்டாக் பண்ணவில்லை என்றாலும், 'காத்திருங்கள். நேரம் வரும்போது செயல்படுவேன்’ என்று சொல்லி இருப்பது ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலைக் கிளப்பி உள்ளது!''

தொழிலார்களின் பாகெட்டுக்குள் கைவைக்கும் ராமதாஸ்

பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும், தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' எனராமதாஸ் அழுதுள்ளார் .தானே' புயல் தாக்கியவர்களைப் பார்த்து, "வெறும் கை' குலுக்கி, ஆறுதல் வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டு திரும்பிய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு.. தாழ்த்தப்பட்டவர்களைவிட மாடுகள் மேன்மையானவை???

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?


தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை ஆதிக்க சாதிக்காரர்கள்,  ஏன் எதிர்க்கிறார்கள்?
-க. மாயாண்டி, மதுரை.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகள் நடக்கிறது.
மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்பதினால்தான் அதை சைவ ஜாதி அறிவாளிகள் எதிர்க்கிறார்கள்.
ஆனால், இவைகள் எல்லாவற்றையும்விட இந்த ஜல்லிக்கட்டில் ஈடுபடும் இளைஞர்கள் உடல்ரீதியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிரையும் இழக்கிறார்கள். ஆகவே, அது தடை செய்யப்படுவதில் தவறு இல்லை.

சுப்பிரமணியசாமி மீது நடவடிக்கை சோனியா, ப.சிதம்பரத்துக்கு எதிராக அவதூறு

  புதுடெல்லி : ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது சோனியா காந்தி, ப.சிதம்பரத்துக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்திய சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குமுதம் பத்திரிகைக்கு ஸ்ருதி நோட்டீஸ் தனுஷுடன் கிசுகிசு


Shruti Haasan

நடிகர் தனுஷுடன் இணைத்து செய்தி வெளியிட்டதற்காக குமுதம் வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ருதி.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதி. இதில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும்போது தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் அரும்பியதாகவும், இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாகின.

வெள்ளி, 20 ஜனவரி, 2012

பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் காங்கிரஸ் மறந்தது

பால்-தாக்கரே
கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.
மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் இணைய தளங்களில் “மக்களில் இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டும்” விதத்திலான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் வெளியானதால், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றவழக்கு தொடர அவரும், அவரின் அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயின் வெளியூட்டும் பேச்சுக்கள், குற்றங்களின் மீதான வழக்கு தொடரும் நடவடிக்கையில் மிக தாமதப்பட்டு நிற்கிறது.  அவையாவும் கடுமையான குற்றங்களாகும்.
விரோதத்தை தூண்டும் வகையிலான வன்முறை என பேஸ்புக் மற்றும் இதர தளங்களில் உள்ள சில பிரசுரங்களை அபாயம் என அரசு கருதுகிறது. ஆனால் அது போலல்லாமல், திரு தாக்கரேயின் எழுத்துக்கள் மும்பையில் 1992 மற்றும் 1993ல் பல நூறு மக்களின் உயிர்களை பலிகொண்ட வன்முறையை தோற்றுவித்தது என ஸ்ரீ கிருஷ்ணா கமிஷ‌ன் விசாரணை அறிக்கையில் தெளிவுபட சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து அடி வாங்கும் அதிமுக அரசு...சட்ட அடி

முக்கியப் பிரச்சினைகளில் அடுத்தடுத்து  வாங்கும் அதிமுக  ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 7 மாதங்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து சட்ட ரீதியாக பல்வேறு தோல்விகளை ஜெயலலிதா அரசு சந்தித்து வருகிறது.

அதிமுக அரசின் பல முக்கிய முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடைகளைச் சந்தித்துள்ளன.
மே 16ம் தேதி 3வது மறையாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அதாவது மே 22ம் தேதி திமுக அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி அதை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.